கருவிலிருந்து உருவாகி மானிட உருவம்தனைகொடுத்து
பருவம் தந்து மாயம் என்ற உடை அணியவைத்து அதில்
கர்வமென்ற விதை விதைத்து ஆளாக்கிவாழ்வெனும் சுழலில்
தர்மமதை மறந்த நிலை தந்தனையோஆண்டவனே
நின்னை காண துடிக்கும் பல உள்ளங்கள்அய்யகோ
உன்னை அண்டி நிற்குதே எனினும் உன்உள்ளம்தான்
கனியவில்லை ஏனோ யான் அறியேன்அய்யனே
இணையில்லா மன்னனே என்னவனேகண்ணனே
பிணைத்திடுவாய் நின் அன்பெனும்பாசகயிற்றாலெ
RBI Sridhar
No comments:
Post a Comment