Thursday, October 27, 2011

Happy Diwali-By TOSA President Murthy




An Emagazine by TDRities
--------------------------------------------
Happy Diwali

Diwali-a festival of light, spreading delight,
Rejoicing is everywhere to a great height!


Over the years, we shared the joy with friends,
The last few years, oh, a change in trends!

Happiness all around with kith and kin, to us so near,
Suddenly we find us amidst an extended family so dear!

Deafening noise of crackers, all thru’ day and night,
For us the thundering verses of TDR times sound right!

The sparklers in kinds, emitting light in hues that amaze
But would they equal those lines, each Sunday morn we graze?

The sweets that delight all, from a child to a man of eighty,
Can they stand anywhere near the pens of ours that are mighty?

Pleasantries exchanged, we ask,’ Had your early morn Ganges bath?’
Ah, this is once a year, be aware, Ganges flows for us every Sunday.

Hiding Jacks have started, one after another to emerge,
Their only aim, for sure, is to with TOSA to merge.

TOSA is our religion; festival for us is the day we meet,
Whence bloomers in hundreds blossom for a unique treat.

Still here, giving dearth less mirth, is a calendar Diwali Day,
Our Greetings to all our brethrens, for your happiness we pray.

Oh, my dear TDRites, may this Diwali bring you happiness,
Prosperity and joy that may last thru’ years and years!
 
Murthy

தீபாவளி நல் வாழ்த்துக்கள்.....By இடைமருதூரான்.




An Emagazine by TDRities
--------------------------------------------
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.....
என் இனிய இடை மருதூர் வாழ் கனிகளே
சரித்திரம் படைக்கும் அரு மணிகளே 

இன்னலைச் சந்தித்து....இன்பமாய் ஏற்று
எதிர் நீச்சல் போட்டு....ஏற்றம் கண்டு
இன்று TOSA வும் கண்டு...TDR Times மூலம்
மீண்டும் முகம் காட்டும் முத்துக்களே 

அகம் எங்கு இருந்தாலும் சுகம் நமது TDR தான் என்று
சொந்தம் கொண்டாடும் மாணிக்கங்களே 

எத்தனை தினம் வந்தாலும் சங்கம தினம் தான்....
அத்துணை தினங்களிலும் மேல் என்றுரைக்கும் ரத்தினங்களே


மத்தாப்புச் சிரிப்பை முத்தாய்ப்பாய் வைத்திருக்கும்  முகவரிகளே
வானம் வாழ்த்த...வெடிகள் முழங்க,...சங்கமம் நான்கில்
நம் வீதிகளில் உலா வந்த மண்ணை மறவா மறவர்களே       
ஜோதியை ஏந்தி, உவகைக் களிப்பில் ஊர்வலம் வந்த காவலர்களே


கல்வி கொடுத்த பள்ளியை மறவாமல்   
கட்டி  அனைத்து
கவி பாடி, புவி சிறக்க,..பூரிப்படையும் கட்டித் தங்கங்களே   
அரிச்சுவடி படிப்பித்த ஆசிரியர்களையும் தேடிப்பிடித்து
கௌரவிக்கும் அரிய ஆற்றல்களே...பொக்கிஷங்களே
 
நகரத்தில் வாழ்ந்தது போதும் என்று, நகர்ந்து வந்து
இடைமருதூரிலியே....நகர் அமைத்து...
இல்லம் காணும் இன்பங்களே,.....இனியவர்களே
TOSA என்ற தீபத்திலிருந்து தோன்றிய ஒளிகளே   

புத்தாடை உடுத்தி.....பட்டாசும் வெடித்து
சர வெடி போல்....... வாரா வாரம் ...TDR Times ல்
சாகசம் புரியும், சாதகப் பறவைகளே
சங்கமச் சிந்து பாடும் சிங்கங்களே...   

ஜோதி மகாலிங்கத்திற்கு அடுத்த பெரிய ஜோதி
எங்கள் TOSA ஜோதி தான் என்று பாருக்கு பறை சாற்றி
மகாலிங்கத்தின் மடியில் தவழ்ந்த தீப ஒளிகளே
உங்கள் எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..
 
TOSA வின் அஸ்திவாரங்களான...அந்த ஆறு பேருக்கு
(விஜி, ராஜி, ரகுபதி, பாலகௌரி, ஸ்ரீதர், ராம்ஜி)
உள்ளத்தின் அடித் தளத்திளிருந்து...நன்றி கலந்த
தீபாவளி வாழ்த்துக்கள் .....வாழ்த்துக்கள்...

TOSA  வின் தோழர்களுக்கு சங்கம நாளும் ஒரு தீபாவளி நாள் தானே 
 
அன்றும் தான் புத்தாடை உடுத்தினோம் ...
அன்றும் தான் பட்டாசு வெடித்தோம்....
அன்றும் தான்  கோயிலுக்குப் போனோம்
அன்றும் தான் பெரியவர்களிடம் ஆசி வாங்கினோம்
அன்றும் தான் கூடினோம்....கும்மாளம் போட்டோம்....
அன்றும் தான்   குதூகலித்தொம் ......


ஆம்....நமக்கெல்லாம்......இரண்டு தீபாவளி
நாம் கொடுத்து வைத்தவர்கள்....
 
நமது தாரக மந்திரம்....
நமது ஊர்......நமது பள்ளி.....நமது கோயில்...
வாழ்க....வளர்க.....வளமுடன்.....     
உளம் கனிந்த தீபாவளி நல்  வாழ்துக்கள்


இடைமருதூரான்...........     tdr.msubramanian@gmail.com

Deepavali Nal Vazhthukal!

Wednesday, October 26, 2011

Nine to Five-By Ramji

Nine to Five-By Ramji


அன்றும் எப்போதும் போல் காலை சீக்கிரமே ஆபீஸ் போனேன்.
சுமார் ஒருமணி நேரம் இருக்கும் என்னுடன் பணி புரியும் சுதா கண்களில் கண்ணிருடன் வந்தாள்
"ஏம்மா சுதா என்ன ஆச்சு ? ஏன் அழற ?" என்றேன்
அவள் கலங்கியதை பார்க்கும் போது எங்கள் இருவருக்குமான மேலதிகாரி (அவளும் ஒரு பெண் ) சுதாவை திட்டி இருப்பாள் என்று யூகித்தேன்.

"சொல்லும்மா .. ஏன் அழற ?"

இந்த ஆபீஸ்ல் இருப்பவர்களிலேயே நான் சற்று வயதில் பெரியவன் என்பதால் என்னிடம் ஒரு சகோதர பாவத்துடன் பழகினார்கள். உரிமையுடன் அவர்களின் பிரச்சனைகளை கூறுவதுண்டு .

