Saturday, August 31, 2013

தன்னம்பிக்கை



நம்பிக்கையில் விட்டுப்போனது சில. பார்ப்போம்.குருட்டு நம்பிக்கை. இது பிறர் சொல் கேட்டு மயங்கி நம்புவது..."..அந்த ஜோஷ்யரைப் போய் பாருங்கள் அப்படியே புட்டு புட்டு வைக்கிறார். சொன்னது சொன்னபடியே நடக்கிறது." ஓடுகிறோம்.பித்தளையை தங்கமாக மாற்றி தருவதை நம்புகிறோம்.முடிவு தங்கம் பித்தளையாகி கைக்கு வருகிறது. 

மட்டொன்று அசட்டு நம்பிக்கை.இதனால் இழப்பு அதிகம் இல்லை என்றாலும் அடைந்த ஏமாற்றம் வாழ் நாள் முழுவதும் நம்மை வாட்டும்.

இதற்கெல்லாம் காரணம் சுயநலம்.பேராசை.அறிவு பூர்வமாக சிந்திக்காமல் ,உணர்வு பூர்வமாக சிந்தித்து ,முடிவினால் பலியாவதுதான்.

ஞானிகளும்,விஞ்ஞானிகளும் நமக்கு உரைப்பது இதுதான்.குறலும்"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"என்று அறிவுறுத்துகிறது.

எல்லா நம்பிக்கைகளிலும் தலை சிறந்தது  தனம்பிக்கை தான்.அறிவு பூர்வமாகவும் ,அனுபவபூர்வ மாகவும்,நாம் உணர்ந்ததுதான்.மனோ தத்துவ நிபுணர்கள் இதைத்தான் வலியுறுத்துகிறார்கள்..அதனால் வெகு உயர்ந்த நிலைக்கு வந்துள்ள மனிதர்கள் நம் கண் முன்னே காணலாம்.உதாரணமாக சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களின் உரிமை யாளர்கள் இந்த நிலைமைக்கு வந்தது  தன்னம்பிக்கையினால் தான்.

சில நாட்களுக்கு முன்னால் வந்த செய்தியில் ஆட்டோ ஓட்டுனரின் பெண் CA தேர்வில் முதல் நிலைக்கு வந்தது நாம் அறிந்ததே.

இப்பொழுது மற்றுமொரு மகிழ்ச்சி யூட்டும்  இதமான செய்தி.லக்நௌ வ்க்கு அருகே ஒற்றையடி பாதையில் அமைந்துள்ள கிராமத்தின் தினக்கூலி தொழிலாளியின் 13 வயது மகள் சுஷ்மா வர்மா படிப்பது  MSC ( MICROBIALOGY ) பள்ளி வகுப்பு முடித்தது 7ம் வயதில்.டாக்டருக்கு படிக்க ஆசை . ஆனால் வயது குறைவு..சேரமுடியாது..அதுவரை PHD செய்ய முடிவு. அவளுடைய பெயர் LIMCA BOOK OF RECORDS ல் இடம் பெற்றுள்ளது.அவள் குழந்தை தனமாகவே பேசுவதாக பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.

அவளுக்கு பேருதவி செய்தது அவள் அண்ணன் தான்..அவனும் பள்ளிப்படிப்பை 9 வயதிலும், BCA வை 14 வயதிலும்.முடித்தான். பணமின்மை காரணமாக தொடரமுடியாமல் ஆறு ஆண்டு கழிந்து .வேலை கிடைத்தபின் தற்போதைய 20 வது வயதில் MCA செய்கிறான்.
சுஷ்மாவுக்கு மொபைல்,லேப்டாப்,இண்டர்நேர்ட் போன்ற வசதிகள் ஏதும் கிடையாது .CYPER  CAFE மூலம் தான் எல்லாம்.

