விநாயகர் சதுர்த்தி முடிவு
மும்பை மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட ,பக்தர்களின் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கும் ' மும்பையின் ராஜாவாக " லால்பாக் பகுதியில் 10 நாள் "குடிகொள்ளும் அடுத்த வினாயகரைப்பார்ப்போம்.
இது தான் மும்பையிலேயே பிரம்மாண்டமான ,லட்சக்கணக்கில் பக்தர்களை ஈர்க்கும் பெருமான்.இது சரித்ரபூர்வமாக, மீனவர்களால் நடத்தப்படும் விழா என்று கூறப்படுகிறது.அவர்களின் மீன் சந்தை இங்கு 1932ம் ஆண்டு அதிகார வர்க்கத்தால் அகற்றப்பட்டது.அவர்கள் திறந்த வெளியில் விற்க நேரிட்டது.அப்போது அவர்கள் விநாயகப்பெருமானை மனம் உருகி பிரார்த்தனை செய்ததால் அவர் ,அருளால் நில உரிமையாளர் மனம் உவந்து நிரந்தர சந்தை அமைக்க நிலத்தை அளித்தார்.மனம் மகிழ்ந்த மீனவர்கள் உடன் பெருமானுக்கு சிலை அமைத்து கொண்டாடினார்கள்.பெருமானின் வடிவம் கூட மீனவர் உடையில் அமைந்ததாம்.பின்னர் 1934ல் மண்டல் நிறுவப்பட்டு தொடந்து நடை பெறுகிறது.இதில் மீனவர்கள் தான் முக்கியமாக செய ல்படுகிரார்கலாம்.தொழில் 10-15 நாட்கள் முடக்கப்பட்டு.சந்தை சுத்தப்படுத்தப்பட்டு,பெருமாள் எழுந்தருள்கிறார்.
மூர்த்தியை காம்ளி என்ற குடும்பம் தான் அன்று முதல் இன்று வரை படைக்கிறார்கள் Patent உரிமை கூட வாங்கிவிட்டார்கள் மண்டப அலங்காரங்கள் கிடையாது..மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காதது.ஒரு நாளைக்கே லட்சக்கணக்கில்.முக்கியமான சாலையில் பாதிக்குமேல் அடைத்து பல கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் வரிசை .இரண்டு வழிகள்.நவாஸ் வழியில் பக்தர்கள் தங்கள் காணிக்கையை செலுத்தவும் மூர்த்தியை தொட்டு வணங்கவும் முடியும்.தரிசன நேரம் 20 மணி நேரம் பிடிக்கும். இந்த ஆண்டு கொஞ்சம் குறைவு என்கிறார்கள்.இடையில் ஒய்வு எடுக்க AC Tents.சாதாரண வரிசையில் 5 மணி அளவில்.திருப்பதி போல் சில வினாடிதான் மூர்த்தியை தரிசிக்கமுடியும். பிரம்மாண்டமான மூர்தியைப்பார் தவுட.ன் பரவசமாவது உண்மைதான்.(அடியேனுக்கும் அனுபவம் அப்படித்தான்}
பக்தர்கள் தங்கள் குறைகளை களைவதாக நம்புகிறார்கள். புனே ,நாசிக் போன்ற வெளியூர்களில் இருந்தும் கூட்டம்.சமாளிக்க ஆயிரக்கணக்கில் போலிஸ்,ஸ்பெஷல் reserve போலீஸ்.5000 தொண்டர்கள்.தினம் மந்திரி சபை உறுப்பினர்கள்.,நடிகர்கள்,கிரி க்கெட் வீரர்கள் வருகை மொத்தத்தில் மூர்த்தியை வணங்குவது தங்களுடைய பிறவிக்கடன் ,ஏன் சாத னையாகக்கூட நம்புகிறார்கள்.
மற்றறொரு மூர்த்தி பென்சில்களால் உருவாக்கப்பட்டு டைம்ஸ் ஆப் இந்தியா வின் விருதைப்பெற்றது. இடமின்மை காரணமாக மற்றவைகளை எழுத முடியவில்லை.