"இப்ப அழறத நிறுத்த போறயா இல்லையா ?"
"இல்ல சார் ரெண்டு நாளா நான் லீவ் .. என் குழந்தைக்கி உடம்பு சரியில்ல .. எங்க மாமியாரும் வீட்ல இல்ல .. அதுனால வேற வழி இல்லாம நான் லீவ் போட்டுட்டேன்..."

"அதெல்லாம் சரிம்மா ..இது பெண்களுக்கே உறிய problem. தன் குழந்தைக்கி உடம்பு சரியில்லனா லீவ் போடணும், தன் கணவனுக்கு உடம்பு சரியில்லன லீவ் போடணும், மாமனார் மாமியாருக்கு உடம்பு சரியில்லனா லீவ் போடணும் ...ஆனா தனக்கு உடம்பு சரியில்லனா லீவ் போடமுடியாது அப்டியே வேலைக்கி வரணும் .. sorry ம்மா இது ஒரு சாபம் ..இப்ப நீ லீவ் போட்டதுல என்ன ப்ராப்ளம் ?"

"உங்களுக்கே தெரியும் இந்த ஆபீஸ் ல OTRS (தினசரி செய்ய கூடிய ஒரு முக்யமான வேலை) நான் செய்வேன் இல்லைனா சித்ரா பண்ணுவாங்க .."

"சரி ..."
"ரெண்டு நாளா unfortunate ஆ ரெண்டு பேருமே லீவ் ..என்ன ஆச்சு OTRS யாருமே பன்னால அதுக்கு மேனேஜர் பிடிச்சி திட்டு திட்டுன்னு திட்டறாங்க...ஏன் backup ரெடி பண்ணல்ல .?? நீங்க இல்லைனா ஆபீஸ் அப்டியே ஸ்தம்பிக்கணுமா .. அப்டின்னு கத்தினாங்க .. நானும் எவ்ளவோ சொன்னேன் இல்ல மேடம் சித்ரா பாப்பாங்க ஆனா எதிர்பார்க்காம அவங்களும் லீவ் அப்டின்னேன் கேக்கவே இல்ல சித்ரா இல்லனா என்ன விஜயலட்சுமி பண்ண வேண்டியது தான அப்படின்னு கத்து கத்துன்னு கத்தறாங்க .. என்னோட போறாத நேரம் விஜயலட்சுமி க்கு இது சரியாய் தெரியாது சார் ..அவங்களும் புதுசு.. ஏற்கனவே நல்ல தெரிஞ்சவங்களை எல்லாம் வேற இடத்துக்கு மாத்திட்டாங்க .." சுதா மனம் நொந்து கண்ணை கசக்கினாள்
எனக்கு சற்றே இளகியது (அது எப்படிடா லேடீஸ் அப்படின்னா உனக்கு மனசு இளகறது என்று என் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் ) உடனே மேனேஜர் ப்ரியாவின் காபினுக்கு போனேன் .  

நான் முன்பே  சொன்னது போல் மேனேஜரும் என் வயதிற்கு மதிப்பு அளித்து செவி மடுத்து கேட்பதுண்டு .
"என்ன மேடம் இது ..சுதாவ காய்ச்சி எடுதுட்டிங்க போல இருக்கே ..?" என்றேன் சற்றே தயக்கத்துடன்.

"பின்ன என்ன சார் ஒரு ரொடீன் வேலை பண்றவங்க backup வெச்சிக்க வேண்டாமா ? ஒரு ஆபீஸ்ல ஒருவேலை ஒருத்தர நம்பியே இருக்க கூடாதில்லையா ?சுதா இல்லேன்னா சித்ரா ... அவங்க இல்லேன்னா விஜி ..அவங்களும் இல்லைனா இன்னொருத்தங்க அப்டிதான் இருக்கணும் .."
என்று அடுக்கி கொண்டே போனாள்

"நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை அப்டிதான் இருக்கணும் ஆனா சில நேரம் நடைமுறை சிக்கல் வந்துடுது .. ஏன்னா  மத்தவங்களுக்கும் ஒரு சில ரொட்டின் வொர்க் இருக்கும் இல்லையா ..? மேலும் ஒரு வேலைக்கி எத்தனை பேரை standby யாக வைக்க முடியும் ?..நான் சொல்ற இந்த உதாரணம் சரியா இருக்கா பாருங்க .. இப்ப கார் வாங்கறோம் ..அதுக்கு எத்தனை வீல்..?"

"என்ன சார் விளையாடறிங்க ... நாலு வில் இது கூட தெரியாதா .."

"அதுக்கு இல்லைம்மா அப்டி நாலு வில் இருக்கற காருக்கே நாம பஞ்சர் ஆச்சுன்னா மாத்த ஒரே ஒரு வீல் தான ஸ்டெப்னியா வெச்சிருக்கோம் ?  நாலு வீலா ஸ்டெப்னியா வெச்சிருக்கோம் ..? ஏன் .?probability கம்மி .. அதுனால இதுல சுதா பேர்ல மட்டும் தப்பு இல்ல as a manager நாமளும் உள்ள புகுந்து பாக்கணும் அவசியம் ஏற்பட்டா ஹெல்பும் பண்ணும் ..சரி சரி போனா போகுது இன்னைக்கி எல்லா  ஸ்டாப்பும் ஒன் அவர் எக்ஸ்ட்ராவா இருந்து ஷேர் பண்ணி முடிச்சிடலாம் .." என்றேன்

பிரியா என்னை அர்த்தத்துடன் பார்த்து சிரித்தார்கள் .

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் ..சுதா ..அபர்ணா போன்றவர்கள் துணிச்சலுடன் பிரச்சனையை சந்தியுங்கள். உங்களை சண்டை போட சொல்ல வில்லை..

"Getting Angry and shouting is like punishing yourself for the mistakes of Others"..

Dear Aparna!
சுற்றும் வரை பூமி..!
சுடும் வரை நெருப்பு ...!1
போராடும் வரை மனிதன் ...!!!
நீ மனிதன் போராடு ...

எவ்வளவோ ராகங்கள் இருக்கும்போது ..சோகராகம் மட்டுமே பாடுவது ஏன்?

அன்புடன் 
ராம்ஜி

Tuesday, October 25, 2011

The VIP cult-By Shahabad Ramakrishnan


 "Ramu, do you know Girija Prasad?” some ten years ago came a call from Rajam Sastrigal the VIP of last week. In keeping with the tradition of the TDRites to exhibit their VIP connection, (Like the Nair of Murthy’s article) I asked him which Girija Prasad he was referring to.  This was just to impress upon him that I knew too many Girija Prasads, who mattered.  He told me that he wanted admission for his daughter in the B.com course in a college in the MOP Vaishnava College and the Girija Prasad he was referring to was the principal of that college.

