Sunday, September 8, 2013

சைக்கிளா சீடையா முறுக்கா ?


ஸ்ரீஜயந்தி  என்பது நான் படிக்கும் காலத்தில் ஒரு பெரிய விழா பக்கத்து வீட்டு மாமி,  நான் சைக்கிள் கற்றுக்கொண்ட புதிதில், ஒரு கிலோ அரிசியும் ஒரு கிலோ உளுந்தும் கொடுத்து அதற்க்கு அரவை கூலி என ஒரு பழைய மஞ்சள் நிற பத்து பைசாவும் கொடுத்து சைக்கிள் வாடகை என பத்து பைசாவும் கொடுத்து அம்மாசத்திரம் மில்லில் மாவு அறைத்து வர கொடுத்தால்  இருபுற மகிழ்ச்சியுடைன்  - ஒருபுறம் சைக்கிள் மறு புறம் மாவு அரைத்து வந்தால் முறுக்கு சீடை நிச்சயம் சைக்கிள் இருக்கும் இடத்தை அடைந்து வாடகைக்கு எடுத்துக்கொண்டு குரங்கு பெடல் மூலம் மெதுவாக கரடு முரடான பாதையை கடந்து ஹன்டல் பாரில் ஒரு பை தொங்கவிட்டு அதில் அரிசியும் உளுந்தும் இருப்பதாக மானசீகமாக நினைத்து கொண்டு போனேன். அய்யகோ அரைப்பதற்கு கூலியினை அந்த மாமி அந்த பையிலேயே போட்டது மறந்தேன் மேலும் அது என்னிடம் இருப்பதாக கற்பனை செய்து கொடுத்தேன் அந்த பையை மாவு அரைப்பதற்கு. அதன் எடை கேட்டதற்கு ஒரு கிலோ என நான் கூற அதை வாங்கி பார்த்த அந்த மனிதர் இது ஒரு கிலோ இருக்காதப்பா என கூற என் வயிற்றில் புளி கரைத்தது.  இல்லை அது ஒரு கிலோதான் என நான் வாதாட கடைசீயில் அது அரைக்கிலோ கூட இல்லாதது உறுதியானது. எப்படி அது குறைந்தது என நான் துப்பறியும் சாம்புபோல் என்ன என யோசிக்க  , எனக்கு கிடைத்த ஒரு துப்பு அந்த பை கிழிந்து அதிலிருந்து அரிசியும் பருப்பும் நடுவக்கரை அக்ரஹரத்திலிருந்து மாவு மில் வரை ஒரு கோடு போட்டது புரியவில்லை. எனினும் அந்த மாவை மெசினில் போட்டு அரைக்க ஆரம்பித்தவுடன் ஒரு பெரிய அணுகுண்டு வைத்த சத்தம் கேட்க ஏதோ அந்த மெசினில் பெரிய கோளாறு வந்துவிட்டதாக நினைத்து மெசினை நிறுத்தினார் பெரியவர்  பார்த்ததில் அந்த மஞ்சள் பத்து பைசா நசுங்கி வெளியே விழுந்தது அந்த நிலையில் எனது உடம்பு பதை பதைத்தது  அரிசியும் போய் பத்து பைசாவும் போய் மெசினும் நின்ற நிலைமையில் ஆண்டவனை பிரார்த்திக்க இருதலை கொள்ளி எறும்புபோல் இருந்தேன்  என் நிலைமை எனக்கே பரிதாபமாக இருந்தது
 அது வரை அரைத்த மாவின் நிலைமையை பார்த்த போது அது மிகவும் கருப்பாக இருந்தது  அதனால் அந்த மாவை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்கு சைக்கிளில் திரும்பவும் வந்து மாமியிடம் நடந்ததை சொன்னேன்.  ஏதோ அந்த கிருஷ்ணன் மாமி மனம் புகுந்து என்னை தப்பிக்க வைத்தான் - ஹரே கிருஷ்ணா ! எனக்கோ மனமில்லை முறுக்கு வேண்டுமென்ற - இடையில் சீடையின் விருப்பமும் வெறுத்தாகி அங்கிருந்து வந்தேன் எனது இல்லம் தேடி ! போதுமடா சைக்கிள் ஆசை இனி எதுவும் வேண்டாமென மனது ஒதுங்கியது ஒரு புறம்!


-RBI Sridhar

No comments:

Post a Comment