Saturday, October 19, 2013

Mumbai Post

Oct 25  அன்று  RIGHT TO INFORMATION  DAY ஆக  கொண்டாடப்படுகிறது.Times of India முழு பக்க விளமபரமே  வந்துள்ளது.
உங்களுக்கு ஒய்வுஒதியம் வரவில்லையா .,passport பிரச்னையா .municipal சேவையில் கோளாரா ,,,போன்ற குறைகளுக்கு அதி கார வர்க்கத்துடன் நேரடியாக மோ த முடியாது.காது கொடுத்து கேட்க ஆளில்லை உள்ளே எனன்ன நடக்கிறது எ ன்று தெரியாது. விதி முறைகளும் தெரியாது.

கவலைப்படாதீர்கள் .RTI கை கொடுக்கும்  சரியான தகவல்களை உள்ளது உள்ளபடி சேகரித்து அடுத்த நடவடிக்கை எடுக்கலாம்.

THE RTI  EMPOWES all Indians to seek information from public aut h orities  like central,state,  local govts,parliament legislatures,judiciary,poice,and all bodies financed by govt

YOUR RIGHT.....Ask questions,seek information,inspect official documents inspect Govt Works, Take samples of material of any Govt Work


Filing RTI application.......should have pticulars of information to be sought ,  addressed  to Public Relation Oficer of the Dept.Initial amount  of fee of Rs.10.00

Word Limit ...should not exeed 500 Words

Language....English, Hindi or any official language

Information: U can seek ......Records,Documents,memoes,Mails,Opinion, Advices,Circulars, computer generated Materials,Order s, log books,contracts,reports, samples

Dead line for reply  30 to45 days


Times of India  has arranged various WorkShops in major cities from oct18 to 23.  Oct      In Cennai on oct 22

Registration for Work Shop   http://rtiday.com/registration.aspx




Kndly see TDR TIMES FACE BOOK also.



உங்களுக்கு தெரியுமா? லக்னௌ க்கு அருகில்  unnaavo என்ற  இடத்தில் 1000 டன்  தங்கம் புதைந்துள்ளதாம்.தொல் பொருள்  ஆராய்ச்சி  பிரிவு தோண்ட ஆரம்பித்திருக்கிறது. பின்னணி பார்ப்போம்.

சோபான் சர்க்கார் என்ற சாமியாரின் தெய்வீக கனவில் அல்லது திருஷ்டியில் இது தெரிந்ததாம்.அது மட்டுமல்ல. மற்றுமொரு 2500 டன்  தங்க  புதையல் அடம்பூர் கோட்டைக்கு அடியில் புதைந்துள்ளதாம்.

தெய்வீக சக்தி உள்ள அவர் கான்பூர் magistrate க்கு எழுதியுள்ள செய்தியில்  ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் ,தான் ரூபாய் 10 லட்சம் வைப்பு தொகை தரவும் தயார்,புதையல் கிடைக்கா விட்டால் பரி முதல் செய்யலாம் என்றும்,மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.மேலும்.Reserve வங்கிக்கும் எழுதியுள்ளாராம். தேச நலனுக்காக இதை செய்வதாகவும்  கூறி உள்ளார்.

சாமியாரின் சீடர் பத்திரிகையாளர்களை பொறுமையாக இருக்கும் படியும் .தெய்வீக சக்தி படைத்துள்ள தன குருவின் வாக்கு பலிக்கும் என்ரும் வேண்டி உள்ளார்.

தகுந்த பூஜை, யாகங்களுக்கு பின் 12 பேர் கொண்ட தொல் பொருள் குழு  தோண்ட ஆரம்பித்துள்ளது.. தலைவர், புதையல் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை .சரித்திர சம்பந்தமான தகவல் கிடைக்கலாம் என்கிறார். ஒரு மாத காலம் திட்டம். தங்களுக்கு கிடைத்துள்ள உத்தரவின் பேரில் செயல் படுவதாக கூறினார்.

