Sunday, September 22, 2013

Thoughts

இந்திய பொருளாதாரம் சீர் குலையும் நிலையில் உள்ள இந்த தருணத்தில் நாம் எல்லோரும் நம்புகின்ற அந்த ஆண்டவனைத்தான் கூக்குரல் எழுப்பி அழைத்து வந்து இந்த மகா பாரதத்தை திரும்பவும் அவனிடத்தில் ஒப்படைத்து காத்து அன்று இருந்த சுபிக்ஷதையும் அன்பான வாழ்க்கை நெறி முறையினையும் அன்று இருந்த வேத கோஷங்களையும் தர்ம நீதிகளையும் நிலை நாட்ட வேண்டி நிற்கவேணும். ஒரு புறம் மானிட அறிவுக்கு எட்டிய பொருளாதார நிபுணர்கள் கொண்டு வரும் சட்ட திட்டங்களினால் மட்டும் நிதி நிலைமை சீர் ஆகாது உண்மையை சொல்லப்போனால் நெறியான வாழ்க்கை உண்மையான அன்பு கள்ளம் கபடமில்லா நினைவுகள் ஏமாற்றாது வாழ்தல் பிறரின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு பிறர் படும் துக்கங்களையும் இன்னல்களையும் களைந்து இன்பமே நல்கும் உணர்வுகளுடன் இருத்தல் நல்ல நிலங்களை திருமகள் போல் காத்து அதில் உண்மையான விவசாயம் செய்து மக்களின் பசிப்பிணி போக்க பாடுபடுதல் என பல தர்ம முறைகளை பின்பற்றினாலே இயற்கை அன்னை நம்மை காத்திடுவாள் அன்பு வற்றி அடிவயிறு எரிந்து அதிலிருந்து உண்டாகும் வெப்பமே இன்று உலகமே எரிந்து பருவங்கள் மாறுகிறது பசி பரவுகிறது பட்டினி தலை விரித்து ஆடுகிறது பாவங்கள் வலுக்கிறது புண்ணிய கருமங்கள் நலிகிறது உலகத்திற்கே பஞ்சசீல கொள்கை பரப்பிய இந்த மண் இன்றும் பஞ்சத்தில் அடிபட்டுக்கொண்டு இருக்கிறது எங்கு காண்பினும் கொலை களவு களவும் கத்தும் மற   என்பதின் உண்மை விளக்கம் - களவு என்றால் திருட்டு - கத்து என்றால் - பொய் கூறுதல் - ஆக திருட்டையும் பொய் கூறுவதையும் விட்டுவிட்டு மற்ற நல் செய்கைகளில் நாட்டம் கட்டி தெரிந்து கொள் என்பதுதான் பொருள். எத்துனையோ மகான்கள் வாழ்ந்த இந்த பாரத பூமி ராமன் ஆண்ட பூமி என்றும் தருமத்தின் மடியில் வாழ எல்லாம் வல்ல இறைவனை நாம் பிரார்த்திப்போமாக !

ஸ்ரீதரன் ரிசர்வ் வங்கி


Mumbai Post


விநாயகர் சதுர்த்தி முடிவு


மும்பை மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட ,பக்தர்களின்  பிரார்த்தனைக்கு செவி சாய்க்கும்  ' மும்பையின் ராஜாவாக "       லால்பாக் பகுதியில் 10 நாள் "குடிகொள்ளும்  அடுத்த வினாயகரைப்பார்ப்போம்.
   
இது தான் மும்பையிலேயே பிரம்மாண்டமான ,லட்சக்கணக்கில் பக்தர்களை ஈர்க்கும் பெருமான்.இது சரித்ரபூர்வமாக, மீனவர்களால் நடத்தப்படும் விழா என்று கூறப்படுகிறது.அவர்களின் மீன் சந்தை இங்கு 1932ம் ஆண்டு அதிகார வர்க்கத்தால் அகற்றப்பட்டது.அவர்கள் திறந்த வெளியில்  விற்க நேரிட்டது.அப்போது அவர்கள் விநாயகப்பெருமானை மனம் உருகி பிரார்த்தனை செய்ததால்  அவர் ,அருளால் நில உரிமையாளர் மனம் உவந்து நிரந்தர சந்தை அமைக்க நிலத்தை அளித்தார்.மனம் மகிழ்ந்த மீனவர்கள் உடன் பெருமானுக்கு சிலை அமைத்து கொண்டாடினார்கள்.பெருமானின் வடிவம் கூட மீனவர் உடையில் அமைந்ததாம்.பின்னர் 1934ல்  மண்டல் நிறுவப்பட்டு தொடந்து நடை பெறுகிறது.இதில் மீனவர்கள் தான் முக்கியமாக செய ல்படுகிரார்கலாம்.தொழில் 10-15 நாட்கள் முடக்கப்பட்டு.சந்தை சுத்தப்படுத்தப்பட்டு,பெருமாள் எழுந்தருள்கிறார்.