தந்தை சொல்ப நிலத்தையும் விற்று ,25000ரூபாய் கல்லூரிக்கு கட்டி உள்ளார்.அடுத்த கட்டணம் தொங்கலில் உள்ளது..முதல் அமைச்சருக்கு விண்ணப்பித்துள்ளார். நல்ல உள்ளங்களின்  உதவி கிடைக்க பிரார்த்திப்போம்.

சுஷ் மா பல ஆசைகளை மனதில் கொண்டாலும் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறுகிறார்.கடவுள் தனக்கு கல்வி அறிவை அளித்தததற்கு நன்றி யுடன் உள்ளார்.

reference  Deepak Gidwani @dgidwani 123.       published in  dna news paper Mumbai City Edition.

எழுவதன் நோக்கம் தன்னம்பிக்கையையும்,உழைப்பையும் வலியுறுத்தத்தான்.

மாறுபட்ட மற்றொரு செய்தி..   கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தில் உறி யடி விளையாட்டு நமக்கு தெரியும்.கொண்டாட்டத்திற்கும்,விளையாட்டிற்கும் மகிழ்ச்சிக்கும் வேண்டி நடை பெற்ற நிகழ்ச்சி , கிரிக்கட்டைப்போல் போட்டி பொறாமை முற்றி அரசியல் தலைவர்கள் ஈடுபாட்டுடன் இன்று பூதாகர வடிவெடுத்துள்ளது.கோவிந்தா என்று அழைக்கப்படும் வீ ரர்கள் பிரமிட் போல் வடிவமைத்து ஒருவர் தோளில் ஏறி கடைசியில் ஒற்றை சிறுவன் பானையை உடைத்து பரிசுப்பொருட்களை தன குழு சார்பில் எடுப்பான் . பணம் எல்லோருக்கும் பங்கு     போடப்படும். நம்புங்கள் இந்த ஆண்டு ஓரிடத்தில் மட்டும்  1.15 கோடி ரூபாய்.மற்றும் 1 கோடி,50லட்சம்,25லட்சம் என்று பலவாறு  பரிசுகள்  அளிக்கப்பட்டுள்ளது..மகாராஷ்டிரா பூராவும் எவ்வளவு என்று ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

கோவிந்தா க்களில்    கிழவர் முதல் பள்ளி சிறுவன் வரை அடக்கம் .மாதக்கணக்கில் பயிற்சி.வேடிக்கை என்ன வென்றால் ஸ்பெயின்  நாட்டிலிருந்து பல வீரர்கள் இவர்களிடம் பயிற்சி எடுத்து கூட்டாக கலந்து கொண்டிருக்கிறார்கள். முன்பு, இவர்கள் கால் நடையாகவே தாரை ,தப்பட்டை முழக்கங்களுடன் நடந்து வந்து விளையாட்டை தொடங்கினார்கள்.இப்போது நிலைமையே வேறு. தலைவர்கள் A C  காரிலும், தொண்டர்கள் பெரிய பேருந்துகளிலும் வருவார்கள்.கூட மருத்துவ உதவியுடன் காரும் உண்டு. சீருடை, banner உண்டு. காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை ஒரே கூச்சல் தான்.விபத்துக்கள் உண்டு.இன்சூரன்ஸ் கம்பனிகள் உட்புக திட்டமிட்டு வருகின்றனஇந்த ஆண்டு மகாராஷ்டிரா அரசு பொது விடுமுறை அறிவித்தது.

சென்ற வாரம் நிகழ்சிகளில் இருவர் மரணம்.600 பேருக்கு மேல் காயம் .முதுகு எலும்பு உடைந்து ஊனமுற்றோர் பலர். யாரும் சிந்திப்பதாக தெரியவில்லை.இதற்கு உவமையாக நம் ஊர் மஞ்சி விரட்டைத்தான் கூறமுடியும்.   காலம் தான்  நிலைமையை மாற்றி நல வழிப்படுத்தவேண்டும்.

மும்பை வெங்கடராமன் .            


No comments:

Post a Comment