I was taking Yoga classes in Haddows Road and Dr.Vijatalakshmi Rao was also learning yoga there.  She was professor in English in MOP Vaishnava College. Her eldest son's marriage was celebrated in Hyderabad.  She took me as well as Dr.Girija Prasad, the Principal of the college for the marriage. We were staying in the same hotel and attended the marriage going in the same car. Moreover I gave a programme about Yoga in their FM channel. With this background, I told Rajam Sastrigal to come to MOP Vaishnava College on a specific date to try for the admission. The previous day, I told the entire matter to Dr Vijayalakshmi and she had agreed to talk to the Commerce Professor the next day.
                              
 On the appointed day, Rajam Sastrigal was waiting near the Gemini bus stop, along with his daughter. I took them to the college. There was a motley crowd of trendy girls, walking along, as if on a fashion parade. Rajam was feeling shy since he was in his usual attire. With obvious hesitation, he told me that he would wait near the gate with his daughter. I entered the college wading through the heavy crowd and went to the English department to meet Dr.Vijayalakshmi. She took me to the commerce department and introduced me to the professor, who went through the mark sheet and was apparently happy. She informed me that the girl would get admission, but it was difficult to get a B.Com seat. I was naturally disappointed. Suddenly there was a lot of commotion in the ground floor to announce the arrival of the Principal and the members of the admission committee. I was instructed to wait for sometime.

After sometime, out of curiosity, I went near the verandah and glanced at the ground floor. To my surprise, I saw Rajam coming out of Principal’s room. He too saw me and signaled to me to come down. I did go down and he showed me the admission card. As I stood surprised and puzzled, he told me calmly what had happened.  As he was waiting, the principal madam saw him as he was wishing her. He was beckoned to her chamber through a peon. Straightaway, his daughter was given the admission card. I learnt that day how the VIP cult works!

Shahabad Ramakrishnan

Beloved Venkatarama Sir's Bulletin-XV


From Venkatrama Sir’s Karuvuulam

B. Srinivasa Iyer (Thotta Sir)

In 1954 or 55, he came to TDR and joined T.A.H.S as craft instructor.  Right from that time, he is affectionately called asThotta Sir.  He studied BA and BT privately and became a regular B.T. Teacher. He has a big family and his children are very good students.  He had faced many a storm (sufferings) in his life.  Only with the Grace of God, he overcame everything. He was a true and ardent devotee of Lord Mahalinga !  Now, he is residing with his son in Chennai,…enjoying peace and calmness in his old life. He was a good and respectful teacher. Students swarmed him for private tuition because of his method of teaching, holding number of model tests, answering of old question papers, giving number of assignments etc.  May Godbless him with good health and long life!

N Viswanathan BSc., BT
He was an old student of T.A.H.S.  He was related to Mahalinga Iyer (Manja Iyer) of Pachaiyappa Mudali Street. TDR.
NV lived in his next house.  He was one among four children to his parents.  He joined T.A.H.S. in 1954 or 1955 along with R.Kannan Sir of Veppathur.  He was a good Mathematics and Science Teacher.  He had some heart problem and did not marry throughout his life. He was, however, very good at heart.
A good teacher, voracious reader, conversationalist, admirer of music, Cricket, Chess player and other arts.  He was always thronged by intelligent students.

Response from TVR

Respected sir,

Hope this finds you and your family members in very good spirits
Better late than never,…..a few days back, my son rang up to say that you have written about me in one of the letters in computer in TDR Times.  My grand son here opened and read it to me.

There,….I heard those golden days when we had a good time. You have done well to reminisce about my betel box being emptied every day in the front yard of my house.  You have taken care of disclosing those good days when I fell and swam in the river Cauvery.  I also remember the days of our hostel life.
I thank you for just refurbishing the moments in V.J.Hostel, Kumbakonam in the lower and upper stairs.  Also,….of Mr. K.A.K and his friends with whom you spent in the evenings.
Trust this find you all in best of health could permit…
Thank you again
Yours sincerely
T V Rajagopalan

M.Venkatraman,
Retired Teacher,
TAHSS – TDR
Camp : Pondicherry

(Thotta Sir with Individual and எழுத்தாளர் மீரா சுப்ரமணியன்....   )
-- 

A movement for public welfare-By Sindhuja Iyer


Dear TDR friends,
I would like to share the ordeal i had to gothrough in Hyderabad , which was once known as the land of Nizams and has now transformed into a land of bundhs....

Every civil society strays from its path once it gets a political touch and the T-war stands no exception. A movement that started off with the view of helping the people of the “Telengana” region overcome the exploitations against them took a new form. It was the aam aadmi as the politicians call it or the common man who had to suffer as a result of the movement meant for his “welfare”. During the bundhthat lasted for over a month the normal flow was disrupted to the extent that people began adapting to it like it was normal way of life in which every possible person exploits them. Survival of the fittest seemed to be the order of the day and everyone from the students, politicians, trade unions to autowallas tried to make the most of the prevailing unrest.
A few organizations that reaped the most out of the situation were the APSRTC that was offered many subsidies including the 400 crore tax exemption. The other section of the society that benefitted the most according to me is that of the autowallas as they might have earned a fortune to last a life time in this short span specially on days when even the trains were stopped and people commuting long distances had to dance to the tunes of these auto drivers.
What amuses me even today is the sudden emergence of patriotism in the students at the time of exams that turns puppets by will in the hands of a few politicians. All the political wannabe’s took up mass destruction of public property to get media attention and strengthen their chances of getting to power in future. The irony of it is that nobody ever realized that they were causing people troubles that they never experienced even when they were being “exploited”, and this could be one of the reasons for the weakening public support to these protesters which led them to call off the 42 days long agitations.
Though nothing was normal everything seemed to be normal with people working long hours as usual and enjoying every bit of what life offered to them, this is what we call the true hyderabadi spirit which believes that come what may life must go on…………….

by your Sindhuja iyer .


கோனார் நோட்ஸும் பிரிசித்தி.... நம்ம ஊரு கோனார் ம ருந்தும் பிரிசித்தி......By Sridhar....


கோனார் நோட்ஸும் பிரிசித்தி.................................
                  நம்ம ஊரு கோனார் 
ம ருந்தும்  பிரிசித்தி..........

சில நாட்களுக்கு முன்னர் நமது ராம்ஜி ஒரு கற்பனை நகைச்சுவை துணுக்காக என்னையே   ஒரு முக்கிய பாத்திரமாக வைத்து ஸ்கூலுக்கு நேரமாச்சு என்ற ஒரு கற்பனை  கட்டுரையினை வரைந்திருந்தார். அதனை TDR TIMES - ல் அனுப்புவதற்கு முன்னர் எனது சம்மதத்தையும் கேட்டிருந்தான் எந்த ஆத்ம விசாரமுமின்றி  உடனடியாக அப்படியே சம்மதித்து அந்த
கட்டுரையினை அனுப்பிவைத்து விட்டேன்.

