Sunday, March 25, 2012

What is the NEXT MOUNTAIN to Climb? Challenge ?? for TOSA

I  read with interest the essay on ” What Made the Difference?-By V Ramamurthy” which you might also have read. If you have not  read  that I strongly recommend  that you read  that. Usually, I skim  thru quite a few of the e-mails, but this one I had to focus on, since I have a lot of regards for Ramu, whom I have known  as my senior, whom I have interacted with during my school days ( also as a friend) and for his accomplishment in the academic world .
I have some snippets to share from his article. Just read through them – not worrying about context  of the original article, aplogies to Ramu as well:
“..was a young village boy who on getting motivated to find the meaning of life was willing to leave home and walk thousands of miles to find…”
“My father’s intentions then were focused on educating and keeping us motivated to work hard toward..”
“…that these episodes motivated me and put me on a track different from most of my friends, but back then they were just examples of other people’s lives”.
 -------------------------------------------------------------------------------------- 
Come on TOSA Team Members, You Have Done the Impossible! You have completed successfully several projects to this day!! The feather in the cap is bringing out Makkal Arangam highlighting TDR, TAHS and TOSA. Obviously, our sincere THANKS and APPRECIATION are to Murthy, Subramanian and the team who are putting forth significant efforts to make all these happen.
This so true for many of us, as I was writing to Ramu, “…we.. were born in such a good family, opportunities were available to us from our parents/teachers and friends, who ingrained the value systems in us, and we as students look to learning, motivating, goal setting and persistent in our efforts in reaching the destination (still continuing on the journey even to this day!).

What are the next series of projects/goals for TOSA
Let us hear from you on what Prof Ramamurthy has described as opportunities..
“..Children in villages and small towns like Thiruvidaimaruthur, Veppathur, Thirunageshwaram and Thirubhuvanam often lack the knowledge of the possibilities”
“.. that one’s ambition and accomplishments need not be shaped by one's economic background and the place where one grows up..”
 “…Of utmost importance is to expose the young minds to the wide world beyond and turn on the light of curiosity toward creating a fulfilling and meaningful life in the future.
-(Thanks  to Shahabad for bringing in Meteorologist as a speaker to TAHS. I hope more events could be organized to kindle the fire in children’s mind)
So, Bring it on ! What is the next Project, Goals for the next year and 5 years! Send in your comments to TOSA leaders.
Regards,
Jay Ramakrishnan, Cerritos/LA, USA.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Dear Ramakrishnan,

Ramamurthy's article was worth its weight in gold. Your reaction is absolutely thought provoking.  In fact, Ramu's article set about my thinking process towards more useful activities directed towards our school and the students at large. In our times, we have witnessed that 10% of the students, who were exposed to parental motivation apart from the teachers' hard work, later became successful in their respective chosen careers. I used to bemoan now and then about the balance 90% of the students. That is why with Ramu's help, we arranged Ramanan's visit to our school. During that interaction, a student quipped Ramanan what she should do to become a Ramanan in her career. Ramanan was flabbergasted by this question. The question meant a lot. It revealed the desire of the student to become a celebrity scientist. Yes, the ambition was there; the desire and the fire to succeed was there. The question is
"How to keep that FIRE burning?"

There is also an urgent need to educate the parents, who are in the grip of false sense of security as a result of the freebies offered by the governments. Most of the parents of TAHSS students do not dream big about their children. Our responsibility should start from such parents. We have to motivate from the parent level. Let us identify the causes of students dropping out and work hard to mitigate the difficulties in respect of potential drop outs. 

Then our task of motivating the students to dream big should start. This can never be an isolated effort. There should be a continuous and persistent effort. We have to draw a road-map for this purpose and should put up a sustained campaign. This should be a model for other villages to emulate. You have spoken about something on which Ramu (Shahabad) and I have been discussing quite often. 

I am ready to debate this point and let the TOSA members also realise that our social responsibility is bigger than anything else if our movement is to succeed and make a mark. Will the ensuing Sangamam V change the face of TOSA? Time and our respected members should tell. 
Regards,
Murthy