மூர்த்தியை காம்ளி என்ற குடும்பம் தான் அன்று முதல் இன்று வரை படைக்கிறார்கள் Patent  உரிமை கூட வாங்கிவிட்டார்கள் மண்டப அலங்காரங்கள் கிடையாது..மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காதது.ஒரு நாளைக்கே லட்சக்கணக்கில்.முக்கியமான சாலையில் பாதிக்குமேல் அடைத்து பல கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் வரிசை .இரண்டு வழிகள்.நவாஸ் வழியில் பக்தர்கள் தங்கள் காணிக்கையை செலுத்தவும் மூர்த்தியை தொட்டு வணங்கவும் முடியும்.தரிசன நேரம் 20 மணி நேரம் பிடிக்கும். இந்த ஆண்டு கொஞ்சம் குறைவு என்கிறார்கள்.இடையில் ஒய்வு எடுக்க AC Tents.சாதாரண வரிசையில் 5 மணி அளவில்.திருப்பதி போல் சில வினாடிதான் மூர்த்தியை தரிசிக்கமுடியும். பிரம்மாண்டமான மூர்தியைப்பார்தவுட.ன்  பரவசமாவது உண்மைதான்.(அடியேனுக்கும் அனுபவம் அப்படித்தான்}
 
பக்தர்கள் தங்கள் குறைகளை களைவதாக நம்புகிறார்கள். புனே ,நாசிக் போன்ற வெளியூர்களில் இருந்தும் கூட்டம்.சமாளிக்க ஆயிரக்கணக்கில் போலிஸ்,ஸ்பெஷல் reserve போலீஸ்.5000 தொண்டர்கள்.தினம் மந்திரி சபை உறுப்பினர்கள்.,நடிகர்கள்,கிரிக்கெட் வீரர்கள் வருகை மொத்தத்தில் மூர்த்தியை வணங்குவது தங்களுடைய பிறவிக்கடன் ,ஏன் சாத னையாகக்கூட  நம்புகிறார்கள்.
 
மற்றறொரு மூர்த்தி பென்சில்களால் உருவாக்கப்பட்டு டைம்ஸ் ஆப் இந்தியா வின்  விருதைப்பெற்றது. இடமின்மை காரணமாக மற்றவைகளை எழுத முடியவில்லை.
 
மராத்தியர்களுக்கு விநாயகர்க் தான் எல்லாம்.வீட்டில் குடி கொள்ளும் மூர்த்திக்கு பல ஆயிரம் செலவு மற்றும் மேள தாளத்துடன் அழைத்துவர ,விசர்ஜன் போது பல ஆயிரங்கள் செலவு.எவ்வளவு ஏழையா இருந்தாலும் கடன் வாங்கியே கொண்டாடுகிறார்கள்.சத்ய நாராயண பூஜையும் உண்டு. விசர்ஜன் அன்று கலங்கிய கண்களுடன் முழு குடும்பத்துடன்  இடி,மின்னல்,மழை யுடன் வழி அனுப்புகிறார்கள். வழியில் மூர்த்திக்கு எந்த விக்னமும் ஏற்படக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள்.பக்தியை உணர முடிகிறது.
 
விசர்ஜன் அன்று அரசாங்கமும்,நகராட்சியும் பாராட்டத்தக்க வகையில் ஏற்பாடு செய்திருந்தது.அசம்பாவிதங்கள்  மிக குறைவு.
 
முடிவாக.இந்தவிழா உலகின் கவனத்தை ஈர்க்கும் மாபெரும் விழாதான்..பாமரமக்களுக்கு பேரின்பத்தையும் அளிக்கும் விழாதான்.பெருளாதார ரீதியிலும் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் சிறு வியாபாரிகள் போன்றோருக்கு நல்ல வேலை வாய்ப்பும், நல்ல வருமானமும் அளிக்கிறது.சில விரும்பத்தகாத செயல்கள் நடந்தாலும் அது எல்லா நிகழ்சிகளிலும் உள்ளதுதான் நாணயத்தின் இரு பக்க போல்.
 
மஞ்சள் பிள்ளையாரை பிடித்து ஆவாகனம் செய்தவுடன் பெருமான் எழுந்தருவதையும்,வெள்ளப்பிள்ளையாரை கிள்ளி ,அவருக்கே அர்ப்பணம் செய்வதையும் பொறுத்து அருள்வார் என்பதை நாம் உணர்கின்றோம்..அது போல் பெருமான் குற்றம் குறைகளை பொறுத்து அருள் பாலிக்கிறார் என்பதுதான் நம் நம்பிக்கை.சமூகக்கேடுகள் களைய பிரார்த்திப்போம்.
 
சில புள்ளி விபரங்கள் ..மண்டலகள் 11400.... கரைக்கப்பட்ட சிலைகள் 2,07,752...  கடலோர தளங்கள்  75...பூமாலைகள் போன்ற அகற்றப்பட்ட பொருள்களின் எடை 50 டன் (எருவாக மாற்றப்படும்}
 
தொலைக்காட்சியில் சென்னை நிகழ்சிகள் அளித்த செய்திகள்  வாமன அவதாரம், ,தேங்காய் கொப்பரையிலான கொப்பரை விநாயகர்,அஷ்ட விநாயக்,புரசைவாக்கம் பிரம்மாண்டமான மண்டபம்.முதலியன.குரோம்பேட்டை அஸ்தினாபுரம் விநாயகர் கண்காட்சியை லட்சக்கணக்கான வர்கள் கண்டு களித்துள்ளனர் தவர விட்டவர்கள் அடுத்த ஆண்டு பார்க்கலாம்.
 
ஹைதராபாத்தில் விழா  முடிவில் லட்டு 9.26 லட்சத்துக்கு ஏலம் போய் உள்ளது.
 
