" பசி வந்தால் பத்தும் பறந்து போகும்..."
என்பார்கள்.. என்னென்னெ ..?
"மானம் குலம்
கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்
உயர்ச்சி தாளாண்மை
தேனின் காசி வந்த
சொல்லியர் மேல்
காமுறுதல் பத்தும் பசி வந்திட பறந்து போம்.."
---ஔவையார்
வந்து விட்டது உணவு
பாதுகாப்பு திட்டம்.... 120 கோடி மக்களில் 80 கோடி பேர் இனி இராச் சாப்பாடு
உண்டு தான் உறங்கப் போகிறார்கள்.. அதாவது மூன்றில் இரண்டு பேர் ஏழைகள்
இருப்பதாக ஏற்றுக் கொள்கிறார்கள்...5 kg உணவு தானியங்கள் சகாய விலையில்
கிடைக்கப் போகிறது ..ஒரு
விஷயம் ஒரு சராசரி இந்தியன் ஒரு மாதத்தில் உட்கொள்ளும் உணவு
10.7 kg என்கிறது புள்ளி விவரம்...ஆக மீதி உணவை
அவன் வெளிச் சந்தையில் அதிக விலைக்குத் தான் வாங்க வேண்டும்.
உணவு பங்கீட்டு
துறையில் தானியங்கள் பாது காக்கப் படும் அவல முறையை பார்க்கிறோம்.ration
ல் தரப் படும் தானியங்களின் தரமே சாட்சி. தவிர நம் நாட்டில்
வீணக்கப் படும் உணவுப் பெருட்கள் கணக்கு பார்த்தால் தலை சுற்றும்... உணவு
உற்பத்தியில் 40 % வீணாய் போய்க்
கொண்டிருக்கிறது.. முக்ய
காரணம் பாதுகாப்பாக தானியங்களை சேமிக்கும் முறை இன்மை.
தவிர, இந்தியாவில்
உற்பத்தியாகும் பழங்கள் காய்கறிகளில் 40% சந்தைக்கே வருவதில்லை.
பல காரணங்களால்
வீணாய் கொட்டப் படுகின்றன ..ஒரு வருடத்தில் ஆஸ்திரேலியா உற்பத்தி
செய்யும் உணவு பொருட்களின் அளவை நம் நாடு உபயோகப் படுத்த
முடியாமல் வீணடிக்கிறது....
தற்போதய நம் நாட்டின்
உணவு subsidy bill Rs 75000 கோடி. இந்த உணவு மசோதா
வந்த பிறகு இதற்கான செலவு Rs 1,30,000 கோடியாக
உயருமாம், முதல் வருடத்திலேயே...!
ஒரு சமயம்
ராஜீவ் காந்தி சொன்னது.."நம் நாட்டில் ஏழைகளின் வளர்ச்சிக்காக செலவிடும் தொகையில்
ரூபாய்க்கு 15 பைசா தான் அந்த ஏழையை சென்றடைகிறது...."
இது பாரதத்தில் இருக்கும் அனைத்து அரசியல்
வாதிக்கும் தெரிந்த விஷயம் தானே...
நம் அரசுத்
திட்டங்களின் மற்ற 'ஒதுக்கீடுகளை' விட்டு விட முடியுமா
இதற்காக. அந்தச் சுமையையும் இந்தியனின் தோளில் தான் இறங்கும்.
பல மாநிலங்களில்
இலவசங்கள்...குறைந்த விலை விநியோகம் என நடந்து கொண்டு இருப்பதால்...பாக்கெட்டுகளில்
புன்சிரித்தபடி இருக்கும் முதல்வர்கள் முகம் மறைத்து மத்திய
அரசின் 'அரசியின்' முகம் வந்து விட்டால் 'அடுத்து என்ன செய்வது'
என்று கவலை....இந்தியனின் வாடிய முகம் மலர்வது
..எப்போது.. வாடிய வயிறு நிறைவது எப்போது என்று கவலைப்
பட அவர்களுக்கு நேரமில்லை.
பல வருடங்களாக மழை
பொழிவு இல்லாத பல மாநிலங்களில், விவசாயம்
அற்று, உணவின்றி
கடன் சுமை ஏறி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் அவலம்
பார்க்கிறோம்...வடக்கு வெள்ளக் காடாக இருக்க, தெற்கு வறண்ட பூமியாக காய்கிறது.
வடக்கில் ஓடிவரும் நீரின் மிகையால் தெற்கில் பயிர் செய்யும் காலம் எப்போது..?
நம் நாட்டில்
'வளர்ச்சி திட்டகளுக்காக' ஒதுக்கப்படும் தொகையில தம் வளர்ச்சிக்காக 'ஒதுக்கும்'
தொகையில் சிறு பகுதியை ஒவ்வொரு அரசியல் வாதியும் தம்
பங்காக தந்தால் கங்கையும் காவிரியும் இரண்டு வருடத்தில்
இணைந்து விடாதா..! இந்தியனின் பசிப் பிணி தீருமே...
"தனிஒருவனுக்கு
உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்..." என்று பாடி விட்டார்
நம் முண்டாசுக் கவி. கவிஞர்களே உணர்ச்சி வசப்படுபவர்கள்....சற்று
உரிமையோடு வார்த்தைகளை போடுவார்கள்... அதன் படி தான் இந்த வார்த்தைகளும்
என்று உணர்ந்து
அமைதி காக்குமாறு பொது ஜனங்கள் வேண்டப் படுகிறார்கள்.
மீண்டும் முத்துகுமார்
No comments:
Post a Comment