Saturday, August 31, 2013

தோசா - தொடக்கமும், வளர்ச்சியும்




மும்பை ராஜராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திர்  பற்றி நான் சொல்லத் தேவையில்லை. குரு கல்யாண சுந்தரம் அவர்களை சந்திக்க ஜூலை 28-ம் தேதி மாதுங்காவில் இருக்கும் அவரது நாட்டியப்பள்ளிக்கு சென்றேன். அப்போது அங்கு  அவரது புதல்வர் ஹரிகிருஷ்ணா அவர்கள்  வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.  சொல்லப்போனால் ரொம்பவே busy -ஆக இருந்தார். ஆகஸ்டு 9- ம் தேதி நடக்க இருக்கும் ஒரு முக்கிய நடன நிகழ்ச்சிக்கு தனது  சிஷ்யைகளை தயார் செய்து கொண்டிருந்தார். இருப்பினும் என்னைப்  பார்த்ததுமே   " மூ ர்த்தி சார்தானே, வாஙக, உட்காருங்க " என்று நாற்காலியை தயார்  செய்தார்.

"அடுத்த மருதா நாட்டியஞ்சலிக்கு நானும் வருவதாக முடிவு செய்து விட்டேன்." என்று முடித்தார்.

 " இப்பதான் உங்களை முதல் முறையாக பார்க்கிறேன். எப்படி--?" நான் முடிப்பதற்குள் அவரே சொன்னார்," அப்பா நாட்டியாஞ்சலி போட்டோக்கள் கொண்டு வந்தாரு .தோசா என்ற alumni association பற்றியும் சொன்னாரு. ரொம்ப பெருமைப்பட்டாரு ." என்றார்                                                    
தோசாவுக்கு அங்கீகாரம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது !

 அடுத்த சம்பவம் - ஆகஸ்டு  17-ம் தேதி காலை நான் திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தேன் . மேல் மருவத்தூரைக் கடந்து சிலாவட்டம் என்ற ஊரில் இருந்த ONLY COFFEE -யில் காபி அருந்தப் போனோம். அங்கே நம்ம ஊர் சர்மாஜியைப் பார்த்தேன். அவர் அந்தக் கடை முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் வணக்கம் தெரிவித்த சர்மாஜி, கடை முதலாளியைப் பார்த்து ," இவரை தெரியுமா?" என வினவ, அவர் உடனேயே , " நன்றாகத் தெரியுமே, தோசா வின் தலைவர்தானே, திருவிடைமருதூர் கோயிலில் நாட்டியாஞ்சலி organise செய்பவர் தானே?" என்று சொன்னார். ஒரே ஒரு முறை அவரை TDR  ONLY COFFEE -யில் சந்தித்து நாட்டியாஞ்சலி அழைப்பிதழை தந்து அவரை வரும்படி அழைத்திருந்தேன்.  தோசா என்ற அமைப்பும், நாட்டியாஞ்சலி என்ற நிகழ்வும் அவர் மனத்தில்  பதிந்து விட்டதை உணர்ந்தேன். அவரது அங்கீகாரம் மூர்த்தி  ஏன்ற தனி மனிதனுக்கு கிடைத்ததில்லை. அது தோசா என்ற ஒரு அமைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான். எங்கோ ஒரு coffee ஷாப் முதலாளி யின் கவனம் தோசா பக்கம் திரும்பியிருக்கிறது. நான் சந்தோஷப்பட்டேன். சரியான பாதையில் நாம் செல்கிறோம் என்ற உணர்வே மகிழ்ச்சி அளித்தது.


தோசா இதுவரை நம்ம  ஊர் முன்னாள் மாணவர்களின் ஒரு சங்கமாக இருந்திருக்கிறது. ஆறு சங்கமங்கள் கொண்டாடிவிட்டோம். ஒரு  குழந்தை பிறந்து வளர்வது பொன்று தோசாவும் Physical growth என்ற அளவில் நிச்சயமாக வளர்ச்சி கண்டிருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. இப்போது தோசாவுக்கு ஒரு நல்ல முகவரி கிடைத்து விட்டது என்பதும் உண்மைதான்.