 
கொசுறு ..மும்பையில் கஜ முகம் கொண்ட வினாயகப்பெருமானுக்கு இப்படி சிறப்புகள் நடக்கும்போது,பெருமானின் உருவம் கொண்ட யானை  ஒனறை வாசலிலும்,தெருவிலும்  பிச்சை எடுக்க வைத்து தினம்  ரூபாய் 2000 வரையில் ஒரு மாவுத்தன் சம்பாதித்தான். பொறுக்காத பக்தர்கள்,காட்டிலாவுக்கு  யானையை பறிமுதல் செய்ய புகார் கொடுத்துள்ளனர்.
 
 
மற்ற செய்தி ....கிரிக்கெட் சூதாட்டம் இப்போது இடம் பெயர்ந்து அரசியலுக்கு வந்துள்ளது. வஷயம்..அடுத்த பிரதமர் ராகுல் காந்தியா? அல்லது மோடியா?  ராகுல் ஜெயித்தால் 1 ரூபாய்க்கு 3 ரூபாய்.மோடி யானால் 1ரூபாய் 30 காசு. இது வரை 90 கோடி ரூபாய் வசூலாம்.
 
மும்பை வெங்கடராமன்.

PMD Jokes

தஞ்சாவூரில் மணிகூண்டு அருகே ஒரு கில்லாடி நின்று கொண்டு இருந்தான் .அப்போது ஒரு அப்பாவி  அவனருகில் சென்று " ஏம்பா இந்த கடியாரம் என்னவிலை ?" என்று கேட்க கில்லாடி" வாங்க சார்  உங்களுக்காக 5௦௦ ரூபாய்தான் வெளிலே யார் கிட்டேயும் இதைப்பத்   தி சொல்லாதீங்க சீக்கிரம் எடுங்க பணத்தை " என்றான்
அப்பாவி சுருக்கு பையை திறந்து எண்ணி மறுபடியும் எண்ணி "என்னை யாரும் ஏமாற்றமுடியாது  இந்தாங்க பணத்தை பிடிங்க "என்று சொல்லி குடுத்தான் .வாங்கின உடனே பையில் வைத்து கொண்டு நடையை கட்ட ஆரம்பிக்க  நம்ப ஆசாமி "நாந்தான் அப்பவே சொன்னேனே  என்னை யாரும் ஏமாற்ற முடியதூன்னு "
கில்லாடி "ஏம்பா அவசரப்படறே கடியாரம் கயட்ட ஏணி எடுத்துண்டு வாறேன்பா "
"சரி சரி சீக்கிரம் வா "  அவன் வருவானா திரும்பி  என அப்பாவி காத்திருந்து விட்டு வருத்தத்துடன் சென்றான்  

அப்பாவி என்ன செய்தான் அடுத்தவாரம் தொ ட ரு ம்  

===

சென்றவாரம்  அப்பாவி ஏமாந்தான்  இந்தவாரம்  என்ன செய்தான்  பார்க்கலாமா   அதே இடம் அதே நேரம் கில்லாடி அங்கே உலாவ நம் அப்பாவி அருகே சென்று "என்னப்பா நேற்று ஏணி  கொண்டு வரேன்  சொல்லி வரலியே என்னை ஏமாற்ற முடியாது " கில்லாடி சொன்னான் "ஏணி  கொண்டு வருவதற்குள்  நீங்க போய்விட்டீங்க  ஐயா "அப்பாவி"சரி சரி  அதான் சொன்னேனே  என்னை யாரும் ஏமாற்ற முடியாது  இந்தா பணத்தை புடி  எண்ணி பத்ரமா வச்சுக்க  நீ இங்கயே நில்லு நான் போய்  ஏணி  கொண்டு வரேன் " அப்பாவி அந்தபக்கம் போனான் கில்லாடி எதிர்புறம் வேகமாக  சந்தோஷமாக சென்றான் 
அப்பாவி ஏணியுடன்  வந்து பார்த்தான் "என்னை யாரும் ஏமாற்ற முடியாது "என்று சொல்லிக்கொண்டே வருத்தத்துடன்  போனான்  adutha vaaram  போலீசும்  திருடனும் தொடரும் 

PMD 

TDR Diary……TDR Diary……TDR Diary.....

Dear TOSA / TDR ites,

·        Perhaps, all are aware that Uzhavan Express, a new train has been introduced between Chennai Egmore and Tanjoore, on daily basis. The train stops at Mayilaaduthurai, Aduthurai and Kumbakonam, enroute to Tanjoore. This is a good facility introduced by Railways to Delta District people. The name of the train is aptly coined as “ Uzhavan Express “.  Thiruvidaimarudur Town Panchayat Board at its recent meeting held passed various development related resolutions, interalia, requesting the Railway authorities to make Uzhavan Express stop at Thiruvidaimarudur.Subsequently, I had a discussion with Shri Gopala Krishnan, President who informed that they are in the process of taking up the matter with Trichy Divisional Office of Railways and Chennai. Immediately after that I shall gather the contact details. Thereafter, TOSA / TDR ites also can take up the matter and send similar request/s through mail. I shall communicate shortly. This issue was also taken up by me on September 20, 2013, in person, with Shri Ko. Vi. Chezhiyan, sitting MLA of Thiruvidaimarudur who promised to pursue the matter with appropriate authorities so as to take the request to logical end. Let us wait with hope.

·        Vinayaka Chaturthi celebrations at our Veeracholan Pillaiyaar temple was celebrated with added colour by having special Abhishekams for 10 days. This is happening after a gap of many years. It is worthy to note that one of the Abhishekam contributors for a day was our SBI Venu, Raipur. Let us continue to revive the past in our soil with pleasure and pride.


