Sunday, October 16, 2011

என் மாமனாரைப் பற்றி.....சில நினைவுகள்..... -By Meera Subramaniam

என் மாமனாரைப்  பற்றி.....சில நினைவுகள்..... 

போன வார TDR Times ல் பத்மா மணியன் அவர்கள்,....அவர்கள் மாமனாரை பற்றி நன்றியுடன் நினைத்து பார்த்தது,...உள்ளத்தை தொட்டது. நானும் ஏன்,..நம் மாமனாரை பற்றி எழுதலாமே என்று தோணியது. ராம்ஜியிடம் கேட்டேன்...
எழுதுங்கோ என்றார். சரி என்று ஆரம்பிக்கேறேன்.
 
என் பெயர் மீரா சுப்ரமணியன். என் அப்பாவிற்கு பூர்விகம்
வேப்பத்தூர். நான் பிறந்து வளர்ந்தது திருவண்ணாமலையில். ஆறாவது முதல் படித்தது hostel ல்.  Dr. Rathinavel Subramanian Mutthialpet Girl's High School il.  25 வருடம் கழித்து சென்னையில் 
இருக்கும் என் பள்ளிக்கு சென்று, அந்த மண்ணை மிதித்து, class room ஐ பார்த்ததும் ஏற்பட்ட உணர்வை எழுத வார்த்தைகள் இல்லை. வருடா வருடம், கோடை விடுமுறையில், சென்னை   வரும்போது TDR க்கு மறக்காமல் எங்களை அழைத்து செல்லும், என் கணவர்,... ஊரையும், பள்ளியையும், கோயிலையும், காவிரியையும் பார்த்ததும் அடையும் மகிழ்ச்சியும், நிறைவும், நன்றி உணர்வும்.....ஏன்...எப்படி  என்பதை,...ஒவ்வொரு Sunday TDR Times படிப்பதின் மூலமாகவும், சங்கமம் attend செய்வதாலும் தான் உணர ஆரம்பித்தேன்.  திருமணம் ஆனதும்,..அவருக்காக TDR சென்ற நான், வருஷங்கள் போகப்போக,...
ஏதோ ஒரு சக்தியால் ஈர்க்கப்பட்டு......அடிக்கடி  
செல்வதும்  ...அங்கேயே வீடு கட்டிக்கொண்டு settle ஆக முடிவு செய்ததும்....பகவானின் அருளால் தான். 
 
எங்கள் வீட்டு function எல்லாத்துலயும் ஒரே TDR புராணம் தான். நான், மாலி அண்ணாவின் மனைவி, சுந்தரி அக்காவின் ஆத்துக்கர்ரர்,...இவர்களைத் தவிர   தவிர எங்கள் வீட்டில் எல்லோருமே TDR,.... சாஸ்த்ரிகள் உட்பட. சும்மா....200  வீடுகளையும்
அலசுவார்கள். எல்லா வாத்தியார்களையும் பற்றி ஒரு பட்டி மன்றமே நடக்கும். அப்போது,  என்  மாமனாரின்     ஞாபக சக்தி என்னை வியக்க வைக்கும். மங்கையர் மலரில் என் மாமனாரைப்   பற்றி எழுத வேண்டும் என்று பல காலமாக நினைச்சுண்டிருந்தேன். இப்போது பத்மா மணியன் அவர்கள் என்னை TDR Times ல் எழுத வைத்து விட்டார்கள். 
 
கேதார  ராமஸ்வாமி சிவனின் (கர்ணம்), 
மூத்த மகன்,..என் மாமனார் மஹாதேவ ஐயர். தெற்கு வீதி Elementary School Headmaster. வீட்டிற்கு  
பெரியவர்,.... ஆதலால்,...எல்லோருமே அண்ணா என்று தான் கூப்பிடுவா.  
 