Meendum Muthukumar - Syndicate Bank


அன்புடன் அனைவருக்கும் 

ஞாயிறு  திங்கள்  நம்  மகாலிங்கப் பெருமானை  தரிசித்த  மகிழ்ச்சியோடு  அடுத்த  வாரம்  சபரிமலைப் பயணம்...எந்திர  வாழ்க்கையிலிருந்து  விலகி, இறைவனை  நினைத்து, பேதங்கள்  விலக்கி, இயற்கையோடு
முடிந்தவரை  ஒன்றி....வித்யாசமான  அனுபவம்  பெரும் ஒரு  சந்தர்பம் ...  
65   பேர்கள் கொண்ட  குழு. 60 வயதைக் கடந்தவர்கள் இருபது பேர்கள்..தம்பதிகளாக  20 பேர்கள்...என்னைப் போன்று  மூவர் தவிர அனைவரும் கேரளத்திலிருந்து  மும்பைக்கு  குடியேறி செட்டில் ஆனவர்கள்...தவிர மராட்டியர்கள்
ஐந்தாறு பேர்...PLANNED  PROGRAMMES ..
பம்பாவில்  GROUPS  பிரித்து LEADER இன் தலைமையில்   மலையேற வேண்டும்...வழக்கமாக  ஒரு மணி நேரத்தில் சந்நிதானம்  அடைந்து விடும் பாஸ்ட் க்ரூபில் சென்று விடுவேன்..இம்முறை  6 வது பாட்ச்சில் நாராயணன்  தலைமையில் அனுப்பப்பட்டேன்....
"..முத்துக்குமார்   நீ  ஒடறாய்...யு ஆர் நாட்  ஒபெயிங் மீ..என் பின்னாடி வா..திஸ் இஸ் மை ஆர்டர்.."
இத்தனை முறை உடல் வருத்தி மலை வந்தும்  இவரிடம்  கோபம்  இன்னும்  நிறைய இருக்கே  என்று நினைத்தபடி அவர் பின்னால்  நடக்க ஆரம்பித்தேன்....இன்னும்  சிலரும்.
"..மாமா  பதினெண் சித்திகள்  பதினெட்டு படிகளாய் இருக்கு  இல்லையா மாமா.."
"ஒவ்வொரு படியில் தேங்காய் உடைத்து  (இப்போது  பக்கத்து  சுவற்றில் அடிக்கிறோம்) அணிமா மகிமா என்று ஒவ்வொரு சித்தியாய் நமக்கு  கிடைக்கணும்...பிரார்த்தனை  பண்ணனும் ..கேட்டியா நீ..."  என்றார்.
"இந்த முறை படி ஏறும்போது  எனக்கு  பதினெட்டு வருடங்கள்  முடியும் மாமா..என்னை  ஆசீர்வாதம்
பண்ணுங்கோ.." என்றேன். ஒவ்வொரு முறையும் முதல் தடவை செல்வது போல் தான்  தோன்றும் எனக்கு.
"அடேடே  இந்த புத்தி வந்தா போருமேடா...அவன்  பாத்துப்பான்  வா வா .."  எதிரே வந்த சுமை தாங்கிகளுக்கு வழி விட்டு நடந்தோம்.
"மாமா  நீங்க RBI இல் கவர்னர் கிட்டே வேலை பார்த்தவர்...உங்களுக்கு  ஸ்ரீதரைத் தெரியுமா?.."
"ஆரு..? நடுவக்கரை  ஸ்ரீதரா  ...நாற்பது  வருஷ  பழக்கமாக்கும்...இப்போ  எங்க இருக்கார்..?"
"அங்கேதான் RBI இல் ...எனக்கு  ஸ்கூலில்  சீனியர்... "
"ஹே அப்படியாக்கும்  சேதி  ..அற்புதமான  மணிஷர் ...நாங்க  CLOSE ஆக்கும்..."
இப்படியாக  நாராயணன்  மாமா  எனக்கும்  CLOSE  ஆனார்.
------------------------------
------------------------------------------------------------------------------------------
திருக்குற்றாலத்தில்  தங்கி  அச்சன்கோவில்  செல்வது வழக்கம்...30 கூடைகளில்  பூக்களை  இறைவன்  மீது அபிஷேகம் செய்து ..புஷ்பாஞ்சலி  இல் மெய்மறப்போம்...
குற்றாலம் லாட்ஜில்  என்னுடன் தங்கியவர்  பெயர்  தசரதராமன்.
"....மாமா  பாலக்காடோ..  என் பேர்  முத்துக்குமார்...சென்னையிலிருந்து ..போன முறை உங்களைக்
காணலை.."
"தசரதராமன்னு  பேர். கும்பகோணம் ஊர்..இப்போ  மும்பை...
பய்யன்  அங்கே  செட்டில் ஆயிட்டான்..அதான்..1967 sslc நான்.
மலைக்கு போகணும்னு  ஆசை..வீட்டில்  மாமியும் வரேன்னா.
கிளம்பிட்டோம்..."
மாமி பெயர்  வசந்த கோகிலம்.. ஊர் திருவிடைமருதூர்...
தெற்கு  மடவிளாகம். அப்பா  மணி அய்யர்  மகாலிங்கசுவாமி
கோவிலில் வேலைப் பார்த்தவர். ...1970 - 1971 SSLC முடித்த
கையோடு  கல்யாணம் ஆகிவிட்டது.
--------------------------------------------------------
'எங்கெங்கு  காணினும் சக்தியடா ..' மாதிரி  எங்கெங்கு சென்றாலும்
நம்ம ஊர் முன் நிற்கிறது...
முத்துக்குமார் ..மீண்டும்.
Muthu Kumar