·        Firewalk (Thee Midhi) and Swami Purappaadu festival was held at our Meyla (West) Maraiyamman temple with traditional spirits and gaiety. It was a grand gathering of devotees which went to the extent of diversion of traffic via East Street and Therku Veedhi.  Our TDR wore a festive look on last Sunday.

Bye for the time being…………
Regards
Individual Subramanian
Thiruvidaimarudur


இசை இசை இசை - 8



அன்புடன்  அனைவருக்கும் 
முன்னிரவில்  இசைத்து   இன்புறும்  ஒரு மங்களகரமான  ராகம்  கல்யாணி.  மும்மூர்த்திகளும் அதற்கு முன்னதாக  புரந்தரதாசரும் இந்த ராகத்தை  அனுபவித்து  பாடி இருக்கிறார்கள்.

புரந்தரதாசர்  பாடிய  "கல்லு  சக்கரே  கொள்ளிரோ .."  M  L  வசந்த குமாரியின்  குரலில் இனிமையாக இருக்கும்.

"நிதி  சால  சுகமா.."

"அம்மா   ராவம்மா .."

"வாசுதேவயனி .."        

GREAT  தியாகராஜரின்  கீர்த்தனைகளில்  சில.
முத்துஸ்வாமி  தீக்ஷதர்  பாடிய  "கமலாம்பா  பஜரே .."   D K  பட்டம்மாள் குரலில் பிரபலமானது.

நவராத்திரி  சமயம்  கச்சேரிகளில்  கேட்கலாம்.
"ஹிமாத்ரி  சுதே  பாஹிமாம்.."  ச்யாமா  சாஸ்த்ரி யின்  கல்யாணி  போற்றி ..
"பாஹிமாம்  ஸ்ரீ  வாகீஸ்வரி .."  ஸ்வாதித்  திருநாளின்   சாகித்யம்....
"உன்னையல்லால்  வேறு  தெய்வம் .."  பாபநாசம்  சிவனின்  இந்தப் பாடல் பெரும் பாலான கச்சேரிகளில்  கேட்டு  ரசிக்கலாம்.
சங்கராபரணம்  படத்தில்  SPB  பாடும்  சரஸ்வதி  ஸ்துதி ..காளிதாசர்  ஆக்கியது ..
"மாணிக்ய  வீணாம்  உபலாலயந்தீம் ..மதாலஸாம் .."
"வீணையடி  நீ  எனக்கு ..மேவும்  விரல்  நானுனக்கு .."  இந்த  அற்புத பாடலை  பாரதியார் கல்யாணியில்  தான்  பாடினார். 

திரை இசையில்  கல்யாணி  என்றவுடன்  ஞாபகம்  வரவேண்டியது  "மன்னவன்  வந்தானடி தோழி ..." K  V  மகாதேவனின்  கம்பீர  இசையில்  P  சுசீலாவின்  நர்த்தனமாடும்  குரலில் தலைமுறைகள்  தாண்டி  ஒலித்துக் கொண்டிருக்கும்  பாடல்.

"சிந்தனை  செய்  மனமே ..செய்தால்  தீவினை  அகன்றிடுமே .."  TMS  குரலில்  தெளிந்த நீரோடையாக  'அம்பிகாபதி'  படத்தில்.
"முதல்  முதலில்  பார்த்தேன் ..காதல் வந்தது..."  'ஆஹா' என்று  அனைவரையும்  ரசிக்க வைக்கும்  பாடல்.  

ஒரே  ராகத்தை  பல பரிமாணங்களில்  பரிசோதிப்பவர்  நம்  இளையராஜா..கல்யாணியை எப்படியெல்லாம்  தந்திருக்கிறார்  பாருங்கள்..

"ஆராரோ  ஆராரோ .."   ஆனந்த்  படத்தில்  தாலாட்டுபவர்  லதா மங்கேஷ்கர் ..!
"தேவன் தந்த  வீணை ..அதில் தேவி .."  இது நான் பாடும்  பாடல் ..
"மஞ்சள் வெயில் .."   நண்டு  படத்தில்   உமா ரமணன்.
"நதியில் ஆடும் பூவனம்..."  காதல்  ஓவியம்... SPB  ஜானகி  பாடலுக்கு  உயிரூட்டி இருப்பார்கள்.

"ஒரு தங்க ரதத்தில்  .." தர்ம யுத்தம்  படத்தில்  மலேசியா வாசுதேவனின்  மனம் விட்டு அகலாத  பாடல்.

"ராதா  அழைக்கிறாள் ..."  தெற்கத்திக்  கள்ளனை  பாட்டில் அழைக்கும்  ஜானகி..."வந்தாள்  மகாலக்ஷ்மியே ..என்றும் அவள்  ஆட்சியே .."  'உயர்ந்த உள்ளத்தின்' 
வரவேற்புப்  பாடல்.
"நிற்பதுவே  நடப்பதுவே  பறப்பதுவே .."   பாரதியின்  இயற்கை  வழிபாடு....
ஒருவர்  வாழும்  ஆலயத்தில்  அசைந்தாடும்  "மலையோரம்  மயிலே..."
"ஜனனி  ஜனனி  ஜகம் நீ  அகம் நீ .."  ஆதிசங்கரருக்கு  கல்யாணி  காட்சி தந்த பாடல்.
"அம்மா என்றழைக்காத  உயிர் இல்லையே .."   ஜேசுதாசின்  மயக்கும்  குரலில் அம்மாவுக்கு  ஆராதனை.

