Sunday, October 16, 2011

வி.ஐ.பி.யைத்தெரிந்தால்!!!!-By Murthy

வி.ஐ.பி.யைத்தெரிந்தால்!!!!

நான்   நண்பர்களுடன் சினிமாவுக்கு போகிறேன். அங்கு டைரக்டர் பாலச்சந்தர் அமர்ந்திருக்கிறார். நான் அவரிடம், சார், சௌக்கியமா? என்கிறேன். அவரும்,ஹாய் மூர்த்தி, எப்படி இருக்கீங்கஎன்று திருப்பி கேட்டு விட்டால், என் சந்தோஷம் பல மடங்கு பெருகிவிடும் அல்லவா? ந்ண்பர்களும், இவனுக்கு டைரக்டர் பாலச்சந்தர் நல்ல பழக்கம் போல இருக்கிறதே என்று வியப்படைவதும் சகஜமே.

சமீபத்தில் வி.ஐ.பி. நட்பு பற்றி ஒரு ஜோக் படித்தேன்.

மலையாள ந்ண்பர்களுக்கு பெரிய இடத்து சகவாசம் சற்றே அதிகம். பிரபாகரன் நாயர பாலக்காட்டுக்காரர். சென்னையில் சினிமாத்தொழிலில் ஈடுபட்டவர். ஒரு பட ஷூட்டிங்ககுக்கு வந்த கமலுடன் பேசிக்கொன்டிருந்தார் நாயர்.
ஹாலிவுட் பற்றி பேச்சு வந்தது.
டாம் க்ரூய்ஸ் (TOM CRUISE) என் நல்ல நண்பர். என்றார் நாயர்.
கமலால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் நாயரை டெஸ்ட் செய்துவிடுவதாய் முடிவெடுத்தார்.
எனக்கும் அவரைப்பார்க்கணும்னு ரொம்ப நாளாக ஆசை. அடுத்த வாரம் சென்று வரலாமா?
நாயரும் ஒத்துக்கொண்டார்.
ஹாலிவுட் சென்றனர். பாரமவுண்ட் ஸ்டூடியோவில் டாம் க்ரூயிஸின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
டாம் க்ரூயிஸுக்கான் அறைக்குச்சென்று தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். உடன் உள்ளே அழைக்கப்பட்டார்.
ஹௌ ஆர் யூ மிஸ்டர் நாயர்? என்று டாம் நாயருடன் கை குலுக்கினார். கமலை டாமுக்கு அறிமுகம் செய்வித்தார் நாயர்.
சில நிமிடங்கள் பேசிவிட்டு டாம் படப்பிடிப்புக்கு சென்றார்.
கமல் ஆச்ச்ர்யத்தில் மூழ்கி, நாயரைப்பார்த்தார்.
என்ன கமல் சார், ஆர் யூ ஹேப்பி?என்றார் நாயர்.
மிஸ்டர் நாயர், உங்களுக்கு அமெரிக்காவில் நிறைய பேரைத் தெரியும் போல இருக்கிறதே?
ஆமாம் சார், பிரஸிடென்டைப் பார்க்கணுமா? சொல்லுங்க
உலக நாயகனான தமக்கே சவால் விடும் நாயரை அவரால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இருவரும் வாஷிங்டன் சென்றனர்.
வெள்ளை மாளிகையில் ஒபாமா ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாக அவருடைய செகெட்டரி தெரிவித்தார். தன் விஸிட்டிங் கார்டை நாயர் கொடுத்து அனுப்பிய சில நிமிடங்களில் ஒபாமா வெளியே வந்தார்.
நாயரைப் பார்த்து, ஹலோ நாயர், என்ன திடீர் அமெரிக்க விஜயம்? அரை மணியில் வந்து விடுகிறேன். என்று கூறி உள்ளே சென்றார்.
கமலுக்கு மயக்கமே வந்து விட்டது. அரை மணி       நேரத்துக்குப்பின்        ஒபாமாவுடன் தேநீர் அருந்திய படி கமலை ஒபாமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் நாயர்.
இருவரும் விடை பெற்று ஹோட்டல் அறைக்கு திரும்பினார்கள்.
கமலுக்கு தூக்கமே வரவில்லை. சென்னையில் ஒரு சாதாரண மனிதராக வலம் வந்த நாயர் இவ்வளவு சக்தி வாய்ந்தவரா? புரிந்துகொள்ள முடியவில்லையே.
இவருக்கு  கடைசி டெஸ்ட் ஒன்று கொடுக்க வேண்டும்.
காலை எழுந்தவுடன்    நாயரிடம் கமல் கேட்டார், நாயர், உங்களுக்கு போப்பைத்தெரியுமா? அவரைப்பார்க்க வேண்டுமே.
அடுத்த விமானத்தில் வாடிகன் சென்றனர். 
   