09884673027

குரு கல்யாண சுந்தரம் அவர்கள் -By Murthy

குரு கல்யாண சுந்தரம் அவர்கள் 


                                                                                                                               
மார்ச் திங்கள் 5 ம் தேதி வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள். மும்பை நகரின் ஒரு முக்கிய பிரமுகரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த தினம் அது. இந்தியாவிலேயே மிகப்பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திரம் என்ற பெருமை பெற்ற நாட்டியப்பள்ளியின் இயக்குனராக இருப்பவர். எண்பது வயதைத்தாண்டிய இளைஞர் அவர். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பரதம் பயில்விக்கும் ஆசிரியராக இன்னமும் பணி புரிந்து கொண்டிருக்கிறார். இவர்தான் குரு கல்யாணசுந்தரம் அவர்கள்.

தஞ்சை மண்ணைச் சேர்ந்த ஒரு பிரசித்தி பெற்ற நட்டுவனார் குடும்பத்தை சேர்ந்தவர்தான்  குரு  கல்யாணசுந்தரம் அவர்கள். இவர் மூதாதையர்கள்  மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜியின்  நல்லாதரவுடன் தென்னிந்தியாவின் சிறப்பு பெற்ற ஆலயங்களில் கலைப்பணிக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தார்கள். நாட்டியககலைக்கான தொன்மை வாய்ந்த விதிமுறை நூலான அபிநய நவநீதம் என்ற நூல் 1886 ம் ஆண்டு இயற்றப்பட்டது. விலை மதிக்க முடியாத இந்த நூலின்ஆசிரியராகக் கருதப்படுபவர் பரத வித்வான் பஞ்சாபகேச பிள்ளை அவர்கள். இவரது ஒரே மைந்தர் பரத வித்வான் குப்பையா பிள்ளை அவர்கள். 1887 ம வருடம் பிறந்த இவர், தனது தந்தையாலும்,பின்னர் தஞ்சை கண்ணையா  நட்டுவனார்  அவர்களாலும் நாட்டியக்கலையில் ஈடுபடுத்தப்பட்டார். தனது 15 வது வயதிலேயே நட்டுவனாராகப் பணியாற்றத் தொடங்கினார். பின் ஆலயத்தில் நாட்டியப்பணி ஆற்ற திருவிடைமருதூருக்கு  வந்தார்.  இங்கு பலருக்கு   பரதக்கலை பயில்வித்தார். இவரிடம்தான் திருவிதாங்கூர் சகோதரிகள் என்று புகழ் பெற்ற லலிதா, பத்மினி  மற்றும் ராகினி ஆகியோர் பரத நாட்டியம் பயின்றார்கள்.
நவசந்தி கவுத்துவம், தானா வர்ணம் போன்ற தொன்மை வாய்ந்த நாட்டியங்களை புதுப்பித்து, அவைகளை பிரசித்தி பெற வைத்த பெருமையும் இவருக்கு உண்டு. சரபேந்திர பூபாள குறவஞ்சி மற்றும் குற்றால குறவஞ்சி போன்ற நாட்டிய நாடகங்களையும் இவர் மிளிர வைத்தார். 
1945 ம் ஆண்டு மும்பையில் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ  ராஜராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திரம் அமைப்புக்கு முதல்வராக பணியாற்றினார்.1979-ம ஆண்டு சங்கீத  நாடக அகடமியின் கவுரவ உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டார்.  தமிழக அரசால் 1963ல் கலைமாமணி விருது அளித்து கவுரவிக்கப்பட்டார்.
 80 ஆண்டுகளுக்கு மேல் பரதக்கலைக்கு தன்னை அர்ப்பணித்த குரு மூக்கையா பிள்ளையின் மகன் திரு குரு கல்யாணசுந்தரம் அவர்கள் மும்பையில் தனது கலைப்பணியை அறுபது ஆண்டுகளாக சிறப்புடன் ஆற்றி வருகிறார்.மும்பையின்  புகழ்  பெற்ற நட்சத்திரங்களான கோபி கிருஷ்ணா, வாணி கணபதி, வஹிதா ரெஹ்மான் போன்றவர்கள் இவரது மாணவிகள்.செல்வி பதமா சுப்ரமணியம் அவர்கள் சில காலம் இவரிடம் பரதம் பயின்றார்.  சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நமது ஆலயத்தின் கும்பாபிஷேகத்தின் பொது செல்வி பதமா சுப்ரமணியம் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி  நமது ஆலயத்தில் நடைபெறச் செய்தவர் குரு கல்யாணசுந்தரம் அவர்கள்தான். ஆண்டுதோறும் வசந்த உத்சவத்தின் போது, இவரது மாணவிகள் மகாலிங்க சுவாமி கோவிலில் நாட்டியாஞ்சலி செய்வது வழக்கம். 
குரு கல்யாணசுந்தரம் அவர்கள் 1999-2000 ஆண்டுக்கான சங்கீத நாடக அகடமியின் விருதைப் பெற்றவர். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வானாக 2003-ம ஆண்டில் கௌரவிக்கப்பட்டார். பரதநாட்டிய குருவாக இவரது வாழ்நாள்  சாதனைக்காக மும்பை ஷண்முகானந்தா சபா 2004- ம் ஆண்டு இவருக்கு 'டாக்டர் M.S. சுப்பலக்ஷ்மி சிறந்த குருவுக்கான விருதை' அளித்தது.. 2010 ம ஆண்டு அமெரிக்காவில் கிளீவ்லாந்து "நாட்ய ரத்னாகர்" விருதை இவர் பெற்றார். 