இத்தகைய தருணத்தைதான் நாம் எல்லோரும் எதிர்பார்த்துக் கொஂண்டிருந்தொம். கிடைத்தற்கரிய ஒரு அருமையான  ஆரம்பம்   தோசாவுக்கு கிடைத்து விட்டது என்று நாம் எல்லாரும் பெருமைப்படலாம். We can be proud of the great beginning TOSA  has had so  far. ஆனால் ஒரு நல்ல ஆரம்பத்துடன் நல்ல விஷயங்கள் முற்றுப்பெறுவதில்லை. ஆரோக்கியமான வளர்ச்சி என்பது மிக மிக முக்கியம். விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சில பேர் TOSA -வுக்கு  நல்ல தொடக்கத்தை அளிதது விட்டார்கள். விஜி, ராம்ஜி, , ராஜி,  ரகுபதி, இன்டிவிஜூவல், பாலகௌரி, ராதா, cupboard ஸ்ரீதர், RBI ஸ்ரீதர், மருதவாணன் சார், மோகன், அப்பு அண்ணா, கொரட்டூர் மாலி, மீண்டும் முத்து குமார், Jayes   போன்றவர்கள் அளித்து வரும் பங்கு ரொம்ப முக்கியமானது. கொஞ்சம் லேட்டாக வந்த ராமு, TSV முதலியோரின் support  தெம்பு அளித்தது. 

திருக்கயிலாய பரம்பரை,  திருவாவடுதுறை ஆதீனம் 23 -வது மற்றும் தற்போதைய 24-வது குரு மகா சன்னிதானங்களின் பரிபூரண அருளாசிகள் தோசா வுக்கு கிடைத்தமை நாமெல்லாம் செய்த பெரும் பாக்கியமே! நமது பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்களின் ஒத்துழைப்பு பெருமளவில் தோசாவுக்கு கிடைத்திருக்கிறது. 


தோசாவின் உறுபினர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த அமைப்பு எப்படியெல்லாம் செயல் பட முடியும் என்பதில் பல எண்ண அலைகள் தோன்றலாம். இதை TDR  TIMES  மூலம் அனைவரும் பகிர்ந்து கொள்ளலாம். தோசா உறுப்பினர்கள் எல்லாருமே பல்வேறு அலுவல்களில் இருப்பவர்கள்தான். பணி ஒய்வு பெற்றவர்கள் கூட busy -ஆகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அனைவரும் தோசாவின் வளர்ச்சியில் பெருமளவில் நாட்டம் கொண்டவர்கள்தான். நம் பயணமே ஒரு புனிதப் பயணம்தான். இந்தப் பயணத்தில் எல்லாருமே முழு மூச்சுடன் பங்கு பெற அழைப்பு விடுகிறேன். புதிய உறுப்பினர் சேர்க்கையிலும், வாராவாரம் TDR TIMES மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்வதின் மூலமும் நாம் அதி வேக முன்னேற்றம் காண முடியும். 

சென்ற Annual General Meeting -ல் Dr . Vijaykumar அவர்கள் ஒரு அருமையான  idea சொன்னார். தோசா அமைப்பு நமது பள்ளிக்கும்,  ஊருக்கும் மற்றும் கோவிலுக்கும் ஆக்க பூர்வமான பணிகள் செய்ய தோற்றுவிக்கப்பட்டது. இந்த மூன்று பணிகளுக்கும் தனித்தனியான நிர்வாக கமிட்டிகள் ஏற்படுத்தலாமே என்ற யோசனைதான் அது. சில நடைமுறை சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது. இப்படி தனி கமிட்டிகள் ஏற்பட்டால், அதில் பங்கு  பெறாதவர்கள் ஏனோ தானோ என்று இருந்து விடக் கூடாது என்பதால்தான் நடைமுறை சிக்கல் என்று சொன்னோம்.