"வெள்ளைப் புறா ஒன்று .."  புதுக் கவிதையாய்  சிலிர்க்கும்  ஜேசுதாஸ்  ஜானகி.ஹே  ராம்  படத்தில்   "வைஷ்ணவ ஜனதோ .."  
சிந்து  பைரவியில்  'அவரோஹணம்' கிடையாது ..'ஆரோஹணம்' மட்டும் தான் என்று இளையராஜா  சொல்ல  கம்பீரமாக   ஆரோஹணம்  மட்டுமே எடுத்து "கலைவாணியே .."என்று கலக்கிய  ஜேசுதாஸ்.

ஒரு நாள்  ஒரு கனவு...இது  படம் தான். ஆனால்  இந்த கனவு  நனவானால்  எத்தனை இன்பமாக  இருக்கும்...அப்பா  அம்மா  அண்ணன்  தங்கை என்று எல்லோரும் சேர்ந்து பாட  அந்த  சுகம்  கல்யாணி  தரும்  அனைவருக்கும்....."காற்றில் வரும் கீதமே ...என் கண்ணனை  அறிவாயா .."  
கேட்டுப்  பாருங்கள்  கல்யாணியை...மனம் மகிழும் ..சுகம் தரும்.

மீண்டும்  முத்துக் குமார்

Sunday, September 15, 2013

US return னா சும்மாவா.....!


"சார்  ஐந்தரை  மணி சுமாருக்கு  வந்துடறேன்...." சொல்லி விட்டேனே தவிர  T நகரின் ஜன சமுத்திரத்தை  விலக்கிக் கொண்டு பனகல் பார்க்குக்குள்  நுழைவது  சுலபமாக இல்லை...

"வாங்க வாங்க" கை குலுக்கி  வரவேற்றார்  சந்திரசேகரன்...ட்ராக்ஸ்  டி ஷர்ட் ..நெற்றியில் வியர்வை..."என்ன வாக்கிங்  முடிந்ததா.."  "வாங்க  நடந்து கிட்டே பேசுவோம்.."

"இங்கே  நடக்கும் போதே  நிறைய friends  கிடைச்சுட்டாங்க ..family friends  ஆயிட்டோம்..retirement க்கு  பிறகு நல்லாவே  போயிட்டிருக்கு..." 

லேசாக மூச்சு வாங்கியபடி அவரோடு நடந்தேன் .. புதிய  baggy ஜீன்ஸ் அணிந்த பெரியவர் கையில்  வாட்டர் பாட்டில் குலுங்க பின்னால் வந்தார்...."ஹாய்  ஷேகர் ..யுவர் friend ..?.".என் பக்கம்  கை நீட்டினார்...

"சார்  Mr  சேஷன் ..கலிபோர்னியாவுல  அவரோட  பையனோட ஒரு மாசம் இருந்துட்டு இன்னிக்குத் தான்  வந்திருக்கார்... இவர்  முத்துக்குமார்....என்னைப் பார்க்க வந்திருக்கார்..நாங்க ஒரே ஊர்..."

"யூ  மீன் ..திருவிடைமருதூர் .great  ....ஜோதிர்  மஹாலிங்கம் .." என்றபடி  கையாட்டி விட்டு ஓட ஆரம்பித்தார்...

baagy ஜீன்ஸ்,  சன் கிளாஸ்  மினரல் வாட்டர் என்று வித்யாசமாக  இருக்க, சிரித்தேன்.
"சேஷன் சார் மட்டுமில்லை ..யார்  US போய் வந்தாலும்  சுலபமாக கண்டு பிடித்து விடலாம்"
"ஆமாம் சார் .. கையில் மினரல் வாட்டர் எப்போதும் இருக்கும்...ரோட்டில் நடக்கும் போது கூட..."

"ஹோட்டல்ல  பார்த்தீங்கன்னா  இட்லி வடை சாப்பிட்டிட்டு  கிரெடிட் கார்டை நீட்டுவார்கள்.."
"மீனம்பாக்கத்திற்கு   'டாக்சி' இல் போனவர்கள்...திரும்பி வந்த பிறகு  'cab' என்பார்கள்..."
"கெர்சீப்பை  மூக்கில்  வைத்தபடி  'எங்கு  பார்த்தாலும்  ஒரே pollution,  தூசி  குப்பை ..Oh God ..." என்று  அலுத்துக் கொள்வார்கள்.
"தூரத்தை  கிலோ மீட்டரில்  சொன்னவர்கள்  இப்போது  'மைல்' கணக்கில் அளப்பார்கள்.."
"கை  இடுக்கில்  நிறைய  டியோடரண்ட்  போட்டுக் கொள்வார்கள்..."

"திரும்பி வந்து  கொஞ்ச  நாள் வரைக்கும்  luggage இல் இருக்கும் வெளிநாட்டு ஏர்லைன்ஸ் ன் tag  ஐ எடுக்கவே  மாட்டார்கள்...!"
"பேச ஆரம்பிக்கும் போது  -நான் US போயிருந்தப் போ ..- என்று ஆரம்பிப்பார்கள்...."
பேசிக் கொண்டே   நடை  ட்ராக்கில்  போய்க்கொண்டிருந்தோம் ...சேஷன் மாமா  அடுத்த ரவுண்டு  போக எங்களை தாண்டினார்...வாகனங்கள் புகை உள்வரை வர வேகமாக தும்மினேன்.....உடனே  "GOD  BLESS"  என்றார்   சேஷன்.  