1860 ம் ஆண்டு ம்  இது போல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு,நடுவில் கை விடப்பட்டதாம்

பல கேலி,கிண்டலுக்கு நடுவில், நரேந்திர மோடியின் கூற்று "உலகம் நம்மை கண்டு நகைக்கிறது.யாரோ கனவு கண்டாராம்.அரசாங்கம் செயல் படுகிறதாம்.அயல் நாட்டு வங்கிகளில் புதைந்துள்ள நம் கருப்பு பணம் 1000 டன் தங்கத்தை விட அதிகம். அதை தோண்டட்டும்."
உலக மனித நல இதயங்கள் மரண தண்டனையை ஒழிக்க போராடுகின்றன .மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு,பல ஆண்டுகள் சிறையில் மன உளைச்சல் களுக்கு ஆளாகி,முடிவில் தண்டனை நிறைவேற்றும் வரை கைதிகளின் மன நிலை கொடுமை யானது. இதை பாருங்கள்.

இரான் நாட்டில்,தூக்கில் இடப்பட்ட கைதி 12 நிமிடத்திற்கு பின் doctor  o.k. செய்த பின் பின அறைக்கு மாற்றப்பட்டார்.ஆனால் மறு நாள் காலை அங்குள்ள அதிகாரிகள் பார்த்த போது  மூச்சு இருந்தது. உடனடி மருத்துவ சிகிச்சைக்குப்பின் தேறி வருகிறார்.


சந்தோசப்படாதீர்கள்.அங்குள்ள சட்ட, நீதி துறை நிபுணர்கள்  இரண்டாம் முறை தூக்கில் போடா சட்டத்தில் இடமுள்ளதா  என்று ஆராய்ந்து வருகிறார்கள்.

Amnesty International   உடனடியாக நிறுத்த வேண்டுகோள் விடுத்துள்ளது.  நாமும் நல்லது நடக்க பிரார்த்திப்போம்.

செய்த குற்றம்: போதை பொருள் கடத்தல்.
With Best Wishes from  Mumbai Venkataraman.


“Why This Golu Veri Di?”



Now that Navrathri  is the current affairs, visiting few relatives and friends last weekend for the Golu, I realised that almost all the hosts talked a lot about ‘how difficult these days it is’ to organise the 10-day circus. It occurred to me then that why not have an ‘Online Golu instead of the real one. Ask me how?
For one thing, every year before Dassera you need to dig up the trunk boxes of earlier generation to unpack colourful toys of yore for display. Broken ones pain you after all you painstakingly collected them over years. The cost of buying new ones, which is shooting up along with onions and such other ‘essentials’ shocks the spouse. War ensues at home between daily needs and annual rituals, whether or not to replace the broken toys or/and also add to the existing variety. After all   budget provision is needed also for the fast-approaching Diwali purchases.
Come to think of it, the next ‘issue’ (‘prachinai’ the permanent word in TV Tamil Serial dialogues) in family front is how many steps are required for the golu, especially when the flat sizes are shrinking day-by-day. From nine steps your spouse steps down, like the real estate TV ad selling cheaper-cost-flat lowering his hand step-by-step, “Still less, yet lower, even low”, and bringing you to five steps, mumbling “Why this Golu Veri Di?” Finally, he has to climb (up and) down the stairs & loft, clean the ware and do the errands, worrying about the wear & tear of his veishty (lungi).
Not keeping a Golu is out of question. After all, you want your electronically-bombarded-younger-generation to know about Indian mythology, spirituality and tradition, though they care too hoots about these.
Coming to types of golus, in some nationalist houses, I found Indian Freedom Struggle depicted through display of Mahatma Gandhi, Bharathiyaar, etc. as a golu theme. Like the recent Tamil film titles on city or district names such as Madurai, Theni, my brother’s family had ‘created’ miniature-Trichy as a theme-based-Golu. You could spot Srirangam Temple, Rock Fort, Air port, Railway Junction, Kaveri & Kollidam rivers, etc. and the grandmother was so happy going back (to Tiruchirappali Town without ticket) reminiscing her nostalgic days.
Why take the trouble of arranging a real golu of multiple steps? Why not take only one e-step (few clicks), and leap into the virtual golu world? Cut & copy a variety of gods, goddesses by googling and paste them (as a collage) creatively on to your Wall (electronic I mean). Your contacts will ‘Like’ it.
You can even ‘show’ your golu to your cousin in Australia or Switzerland. You can have readymade Dasaavatharam posters (not Kamal Haasan’s film), Six-faced Murugan (not Quick Gun Murugan), Mall pictures instead of the traditional village sellers displaying ethnic stuff. You name it; it is there in the Net. You need to only cast a wide net to capture colourful pictures.
See the brighter side, friends and relatives need not be invited, they will in any case ‘drop in’ at your site virtually. No lame excuses for physically not visiting you, in their busy lives. Less travel, so you become environment-friendly. No plastic toys, plaster of paris material, serial electric lights and decoration. And think again, no sundal (Navarathi dish) which again creates a hole in the ozone layer (release of Methane). At last, it’s all gas you see!
No embarrassment of singing (as well as listening to them!) by visitors. In my sister’s golu, gadgets were broadcasting religious bhajans while we visitors were gossiping happily.  Even if we had asked our little children to sing in front of the golu, they would have the sung latest ‘kola veri’ songs and not Carnatic music as the elders would expect.
‘Why no golu this time at your home?’ asked my hosts and I replied, “If all the four members of my small family assemble at the dining table, this itself is like golu!” It’s is a rare occurrence (almost once a year affair). Everyone is busy eating in front of the TV, Desktop, Laptop, Palmtop, Tab, Mobile, and by mistake they should not byte, sorry bite the remote or the thin gadget instead of chips or burger!
Talking of eating, in the real-world golu, you need to cook a daily-variety of sundals for the guests. You can’t send them empty-handed. In fact I have been unsuccessfully trying to inspire my son studying engineering to become the richest and famous Bill Gates by designing a ‘cooking gadget’ that will receive sms from working couple in office, to automatically produce food of choice, like drum stick sambar, brinjal curry, and of course sundal, literally at the touch of a button. But the machine should re-order, cut vegetables, clean and wash the utensils itself.
Imagine the quantum of women power that will be released by this machine. What a drudgery cooking daily for four thankless members by millions of women (men still don’t go anywhere near the kitchen). I already read in the news that dosa or chappati-making machines are being designed to churn out hundreds in an hour. Womenfolk will really feel liberated and grateful. They can avoid the kit..kit.. kitchen. Men folk too will be pleased with this gadget and will quickly acquire one, even as they can altogether avoid matrimony!
-J Jeyes