இதையே வேறு மாதிரி யோசிக்கலாம். தோசாவில் தலைவர், செயலாளர் என்பதெல்லாம் பதவிகள் கிடையாது. இவையெல்லாம் பொறுப்புகள்தான்.  என்னால் தோசாவுக்காக கொஞ்சம் நேரம் அளிக்க முடியும் என்பவர்களிடம் சில பொறுப்புகள் அளிக்க முடியும். இந்த பதவி வகிப்பவர்கள் எல்லாம் தோசாவில் முதல்வரோ, இரண்டாமவரோ கிடையாது. இவர்கள் சம பங்கு வகிக்கும் உறுப்பினர்களிடையே முதல்வரும், இரண்டாமவரும் ஆகும். They  are only first  and  second among  equals. தோசாவின் உறுப்பினர்கள் பட்டியலை பார்க்கும் போது ரொம்பவும் பெருமையாக இருக்கிறது. 

நமது விஜிக்கு அவர் நிறுவனம் நார்வேக்கும், இந்தியாவுக்கும் season டிக்கெட் கொடுத்துள்ளது. இவரை  NDTV செய்தி channel -ல் Burkha  Dutt பேட்டி காண்கிறார். இது சாதாரண விஷயமே அல்ல. ஒரு சில achievers -க்கு மட்டுமே நடக்கக் கூடியது. 

இண்டிவிஜூவல் சுப்ரமணியன் இன்னும் ஒரு வருடம் பதவியில் நீடித்திருந்தால் ஒரு சர்க்கார் வங்கியின் தலைவராகவே ஆகியிருப்பார். அத்தனை பெரிய பதவி வகித்தவர். 

RBI ஸ்ரீதர் Reserve Bank of India -வின Governor -க்கு முதன்மை செயலராக பதவி வகித்தவர்.

தற்போதைய General Secretary பாலகௌரி ஒரு  MNC  நிறுவனத்தில் பெரிய  பதவி வகிப்பவர்.
.
Jayes டிவிஎஸ் குரூப்பில் சீனியர் பதவி யில் இருப்பவர்.

cupboard ஸ்ரீதர் சேஷசாய் குரூப்பில் சீனியர் பதவியில் இருப்பவர்.

இன்னும் பலர் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்த வரை சொல்லி யிருக்கிறேன். எதற்காக சொல்ல வந்தேன் எனில், பெரிய பதவி வகிப்பவர்கள் பலர் தோசாவுக்காக நேரம் ஒதுக்கினார்கள்; ஒதுக்கிகொண்டும் இருக்கிறார்கள். 

சங்கமத்தில் மட்டும் சந்தித்தோம் என்று இல்லாமல், வருடம் முழுவதும் தொடர்பில் எல்லாருமே இருந்தால்தான் தோசாவால் அடுத்த level -க்கு போக முடியும்.

 TDR TIMES ஒரு பயனுள்ள கருவி. இதன் மூலம் வாராவாரம் அளவளாவ  முடியும். ஆனால் நம் விரும்புவது அதிக பட்ச மெம்பர்கள் பங்கு பெற வேண்டும் என்பதே. தோசா ஒரு democratic unit  எல்லோருக்கும் தத்தம் எண்ணங்களை கூறும் உரிமை உண்டு. எண்ணங்களையும், செயல்பாடுகள் பற்றிய  உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்து, அளவளாவ  TDR TIMES இருக்கிறது. எல்லார் குரலையும் கேட்போம் என்று எதிர்பார்க்கலாமா?
                                                                                                                      " I would now go back to the beginning…….we have to do something to the Society. Yes….old activities and things of past have to be .revived ------"இரண்டு வார ங்களுக்கு முன்னர் TDR TIMES -ல் இன்டிவிஜுவல்அவர்கள் எழுதிய எழுச்சி தரும் கட்டுரையின் ஒரு வாக்கியமே நான் குறிப்பிட் டுள்ளேன்.  இந்த கட்டுரையில்தோசாவின்  அடுத்த  level பற்றித் த்தான் அவர்  பேசுகிறார்.