உலக அளவில், பிலடல்பியா நகர் "உலக சிவா விழா" ,சிட்னி கலை விழா, நேபால கலை விழா, சிங்கப்பூர் தேசிய விழா, சீன அகில உலக கலை விழா, கொலம்பியாவின் அகில உலக நாட்டிய விழா போன்ற ஏராளமான விழாக்களில் இவரது தலைமயில் நாட்டியக்குழுக்கள் பங்கு பெற்று உலக அளவில் பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளனர். 

புரந்தரதாசர், ஆதி சங்கரர், துளசிதாசர், தியாகப்பிரும்மர், பாரதியார், சுவாதி திருநாள் போன்றவர்களின் படைப்புகளை நாட்டிய வடிவில் தந்த பெருமை இவரது நாட்டியப் பள்ளிக்கு உண்டு . இவர்களது நாட்டிய நாடகங்களான சரபேந்திர பூபால  குறவஞ்சி, வசந்தவல்லி,  திருக் குற்றாலக்குறவஞ்சி, ஸ்ரீ ஆண்டாள், கிருஷ்ண லீலா, ஸ்கந்த லீலா, தியாகப்ப்ரம்ம அஞ்சலி, பஞ்ச கன்யா, ஜெய  ஜெய கிருஷ்ணா, புரந்தரோபநிஷத், காந்தி அஞ்சலி போன்றவை அறிஞர்களாலும், விமர்சர்களாலும் பெரிதும் பாராட்டப் பெற்றவையாகும்.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திரம் உலக அளவில், பழம் பெருமை வாய்ந்த தஞ்சாவூர் பாணி பரத நாட்டிய த்தை,   தனித்தன்மையுடனும், புனிதத்துவத்துடன் பயில்விக்கும் ஒரு மாபெரும் ஸ்தாபனமாக விளங்குகிறது.
மதிப்புக்குரிய குரு கல்யாணசுந்தரம் பற்றிய இன்னுமொரு செய்தி. நமக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்னவெனில் இவர் நமது பள்ளியில் பயின்றவர். இவரதுஎளிமையும் தன்னடக்கமும் வியக்கத்தக்கது. இன்றைய இளைய தலைமுறைக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டாகவும், ஒரு Role Model  ஆகவும் குரு கல்யாணசுந்தரம் அவர்கள் வாழ்ந்து வருவதை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. 

நமது பள்ளியின் பழைய மாணவர் ஒருவரும், உலக அளவில் ஏற்றமும் சிறப்பும் பெற்று நமது மண்ணை உலகெங்கும் மணம வீச வைக்கும் ஒரு உயர்ந்த மனிதருமான பரதநாட்டிய குரு கல்யாணசுந்தரம் அவரகளை  சந்தித்ததில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சியும்,  திருப்தியும்  ஏற்பட்டது. குரு கல்யாணசுந்தரம் அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்து நாட்டியக்கலைக்கு மென்மேலும் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல அருள்மிகு மகாலிங்க சுவாமியை வேண்டி வணங்குகிறேன்.

k.Murthy

சிந்தைக்கு ஒரு சவால் பகுதி 3-By Kalivaradhan


சிந்தைக்கு ஒரு சவால் பகுதி 3

ஹரி ஓம் !
நமஸ்காரங்கள் !