ஆண்டவனைத் தேடுகிறேன் ....வா .....வா ....வா



அன்பு உள்ள இதயத்திலே ஆண்டவன்   இருக்கின்றான் 

அகந்தை புகும் இடத்தில் இருந்து ஆண்டவன் நகர்கின்றான் 


ஆசை  உள்ள இதயத்திலே ஆண்டவன் இருக்கின்றான்

பேராசை புகும் இடத்தில் இருந்து ஆண்டவன் நகர்கின்றான்


இசை வடிவத்தில் ஆண்டவன் இருக்கின்றான்

இச்சை இதயங்களில் இருந்து  ஆண்டவன் நகர்கின்றான்


ஈகை உள்ள இதயங்களில் ஆண்டவன் இருக்கின்றான்

ஈகோ (Ego) புகும் இடத்தில் இருந்து ஆண்டவன் நகர்கின்றான்


உலகம் முழுவதும், அக உண்மையில்   ஆண்டவன் இருக்கின்றான்

உண்மையில்லா  உள்ளங்களில்  இருந்து ஆண்டவன் நகர்கின்றான்


ஊக்கம் உள்ள உள்ளங்களில் ஆண்டவன் இருக்கின்றான்
என்றும், எங்கும் நல்  எண்ணங்களில் ஆண்டவன் இருக்கின்றான்