நம்மில் பலர் TDR TIMES - யை தனது உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டத்திற்கு கூட   அனுப்புகின்றனர்.
அவர்களிடமிருந்து பதில்களும்    வருகின்றது.
சிலர் பாராட்டுகின்றனர்,
சிலர் ஆச்சர்ய படுகின்றனர்.
சில நுறு ஆண்டுகளுக்கு முந்தய விஷயங்களும் TDR TIMES - ல் வருகிறது.
பழைய மாணவர்களின் அனுபவங்களும் வருகிறது
மேலும் நமது ஆசிரியர்களின் அனுபவங்களும் வருகின்றது
 
இது என்ன ஒரு விந்தையான ஊர்.......... விந்தையான பள்ளி..........  விந்தையான பல விஷயங்கள் அதிசய மனிதர்கள் என்று. தங்களது பதிலின் முலம் தங்களது ஆச்சர்யங்களை தெரிவிக்கின்றனர். 
என்னை பொறுத்த வரையில் இதில் அவ்வளவாக அதிசயப்பட கூடியதாக நான்  எதுவும்
நினைக்கவில்லை,
ஏன் நம்மில் பல பேர்  என்னை போல இந்த விதமான ஒரு அபிபிராயத்தையும் கொண்டிருப்பார்கள்
 அல்லது சற்றே மாறு பட்டிருப்பார்கள் என நினைக்கிறேன் 
 
காரணம் .

நமது கலாசாரம் பாரம்பரியமானது,
நமது ஊர் பாரம்பர்யமானது
எனவே அங்கு வாழ்ந்த நாமும் ஒரு பாரம்பர்யமான ஒரு முறையான வாழ்க்கையில் வாழ்ந்து வளர்ந்து தற்போது வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறோம் அவ்வளவுதான். 
அபிமன்யு கட்டுரை நமது ஊரில் நடந்த ஒரு  உண்மையான ஒரு சம கால நிகழ்வு.
அதுவும் நமது ஊரில் சர்வ சாதாரணமாக நடந்த ஒரு நிகழ்வு. 
நமது பாரம்பர்யமான கலாசாரத்தில் வாழ்ந்த நம்மூர் மனிதர்களுக்கு இது ஒரு சாதாரண விஷயம் 
ஆனால் அதுவே ஒரு கட்டுரையாக வெளி வந்தால் வெளியில் அது ஒரு ஆச்சர்யப்படும் ஒரு விஷயமாகிறது. 
ஆனால் நமது ஊரில் நம் மக்கள் அதை சமிஸ்கிருதத்தில் ஒரே ஒரு ஸ்லோகமாக எளிதில் சொல்லி விடுவார்கள்.
அதுதான் "க்ரின்  வந்தோ விஸ்வமார்யம்"  என்று 
 
அதன் பொருள் "உலகில் படித்து பொருள் பதிந்த வாழ்வு வாழும் மக்களை அதிகப்படுத்து" என்று
 
நமது நாட்டில் கல்வி, பசிக்கு உணவு, உடலுக்கு வேண்டிய மருத்துவ வசதி போன்றவை ஒரு இருநுரு   ஆண்டுகளுக்கு முன்னர் வரை  முற்றிலும் இலவசமாக தான் இருந்து வந்தன.
 
காரணம் அனைவருக்கும் தர்மம் செய்யும் எண்ணம் இருந்தது. அனைவருமே அந்த தர்மத்தினை செய்து வந்தனர்.

என்ன நான் எழுதுவது ஒரு வேதாந்த விஷயம் போல் உள்ளது என அஞ்ச வேண்டாம். நான் இப்போது சம காலத்திற்கு தான் வருகிறேன்.

ஐரோப்பிய நாடான கிரிஸின் இளவரசி காஞ்சி மஹா பெரியவரின் பரம பக்தை. 
இளவரசிக்கு அவர்களது நாட்டின் அரசு முலம் ஒரு  தொகை ஒவ்வொரு வருடமும் மன்னர் குடும்பம் தர்ம கார்யங்கள் செய்வதற்காக அவர்களது பட்ஜெட்டில் ஒதுக்கப்படும்.
 
மேற்கத்திய   நாட்டில் சர்ச் மூலமாக அந்த பணம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும்.  
இளவரசி பெரியவரின் பக்தையான பின்னர் அந்த பணத்தினை  சர்ச் முலம் விநியோகம் செய்யாமல் அவர் நம் நாட்டிற்கு வந்து பெரியவரின் யோசனையின் பேரில் பல நல்ல காரியங்களை அந்த பணத்தின் முலம் செய்யலானார். 
இளவரசி மஹா பெரியவரின் ஆக்யையின் பேரில் ஒரு தர்மத்தின் முலம் ஒவ்வொரு வருடமும் டின் டின்னாக டன் கணக்கில்   அவர்களது  நாட்டிலிருந்து பால் பவுடரினை எடுத்து வந்து நம் நாட்டில் விநியோகம் செய்வார்கள்.
 
குறிப்பாக மருத்துவமனை, காசநோய் மையம்,  அநாதை இல்லம் ஆகியவற்றிக்கு இலவச விநியோகம் செய்ய. மீதி இருக்கும் பால் பவுடர் ஸ்ரீமட  நிர்வாகத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு.

நமது பகுதியில் இதனை நான் நமது ஊரில் இருக்கும் காலகட்டத்தில் மிக மிக சிறப்பாக நிர்வாக விநியோகம் செய்தவர் யார் தெரியுமா. நமது ஷஹபாத் ராமக்ருஷ்ணன் சார் அவர்களின் மாமா காலஞ்சென்றதிரு குஞ்சிதபாதம் அவர்கள்.  மஹா பெரியவர் இந்த வேலையினை  செய்ய சொல்லி அவரை பணித்தது அவர் பல காலம் மிகுந்த  சிரத்தையுடன் இதனை தொடர்ந்து பல வருடங்கள் செய்து கொண்டிருந்தது நமது ஊரில் பலருக்கு தெரியாது. தற்போது இது ஒரு ஆச்சர்யமாக இருககும்.
வந்திருக்கும் மூட்டைகள்  பால் பவுடர் என்று தெரிந்தால் துஷ்பிரயோகம்   நடந்து விடும் என்று அஞ்சி அவர் அந்த முட்டைகள் வெறும் மாவு முட்டைகள்/டப்பாக்கள்  தான் என்று கூறி அனைத்து மருத்துவமனைகள், காசநோய் மையங்கள், முதியோர் இல்லங்கள்   மற்றும் பாடசாலைகளுக்கு விநியோகம் செய்து விடுவார்.

