Wednesday, October 26, 2011

Nine to Five-By Ramji

Nine to Five-By Ramji


அன்றும் எப்போதும் போல் காலை சீக்கிரமே ஆபீஸ் போனேன்.
சுமார் ஒருமணி நேரம் இருக்கும் என்னுடன் பணி புரியும் சுதா கண்களில் கண்ணிருடன் வந்தாள்
"ஏம்மா சுதா என்ன ஆச்சு ? ஏன் அழற ?" என்றேன்
அவள் கலங்கியதை பார்க்கும் போது எங்கள் இருவருக்குமான மேலதிகாரி (அவளும் ஒரு பெண் ) சுதாவை திட்டி இருப்பாள் என்று யூகித்தேன்.

"சொல்லும்மா .. ஏன் அழற ?"

இந்த ஆபீஸ்ல் இருப்பவர்களிலேயே நான் சற்று வயதில் பெரியவன் என்பதால் என்னிடம் ஒரு சகோதர பாவத்துடன் பழகினார்கள். உரிமையுடன் அவர்களின் பிரச்சனைகளை கூறுவதுண்டு .

"இப்ப அழறத நிறுத்த போறயா இல்லையா ?"
"இல்ல சார் ரெண்டு நாளா நான் லீவ் .. என் குழந்தைக்கி உடம்பு சரியில்ல .. எங்க மாமியாரும் வீட்ல இல்ல .. அதுனால வேற வழி இல்லாம நான் லீவ் போட்டுட்டேன்..."

"அதெல்லாம் சரிம்மா ..இது பெண்களுக்கே உறிய problem. தன் குழந்தைக்கி உடம்பு சரியில்லனா லீவ் போடணும், தன் கணவனுக்கு உடம்பு சரியில்லன லீவ் போடணும், மாமனார் மாமியாருக்கு உடம்பு சரியில்லனா லீவ் போடணும் ...ஆனா தனக்கு உடம்பு சரியில்லனா லீவ் போடமுடியாது அப்டியே வேலைக்கி வரணும் .. sorry ம்மா இது ஒரு சாபம் ..இப்ப நீ லீவ் போட்டதுல என்ன ப்ராப்ளம் ?"

"உங்களுக்கே தெரியும் இந்த ஆபீஸ் ல OTRS (தினசரி செய்ய கூடிய ஒரு முக்யமான வேலை) நான் செய்வேன் இல்லைனா சித்ரா பண்ணுவாங்க .."

"சரி ..."
"ரெண்டு நாளா unfortunate ஆ ரெண்டு பேருமே லீவ் ..என்ன ஆச்சு OTRS யாருமே பன்னால அதுக்கு மேனேஜர் பிடிச்சி திட்டு திட்டுன்னு திட்டறாங்க...ஏன் backup ரெடி பண்ணல்ல .?? நீங்க இல்லைனா ஆபீஸ் அப்டியே ஸ்தம்பிக்கணுமா .. அப்டின்னு கத்தினாங்க .. நானும் எவ்ளவோ சொன்னேன் இல்ல மேடம் சித்ரா பாப்பாங்க ஆனா எதிர்பார்க்காம அவங்களும் லீவ் அப்டின்னேன் கேக்கவே இல்ல சித்ரா இல்லனா என்ன விஜயலட்சுமி பண்ண வேண்டியது தான அப்படின்னு கத்து கத்துன்னு கத்தறாங்க .. என்னோட போறாத நேரம் விஜயலட்சுமி க்கு இது சரியாய் தெரியாது சார் ..அவங்களும் புதுசு.. ஏற்கனவே நல்ல தெரிஞ்சவங்களை எல்லாம் வேற இடத்துக்கு மாத்திட்டாங்க .." சுதா மனம் நொந்து கண்ணை கசக்கினாள்
எனக்கு சற்றே இளகியது (அது எப்படிடா லேடீஸ் அப்படின்னா உனக்கு மனசு இளகறது என்று என் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் ) உடனே மேனேஜர் ப்ரியாவின் காபினுக்கு போனேன் .  

நான் முன்பே  சொன்னது போல் மேனேஜரும் என் வயதிற்கு மதிப்பு அளித்து செவி மடுத்து கேட்பதுண்டு .
"என்ன மேடம் இது ..சுதாவ காய்ச்சி எடுதுட்டிங்க போல இருக்கே ..?" என்றேன் சற்றே தயக்கத்துடன்.

"பின்ன என்ன சார் ஒரு ரொடீன் வேலை பண்றவங்க backup வெச்சிக்க வேண்டாமா ? ஒரு ஆபீஸ்ல ஒருவேலை ஒருத்தர நம்பியே இருக்க கூடாதில்லையா ?சுதா இல்லேன்னா சித்ரா ... அவங்க இல்லேன்னா விஜி ..அவங்களும் இல்லைனா இன்னொருத்தங்க அப்டிதான் இருக்கணும் .."
என்று அடுக்கி கொண்டே போனாள்

"நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை அப்டிதான் இருக்கணும் ஆனா சில நேரம் நடைமுறை சிக்கல் வந்துடுது .. ஏன்னா  மத்தவங்களுக்கும் ஒரு சில ரொட்டின் வொர்க் இருக்கும் இல்லையா ..? மேலும் ஒரு வேலைக்கி எத்தனை பேரை standby யாக வைக்க முடியும் ?..நான் சொல்ற இந்த உதாரணம் சரியா இருக்கா பாருங்க .. இப்ப கார் வாங்கறோம் ..அதுக்கு எத்தனை வீல்..?"

"என்ன சார் விளையாடறிங்க ... நாலு வில் இது கூட தெரியாதா .."

"அதுக்கு இல்லைம்மா அப்டி நாலு வில் இருக்கற காருக்கே நாம பஞ்சர் ஆச்சுன்னா மாத்த ஒரே ஒரு வீல் தான ஸ்டெப்னியா வெச்சிருக்கோம் ?  நாலு வீலா ஸ்டெப்னியா வெச்சிருக்கோம் ..? ஏன் .?probability கம்மி .. அதுனால இதுல சுதா பேர்ல மட்டும் தப்பு இல்ல as a manager நாமளும் உள்ள புகுந்து பாக்கணும் அவசியம் ஏற்பட்டா ஹெல்பும் பண்ணும் ..சரி சரி போனா போகுது இன்னைக்கி எல்லா  ஸ்டாப்பும் ஒன் அவர் எக்ஸ்ட்ராவா இருந்து ஷேர் பண்ணி முடிச்சிடலாம் .." என்றேன்

பிரியா என்னை அர்த்தத்துடன் பார்த்து சிரித்தார்கள் .

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் ..சுதா ..அபர்ணா போன்றவர்கள் துணிச்சலுடன் பிரச்சனையை சந்தியுங்கள். உங்களை சண்டை போட சொல்ல வில்லை..

"Getting Angry and shouting is like punishing yourself for the mistakes of Others"..

Dear Aparna!
சுற்றும் வரை பூமி..!
சுடும் வரை நெருப்பு ...!1
போராடும் வரை மனிதன் ...!!!
நீ மனிதன் போராடு ...

எவ்வளவோ ராகங்கள் இருக்கும்போது ..சோகராகம் மட்டுமே பாடுவது ஏன்?

அன்புடன் 
ராம்ஜி

No comments:

Post a Comment