ஏற்றம் கொண்ட சிந்தனையில் ஆண்டவன் இருக்கின்றான்

ஐய்ம்பொன் சிலை தனில் ஆண்டவன் இருக்கின்றான்

ஒற்றுமை தேடும் மனித நேயத்தில் ஆண்டவன் இருக்கின்றான்

ஓங்கார ரூபத்தில், ஒலியில்  ஆண்டவன் இருக்கின்றான்

கடின உழைப்பில், கதிரொளி வடிவில்  ஆண்டவன் இருக்கின்றான்

கடமை உணர்ச்சி தன்னில் ஆண்டவன் இருக்கின்றான்

சுய நலமில்லா....பொது நலத்தில் ஆண்டவன் இருக்கின்றான்  

தன்னலமில்லா சேவையில் ஆண்டவன் இருக்கின்றான் 

நன்றிக்கடன் நல்கிடும் நம் இதயங்களில் ஆண்டவன் இருக்கின்றான்

TOSA அன்பர்களின் உள்ளங்களில், எண்ணங்களில் ஆண்டவன் இருக்கின்றான்

அருவிக் கவிஞன் ஸ்ரீதர் கூறியது போல், வரி  அமைத்தது போல் 

ஆண்டவன் உன்னுள்   இருக்கின்றான்.............

ஆண்டவன் என்னுள் இருக்கின்றான்................

ஆண்டவன் நம்முள் இருக்கின்றான் ....................


 இடைமருதூரான் ...........     
திருவிடைமருதூர்    


Saturday, October 12, 2013

Kavithai

கருவிலிருந்து உருவாகி மானிட உருவம்தனைகொடுத்து
பருவம் தந்து மாயம் என்ற உடை அணியவைத்து அதில்
கர்வமென்ற விதை விதைத்து ஆளாக்கிவாழ்வெனும் சுழலில்
தர்மமதை மறந்த நிலை தந்தனையோஆண்டவனே

நின்னை காண துடிக்கும் பல உள்ளங்கள்அய்யகோ
உன்னை அண்டி நிற்குதே எனினும் உன்உள்ளம்தான்
கனியவில்லை ஏனோ யான் அறியேன்அய்யனே
இணையில்லா மன்னனே என்னவனேகண்ணனே
பிணைத்திடுவாய் நின் அன்பெனும்பாசகயிற்றாலெ 

RBI Sridhar


கல்யாணி ராகம் ஒளி ..........ஒலி வடிவத்தில்

மீண்டும் முத்துகுமார் கல்யாணி ராகத்தை எழுத்து வடிவில் வடித்துள்ளார்.ஒளி ..........ஒலி வடிவத்தில் அனுபவித்ததை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள அல்ப ஆசை.நமது ஆசைகளை இறைவேற்றிக்கொள்ள TDR TIMES ஐத்தவிர  வேறு வழி எது?

அன்பர் மீண்டும் முத்துகுமார்  ஒப்புக்கொள்ளுவார்  என நம்பிக்கையுடன்  அளிக்கிறேன்.


முதலில்  சாருலதா மணியின் விளக்கத்தை கொஞ்சம் கேட்போம்.








சினிமா பாடல்கள் நம்மை கவர்வதற்கு முக்கிய காரணம் அதன் பொருளும் பாடல் அமைந்த சூழ்நிலைக் காட்சிகளும் தான் .அது போல் தியாகராஜரின் ஒரு கீர்த்தனையை அனுபவிப்போம்.


தெலுங்கு தியாகையருக்கு நம் தமிழ் தியாகையர்  குறைந்தவரா என்ன? மகான் பாபநாசம் சிவனின் தேவி கிருதி ஒன்றை பார்ப்போம்.நிரவலில்  "நீயே மீனாக்ஷி காமாட்சி நீலாயதாட்சி"யில் கல்யாணி எப்படி சஞ்சாரிக்கிறாள் என்று பாருங்கள்.


என் இதய தெய்வம் குருஜியின் அருள் இசையில் அமைந்த ஒரு திருப்புகழ் 


C:\Users\Admin\Pictures\Music\Guruji  TPKZ   TEACHING\Vol III 321-475


இசை ஞானி இளைய ராஜா  கொல்லூர் மூகாம்பிகையை எப்படி இசையில் வர்ணிக்கிறார். பார்ப்போம்.


கனவுத்தொழிற்சாலையில் புகுவோமா?


அதே மெட்டில்  அம்மாவை போற்றும் பாடல் லட்சக்கணக்கான ரசிகர்களை மயக்கியது ஆச்சர்யமில்லை.



Old is Gold



என்றும் நினைவில் நிற்கும் அற்புத கல்யாணி யின் பரிபூர்ண  நிலை.