இதே கால கட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் கறவை மாடுகளை இலட்ச கணக்கில் கொல்லப்பட்டு கொண்டிருப்பதாக    ஒரு செய்தி பத்திரிகைகளின் மூலம் மஹா பெரியவர்களின் காதுகளில் எட்டியது. மிகவும் வருத்தப்பட்டார். 
அந்த சமயத்தில் கிரிஸ் இளவரசியும் பெரியவர் அவர்களை காண வந்திருந்தார். இது குறித்து பெரியவர் இளவரசியிடம் நீண்ட நேரம் விசாரித்தார்.
இளவரசி கூறியதாவது எங்களது மேலை  நாட்டில் அதிக பால் உற்பத்தி வேண்டும் என்பதற்காக பசுவிற்கு அது உண்ணும் புல் மற்றும் தவிடு தவிர மாமிச உணவும் தரப்பட்டது அதாவது காய்ந்த மீன் உணவு எலும்பு  துண்டுகள் போன்றவை தரப்பட்டு அவை முப்பது லிட்டர் வரை பால்கள் தந்து   கொண்டிருந்தன. 

சில காலம் கழித்து அந்த பசுக்கள் கன்று  ஈன்ற பின்னர் அவைகளுக்கு ஒருவிதமான நோய் / வியாதி ஒன்று வந்தது அந்த வியாதி வந்த பின்னர் பசு மாடுகள் மிக்க கோபம் கொண்டன மனிதர்களை கண்டாலே முட்டி கடிக்க ஆரம்பித்து விட்டன. இதனை சரி செய்ய எங்களால் இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை எனவே இந்த வியாதி கண்ட பசுக்களை எல்லாம் கொன்று விட முடிவு செய்து மேற்கத்திய நாடுகளிலெல்லாம் இவ்வாறு தான் பசுக்கள் கொல்லப்படுகின்றன. தற்போது அந்த வியாதி வேகமாக  பரவி வருவதாக பெரியவரிடம் இளவரசி வருத்தத்துடன் கூறினார்.
 
அனைத்தையும் கேட்டுக்கொண்ட மகாபெரியவர் இரண்டு வார்த்தைகளை மட்டும் கூறி வியாதி குணமாக ஒரு  உபாயத்தையும் கூறினார்.
இளவரசியே மனிதன் காட்டிலிருந்து முதன்முதல் தன்னோடு அழைத்து வந்த ஜீவன்கள் இரண்டு
ஒன்று நாய் அது மனிதனின் பாதுகாப்பிற்காக, நாய் மிகவும் மோப்ப சக்தி மிக்கது, எஜமானனிடம்   நன்றி விஸ்வாசதிற்கு பெயர் போனது 
மற்றொன்று பசு மாடு மிகவும் சாதுவான ஒரு மிருகம் அதன்  பால் மனிதனுக்கு உணவு, அதன் சாணம் சுகாதாரமான ஒரு பொருள்   மற்றும் அதனிடம் பேரும் பஞ்சகெளவ்யம்  என்பது ஒரு மருந்து
காலம் காலமாக மனிதனோடு வாழ்ந்த ஒரு ஜீவனுக்கு மிருக உணவை கொடுத்து அது மிருக குணம் பற்றி கொண்ட பின்னர் வியாதி வந்த பின்னர் மிருக குணம்தானே வெளிக்காட்டும். தவறு மனிதனுடையது அல்லவா.

இந்த நாட்டில் வேத காலம் முதல் இந்த இரண்டு ஜீவன்களும் விட்டிலேயே வளருகின்றன. பல விடுகளிலும் இரண்டும் சக மனிதர்களை போலவே வாழுகின்றன. இன்னும் சொல்லப்போனால் பல வீடுகளில் ஒரு பசுவின் தாய் அதன் கன்று மேலும் அதன் கன்று என காலம் காலமாக வாழுகின்றனவே. இந்த பிரச்னை இந்த நாட்டில் இது வரையில் கேள்விபடவே இல்லையே.
உங்கள் நாட்டில் மட்டும் ஏன் இந்த பிரச்னை

சரி இதற்கு உபாயம் கண்டால் பசுக்களை கொல்வதை உங்களால் நிறுத்திவிட முடியுமா.  
நான் இந்த மடத்தின் மடாதிபதியாக பட்டமேற்ற காலத்தில்  தஞ்சாவூர் ஜில்லாவில் பல காலம் விஜயம் செய்திருக்கிறேன் . அந்த பகுதி மிக்க வளமான பகுதி காவிரி பகுதி. மாடுகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் அங்கு
அதிகம்    கொள்ளிடக்கரை பால் மிகவும் பிரிசித்தி பெற்றது. அப்பகுதி மக்கள் மாடு வளர்ப்பதில் பெயர் போனவர்கள். அவர்கள் எக்காரணம் கொண்டும் மாட்டினை வதை செய்யமாட்டார்கள்.  மனிதர்களை போல் மாட்டினையும் வியாதி வந்தால் கூட தங்களது வீட்டில் தான் பராமரிப்பார்கள். ஆகவே அங்கு வாழும் கோனார் என்னும்   சமூகத்தினர் ஆடு மாடுகளை பராமரிப்பதில் கைதேர்ந்தவர்கள்.  அந்த கோனார்களுக்கு விவசாயிகளிடமிருந்து மானியம் உண்டு.

எனக்கு அந்த பகுதியில் திருவிடைமருதூரில் ஒரு கால்நடை வைத்தியர் ஒருவர் இருக்கிறார் அவர் பிறவி செவிடர். அவர் குடும்பம் பரம்பரையாக மாடுகளுக்கு வைத்தியம் செய்வதில் நிபுணத்துவம் பெற்றது. இன்னும் சொல்லப்போனால் அவர் மாடுகள் விடும் ஒரு விதமான பெருமூச்சிலிருந்தே அவற்றிக்கு என்ன பிரச்சினை என்பதை உணர்ந்து கொள்ளும் திறன் மிக்கவர். அவரை நாளையே இங்கு வரவழைத்து உங்களிடம் அறிமுக படுத்துகிறேன் நீங்கள் அவருக்கு நோயின் தன்மை குறித்து விளக்குங்கள் அவர் இங்கேயே மருந்து தயார் செய்து தருவார். எடுத்து சென்று உங்களது நாட்டில் சில மாடுகளுக்கு கொடுத்து பாருங்கள் வியாதி குணமாகிறதா என்று பார்கலாம் என்றார்.
செவிட்டு கோனாரும் வந்தார். அவருக்கு வியாதி குறித்து விளக்கப்பட்டது. மருந்து தயாரித்து கொடுத்தார். மருந்து கிரிஸிற்கு 
அனுப்ப பட்டது.
ஒரு மாதத்தில் கிரிஸிலிருந்து  மடத்திற்கு தகவல் வந்தது மருந்து கொடுத்த மாடுகள் குணமாகி மீண்டும் பால் கொடுக்க ஆரம்பித்து விட்டதாக மகிழ்ச்சியுடன்.  அதோடு ஒரு வேண்டுகோளும் அவர்கள் தரப்பிலிருந்து வைக்கப்பட்டது அவர்களது நாட்டிலிருந்து ஒரு பத்து கால்நடை மருத்துவர்கள் மருந்து செய்வது எப்படி என அறிய வர உள்ளார்களாம். கோனார் அவர்கள் சொல்லி கொடுப்பார்களா என்று கேட்டு.
 
