மும்பையில் விநாயகர் சதுர்த்தி அதி விமரிசையாக
கொண்டாடப்படுவதை அன்பர்கள் அறிவார்கள் .விபரமாக பின்னர் எழுதுகிறேன்.. முன்னோடி .
கடவுள் தான் நம்மை காப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.கலிகாலத்தில் கடவுளை
நாம் காப்பாற்ற வேண்டிய துர்பாக்கிய நிலை.
இங்கு கணபதி மண்டல்கள் கணபதியையும் ,விழாவையும் இன்சூரன்ஸ் செய்யும்
அளவுக்கு முன்னேறியுள்ளன.பார்ப்போம்.
மாதுங்கா king circle மண்டல் ,நம்புங்கள்,223
கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்ய உத்தேசித்துள்ளது, All risk cover for 20
Cr, Rs182 Cr, for personal accident covers (10 lakhs each) for all
volunteers including Poojaaris,20 Cr for Public Liability Premium will
not be given to asingle Ins Company: but decision after calling
Tenders . Another mandal at Laal Baug ....Rs 20 Cr for Public On
Immersion Day,and 51 Cr for other risk....Another at Andheri for 3.7 Cr
தகவல் தொடரும்.
சிறையும் மருத்துவ மணை யும்
இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.அங்குள்ள மனிதர்கள்
அளவற்ற உடல் வேதனையையும்,மன வேதனையையும் அனுபவிக்கிறார்கள்.மனித வாசனைக்கு
ஏங்குகிறார்கள்..வெளிக்காற்றை சுவாசிக்க முடிவதில்லை..மருத்துவ மனையில் உள்ளவர்களுக்கு
விரைவில் விடுதலை உண்டு..அவர்களுக்கு ஆறுதல் கூற உறவினர்களும்,நண்பர்களும் அடிக்கடி
வருவார்கள்.ஆனால்,சிறைக்கைதிகளுக்கு இவை சொற்பம்..
நான் துணைவியுடன் சமீபத்தில் கேரளா மருத்துவ மனை ஒன்றில்
ஒரு மாதகாலம் சிகிச்சைக்கு உள்ளிருந்தோம்.அதிர்ஷ்டவசமாக ,தன மகனுடைய
சிகிச்சைக்காக ஒரு பாகவதரும் தங்கியிருந்தார்.பிறகு என்ன?தினம் காலை /மாலை கச்சேரி ,விவாதம்
தான்..மற்றும் கேரளா பற்றி பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.அவரை பிரிந்த பின் மனம்
சங்கடமாக இருந்தது. நட்பு தொடருகிறது.ஒரு நாள் என் துணைவி விளையாட்டாக இந்த மணை யில்
யார் பார்க்க வரப்போகிறார்கள் என்று சொன்னாள் .என்ன ஆச்சர்யம்? செல் அடித்தது.
குவைத்தில் பணி யாற்றும் என் Face Book நண்பர் சந்தோஷ் குமார்..எங்கு இருக்கிறீர்கள்?என்று
வினவினார்.சொன்னேன். உடனே தான் விடுமுறையில் கேரளா வந்துள்ளதாகவும்,உடனே பார்க்க
வருவதாகவும் கூறினார்.நான் 24 மணி நேரமும் மழை கொட்டுகிறதே,அவசியமில்லை என்றேன்.அவர்
நான் கேரளவாசி. பிரச்னை இல்லை என்று வெகு தூரத்தில் இருந்து வந்து எங்களை பார்த்தார்.எங்களுடன்
அரைநாள் கழித்தார்.ஒன்றாக உண்டோம்.பிரியும் பொது கலங்கியது உண்மைதான்.எழுதுவதற்கு காரணம்
இன்னும் மனித நேயம்,அன்பு,பாசம் உலகில் மறையவில்லை,மருத்துவ மணையில் உள்ளவர்களின் மன
நிலையை உணர்த்தத்தான்.பல அமைப்பைசேர்ந்தவர்கள் அங்கு சென்று முகம் தெரியாத நோயாளிகளிக்கு
இனிப்பு,பழம் கொடுத்து மகிழ்விப்பதை பாராட்டுவோம்.நாமும் பங்கு பெறுவோம் நம் .தலைவர்
புனிதப்பணியை முன்னரே தொடங்கி விட்டார்.
சிறை வாசிகளின் சோகம் விவரிக்க இயலாது.மனிதர்களைப்பார்க்க ,பேச
துடிக்கிறார்கள்.சினிமா காட்சிகளில் கம்பி வலைதடுப்பில் நடக்கும் காட்சிகள், நடிப்பாக
இருந்தும் நம்மை கலங்க வைக்கின்றன.அவர்களுக்கு ஆறுதல் கூற பல சமூக சேவகிகள் சென்று
உரையாடி.ராக்கி அணிவித்து மகிழ்விக்கிறார்கள்.
சிறை உள்ளே நல இதயம் கொண்ட சக கைதிகள் மற்றவர்களுக்கு கல்வி,ஆன்மிகம்,யோகம்
போதிக்கிறார்கள்.பல கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகின்றன.
ஒரு புதுமை செய்தி.பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் புனே ஏர்வாட சிறையில்
தண்டனை அனுபவித்து வருவது தெரியும்.50 சக கைதிகளுடன்,தங்களுக்கு பாதுகாப்பு அளித்து
வரும் சிறை பணியாளர்களின் குடும்ப நல நிதி திரட்ட மாபெரும் கலை நிகழ்ச்சி புனேவில்
(வெளியே) உள்ள பாலா கந்தர்வ அரங்கில் செப்டெம்பர் 26 அன்று அளிக்க உள்ளார்கள்.அதில்
மற்ற ஹிந்தி, மராத்திய கலைஞர்களும் கை கொத்து ஆடல் பாடல்மூலம் தங்களோடு மற்றவர்களையும்
மகிழ்விக்கிறார்கள். ஒத்திகை தொடங்கி உள்ளது.
முக்கிய விருந்தினர்கள் முதல்வர் chavaan ,உள்துறை அமைச்சர்
R .R .Patil
இந்த நிகழ்ச்சி ஒரு திருப்பு முனையாககூட அமையலாம்.மனித நேயங்களை வாழ்த்துவோம்.
மும்பை வெங்கடராமன்.
No comments:
Post a Comment