சங்கமம் TOSA வுக்கு புதிதல்ல. இந்த சங்கமத்தில் கல்யாணியை எப்படி ஆனந்திக்கிறார்கள் !




திசை திரூம்பிய சினிமா பாடல்களை திரும்பவும் கர்நாடக இசைக்கு  இழுத்து வந்த படம் சங்கராபரணம்..இதில் ஒரு கல்யாணி.









பாரதி படத்தில் ஒரு வித்தியாசமான கல்யாணி.






மற்ற பாடல்கள் U tube ல் பரவிக்கிடக்கின்றன.அன்பர்கள் துருவலாம்.



இப்போது கல்யாணி வகை ராகங்களை சுருக்கமாக பார்ப்போம்.

பூர்வி கல்யாணி 







 யமுனா கல்யாணி 




மோகன கல்யாணி 




ஹமீர் கல்யாணி 




அன்பர்கள் தம் இசை உணர்வை  சம்பாதிக்க U Tube  எளிமையான ,சுலபமான, சிறந்த வழி. மனம் கவர்ந்த பாடல்களை  CELL ல் சேமியுங்கள்.நடைப்பயிற்சியின் போது ., பிரயாணத்தின் போது ,தூக்கம் வரும் வரை, ஏன் தூக்கத்திலும்,கனவிலும் கூட கேளுங்கள்..இசை வசப்படும்.இதயத்தில் குடிகொள்ளும்.வாழ்த்துக்களுடன் 

மும்பை வெங்கடராமன்.


உலகை வெல்லலாம்



நேற்று நடந்த, நான் கண்ணால் பார்த்த அந்த  நிகழ்ச்சி திருச்சி பஸ்  ஸ்டாண்டில் அரங்கேறியது..  24 மணி நேரமாகியும் என் கண்களின் முன்னால் நிழலாக நின்று கொண்டிருக்கிறது

விஷயம் இதுதான். ஒரு முதியவர் ஆட்டோவிலிருந்து இறங்கி ஆட்டோக்காரருக்கு 120 ரூபாய் கொடுத்திருக்கிறார். ஆட்டோக்காரர் அதை வாங்க மறுத்து," நீங்க 100 ரூபாய்தான் பேசினீங்க . 20 ரூபாயை நீங்களே வச்சுக்குங்க." என்று சொன்னார்  ,

 முதியவர், "நீங்க 120 ரூபாய்தான் கே ட்டீங்க .. நான்தான் 100 ரூபாய் என்று பேரம்பேசினேன்   வாஸ்தவம்தான்.  நீங்களே லக்கேஜை தூக்கி ஆட்டோவில் வச்சீங்க. இப்ப மீண்டும் கீழே இறக்கி பஸ்  கிட்டே கொண்டு வச்சீங்க. இதை எல்லாம் பார்க்கும்போது நியாயமான வாடகை 120 ரூபாய் என்று எனக்கு தோன்றுகிறது.", என்று சொல்ல, தர்க்கம் நீடிக்கிறது.

இறுதியாக ,  ஆட்டோக்காரர் 20 ரூபாயை வாங்கிக்கொண்டு , அருகே இருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் சேர்த்து விட்டார்!!

அந்த ஆட்டோக்காரர் நல்லவரா, அல்லது அந்த முதியவர் நல்லவரா - எனக்கு புரியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நன்றாகப் புரிந்தது. இந்த உலகில் நல்லவர்கள் எப்போதுமே இருப்பார்கள். ஆனால் நல்லவர் அல்லாதவர்கள் நல்லவர்களை விடஎண்ணிக்கையில் அதிகம்  இருப்பார்கள். அதனால்தானோ என்னவோ நல்லவர்களாக இல்லாதவர்கள் தான் நம் கண்ணுக்கு அதிகம் புலப்படுகிறார்கள்.

உலகில் இப்படியும் நல்லவர்கள் இருப்பார்களா என்று வியக்கவைக்கும் ஒரு சின்ன நிகழ்ச்சி யைப்பற்றி இப்போது நான் சொல்லியே ஆக வேண்டும். உங்களில் பலர் இதை முன்னரே படித்திருக்கலாம்.