செவிட்டு கோனாருக்கு தகவல் அனுப்பப்பட்டு செவுட்டு கோனார் மகிழ்ச்சியுடன் மருந்து செய்வதை சொல்லி கொடுத்தார். சொல்லி கொடுத்து விட்டு பெரியவரிடம் ஆசி பெற சென்ற செவிட்டு கோனாரிடம் மஹாபெரியவர் அவா ஊரு மாட்டுக்கு என்ன வியாதின்னு  சைகை மூலம் கோனாரை வினவ
செவிட்டு கோனார் அமா சாமி மனுஷன் மாறி வளக்க வேண்டிய மாட்டை மாம்சம் போட்டு மிருகம் மாதிரி வளத்தா அது என்ன செய்யும் அந்த குணமும் அதோட வியாதியும் தான் வரும். அந்த வியாதிக்கு கோமாரின்னு பேரு. இப்ப எல்லாம் சரியா பேடும் கவலை வேண்டாம் சாமி. அனா ஒண்ணு மட்டும் நீங்க அவங்களுக்கு கொஞ்சம் நல்ல எடுத்து சொல்லிடுங்க சாமி மாட்ட மட்டும் கொல்ல வேணாம்  மாட்ட கொன்னா நாடு உருப்படாதுன்னு. அவுங்க எப்ப கேட்டாலும் நான் மருந்து தறேன் மாட்ட மட்டும் கொல்ல கூடாதுன்னு   கண்டிச்சு சொல்லிடுங்க எனக்கு துண்ணுரு குடுத்து ஆசி பண்ணுங்க சாமி நான் வறேன்.

இதான் நம்ம ஊரு

Mathas: We are all connected-By Ramamurthy


V. Ramamurthy
# 2, 59 and 190 Mahadana Street, Thiruvidaimarudur


As a child we all have been drilled to adhere to the simple rule “Matha, Pitha, Guru, Deivam”, although no one told us what this order means.   Although all of us respect, revere and recognize our mothers’ contributions in our lives, we keep this to ourselves and rarely put them in words.  This is also true of TDR times where articles about TDR mothers/women have been less frequent.   Taking a non-traditional approach, herein I reminisce about three TDR Mathas (mothers) who played a key role in my early life.  These are my mother (amma), Muthumani’s mother (Muthumani amma; MA) and Sri. Sivasamba Iyer’s wife (Sivasamba Iyerathu mami; SIM).  I am sure each reader could relate the episodes mentioned here to his/her own experience in life, although the names would change. 

I start with my mother.  I describe three incidences that attest how much self-less mothers could be.  (a) At the end of each year there used to be a party with sweet, karam and coffee for teachers of TAHS.  My father will bring the sweet home to share with us.  My mother will forego her share on behalf of her children.  The same is true of favorite dishes made at home.  (b) I vividly remember the times when my mother used to carry small nell mootai to Naidu rice mill and bring back the rice and thavadu herself.  This avoided paying extra for the cart provided by the Mill.  The same story about fire-woods bought at viragu kadai.  All these she did to save a few anas that could be used to buy extra jaggery and cardamom to make payasam for us on pooja days (my father’s allotted amount would lead only to a 75%-sweet payasam; his income was limited and he did not believe in borrowing money).  (c) After completing M. Sc. at IIT, although I wanted to go abroad for further studies, my father was not convinced that it is the right thing to do. Finally, it was my mother who convinced my father that going abroad for higher studies might be good for me.  I don’t believe she understood what I studied at IIT and what I am going to be studying in USA, but her decision was purely based on the selfless thought that I should be happy and do well in life.

Many of the readers might know that Muthumani’s house (#185) and my house (#2) were opposite to each other.  Most of the time when I was not in my home I used to be at Muthumani’s.  At times Muthumani would be at my home talking to my father while I was at his home listening to radio or reading Tamil magazines.   Muthumani amma and appa allowed me to hang around the house at any time of the day.   When Muthumani went to Akalangannu for summer vacations or went to wedding of his relatives at Kodimanglam and other villages I accompanied. I distinctly remember the trip to Thirupathi in a pre-arranged Raman & Raman bus for Muthumani’s poonal with all his family members and relatives.   Thanks to Muthumani amma and appa I had the first darshan of Venkateswara and also visited several places like Thiruvannamalai, probably at the age of 12.  These trips were memorable and could not have happened if not for Muthumani amma (and appa) accepting me as an unofficial family member.

My association with Sri. Sivasmaba Iyer’s family started with Murthy (the current TOSA President).   When Murthy was growing up in TDR, I used to occasionally visit his house to check what boys at the other end of the street are doing.  I remember Sivasamba Iyerathu mami (SIM) giving me snacks and coffee whenever I visited Murthy.  On hindsight, I believe the mami’s coffee and snacks might have prompted me to visit Murthy more than he wished.  My occasional visits to read Hindu newspaper to Sri. Sivasmaba Iyer’s home and the accompanying coffee/snack offer continued even after Murthy left TDR.  A few of the following incidents should convince the readers how much our TDR mothers went out of their way to make the life of TDR boys easier:  (a) When I was studying at KMU College I had to go to St. Joseph’s College, Trichy to participate in a competition.   Although College selected me to compete it did nothing in terms of travel, boarding and lodging.  As soon as SIM heard this, she told me that I could stay at her daughter’s home (Mrs. Rukhmini, Murthy’s mother).   I remember Sri. Sivasmaba Iyer giving me a letter that made my stay at Trichy and participation at the competition possible.  (b) When I was studying at IIT-Madras realizing that on a Deepavali day I would be alone at the hostel, SIM asked Mrs. Santha (daughter) to invite me to her home.  I remember visiting her home, getting up early in the morning and going through the usual Deepavali routine.   (c) When I was about to leave for USA, SIM invited me for a grand lunch and I was privileged to eat with Sri. Sivasmaba Iyer and Mali in a huge plantain leaf.   Blessings by Sri and Srimathi Sivasmaba Iyer gave me confidence that I would do well in USA.  