மராத்தியர்களுக்கு விநாயகர்க் தான் எல்லாம்.வீட்டில் குடி கொள்ளும் மூர்த்திக்கு பல ஆயிரம் செலவு மற்றும் மேள தாளத்துடன் அழைத்துவர ,விசர்ஜன் போது பல ஆயிரங்கள் செலவு.எவ்வளவு ஏழையா இருந்தாலும் கடன் வாங்கியே கொண்டாடுகிறார்கள்.சத்ய நாராயண பூஜையும் உண்டு. விசர்ஜன் அன்று கலங்கிய கண்களுடன் முழு குடும்பத்துடன் இடி,மின்னல்,மழை யுடன் வழி அனுப்புகிறார்கள். வழியில் மூர்த்திக்கு எந்த விக்னமும் ஏற்படக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள்.பக்தியை உணர முடிகிறது.
விசர்ஜன் அன்று அரசாங்கமும்,நகராட்சியும் பாராட்டத்தக்க வகையில் ஏற்பாடு செய்திருந்தது.அசம்பாவிதங்கள் மிக குறைவு.
முடிவாக.இந்தவிழா உலகின் கவனத்தை ஈர்க்கும் மாபெரும் விழாதான்..பாமரமக்களுக்கு பேரின்பத்தையும் அளிக்கும் விழாதான்.பெருளாதார ரீதியிலும் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் சிறு வியாபாரிகள் போன்றோருக்கு நல்ல வேலை வாய்ப்பும், நல்ல வருமானமும் அளிக்கிறது.சில விரும்பத்தகாத செயல்கள் நடந்தாலும் அது எல்லா நிகழ்சிகளிலும் உள்ளதுதான் நாணயத்தின் இரு பக்க போல்.
மஞ்சள் பிள்ளையாரை பிடித்து ஆவாகனம் செய்தவுடன் பெருமான் எழுந்தருவதையும்,வெள்ளப்பிள்ளை யாரை கிள்ளி ,அவருக்கே அர்ப்பணம் செய்வதையும் பொறுத்து அருள்வார் என்பதை நாம் உணர்கின்றோம்..அது போல் பெருமான் குற்றம் குறைகளை பொறுத்து அருள் பாலிக்கிறார் என்பதுதான் நம் நம்பிக்கை.சமூகக்கேடுகள் களைய பிரார்த்திப்போம்.
சில புள்ளி விபரங்கள் ..மண்டலகள் 11400.... கரைக்கப்பட்ட சிலைகள் 2,07,752... கடலோர தளங்கள் 75...பூமாலைகள் போன்ற அகற்றப்பட்ட பொருள்களின் எடை 50 டன் (எருவாக மாற்றப்படும்}
தொலைக்காட்சியில் சென்னை நிகழ்சிகள் அளித்த செய்திகள் வாமன அவதாரம், ,தேங்காய் கொப்பரையிலான கொப்பரை விநாயகர்,அஷ்ட விநாயக்,புரசைவாக்கம் பிரம்மாண்டமான மண்டபம்.முதலியன.குரோம்பேட்டை அஸ்தினாபுரம் விநாயகர் கண்காட்சியை லட்சக்கணக்கான வர்கள் கண்டு களித்துள்ளனர் தவர விட்டவர்கள் அடுத்த ஆண்டு பார்க்கலாம்.
ஹைதராபாத்தில் விழா முடிவில் லட்டு 9.26 லட்சத்துக்கு ஏலம் போய் உள்ளது.
கொசுறு ..மும்பையில் கஜ முகம் கொண்ட வினாயகப்பெருமானுக்கு இப்படி சிறப்புகள் நடக்கும்போது,பெருமானின் உருவம் கொண்ட யானை ஒனறை வாசலிலும்,தெருவிலும் பிச்சை எடுக்க வைத்து தினம் ரூபாய் 2000 வரையில் ஒரு மாவுத்தன் சம்பாதித்தான். பொறுக்காத பக்தர்கள்,காட்டிலாவுக்கு யானையை பறிமுதல் செய்ய புகார் கொடுத்துள்ளனர்.
மற்ற செய்தி ....கிரிக்கெட் சூதாட்டம் இப்போது இடம் பெயர்ந்து அரசியலுக்கு வந்துள்ளது. வஷயம்..அடுத்த பிரதமர் ராகுல் காந்தியா? அல்லது மோடியா? ராகுல் ஜெயித்தால் 1 ரூபாய்க்கு 3 ரூபாய்.மோடி யானால் 1ரூபாய் 30 காசு. இது வரை 90 கோடி ரூபாய் வசூலாம்.
மும்பை வெங்கடராமன்.
No comments:
Post a Comment