ஒரு   மருத்துவ மனை  முதல் மாடி. பொது வார்டு. இரண்டு அடுத்தடுத்த படுக்கை களில் இரண்டு நோயாளிகள்.அதில் ஒரு படுக்கை ஜன்னலை ஒட்டி இருந்தது.அதில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் படுத்திருந்தார். அவருக்கு இதய நோய். அன்று காலைதான் அட்மிஷன். . 

அடுத்த படுக்கையில் ஒரு முதியவர் காலில்  எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டுகளுடன் ஒரே நிலையில்  படுத்திருந்தார்.அவரால் சரியாக அசையக் கூட முடிய வில்லை.

அன்று மதியம் எலும்பு முறிவு நோயாளி, இதய நோயாளியிடம் சொன்னார்," நான் ஒரு பாதிரியார். எப்ப்போதுமே மாதாகோவிலில் கீதங்கள் ஒலிக்கும்..இப்ப கால் ஒடிஞ்சு படுத்து கிடக்கிறேன். எனக்கு என்ன ஆகுமோ தெரிய வில்லை.எனக்காக  நீங்கள் ஒரு பாட்டு பாடுங்களேன்."

இதய நோயாளி இனிமையான குரலில் பாடினார்.

" ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போரடும் போர்க்களமே ;
  ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே.
  நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் , லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் "

பாடி முடித்தவுடன் பாதிரியார் ," நண்பரே, மிக்க நன்றி." என்றார்.

மலை நேரம். பாதிரியார் இதய நோயாளியிடம் கேட்டார் ," நண்பரே, கண்ணாடி ஜன்னல் வழியே நீங்கள் வெளியே நோக்கி அங்கு நடக்கும் இனிய நிகழ்வுகளைக்  கண்டு சாளரத்தின் வெளியே பார்த்த உ ங்களால் மகிழ்ச்சி அடைய முடியும். இப்போது வெளியே பார்த்து என்னதான் நடக்கிறது என்று சொல்லுங்களேன்."

அது.வெளியே பார்த்த இதய நோயாளி ," ஐயா, வெளியே பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களை காண முடிகிறது. ஆஹா!கடவுள் எத்தனை வண்ணங்களை  படைத்திருக்கிறான். கண்ணுக்கு இதமான காட்சி." என்று வர்ணித்தார்.

" அடாடா, நீங்கள் கூறும்போதே என் உடல் வலியெல்லாம் குறைந்தது போல உணர்கிறேன். அவ்வப்போது நீங்கள் காணும் காட்சிகளை எனக்கு சொல்லுங்கள். என் வலி குறையும்." என்றார் பாதிரியார்.

இரவு நேரத்தில் இதய நோயாளி கூறுவார்," ஐயா, தெருவிளக்குகள் ஒளி வீசும் தோரணமாக பிரகாசிக்கின்றன. வாகனங்களின் விளக்கொளிகள் கொஞ்ச கொஞ்ச இருளையும் விளக்கி ஒளி பரப்புகின்றன."

பாதிரியார் ரசிப்பார். அவரது வேதனை குறையும். 

காலையில் , " ஐயா, ஜன்னலுக்கு அப்பால்  ஒரு பள்ளிக்கூடம். நூற்றுக்கணக்கான குழந்தைகள் சீருடை அணிந்து அணிவகுத்து  நிற்கும் அழகே தனிதான்."என்பார். 

 சற்று நேரம் கழித்து அவர், " ஐயா, இப்போது குழந்தைகள் வகுப்பறை நோக்கி ஒடுகின்றனர். எத்துனை கண் கொள்ளாக் காட்சி!" என்பார்.

செவிலியர்களிடம் பாதிரியார் ," சிஸ்டர், அந்த ஜன்னலோர படுக்கையை எனக்கு தர முடியுமா?" என்று கேட்பது வழக்கமாகி விட்டது. 

ஒரு நாள் அதிகாலையில் இதய நோயாளி கண் விழிக்க வில்லை. உறக்கத்திலேயே இறந்து போயிருந்தார்.

பாதிரியார் அந்த படுக்கைக்கு மாற்றப் ப்பட்டார். அவரது கால் கட்டுகள் எடுக்கப்பட்டன.