புன்னகைத்தார்  சந்திரசேகரன் ...'இதுவும்  அமெரிக்கன் தான்...'  அவர் சிரிப்பின் அர்த்தம் புரிந்தது...

"thank you"   என்று  Mr  சேஷன் கையை குலுக்கினேன்...கை இடுக்கிலிருந்து  டியோடரண்ட் வாசனை  தூக்கியது...  மீண்டும்  தும்மல் வந்தது.. "GOD  BLESS" என்றார் சேஷன் ..!
பனகல் பார்க் வாசல் வரை வந்து வழியனுப்பினார் திரு சந்திரசேகரன்...
திருவிடைமருதூரில்  கிழக்கு மடவிளாகத்தில் ரைட்டர் மாலி சார் வீட்டிற்கு எதிர் புறம் இருந்தவர்  இவர்...1967  SSLC .. நம் சங்கத்தின்  புதிய உறுப்பினர்...


மீண்டும் முத்துக்குமார்

Saturday, September 14, 2013

Vinaaayagar chathurthi


பொதுவாக இல்லங்களிலும் ,ஆலயங்களிலும்  கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி எப்பொழுது பொது விழாவாக உருவெடுத்தது என்பது சர்ச்சைக்கு உரிய விஷயம்.சரித்திர பூர்வமாக சிவாஜி மன்னர் ஆண்ட சமயத்தில் (1630-1680)பொது  வழிபாடு  புனேவில் நடை பெற்றதாக தெரிகிறது.விநாயகர் மராத்திய மக்களின் குல தெய்வம் ஆனதால் .பின்  PESWA க்களின் ஆட்சி காலத்திலும் (1818 வரை)தொடர்ந்தது .அவர்கள் வீழ்ச்சிக்குப்பின் .ஆதரவு சரிவர இல்லாததன் காரணமாக நாளடைவில் குறைந்து திரும்பவும் குடும்ப நிகழ்ச்சியாகவே மாறியது.

திருப்புமுனையாக .இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் (1893) பாலகங்காதார  திலகர் மக்களை ஒன்றுபடுத்த  குடும்ப நிகழ்ச்சியை பொது நிகழ்ச்சியாக அசுர வேகத்தில்  மாற்றினார். கடவுள் யாவருக்கும் பொது.பிராமணர்.பிராமணர் அல்லாதவர் யாவருக்கும் சொந்தமானவர்.மற்ற மதத்தினர் உட்பட ஒற்றுமையோடு ம்,உற்சாகத்தோடும் ஈடுபடவேண்டும் என போதித்து வெற்றியும் கண்டார்.குறிப்பாக,விநாயகர் விஜர்ஜன் அன்று பலதரப்பட்ட மக்கள் கூடி ஒன்று பட்டனர்.இதனால் மறைமுகமாக தேசிய உணர்வும் தூண்டி விடப்பட்டது.விழா நிகழ்சிகளில் .அறிவு ஜீவிகள் கலந்து கொண்டு விவாதித்தனர்.கவிதை அரங்கம்.நாடகங்கள்.சங்கீதம்.கிராமிய நிகழ்சிகள். இடம் பெற்றன.திலகரின் தேசிய உணர்வு இலட்சியங்களும் மக்கள் மனத்தில் இடம் பெற்றன.பின்னர் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த போதும்,விழா  தொடர்ந்து நடை பெற்று இப்பொழுது பூதாகரமாக நிலை பெற்றுள்ளது.

ஆகமக விதிப்படி பல நூற்றாண்டுகளுக்கும் முன் கட்டப்பட்டும்,மந்திர உச்சாடானங்கள் ஓதப்பெற்றும்.பு னிதத்  தன்மையும்,சாந்தித்யமும் கொண்டுள்ள பல ஆலயங்கள் பூசையின்றி.இருண்டு கிடக்கும் சூழ்நிலையில்,பொது இடங்களில் 10 தினங்களுக்கு மட்டும் நிலை கொண்டுள்ள இந்த பொது வழி பாட்டு நிகழ்சிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வரவு செலவு ஆவதும்,பல அரசியல் தலைவர்கள்,பிரமுகர்கள்,சினிமா புள்ளிகள் திடீர் பக்தர்களாக உருவெடுப்பதும்,மக்கள் கூட்டம் லட்சக்கணக்கில் வருவதும் காலம்  செய்த கோலம் தான்.

மும்பையில் சித்தி வினாயகராலயம்,டிட்வாலா ஆலயம் ,அஷ்ட விநாயகர் ஆலயங்கள் போன்றவை முறையாக அமைக்கப்பட்டு ,குடி கொண்டுதினசரி  பூஜை,கள் நடை பெற்று பக்தர்களை ஈர்க்கின்றன.மண்டலகள் நடத்தும் 10 நாள் கொண்டாட்டம் எப்படி என்று நேரில் பார்த்தால்தான் தெரியும். நிர்ணயித்தபடி கட்டாய வசூல்.பொது வீதிகளை அடைத்து பிரம்மாண்டமான பந்தல்கள்.அலங்காரங்கள்.24 மணி நேரமும் பயங்கர சங்கீதம்.(உச்ச நீதி மன்ற உத்தரவால் இப்போது இரவு 10 மணி வரை) காது செவிடு ஆகும் அளவுக்கு சப்தமான பாட்டுக்கள்.ஆட்டங்கள்,சினிமா நிகழ்சிகள்,சினிமா நடிகர்களின் வருகை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.நடு ரோடுகளில் குழி பறித்து பந்தல்கள் போடுவார்கள். முடிந்தபின் அப்படியே விட்டுவிடுவார்கள் ரோடுகள் மழைக்காலத்தில் பொது மக்களுக்கு துன்பங்களை கொடுக்கும்.குப்பைகளை அகற்ற பல லட்சங்கள் செலவாகும்.சிலைகளை அழைத்துவரும்போதும் கடலில் கலக்கும் போதும்  மேளதாள ,Band ,தப்பு தாரைகளுடன் பலகிலோ மீட்டர்கள் வரை உச்ச ஒலி பெருக்கி சாதனங்களுடன்  காதை செவிடாக்கும் கோர இசை.ஆண்  பெண் களின் விரும்பத்தகாத நடனங்கள் தாண்டவமாடும்.இதய நோயாளிகள் எங்கும் ஒளிய முடியாது.

