Sunday, September 22, 2013

இசை இசை இசை - 8



அன்புடன்  அனைவருக்கும் 
முன்னிரவில்  இசைத்து   இன்புறும்  ஒரு மங்களகரமான  ராகம்  கல்யாணி.  மும்மூர்த்திகளும் அதற்கு முன்னதாக  புரந்தரதாசரும் இந்த ராகத்தை  அனுபவித்து  பாடி இருக்கிறார்கள்.

புரந்தரதாசர்  பாடிய  "கல்லு  சக்கரே  கொள்ளிரோ .."  M  L  வசந்த குமாரியின்  குரலில் இனிமையாக இருக்கும்.

"நிதி  சால  சுகமா.."

"அம்மா   ராவம்மா .."

"வாசுதேவயனி .."        

GREAT  தியாகராஜரின்  கீர்த்தனைகளில்  சில.
முத்துஸ்வாமி  தீக்ஷதர்  பாடிய  "கமலாம்பா  பஜரே .."   D K  பட்டம்மாள் குரலில் பிரபலமானது.

நவராத்திரி  சமயம்  கச்சேரிகளில்  கேட்கலாம்.
"ஹிமாத்ரி  சுதே  பாஹிமாம்.."  ச்யாமா  சாஸ்த்ரி யின்  கல்யாணி  போற்றி ..
"பாஹிமாம்  ஸ்ரீ  வாகீஸ்வரி .."  ஸ்வாதித்  திருநாளின்   சாகித்யம்....
"உன்னையல்லால்  வேறு  தெய்வம் .."  பாபநாசம்  சிவனின்  இந்தப் பாடல் பெரும் பாலான கச்சேரிகளில்  கேட்டு  ரசிக்கலாம்.
சங்கராபரணம்  படத்தில்  SPB  பாடும்  சரஸ்வதி  ஸ்துதி ..காளிதாசர்  ஆக்கியது ..
"மாணிக்ய  வீணாம்  உபலாலயந்தீம் ..மதாலஸாம் .."
"வீணையடி  நீ  எனக்கு ..மேவும்  விரல்  நானுனக்கு .."  இந்த  அற்புத பாடலை  பாரதியார் கல்யாணியில்  தான்  பாடினார். 

திரை இசையில்  கல்யாணி  என்றவுடன்  ஞாபகம்  வரவேண்டியது  "மன்னவன்  வந்தானடி தோழி ..." K  V  மகாதேவனின்  கம்பீர  இசையில்  P  சுசீலாவின்  நர்த்தனமாடும்  குரலில் தலைமுறைகள்  தாண்டி  ஒலித்துக் கொண்டிருக்கும்  பாடல்.

"சிந்தனை  செய்  மனமே ..செய்தால்  தீவினை  அகன்றிடுமே .."  TMS  குரலில்  தெளிந்த நீரோடையாக  'அம்பிகாபதி'  படத்தில்.
"முதல்  முதலில்  பார்த்தேன் ..காதல் வந்தது..."  'ஆஹா' என்று  அனைவரையும்  ரசிக்க வைக்கும்  பாடல்.  

ஒரே  ராகத்தை  பல பரிமாணங்களில்  பரிசோதிப்பவர்  நம்  இளையராஜா..கல்யாணியை எப்படியெல்லாம்  தந்திருக்கிறார்  பாருங்கள்..

"ஆராரோ  ஆராரோ .."   ஆனந்த்  படத்தில்  தாலாட்டுபவர்  லதா மங்கேஷ்கர் ..!
"தேவன் தந்த  வீணை ..அதில் தேவி .."  இது நான் பாடும்  பாடல் ..
"மஞ்சள் வெயில் .."   நண்டு  படத்தில்   உமா ரமணன்.
"நதியில் ஆடும் பூவனம்..."  காதல்  ஓவியம்... SPB  ஜானகி  பாடலுக்கு  உயிரூட்டி இருப்பார்கள்.

"ஒரு தங்க ரதத்தில்  .." தர்ம யுத்தம்  படத்தில்  மலேசியா வாசுதேவனின்  மனம் விட்டு அகலாத  பாடல்.

"ராதா  அழைக்கிறாள் ..."  தெற்கத்திக்  கள்ளனை  பாட்டில் அழைக்கும்  ஜானகி..."வந்தாள்  மகாலக்ஷ்மியே ..என்றும் அவள்  ஆட்சியே .."  'உயர்ந்த உள்ளத்தின்' 
வரவேற்புப்  பாடல்.
"நிற்பதுவே  நடப்பதுவே  பறப்பதுவே .."   பாரதியின்  இயற்கை  வழிபாடு....
ஒருவர்  வாழும்  ஆலயத்தில்  அசைந்தாடும்  "மலையோரம்  மயிலே..."
"ஜனனி  ஜனனி  ஜகம் நீ  அகம் நீ .."  ஆதிசங்கரருக்கு  கல்யாணி  காட்சி தந்த பாடல்.
"அம்மா என்றழைக்காத  உயிர் இல்லையே .."   ஜேசுதாசின்  மயக்கும்  குரலில் அம்மாவுக்கு  ஆராதனை.

"வெள்ளைப் புறா ஒன்று .."  புதுக் கவிதையாய்  சிலிர்க்கும்  ஜேசுதாஸ்  ஜானகி.ஹே  ராம்  படத்தில்   "வைஷ்ணவ ஜனதோ .."  
சிந்து  பைரவியில்  'அவரோஹணம்' கிடையாது ..'ஆரோஹணம்' மட்டும் தான் என்று இளையராஜா  சொல்ல  கம்பீரமாக   ஆரோஹணம்  மட்டுமே எடுத்து "கலைவாணியே .."என்று கலக்கிய  ஜேசுதாஸ்.

ஒரு நாள்  ஒரு கனவு...இது  படம் தான். ஆனால்  இந்த கனவு  நனவானால்  எத்தனை இன்பமாக  இருக்கும்...அப்பா  அம்மா  அண்ணன்  தங்கை என்று எல்லோரும் சேர்ந்து பாட  அந்த  சுகம்  கல்யாணி  தரும்  அனைவருக்கும்....."காற்றில் வரும் கீதமே ...என் கண்ணனை  அறிவாயா .."  
கேட்டுப்  பாருங்கள்  கல்யாணியை...மனம் மகிழும் ..சுகம் தரும்.

மீண்டும்  முத்துக் குமார்

No comments:

Post a Comment