சிந்தைக்கு ஒரு சவால்  பகுதி 2சவால்ஞாபகமிருக்கிறதா?

பாடலைத்திருப்பிப்போட்டு இன்னுமொரு பாடலா

நிஸிதாஸிரதோபீகோ ந்யேஜதே(அ)மரணா ருசா |
ஸாரதோ ந விரோதீ ந(ஹ) ஸ்வாபாஸோ பரவானுத ||
தனுவாரபஸோ பாஸ்வானதீரோ(அ)வினதோரஸா |
சாருணா ரமதே ஜந்யே கோ(அ)பீதோ ரஸிதாஸினி ||”

சம்ஸ்க்கிருதத்தில் அரைமாத்திரை அளவேயுள்ள எழுத்துக்கள்(மெய்யெழுத்துக்கள்) பின்வரும் உயிர்மெய்யெழுத்தோடு சேர்ந்தேவரும்.  உதாரணமாக,
ந்யேஜ’ என்ற எழுத்துக்கள் திருப்பிப்போடும்போது ஜந்யே’ என்றுதான் வரும்.
மேலும் (அ) என்பவை மறைந்திருக்கும் அகாரமாகும்.  பதச்சேற்கையில்(ஸந்தி) இவ்வாறு வரும்பதம் பிரிக்கும்போது அகாரமாகவே வரும்.

முதல் இரண்டு வரிகளின் கடைசி எழுத்திலிருந்து ஆரம்பித்து தலைகீழாக செல்வதே மூன்றாவது நான்காவது வரிகள்.   முதல் இரண்டு வரிகளின் அர்த்தமும் கடைசி  இரண்டு வரிகளின் அர்த்தமும் எதிரெதிரானவை.

முதல் இரண்டு வரிகளுடையஅர்த்தம்:

கூர்மையான கத்திவைத்திருப்பவன் , பயமேயில்லாதவன்,ஒளிமயமானவன்அழகானவன்யுத்தபூமியின் கோரத்தை தாங்குபவன் இப்படிப்பட்ட நம் எதிரி நம் பலத்தை கண்டு பயந்து நடுங்குபவன் இல்லை”.

கடைசி  இரண்டு வரிகளுடைய அர்த்தம்:

“அழகான பளபளக்கின்ற உயர்ந்த கவசங்களை மார்புவரை அணிந்தவன் ஆயினும் கோழையானவன்யுத்தத்தின் சப்தத்தைக்கேட்டே உயிரை விட்டுவிடுபவன் இவன் யுத்தகளத்தில் பயமில்லாமல் என்ன செய்துவிடப்போகிறான்?”

சம்ஸ்க்ருதத்தில் இதை ’முரஜ பந்த’ என்று சொல்வார்கள்.  ’பத்ம பந்த’, ’கட்க பந்த’, ’ஸர்வதோ பத்ர’ என்று பலவிதமான வார்த்தைஜாலங்கள் நிரம்பிய கவிதைகளும் காவியங்களும் அவர்களுடைய கற்பனாசக்தியையும் இலக்கண ஆற்றலையும் பறைசாற்றுகின்றன.
தமிழ் மொழியிலும் சம்ஸ்க்ருதத்திலும் இவ்விதமான பாடல்கள் கதைகள் சரித்திரங்கள் என்று பல உதாரணங்கள் பார்க்கலாம்.

தமிழில் இதை மாலைமாற்றுதல்’ என்றும்ஆங்கிலத்தில்பாலின்ட்ரோம் என்றும் சொல்வார்கள்.ஆங்கிலத்தில்  வெறும் வார்த்தைஜாலம் மட்டுமே, பெரிய காவியங்களென்றோ கவிதைகளென்றோ காண்பது மிகவும் அரிது.