காலமாற்றம் கருதிஇப்போது  பல மண்டல்கள் தங்களையும் மாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றன. மாசு கட்டுப்பாடு,சமுக சேவையை மனதில் கொண்டு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன.plaster of Paris  ல் குடிகொண்ட பல சிலைகள் களிமண் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.பிரசாதங்கள் துணி,காகிதப்பைகளில் வழங்கப்படுகின்றன.குப்பைகள் அடிக்கடி அகற்றப்படுகின்றன.ரத்த தான முகாம்,மருத்துவ உதவிக்கு நிதி  aambulance ,பள்ளி சிறார்களுக்கு புத்தகம்,சீருடை.பண உதவி,ஓவியம்,இசை போட்டிகள்  மரம் நடுதல் போன்றவை வளர்ந்து வருகின்றன.

மண்டல்கள் விநாயகருக்கு அலங்காரம் மட்டு மின்றி ப ல   thematic  scenes .புராதன கட்டிடங்களின் replica முத லியவைகளைஅமைப்பதும் உண்டு உதாரணமாக தாஜ்மஹால்,உதயபூர் அரண்மனை,ராமேஸ்வரம்,தஞ்சை.மதுரை ,ஹம்பி,கோயில்கள்,டெல்லி செங்கோட்டை.போன்றவை.

இந்த ஆண்டு,சோம்நாத் ஆலயம்,மைசூர் அரண்மனை,சினிமாவின்  100 ஆண்டு சாதனைகள் ,Film City  இடம் பெற்றுள்ளன.மேலும் ஒரு மண்டல் 3லட்சம் செயற்கை வைரங்கள் கொண்டு விநாயகரை உருவாக்கி உள்ளது.மற்றொரு மண்டல் COMETIC பொருட்களான பவுடர் டப்பாக்கள்,லிப்ஸ்டிக்,HAIRBANDS ,Bangles ,nailpolish முதலியவற்றால்  சிலையை உருவாக்கி உள்ளது. முடிவில் கடலில் விட மாட்டார்களாம்.பிரித்து ஆஷ்ரம குழந்தைகளுக்கு அளிப்பார்களாம்.

விநாயகர் பல வேடங்களிலும்,வண்ணங்களிலும் காட்சி அளிப்பார்.சுற்றிலும் லட்சக்கணக்கான மின் விளக்குகள். மக்கள் விநாயகரை வணங்குவதை விட இந்த காட்சிகளை ரசிக்கத்தான் கூடுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

நிகழ்சிகளுக்கு செல்வோம், மும்பையில் மிகப்பெரிய மண்டல்களைப்பார்ப்போம்.முதலாதவதாக G .S .B மண்டல் மாதுங்கா பகுதியில்.மங்களூர் பக்தர்களால் நிறுவப்பட்டது.(223 கோடி இன்சூரன்ஸ்.)உள்ளதிலேயே தெய்வீகத்தன்மையும்,புனிதமும்,பக்தியும்,கட்டுப்பாட்டுக்களுடனும்,ஆடல் பாடல் கூத்துக்கள் இன்றி பூஜை,ஹோமங்கள் மட்டும் கொண்டு செயலாற்றி வருகின்றது.பந்தலில் நுழைந்ததுமே ஒரு பெரிய ஆலயத்தில் பிரவேசிப்பது போன்ற உணர்வு.வேண்டுதல்கள்,துலாபாரம் .எப்பொழுதும் வேத மந்திரங்கள் ஒலி அனுபவிக்கலாம்.இந்த ஆண்டு12 அடி  விநாயகர் சிலை க்கு மட்டும் 21.6 கோடி சிலவுதங்க நகைகள் 80 கிலோ.ஒரு நபர் மட்டும் 2 கிலோ அளித்துள்ளார்.வெள்ளி நகைகள்.மற்ற பூஜை பொருட்கள் கணக்கே கிடையாது.பூஜைக்கு பல மாதங்கள் முன்பே பதிவு.துலாபார சமர்ப்பணம்.பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில்.தொண்டர்கள் ஆயிரக்கணக்கில்.பழியாக கிடக்கிறார்கள்.Security and Police Force in Hundreds உடமைகளைக்காக்க பல காப்பிடங்கள்.எல்லாம் பிரமிப்புத்தான்..விழா ஐந்து நாள் மட்டும்,

மற்றவை தொடரும். மற்ற செய்திகள்.

in Chennai PG Medical seat (MD Radiology)touched Rs  4.00 Crores in auction
கல்வி ஏலத்தில் போகும் அளவுக்கு வளர்ந்துள்ளது.சாமான்ய குடிமகனுக்கு அன்று போல் இன்றும் பகற்கனவுதான்.

