Sunday, September 15, 2013

US return னா சும்மாவா.....!


"சார்  ஐந்தரை  மணி சுமாருக்கு  வந்துடறேன்...." சொல்லி விட்டேனே தவிர  T நகரின் ஜன சமுத்திரத்தை  விலக்கிக் கொண்டு பனகல் பார்க்குக்குள்  நுழைவது  சுலபமாக இல்லை...

"வாங்க வாங்க" கை குலுக்கி  வரவேற்றார்  சந்திரசேகரன்...ட்ராக்ஸ்  டி ஷர்ட் ..நெற்றியில் வியர்வை..."என்ன வாக்கிங்  முடிந்ததா.."  "வாங்க  நடந்து கிட்டே பேசுவோம்.."

"இங்கே  நடக்கும் போதே  நிறைய friends  கிடைச்சுட்டாங்க ..family friends  ஆயிட்டோம்..retirement க்கு  பிறகு நல்லாவே  போயிட்டிருக்கு..." 

லேசாக மூச்சு வாங்கியபடி அவரோடு நடந்தேன் .. புதிய  baggy ஜீன்ஸ் அணிந்த பெரியவர் கையில்  வாட்டர் பாட்டில் குலுங்க பின்னால் வந்தார்...."ஹாய்  ஷேகர் ..யுவர் friend ..?.".என் பக்கம்  கை நீட்டினார்...

"சார்  Mr  சேஷன் ..கலிபோர்னியாவுல  அவரோட  பையனோட ஒரு மாசம் இருந்துட்டு இன்னிக்குத் தான்  வந்திருக்கார்... இவர்  முத்துக்குமார்....என்னைப் பார்க்க வந்திருக்கார்..நாங்க ஒரே ஊர்..."

"யூ  மீன் ..திருவிடைமருதூர் .great  ....ஜோதிர்  மஹாலிங்கம் .." என்றபடி  கையாட்டி விட்டு ஓட ஆரம்பித்தார்...

baagy ஜீன்ஸ்,  சன் கிளாஸ்  மினரல் வாட்டர் என்று வித்யாசமாக  இருக்க, சிரித்தேன்.
"சேஷன் சார் மட்டுமில்லை ..யார்  US போய் வந்தாலும்  சுலபமாக கண்டு பிடித்து விடலாம்"
"ஆமாம் சார் .. கையில் மினரல் வாட்டர் எப்போதும் இருக்கும்...ரோட்டில் நடக்கும் போது கூட..."

"ஹோட்டல்ல  பார்த்தீங்கன்னா  இட்லி வடை சாப்பிட்டிட்டு  கிரெடிட் கார்டை நீட்டுவார்கள்.."
"மீனம்பாக்கத்திற்கு   'டாக்சி' இல் போனவர்கள்...திரும்பி வந்த பிறகு  'cab' என்பார்கள்..."
"கெர்சீப்பை  மூக்கில்  வைத்தபடி  'எங்கு  பார்த்தாலும்  ஒரே pollution,  தூசி  குப்பை ..Oh God ..." என்று  அலுத்துக் கொள்வார்கள்.
"தூரத்தை  கிலோ மீட்டரில்  சொன்னவர்கள்  இப்போது  'மைல்' கணக்கில் அளப்பார்கள்.."
"கை  இடுக்கில்  நிறைய  டியோடரண்ட்  போட்டுக் கொள்வார்கள்..."

"திரும்பி வந்து  கொஞ்ச  நாள் வரைக்கும்  luggage இல் இருக்கும் வெளிநாட்டு ஏர்லைன்ஸ் ன் tag  ஐ எடுக்கவே  மாட்டார்கள்...!"
"பேச ஆரம்பிக்கும் போது  -நான் US போயிருந்தப் போ ..- என்று ஆரம்பிப்பார்கள்...."
பேசிக் கொண்டே   நடை  ட்ராக்கில்  போய்க்கொண்டிருந்தோம் ...சேஷன் மாமா  அடுத்த ரவுண்டு  போக எங்களை தாண்டினார்...வாகனங்கள் புகை உள்வரை வர வேகமாக தும்மினேன்.....உடனே  "GOD  BLESS"  என்றார்   சேஷன்.  

புன்னகைத்தார்  சந்திரசேகரன் ...'இதுவும்  அமெரிக்கன் தான்...'  அவர் சிரிப்பின் அர்த்தம் புரிந்தது...

"thank you"   என்று  Mr  சேஷன் கையை குலுக்கினேன்...கை இடுக்கிலிருந்து  டியோடரண்ட் வாசனை  தூக்கியது...  மீண்டும்  தும்மல் வந்தது.. "GOD  BLESS" என்றார் சேஷன் ..!
பனகல் பார்க் வாசல் வரை வந்து வழியனுப்பினார் திரு சந்திரசேகரன்...
திருவிடைமருதூரில்  கிழக்கு மடவிளாகத்தில் ரைட்டர் மாலி சார் வீட்டிற்கு எதிர் புறம் இருந்தவர்  இவர்...1967  SSLC .. நம் சங்கத்தின்  புதிய உறுப்பினர்...


மீண்டும் முத்துக்குமார்

No comments:

Post a Comment