உதாரணமாக தமிழில் சில வார்த்தைகள் பார்க்கலாம் :
மோருதருமோகாக்காவிகடகவிதாத்தாபாபாமாடுஓடுமா,,மோருபோருமோ
திருஞானசம்பந்தசுவாமிகள்அருளிச்செய்தசீர்காழிதேவாரத்திருப்பதிகம்(மூன்றாம்திருமுறை 117வதுதிருப்பதிகம்)3.117 சீர்காழி -திருமாலைமாற்று விருத்தத்தில் பதினோரு பாடல்கள் உள்ளனஅவற்றில் முதலாவது பாடல்

யாமாமாநீயாமாமாயாழீகாமாகாணாகா
காணாகாமாகாழீயாமாமாயாநீமாமாயா

இந்தப்பாடலை சரியாகப் பதம் பிரித்து படித்தால் அர்த்தம் புரியும் :

யாம் ஆம் மா நீயாம் ஆ மா யாழி காமா காண் னாகா
காண காமா காழீயா மாமாயா நீ மாமாயா

இந்தப் பாடலின் அர்த்தம் :

“நாம் பசுக்கள்,  நீ பசுபதி, அழகானவன், எல்லோருக்கும் விருப்பமானவன், யாழி வாசிப்பவன்,பாம்புகளை தரித்தவன், காமனை(மன்மதனை) காணாமல் செய்தவன், சீர்காழியில் உறைபவன், மறையில் மறைவோனே, எம்மைச்சுற்றியுள்ள மாயயை விலக்கு”.

இந்தப்பதிகத்தில் உள்ள எல்லாப்பாடல்களுமே, பதினோரு பாடல்கள், திருமாலைமாற்று விருத்தத்தில் உள்ளன.  அதனால், இப்பதிகத்திற்கு திருமாலைமாற்று பதிகம் என்று பெயர்.  இப்பதிகத்தில் எட்டாவது, பதினொன்றாவது பாடல்களைத்தவிர மற்ற அனைத்துப் பாடல்களுமே  நெடில் எழுத்துக்களாக உள்ளன என்பது இன்னுமொரு சிறப்பம்சம்.  உங்கள் நேரத்தில் கொஞ்சம் இந்தப்பதிகத்தில் செலவழியுங்கள்.

மாக என்ற கவிஞர் சிசுபாலவதம் என்ற காவியத்தில் பத்தொன்பதாவது அத்தியாயத்தில் பல ஆச்சர்யகரமான பாடல்களை புனைந்துள்ளார் அதில் ஒன்று :

सकारनानारकासकायसाददसायका ।
रसाहवावाहसारनादवाददवादना  ॥

இந்தப்பாடலின் சிறப்பம்சம் :

மொத்தம் பதினாறு எழுத்துக்கள் உள்ள பாடலின் இரண்டு வரிகளையும் எட்டு ஏட்டு எழுத்துக்களாக நான்கு வரிகளில் தனித்தனியாக பிரித்து எழுதுங்கள். 

स  का  र ना ना र का स
का य  सा द  द सा य का
र  सा  ह वा वा  ह सा र
ना द  वा द  द  वा द ना 

இப்போது பாருங்கள் பாடலின் பெருமையை :

-       நான்கு வரிகளுமே மாலைமாற்று விருத்தத்தில்(பாலின்ட்ரோம்)
-       மேலிருந்து கீழாக முதல்வரிசையும் கடைசிவரிசையும் ஒன்றே
-       அவ்வாறே இரண்டாவது-ஏழாவது, மூன்றாவது-ஆறாவது, நான்காவது-ஐந்தாவது
-       கீழிருந்து மேலும் அவ்விதமே.

இவ்விதம் பல ஜாலவித்தைகள் இவ்வத்தியாயத்தில் உள்ளன.

வேதாந்ததேசிகர் படைத்த ’பாதுகாஸஹஸ்ரம்’ என்ற காவியத்திலும் இவ்வாறு அனேக அம்சங்கள் நிரைந்துள்ளன.

ஸ்ரீ வேங்கடாத்வரீ  என்ற வேதாந்ததேசிகரின் சிஷ்யர், இவர் காஞ்சீபுரத்திற்கு அருகாமையில் அரசானிபாலை என்ற ஊரைச்சேர்ந்தவர், சம்ஸ்க்ருதத்தில் புலமை பெற்றவர், பதினான்கு நூல்களுக்குமேல் படைத்தவர், ’லக்ஷ்மீசஹஸ்ரம்’ என்ற நூலை எழுதியபின் இழந்த கண்பார்வையை மீண்டும் பெற்றவர், ’ராகவயாதவீயம்’ என்கிற அருமையான காவியத்தைப்படைத்துள்ளார்.  இதன் அருமை என்ன தெரியுமா?

முப்பது பாடல்களே உள்ள இந்தகாவியத்தின் ஒவ்வொரு பாடலும் முதல் எழுத்திலிருந்து கடைசிஎழுத்துவரை சாதாரண நடையில் படித்தால் (அனுலோமமாக) ’ராமாயணம்’.