ஒரு குடும்ப நீதிமன்றம் ஒரு டாக்டருக்கு .மனைவியிடமிருந்து விவாகரத்து வழங்கியுள்ளது.(மனைவியும்  டாக்டர் தான் ) வழக்கு மனைவி சோறு போடுவதில்லை,மதிப்பதில்லை,சொன்னதை கேட்பதில்லை.

 மும்பை வெங்கடராமன் 


Kavithai


உள்ளம் ஒரு கருவியாய் மாறி உருத்துகின்றதோ இறைவா
துள்ளுகின்றது ஒருபுறம் மகிழ்ச்சிதனை அடைந்தாலே - மனம்
அள்ளுகின்ற உன் நாமம் மறந்தபோதே துன்பமே
தெள்ள தெளிந்த எண்ணங்களில் வாழும் மன்னனே
வெள்ளம் போல் வந்திடுதே உன் நினைவு வந்தபோது
கள்ளமில்லா ஆனந்த  நீர்  துளிகள்  விழுகின்றதே கண்களிலே!

என்னையே அறியா இன்பம் பெருகுகின்றதே அதில்
உன்னையே அறிய துடிக்கின்றதே என் மனம் ஏனோ
மன்னவா மாசறுக்கும் தூயவா மாதவா மதுசூதனா
என்னவா இணையில்லா யாதவா கேசவா கோவிந்தா
என்றுமே உன்னையே மறவாத வரம் நல்காயோ வேங்கடவா !


ஒப்பிலாத அப்பனே ஒய்யார மூலவனே நாரணனே
உப்பிலாத அப்பனென ஊரினிலே பெயர் பெற்றாயோ
தப்பாமல் உனையே நாடுவோர்க்கு நலம் புரியும் பெம்மானே
எப்போதும் உன் நாமம் என் நாவினிலே நிற்க வேணுமே
அப்போதும் இப்போதும் எப்போதும் என் துயர் தீராயோ !
செருக்கழிந்து உருக்குலைந்து பருக்கும் இந்த உடல்
மரிக்கொழுந்து மணக்கும் உனது திருவடியில் வாராதோ
அரிககுமது மனத்திரையில் வெறுக்குமதுஉணர்வர்களுக்குள்
பிரிக்குமுறை மறந்திருந்து  உன் இணைப்புதான் வாறதோ!

விழிப்புடனே நான் இருப்பின் மன அலைகள்ஓய்வதில்லை
செழிப்புடனே நான் இருக்க எனது செருக்குதான்மாறவில்லை
அழியுமுடல் நான் பெற்றேன் பெற்றேனா உன் நாமம்தனை
பழித்திடாத வாழ்வு நான் பெறவே எனை தூக்கிவளர்ப்பாயே
எத்துனை சூட்சுமங்கள் இந்த புவியினிலே
அத்துனையும் நீ அன்றோ ஆண்டவனே - பூரண
சத்தியனே நீ அன்றோ காட்டிடுவாய் ஓர் வழிதனை
நித்தியமே உன் நாமம் மனதினிலே நிலைத்திடவே !
வாழ்வெனும் மாயமதை தந்தனையோ அல்லது
தாழ்வெனும் தரத்தினையே இணைத்தினயோ 
சூழ்வதெல்லாம் பகையாய் இருப்பினும் இறைவா 
விழித்திருந்தே எனை நீ காத்திடுவாய் என்றும் !
பிறந்தேன் புவியில் விழுந்தேன் புரண்டேன் 
மறந்தேன் எனையே நீ வாழ வைப்பதை எனினும்
திறந்தேன் என் மனமென்னும் கோவில்தனை 
பறந்தே வாராயோ என் இதயத்தில் அமராயோ இறைவா!
உருவமில்லா ஓரிடத்தில் இருந்த உறவே இன்று
கருவிலிருந்து உருவெடுத்து வந்ததோ அறியேன்
பருவமது வந்தபோது தெரிந்ததம்மா அந்த
கருணை கடவுள் தந்த இந்த மானிட ஜென்மமென
அரவணைத்து வளர்த்திட்டாள் இதனையே என் தாய்
மறந்தேனே அவள் செய்த தொண்டினை இன்று
மரம்போல் வளர்ந்தேன் வழி ஏதும் அறியாது
அறம் வளர்க்க மறந்தேன் ஊழியில் சிக்கினேன்
திறம் ஒன்றும் அறியேன் ஊண் ஒன்றே அறிந்தேன்
வரம் வேண்டும் ஆண்டவா என்றும் உன்னை நினையவே
  
கண்கள் பார்பதெல்லாம் கனவுகளே அய்யகோ
எண்ணங்கள் ஏற்பதில்லை அவைகளையே
மின்னும் நொடிப்பொழுதினில் மறைகின்றனவே
மானிட ஜென்மமெனும் இந்த பாழும் உடலே
எண்ணுவதோ நடப்பதில்லை மனமோ நிறைவதில்லை!
நுண்ணிய கருமங்கள் நிறைந்தனவே உலகினிலே
கண்ணியம் இருக்கின்றதோ தெரியவில்லை இங்கே
திண்ணமாக சொல்வேன் என் மனதினிலே அந்த
மன்னன் மாயவன் கண்ணன் உறைகின்றான் என்னுள்ளே !

 R SRIDHARAN (RBI)