அன்று போப், உலகம் முழுவதிலிருந்தும் வந்திரு       ந்த பத்தாயிரம் பேருக்கு அருட்செய்தி கூற தயாராகியிருந்தார்.
நாயர் கமலிடம், சார், நீங்க கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களுடன் இருங்கள். நான் போப்புடன் பால்கனியில் தோன்றுவேன். என்று சகஜமாக கூறினார்.
திகைத்துப்பொன கமல் கூட்டத்தில் கலந்தார்.
சில நிமிடங்களில் போப்புடன்   நாயரும் பால்கனியில் தோன்றினார். கமல் அதிர்       ந்து போனார்.  போப்பேசத்தொடங்கும்போது கூட்டத்திலிருந்த கமல் மயககமுற்று கீழேசாய்ந்தார். இதைக்கண்ட நாயர் ஓடோடி வந்து கமலின் முகத்தில் நீரைத்தெளித்து     நினைவுக்குக் கொண்ட்டு வந்தார்.
கமல் சார், என்ன ஆச்சு உங்களுக்கு? போப்போட என்னைப் பார்த்து மயக்கம் அடைந்து விட்டீரா?
கமல் பதில் கூறினார், இல்லை நாயர், நீங்களும், போப்பும் பால்கனிக்கு வந்த போது பால்கனியில் பிரபாகரன் நாயர் நிற்கிறார், அவர் அருகில் நிற்பது யார்?ஏன்று என் பக்கத்தில் நின்றவர் கேட்டார். எனக்கு மயக்கமே வந்து விட்டது.

சில பேரின் வி.ஐ.பி. தொடர்புகளைக்கேட்டால் இப்படித்தான் மயக்கமே வ      ந்து விடும்.

என் தம்பி மனைவி உஷா. அவள் TCS ல் பணி புரிகிறாள். ஆயுத பூஜையன்று அலுவலகம் சென்றாள். பூஜைக்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டன.
அவளுடைய உயர் அதிகாரி அவளிடம் ஒரு மொபைல்         நம்பரைக் கொடுத்து, இது ஒரு  VIP ந்ம்பர்மா. சென்னையில் உள்ள எல்லா TCS officeலேயும்  அவர்தான் பூஜை செய்து வைப்பவர். எத்தணை மணிக்கு நம்ம office க்கு வருவார்னு கேளு. அவர்MDக்கெல்லாம் ரொம்ப க்ளோஸ். ஜக்கிரதையா அவர்கிட்டே தமிழ்லேயே பேசும்மா. என்று கூறியிருக்கிறர்.

உஷா அவரிடம் பேசினாள். அவர் ஆறு மணிக்கு வருவதாகக் கூறியிருக்கிறார். உயர் அதிகாரிகள் மற்றும் இளம் இஞ்சினீயர்கள் அனைவருமே காத்திருந்தனர்.
ஆறு மணிக்கு அவர் வந்தார். பூஜையெல்லாம் சிறப்பாக முடித்தார். உயர் அதிகாரிகள் அனைவரும் அவரிடம் நன்றி கூறினர். அவருக்கு விஐபி ட்ரீட்மெண்ட்தான்.
அவர் கிளம்ப ரெடி செய்து கொண்டிருந்தார்.
அப்போது உஷா அவரிடம்,  நான் மூர்த்தி சாரோட தம்பி வொய்ஃப்.என்      று கூறினாள்.
கீழ கட்டளை மூர்த்திதானே? அப்ப போன வருஷம் பூஜைலே நான் பார்த்த பொண்ணு யாரு? என்று விஐபி கேட்டார்.
அவள் மூர்த்தி சாரோட அண்ணா பொண்ணு, ரம்யா என்று இவள் கூறினாள்.
மூர்த்தி ஊர்லதானே இருக்கான்? கேட்டதாக சொல்லு. அவனும், நானும் ஊர்லே அடிக்காத லூட்டியா? மைலாப்பூர் கோயில் பக்கம் வந்தா ஆத்துக்கு வரச்சொல்லு. அப்ப நான் கிளம்பட்டுமா கொழந்தை? என்று சொல்லிக்கொண்டே கிளம்பி விட்டார்.

அவளுடைய உயர் அதிகாரிகள் இவ்ர்கள் பேசுவதைப் பார்த்துக்கொண்டிரு     ந்தனர்.
உஷா, யு ஸீம் டு க்னொ இம்பார்டன்ட் பெர்சன்சஸ். நைஸ் தட் ஈஸ். என்று பாராட்டி விட்டு சென்றார் ஒரு அதிகாரி. இவளுக்கோ பெரு மகிழ்ச்சி.
வீட்டுக்கு வந்து தன் கணவனிடம்,அண்ணாவுக்குத்தான் எவ்வளவு விஐபி கனெக்ஷன் என்று கூறினாளாம்.
அந்த விஐபி வேறு யாருமில்லை. நம்ம ஊர் ராஜம் சாஸ்த்ரிகள்தான்.         
நம்ம ஊரை நினைத்தால் ரொம்பவே பெருமையாக இருக்கு.

மூர்த்தி

No comments:

Post a Comment