முதல் வேலையாக ஜன்னலுக்கு அருகே தட்டுத்தடுமாறி வந்து நின்றார். வெளியே பார்த்தார்.அங்கே அவர் பார்த்த காட்சி அவரை திடுக்கிட வைத்தது. அவர் பார்த்ததெல்லாம் , வெளியே இருந்த குப்பை கூளமான , அசுத்தமான ஒரு தரை மட்டம்தான். தலை சுற்றியது அவருக்கு.

" சிஸ்டர், யாராவது வாருங்களேன் ." அவரது அலறல் எங்கும் எதிரொலித்தது. 

ஒரு நர்ஸ் ஓடி அங்கு வந்தார். 

இங்கே இருந்த பேஷண்ட் ஜன்னலுக்கு வெளியே பார்த்து என்னிடம் அங்கு உள்ள  அருமையான விஷயங்களை பரிமாறிக்கொள்வார். ஆனால் நான் பார்ப்பதோ ஒரு குப்பை மேடு ."

" என்ன Father சொல்றீங்க ? ஜன்னலுக்கு வெளியே அவர் பார்த்த காட்சிகளை உங்களுடன் பேசுவரா?" சிஸ்டரின் குரலில் ஒரு வியப்பு தென்பட்டது.

" ஆம். அவர் சொல்லிய விஷயங்களால் என் உடல் வலிகள் எல்லாம் நீங்கி விடும். தினமும் பல முறை வெளியே நோக்கி என்னிடம் பேசுவார்."

" Father, ஆச்சார்யமாக இருக்கு. அந்த பேஷண்ட் பார்வையற்றவர்."

" என்ன, என் வலிகள் நீங்க ஒரு பார்வையற்றவர் கற்பனையாக என்னிடம் பேசிய விஷயங்களா அவை? Jesus, உன்னைப்போலவே மனிதர்களிடம் அன்பு காட்டிய அந்த மாமனிதர் உன்னோடு கலந்து விட்டாரே ." என அழுதார். ஆம், அதிக அன்பும் அழ வைக்கும் வகையைச் சேர்ந்ததுதான்..

அன்பு, அடக்கம் ,ஆதரவு ,இரக்கம் , உதவி, மனித  நேயம், பக்தி, - இவைகள்தான் தோசாவின் மூலதனம். தோசா உறுப்பினர்களின் குணாதிசயங்கள்.

அந்த ஆட்டோக்காரரைப்போல, ஆட்டோவில் பயணித்த அந்த முதியவரைப்போல, அந்த இதய நோயாளியைப்  போல  மிகச சிலரைத்தான் வெளியுலகில் பார்க்க முடியும். ஆனால் தோசாவைப் பொறு த்த வரை ஒவ்வொருவரும் அந்த மூன்று பேர்களைப் போலத்தான். 

எல்லோருக்கும் மனோ திடம் இருப்பதில்லை. வெளியே வந்து நின்று ," எனக்கு மனோதிடம் உண்டு. நான் நல்லது என்று நினைப்பதை செய்து முடிப்பேன். அதனால்தான் நான் தோசா இயக்கத்தில் இருக்கிறேன்." என்று அறை கூவும் தைரியம் நமக்கு உண்டு. 

" உலகமே, என்னுடைய தலைஎழுத்தை நானே முடிவு செய்ய நான் தயார் ஆகிவிட்டேன். என்னுடைய பயத்தையும், சந்தேகப்போக்கையும் களைந்தெறிய  நான் முடிவு எடுத்து விட்டேன். என் முயற்சிகளை நான் எப்போதுமே கைவிட மாட்டேன்." இதுதானே தோசா குடும்பத்தின் தாரக மந்திரம்.

நாம் பெரிய அளவில் கனவு காண்பவர்கள். உலகையே மாற்றும்  திறமை படைத்வர்கள் . நாம்  களத்தில் இறங்கி விட்டோம் . இனி தடையேதும் இல்லை நமக்கு.

தோசா குடும்பத்தினர்களே. உங்களை ப பார்த்து நான் பெருமைப்படுகிறேன். நம்மைப் பார்த்து இந்த உலகமே பெருமைப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை!!

இதைத்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்ல விரும்புகிறேன் .

murthy