Thursday, March 1, 2012

TOSA member - A profile By Murthy

TOSA member - A profile

எல்லோராலும் நேசிக்கப்படும் ஒரு நல்ல நண்பனாக இவன்  இருக்க விரும்புகிறான். புதிய  எண்ணங்களும் , புதுப்புது திட்டங்களும் இவனுக்கு மிகவும் பிடிக்கும்.  யாராவது இவனிடம் ' நீ என்னிடம் நேற்று சொன்ன புது PROJECT எப்ப ஆரம்பிக்கிறாய்" என்று கேட்டால்,  'இன்று காலை தொடங்கிவிட்டேன்'  என்று நறுக்கென்று பதில் தருவான்.  . பேச்சில் இவன் எல்லோரையும் கவர்வான். களித்திருப்பது இவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இத்தகைய மனிதர்கள் தங்கள் குறைகளை அறிய மாட்டார்கள், இவனோ  அவ்வப்போது தனது  குறைகளைப்புரிந்து கொள்வா ன். உடனே  அவற்றை திருத்தியும் கொள்வான்.  பேசும்போது மிகக்குறைவாகவே  பேசுவான் . இவனுடன்  பேசுவோரை 'இவன் இன்னும் கொஞ்சம் பேசமாட்டானா" என்று ஏங்க வைப்பான். இவனது பேச்சில் பொய்யோ, தேவையற்ற உயர்வு நவிற்சியோ இருக்காது. மற்றவர்கள் பேசுவதை பொறுமையோடு கேட்பான். அவர்கள் பிரச்சனைகளைத் தீர்க்க தன்னால் முடிந்த அளவு போராடுவான். 

இவன் மற்றவர்களுடைய தேவைகளுக்கு செவி சாய்ப்பான். அவர்கள் சொல்வதை பொறுமையுடன் கேட்டுக்கொள்வான். 'உலகிலேயே இனிமையான பொருள் ஒருவருடைய பெயர்தான்.' என்பதை இவன் நன்கு அறிவான். ஒரு முறை பார்த்து விட்டால் அவரது  பெயரை மறக்கமாட்டான். ஏதாவது நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால், செய்யவேண்டியவைகளை சரியாகக் குறிப்பு எடுத்துக் கொண்டு காலம் தவறாமல் செயல் படுவான்.  இவன் தன்னிடம் உள்ள குறைபாடுகளை உணர்ந்து அவற்றை பலங்களாக மாற்றும் தனித்திறமை. உடையவன்.  

இவனுக்கு ஏராளமான நல்ல நண்பர்கள் உண்டு. இவனும் ஏராளமானவர்களுக்கு நல்ல நண்பனாக இருப்பவன். இவன் மற்றவர் தேவைகளுக்கு முதலிடம் அளிப்பவன். இவன்  எல்லாஇடைவெளிகளையும்  தானே  நிரப்ப  வேண்டும்  என  நினைக்க  மாட்டான்.  தன நம்பத்தகுந்த நண்பர்களுடன்  பகிர்ந்து கொண்டு வெற்றி பெறுவான் .  இவன் நல்ல சிந்தனைகளும், படைப்புத்திறனும், வசீகரமான உருவ அமைப்பும் உடையவன்.  திடீர் வெற்றியால் பூரிப்படைவான். ஆனால் கர்வம் கொள்ள  மாட்டான். வெற்றி பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டால் மனம் தளர மாட்டான். முதிர்ச்சி என்பது வயதில் இல்லை. பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் தயக்கமின்மையும், நிறைவேற்றுவதற்கு உண்மையான திட்டங்களை வடிவமைப்பதிலும் இவன் வல்லுனன். இதுதான் இவனது முதிர்ச்சி. 

இவன் என்பது இவளுக்கும் பொருந்தும். இவனோ, இவளோ யார்? நமது தோசா அமைப்பின் ஒரு உறுப்பினர்தான். ஒவ்வொரு  உறுப்பினரும்தான் .   நிறுவன் உறுப்பினர்களின் தொலைநோக்குப் பார்வையில் பிறந்ததுதான் TOSA.  ஒவ்வொரு மெம்பரின் நல்ல இதயங்களையும் ஒத்துழைப்பையும் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளைத்தான் எழுதியிருக்கிறேன். நான்கு சங்கமங்களைக் கண்டோம். பள்ளிக்கென பல பணிகள் செயதோம். 
ஆசிரியர்களை கௌரவித்தோம். மாணவர்கள் ரமணனைக் கண்டார்கள்.  சிகரம் வைத்தாற்போல், ஏழு வாரங்கள் மக்கள் அரங்கம் கண்டோம். ஆலயத்தில்  நாட்டியாஞ்சலி கண்டோம். 

  TOSA  உறுப்பினருக்கு ஈடேது, இணை எது? ஒவ்வொரு  தோசா உறுப்பினரையும் சிரம் தாழ்த்தி வணங்குவதில் பெருமை அடைகிறேன். 


மூ ர்த்தி 

No comments:

Post a Comment