The love showered, and the comfort and the guidance provided by my mother and the two other TDR mothers mentioned above made my early life in our village memorable.  What was unique at that time was that TDR children did not feel isolated and did not feel that they lacked some thing in life.  Thanks to the selfless mothers, we children were connected and felt as though we belonged to a single large TDR family. 

Sunday, October 16, 2011

வி.ஐ.பி.யைத்தெரிந்தால்!!!!-By Murthy

வி.ஐ.பி.யைத்தெரிந்தால்!!!!

நான்   நண்பர்களுடன் சினிமாவுக்கு போகிறேன். அங்கு டைரக்டர் பாலச்சந்தர் அமர்ந்திருக்கிறார். நான் அவரிடம், சார், சௌக்கியமா? என்கிறேன். அவரும்,ஹாய் மூர்த்தி, எப்படி இருக்கீங்கஎன்று திருப்பி கேட்டு விட்டால், என் சந்தோஷம் பல மடங்கு பெருகிவிடும் அல்லவா? ந்ண்பர்களும், இவனுக்கு டைரக்டர் பாலச்சந்தர் நல்ல பழக்கம் போல இருக்கிறதே என்று வியப்படைவதும் சகஜமே.

சமீபத்தில் வி.ஐ.பி. நட்பு பற்றி ஒரு ஜோக் படித்தேன்.

மலையாள ந்ண்பர்களுக்கு பெரிய இடத்து சகவாசம் சற்றே அதிகம். பிரபாகரன் நாயர பாலக்காட்டுக்காரர். சென்னையில் சினிமாத்தொழிலில் ஈடுபட்டவர். ஒரு பட ஷூட்டிங்ககுக்கு வந்த கமலுடன் பேசிக்கொன்டிருந்தார் நாயர்.
ஹாலிவுட் பற்றி பேச்சு வந்தது.
டாம் க்ரூய்ஸ் (TOM CRUISE) என் நல்ல நண்பர். என்றார் நாயர்.
கமலால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் நாயரை டெஸ்ட் செய்துவிடுவதாய் முடிவெடுத்தார்.
எனக்கும் அவரைப்பார்க்கணும்னு ரொம்ப நாளாக ஆசை. அடுத்த வாரம் சென்று வரலாமா?
நாயரும் ஒத்துக்கொண்டார்.
ஹாலிவுட் சென்றனர். பாரமவுண்ட் ஸ்டூடியோவில் டாம் க்ரூயிஸின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
டாம் க்ரூயிஸுக்கான் அறைக்குச்சென்று தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். உடன் உள்ளே அழைக்கப்பட்டார்.
ஹௌ ஆர் யூ மிஸ்டர் நாயர்? என்று டாம் நாயருடன் கை குலுக்கினார். கமலை டாமுக்கு அறிமுகம் செய்வித்தார் நாயர்.
சில நிமிடங்கள் பேசிவிட்டு டாம் படப்பிடிப்புக்கு சென்றார்.
கமல் ஆச்ச்ர்யத்தில் மூழ்கி, நாயரைப்பார்த்தார்.
என்ன கமல் சார், ஆர் யூ ஹேப்பி?என்றார் நாயர்.
மிஸ்டர் நாயர், உங்களுக்கு அமெரிக்காவில் நிறைய பேரைத் தெரியும் போல இருக்கிறதே?
ஆமாம் சார், பிரஸிடென்டைப் பார்க்கணுமா? சொல்லுங்க
உலக நாயகனான தமக்கே சவால் விடும் நாயரை அவரால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இருவரும் வாஷிங்டன் சென்றனர்.
வெள்ளை மாளிகையில் ஒபாமா ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாக அவருடைய செகெட்டரி தெரிவித்தார். தன் விஸிட்டிங் கார்டை நாயர் கொடுத்து அனுப்பிய சில நிமிடங்களில் ஒபாமா வெளியே வந்தார்.
நாயரைப் பார்த்து, ஹலோ நாயர், என்ன திடீர் அமெரிக்க விஜயம்? அரை மணியில் வந்து விடுகிறேன். என்று கூறி உள்ளே சென்றார்.
கமலுக்கு மயக்கமே வந்து விட்டது. அரை மணி       நேரத்துக்குப்பின்        ஒபாமாவுடன் தேநீர் அருந்திய படி கமலை ஒபாமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் நாயர்.
இருவரும் விடை பெற்று ஹோட்டல் அறைக்கு திரும்பினார்கள்.
கமலுக்கு தூக்கமே வரவில்லை. சென்னையில் ஒரு சாதாரண மனிதராக வலம் வந்த நாயர் இவ்வளவு சக்தி வாய்ந்தவரா? புரிந்துகொள்ள முடியவில்லையே.
இவருக்கு  கடைசி டெஸ்ட் ஒன்று கொடுக்க வேண்டும்.
காலை எழுந்தவுடன்    நாயரிடம் கமல் கேட்டார், நாயர், உங்களுக்கு போப்பைத்தெரியுமா? அவரைப்பார்க்க வேண்டுமே.
அடுத்த விமானத்தில் வாடிகன் சென்றனர். 
   
அன்று போப், உலகம் முழுவதிலிருந்தும் வந்திரு       ந்த பத்தாயிரம் பேருக்கு அருட்செய்தி கூற தயாராகியிருந்தார்.
நாயர் கமலிடம், சார், நீங்க கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களுடன் இருங்கள். நான் போப்புடன் பால்கனியில் தோன்றுவேன். என்று சகஜமாக கூறினார்.
திகைத்துப்பொன கமல் கூட்டத்தில் கலந்தார்.
சில நிமிடங்களில் போப்புடன்   நாயரும் பால்கனியில் தோன்றினார். கமல் அதிர்       ந்து போனார்.  போப்பேசத்தொடங்கும்போது கூட்டத்திலிருந்த கமல் மயககமுற்று கீழேசாய்ந்தார். இதைக்கண்ட நாயர் ஓடோடி வந்து கமலின் முகத்தில் நீரைத்தெளித்து     நினைவுக்குக் கொண்ட்டு வந்தார்.
கமல் சார், என்ன ஆச்சு உங்களுக்கு? போப்போட என்னைப் பார்த்து மயக்கம் அடைந்து விட்டீரா?
கமல் பதில் கூறினார், இல்லை நாயர், நீங்களும், போப்பும் பால்கனிக்கு வந்த போது பால்கனியில் பிரபாகரன் நாயர் நிற்கிறார், அவர் அருகில் நிற்பது யார்?ஏன்று என் பக்கத்தில் நின்றவர் கேட்டார். எனக்கு மயக்கமே வந்து விட்டது.