அதேபாடலை கடைசி எழுத்திலிருந்து முதல் எழுத்துவரை(பிரதிலோமமாகபின்னோக்கிப் படித்தால் ’மகாபாரதம்’

என்ன ஆச்சரியமாக உள்ளதா ? பாடலைப் படிக்கவேண்டுமென்று ஆவலாக உள்ளதா?

அடுத்தவாரம் பார்ப்போம்!

இன்னும் வரும்,
கலிவரதன்
09382817652
-- 

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு-By Sridhar


தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
(இதுவும் சிந்தனைக்கு ஒரு சவால் )


நம் மக்களுக்கு மிருக காட்சிசாலை என்றோ அல்லது விலங்குகள்  சரணாலயம் என்று   சொன்னால் சற்றே சிரமப் படுவார்கள் புரிந்து கொள்வதற்கு ஆனால் அதையே எளிய  தமிழில்  ஸு (Zooசொல்லிவிட்டால் சட்டென்று புரிந்து கொண்டு விடுவார்கள் இது தான் தற்போது நடைமுறையில் தமிழாக இருககிறது 

எனவே நானும் சற்று எளிதாக அனைவரும் புரிந்து கொள்வதற்கு வசதியாக  மேற்சொன்ன நடைமுறையினையே ஓரளவு கையாள  முயற்சி செய்கிறேன்.

திரு கலிவரதன்ஜி அவர்கள்  ஒரு  சமஸ்கிருத  ஸ்லோகம்  ஒன்றினை  எடுத்து  காட்டி  உதடுகள்  ஒட்டாமல்  அதனை படிக்க  முடிவதனை   சுட்டிக்காட்டினார். அவரது முதல் சிந்தனைக்கு ஒரு சவால் பகுதியில் அது சிறப்பாகவே இருந்தது.

எனினும் நமது தமிழிலும் இது போன்றதொரு  உதடுகள் ஒட்டாத ஒரு திருக்குறளினை  மட்டும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். அதுதான் புகழ் என்னும் அதிகாரத்தில் வரும் கடைசி குறள் 
 
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழாதவர்”.
 
என்னும் குறள் 
 
வரலாற்றசிரியர்களின்  ஆராய்ச்சிப்படி திருவள்ளுவர் வாழ்ந்த காலம் சுமார்  கி. மூ. இரண்டாம் நுற்றாண்டு  கடைசி முதல் ஒன்றாம் நுற்றாண்டு முதல் பாதி  வரை. 
 
ஆக உதடுகள் ஒட்டாத இலக்கியம் அன்றே வந்து விட்டன . 

அது ஒரு புறம் இருக்கட்டும்  

இன்று நான் சொல்லப்போவதும் வேறு  ஒரு விதமான சிந்தனைக்கு ஒரு சவால்தான். ஒரு வார்த்தையினை இடம்  வலதாகவும்  வலது இடமாகவும்   படித்தாலும்  ஒரே மாதிரி வடிவம் மற்றும் பொருள் வரும்  இதனை  எளிதில்  புரிந்து கொள்வதற்கு வசதியாக  நடைமுறை   தமிழில் பளின்றோம்  ( Palindrome) என்று சொல்வார்கள் . 

காக்கா தேருவருதேமோருபோருமோவிகடகவி,சிவகுரு முருகுவசி,  மாடு ஓடுமாகருவாடு வாருக,மாலா போலாமா,  வினவி மாறுமா தேயுதே மேளதாளமே

அதுவே ஆங்கிலத்தில்
civic deed, Madam, Malayalam,  Noon, Nun, racecar radar, redivider, rotator

கிரேக்க இத்தாலிய மற்றும் லத்தின் போன்ற பல மொழிகளில் இருந்து பல சொற்களை தனதாக்கி கொண்ட ஆங்கில மொழியில் அதிகமான   பளின்றோம் இருக்கத்தான் செய்யும். 

ஆனால் நமது தமிழில் அகத்தியர் காலம் தொட்டே தமிழுக்கு என்று ஒரு நல்ல இலக்கணம்  வகுக்கப்பட்டு  அதனை நாம் அனைவரும் ஏற்று கொண்டுவிட்டதால் ஆங்கிலம் போல் நாம் நினைத்தபடி பளின்றோ மினை  உருவாக்கி விட முடியாது. மேலும் தமிழில் (அஆ போன்ற)  உயிர் எழுத்துக்களும், (க்  ங் போன்ற)  மெய் எழுத்துக்களும் மற்றும் இரண்டும் சேர்ந்த  (க கா போன்ற)  உயிர் மெய் எழுத்துக்களும்  இருப்பதால்  பளின்றோம் உருவாவது  சற்றே  கடினம்.