நமது மண்ணில் நாம் கழித்த இளமைப்பருவத்தை சற்றே rewi nd  செய்து பார்க்கலாம்.

தைப்பூசம் என்றாலே நம்ம ஊர் திருவிழாக்கோலம் பூண்டுவிடும். ஒவ்வொரு வீட்டிலும் பத்து விருந்தினர்களாவது வந்துடுவார்கள். வீர சோழனும் , காவேரியும் அமர்க்களப்படும். வெள்ளி ரதத்தின் போது ராஜரத்தி னம் பிள்ளையும், வீருசாமி பிள்ளையும் , கக்காயி  நடராஜ பிள்ளையும்  தங்கள்  நாதஸ்வர இசையில் ஆயிரக் கணக்கான மக்களை மயங்கச் செய்வார்கள். வாண வேடிக்கைகள் ஊரையே வண்ணமய மான ஒளிக்கல வைகளில் ஒளிரச் செய்யும். 

மதுரை மணி அய்யர், செம்மங்குடி, GNB  என சங்கீத கலைஞர்கள் அவ்வப்போது மகாதான தெரு சத்திரத்தில் பாடு வார்கள். இசையறிவு மிக்க நம்ம ஊர் மக்கள் பரம  ரசிகர்கள். 

பஜனை மடத்தில் அனந்த ராம தீக்ஷதர்,  எம்பார், பால கிருஷ்ண சாஸ்த்ரிகள் என பிரசித்தி பெற்ற விற்பன்னர்கள் ராமயணம், பாரதம், பாகவதம் என்று கதா காலஷேபம் செய்வார்கள். திருவிசைநல்லூர் ராமசாமி ஐயர் மற்றும் சந்தானம் -சந்துரு அவர்களின் விகடக்கச்சேரிகள்  ஆயிரக் கணக்கான மக்களை சிரிப்பொலியில் ஆழ்த்திவிடுவதை பார்த்திருக்கிறோம்.

 மார்கழி மாதம் வந்தாலே கொண்டாட்டம்தான். பெரிய கோவிலில் தொடங்கி , பெருமாள் கோவில் சென்று பின்னர் மகாதன தெரு வழியாக வீரசோழன் பிள்ளையார் கோயிலை அடையும் தினசரி பஜனை. மணி சாஸ்திரிகள் , ராதா ஆகியோர் நாமாவளி சொல்ல ஒரு பெரிய கூட்டமே அதை எதிரொலிக்க  - களை கட்டும் மார்கழி காலை நேரங்களை மறக்கமுடியாது. விஸ்வநாத சுவாமி கோயிலில் " ஜெய் ஜெய் சீதாராம்" நாமாவளி மணி சாஸ்த்ரிகளின் கணீர் குரலில் விண்ணைப் பிளக்கும்.  பிள்ளையார்  கோவிலில் சுடச்சுட பொங்கல் பிரசாதம்- பன்னீர் இலைகளை ஆற்றிலே மிதக்க விட்டு கை கழுவி வீடு திரும்புவோம். இந்தப் பிள்ளையார் கோவிலுக்கு இத்தனை nostalgia ! இந்தக் கோவிலைப் பற்றித்தான் இன்டிவிஜுவல் எழுதியிருந்தார்.

தோசாவுக்கு அடுத்த  ப்ராஜெக்ட் கிடைத்து விட்டது.

தோசாவை  வழி நடத்திச்செல்ல எல்லா உறுப்பினர்களும் உற்சாகத்துடன்  பங்கு பெற வேண்டும் என்பதே என் அவா. காலம்  பதில் சொல்லட்டும்.

இனியும் இப்படி  ஊர் கூடி தேர் இழுத்தால் தோசாவின் பயணம் சரித்திரப் பக்கங்களில் இடம் பெற தடையென்ன இருக்கிறது?



Murthy



No comments:

Post a Comment