சில பேரின் வி.ஐ.பி. தொடர்புகளைக்கேட்டால் இப்படித்தான் மயக்கமே வ      ந்து விடும்.

என் தம்பி மனைவி உஷா. அவள் TCS ல் பணி புரிகிறாள். ஆயுத பூஜையன்று அலுவலகம் சென்றாள். பூஜைக்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டன.
அவளுடைய உயர் அதிகாரி அவளிடம் ஒரு மொபைல்         நம்பரைக் கொடுத்து, இது ஒரு  VIP ந்ம்பர்மா. சென்னையில் உள்ள எல்லா TCS officeலேயும்  அவர்தான் பூஜை செய்து வைப்பவர். எத்தணை மணிக்கு நம்ம office க்கு வருவார்னு கேளு. அவர்MDக்கெல்லாம் ரொம்ப க்ளோஸ். ஜக்கிரதையா அவர்கிட்டே தமிழ்லேயே பேசும்மா. என்று கூறியிருக்கிறர்.

உஷா அவரிடம் பேசினாள். அவர் ஆறு மணிக்கு வருவதாகக் கூறியிருக்கிறார். உயர் அதிகாரிகள் மற்றும் இளம் இஞ்சினீயர்கள் அனைவருமே காத்திருந்தனர்.
ஆறு மணிக்கு அவர் வந்தார். பூஜையெல்லாம் சிறப்பாக முடித்தார். உயர் அதிகாரிகள் அனைவரும் அவரிடம் நன்றி கூறினர். அவருக்கு விஐபி ட்ரீட்மெண்ட்தான்.
அவர் கிளம்ப ரெடி செய்து கொண்டிருந்தார்.
அப்போது உஷா அவரிடம்,  நான் மூர்த்தி சாரோட தம்பி வொய்ஃப்.என்      று கூறினாள்.
கீழ கட்டளை மூர்த்திதானே? அப்ப போன வருஷம் பூஜைலே நான் பார்த்த பொண்ணு யாரு? என்று விஐபி கேட்டார்.
அவள் மூர்த்தி சாரோட அண்ணா பொண்ணு, ரம்யா என்று இவள் கூறினாள்.
மூர்த்தி ஊர்லதானே இருக்கான்? கேட்டதாக சொல்லு. அவனும், நானும் ஊர்லே அடிக்காத லூட்டியா? மைலாப்பூர் கோயில் பக்கம் வந்தா ஆத்துக்கு வரச்சொல்லு. அப்ப நான் கிளம்பட்டுமா கொழந்தை? என்று சொல்லிக்கொண்டே கிளம்பி விட்டார்.

அவளுடைய உயர் அதிகாரிகள் இவ்ர்கள் பேசுவதைப் பார்த்துக்கொண்டிரு     ந்தனர்.
உஷா, யு ஸீம் டு க்னொ இம்பார்டன்ட் பெர்சன்சஸ். நைஸ் தட் ஈஸ். என்று பாராட்டி விட்டு சென்றார் ஒரு அதிகாரி. இவளுக்கோ பெரு மகிழ்ச்சி.
வீட்டுக்கு வந்து தன் கணவனிடம்,அண்ணாவுக்குத்தான் எவ்வளவு விஐபி கனெக்ஷன் என்று கூறினாளாம்.
அந்த விஐபி வேறு யாருமில்லை. நம்ம ஊர் ராஜம் சாஸ்த்ரிகள்தான்.         
நம்ம ஊரை நினைத்தால் ரொம்பவே பெருமையாக இருக்கு.

மூர்த்தி

Anbudan Aparna

நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் அனைவருடனும் உரையாடும் வாய்ப்பு இன்று வந்தது.உள்ளமெல்லாம்  ரணமானது ...கண்ணெல்லாம் குளமாச்சு 

அன்புடன் அபர்ணாவின் வணக்கம் 


என் அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்வு , பகிர்ந்து கொள்ளகிறேன் உம்முடன் 

அலுவலக நேரத்திலே 
அத்துனை பேர் மத்தியிலே
அமிலத்தில் தோய்த்தெடுத்த
அம்பெடுத்து வீசயிலே
அனலில் இட்ட புழுவாய்
அபலை நான் துடிக்கையிலே ....

நடந்தது இது தான்.....

சரியான விதத்தினிலே
சரியான ஒரு வேலையை
சரியாக சொல்லாமல்
சதிகாரி -என் அதிகாரி சென்றுவிட
சரி சரி என தலை ஆட்டிய நான் - அதை
சராசரியாய் செய்திடவே
சரமாரியாய் வசை மொழியை
மாறி மாறி அவள் பொழிய -என் மனம்
வேரின்றி வீழ்ந்த மரமானது -அதில்

கன்னங்கள் உப்பளமாச்சு
நெஞ்செல்லாம் சுமையாச்சு..
மூடும் கண்ணீரும்
முட்டி முட்டி தெரிசாச்சு -அதில்
மனது மட்டும் தரிசாச்சு

தன்னந்தனியாக மனம்
பாவமே தவிக்கயிலே
தாலாட்ட தாயுமில்லே
தொட்டனைத்து ஆற்றுவிக்க
கட்டியவனும் உடனில்ல
என்ன சொல்ல என்ன சொல்ல
எந்த சொல்லால் எழுதினானோ
என் தலைஎழுத்த
எத வச்சு நான் அழிக்க
அதை ஜெயிக்க ...

புண்பட்ட மனம் கெட்டு போச்சு
பாவி சனம் எனை விட்டு விட்டு போச்சு -என்
காவிய நாயகன் ஆவியாய் போன பின்பும்
பாவி மக வாழ்வினில்
கூடி அழ நாதியில்ல ....
பழக்கமில்லா தோசமம்மா புளுக முடியலே
பஞ்சாயத்த கூட்டி வச்சு அழுக முடியலே
கலங்கி நின்னா கஞ்சி தண்ணி
காச்சி ஊத்த நாதியில்ல

நிழலும் கூட சுட்ட போது
நின்னு பாக்க முடியுமா
வழியே தொலஞ்சு நின்னபோது
திரும்பி போக முடியுமா
காதினிக்க பேச்சு கேட்டுக்
காலம் ரொம்ப ஆச்சுது
கனவிலும் சிரிப்பு சத்தம்
காதில் கேக்காம போச்சுது
நெஞ்சம் மட்டும் மகிழ்ச்சியை
தொலைச்சு போட்டு தவிச்சிது
என்ன செய்ய ?????

உதட்டுக்கு மட்டும் இன்றி
மனதுக்கும் சாயமிட்ட மனிதர்கள் மத்தியிலே
ஆடையில்லா ஊரில்
உடை அணிந்த பைத்தியமாய் நான்..........
 






அன்புடன் அபர்ணா