இருப்பினும் நமது தமிழ் இலக்கணத்தின்  பிதாமஹர்தொல்காப்பியர் இதனையும்  தனது தொல்காப்பியத்தில் இடம்பெற செய்துள்ளார்.  நான்  சொல்வது  பலருக்கு  ஆச்சர்யமாக  இருக்கும். ஆம்  இதனை  இடம்  பெற  வைத்து  அதற்கு ஒரு பெயரினையும்  தந்துள்ளார். அவர் அதற்கு தந்த பெயர் மாலை மாற்றான். ( மேலும் அவர் அப்பெயர் தந்தற்கு ஒரு காரணத்தையும் சொல்லி இருக்கிறார். முனிகளும் ரிஷிகளும்  ஜப  மாலையினை திரும்ப திரும்ப உருட்டி கொண்டிருப் பார்களே அதனை சொல்லியே அவர் ஒரு செய்யுளாகவே  வடிவமைத்து உள்ளார் .) அந்த செய்யுள் தான் என்ன " "இருவழி  ஒக்குஞ்சொல் . முன்பின் இருவழியும் ஒத்த எழுத்துக்கோப்புடைய செய்யுள் மாலைமாற்று இருவழியும் ஒக்குஞ் சொல்லுடைய மாலைமாற்றான" .  

சரி

தமிழுக்கு நிகராக நமது தேசம் முழுவதும் வியாபித்து இருக்கும் சம்ஸ்கிருதத்தில் மேற்சொன்ன பளின்றோம் எப்படி கையாளப் பட்டிருக்கிறது என சற்றே பார்க்கலாம். 

நம் தமிழினை போலவே சம்ஸ்கிருததிலும்  இது விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது இடம் வலதாகவும்,வலது இடதாக படித்தாலும்  ஒரு மாதிரி  வரும் சொல்லுக்கு யமகம் என்று பாணினி வியாகர்ணத்தில் பெயரிடப்பட்டு உள்ளது. பதஞ்சலி முனிவர்  தனது பதஞ்சலி வியாகர்ணத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று பல சதுர மற்றும் எண்கோண கட்டங்களு கிடையே எழுத்துக்களை அமைத்து சொற்களை பல விதமாக படித்து காட்டி அமர்க்கள படுத்தி அதற்குசித்ரகவிவிலோமம்கதப்ரத்யாகதா என்று பெயர்களையும் கொடுத்திருக்கிறார்.

சரி எழுத்து சொல் வார்த்தை இவைகளில் மட்டும் பளின்றோம் இருப்பதை  பார்த்தோம்

நமது தமிழினை கிபி  ஆறாம்  நூற்றாண்டில்    தனது பக்தியின்  மூலம்  தேவார பாட்டால்  ஒரு வழி  செய்த இன்னும்   மேலே சொல்ல வேண்டுமையின்   ஸ்ரீ     ஆதி சங்கரரே  பக்திக்கு ஒரு திராவிட சிசு என வர்ணித்த   தெய்வ குழந்தை திருஞ்ஞான சம்மந்தர் இந்த மாலை மாற்று இலக்கணத்தை பின்பற்றி ஒரு பத்து பாடல்களையே  பாடி அதனை மாலை மாற்று திருபதிகம் என பெயரிட்டு உள்ளார்.

அதில் ஒரு பாட்டினை பொருளுடன் பார்க்கலாமா.

'யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா காணா காமா காழீயா மாமாயா நீ மாமாயா'
இதன் பொருள் -
'சிற்றுயிரான நாங்கள் கடவுள் என்றால்பொருத்தமாநீ ஒருவனே கடவுள் என்றால். பொருந்தும். ஆம் ஆம்!'

மற்ற பாடல்கள்
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா ராயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா  மூவாதா
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா  வாவாநீ
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே  லாகாயா

சரி பிற்காலத்தில் அதாவது சுமார் பதினைந்தாம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் பிறந்து நமது திருவிடைமருதூர் உள்ளிட்ட பல ஊர்களுக்கு வந்து பல பாடல்கள் பாடிய கவி காளமேக புலவரின் பாடல் ஒன்றினை மட்டும் சுட்டி காட்டி இந்த தங்கமே தமிழுக்கில்லை தட்டுபாடை முடித்து கொள்கிறேன்.

தமிழின் "என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப்  பாடச்சொல்லகாளமேகம்  காண்பவர் கண்கள் பனிக்க பாடல் ஒன்றை பாடி இருக்கிறார். 
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா.
பொருள்
(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும்பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்துகொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் வரை காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட  கையாலாகிவிடக்கூடும்

இதுதான் தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு.

நன்றி
ஸ்ரீதர்