1979, February மாதம், இரண்டாம் நாள்,. இந்தக்குடும்பத்தில் நான் ஐக்கியமான நாள்.   எங்கள் பிறந்த வீட்டில்,...... பாட்டி....., பூஜை,..... புனஸ்காரம்......, என் தந்தை ...தேவி உபாசகர்,.  மடி,. ஆசாரம்....இவைகள் காரணமாக 
சமையல் என்ற வார்த்தைக்கு spelling தெரியாமலே புகுந்த வீட்டிற்கு வந்து விட்டேன்
(அதாவது சமையல் அறை,..பக்கமே போக முடியாது....மடி....மடி.....மடி....). 
புகுந்த வீட்டிலும்,... இவர் அம்மா சின்ன வயதிலேயே காலமாகி 
விட்டார்கள் (29/12/1972).  Office  வேறு போய்க்  கொண்டிருந்தேன். என் மாமனார்...முதல் நாளிலேயே புரிந்து கொண்டு விட்டார். ஒரு நாள் கூட என்னை குறை சொல்லாது, ஒரு அம்மாவைப் போல சமையல் எல்லாம், one by one, சொல்லிக்கொடுத்து,... ஸ்லோகம்  எல்லாம் சொல்லிக் கொடுத்து , பண்டிகை முறைகளை   எல்லாம் சொல்லிக் கொடுத்து  என்னை ஒரு குடும்பத் தலைவியாக மாற்றியது என் மாமனார் தான். உங்களுக்கு மட்டும் அல்ல. எனக்கும் தான் அவர் Headmaster. 
 
என் அப்பா,...மிகவும் கண்டிப்பு....கிட்ட போகவே பயம்....ஆனால் என் மாமனாருடன்....சரி சமமாக உட்கார்ந்து....எங்கள்
வீட்டில் எல்லோருமே பேசுவோம்.   வீட்டில் எல்லோரும்,...எல்லா பேரக் குழந்தைகளும் இருக்கும் போது, ஒரே கும்மாளம் தான். எல்லா குழந்தைகளுக்கும்,...தாத்தாவின் மேல்....ஒரு அலாதி பிரியம்....பக்தி....                
 
என் மன்னியும் (மாலி அண்ணாவின் மனைவி), நானும், சதாசிவம் மனைவி ராஜியும்,....அவருக்கு இன்னொரு மூன்று பெண்கள் மாதிரி. எங்கள் வீட்டில் எல்லா பண்டிகைகளும்,.....joint ஆகத்தான்.... குறைந்தது 20 பேர் இருப்போம்.  ௦  ஒரு   கூட்டுக்    குடும்பத்தின் தத்துவத்தை, மகத்துவத்தை எங்கள் எல்லோருக்கும் புரிய வைத்தவர் அவர் தான்.
 
இவர்,.... இன்றும் மாலி அண்ணாவை,..ஆளாக்கி விட்ட அண்ணன் என்று தான் கூப்பிடுவார். பெரிய அக்கா சுந்தரியை,..தியாக  தீபம் என்று தான் அழைப்பார்.  அந்த அளவுக்கு,.. குடும்ப பாசத்துடன் எங்கள் எல்லோரையும் வளர்த்தார்,...என் மாமனார்.   
 
எல்லோரையும் ஒரே தராசில் வைத்து,...ஒரே மதிப்பு,...மரியாதை...எல்லா பேரன்களிடமும் ஒரே அன்பு, ஒரே ஒரு செல்லப் பேத்தி, மோகனின் பெண் சங்கீதா....அவர்கள் எல்லோருக்கும், சிறு வயதிலேயே, சாப்பாட்டுடன்.......ஒரு  value  ஐ ஊட்டி விட்டவர்..... எந்தக் காரியம் செய்தாலும்.....ஒரு planning,...precision,...அதை முடித்தல்....அவருக்கு நிகர் அவரே தான்.  நவராத்திரி கொலுவின் போதும் சரி,...இவர் transfer  ன் போது,...சாமான்  shifting போதும் சரி,.....இந்தப் போது......போது.....போது விற்கு ஒரு முடிவே கிடையாது......கொஞ்சம் கூட Time waste  பண்ணவே மாட்டார். ஏதாவது செய்து கொண்டே இருப்பார்...
இல்லை,. படித்துக்கொண்டே இருப்பார். தினமும் இரண்டு வேளையும்,...விஷ்ணு Sahasranamam, இன்னும் பல ஸ்லோகங்கள்,...தவறாமல் படிப்பார். நியூஸ் பேப்பரில் இருக்கும் செய்திகளை மார்க் செய்து எனக்கு, இவருக்கு, குழந்தைகளுக்கு என்று வேறு படுத்தி கொடுப்பார். 
சங்கீதாவின் ஸ்போர்ட்ஸ் செய்திகள் / வெற்றிகள் பேப்பரில் வரும் பொது அவர் அடையும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. வீட்டில் யார் என்ன செய்தாலும் அதை குறை சொல்லாது appreciate செய்வார்....encourage பண்ணுவார். மொத்தத்தில்,...ஒரு நல்ல leader. மற்றவர்கள் விருப்பத்திக்கேற்ப  தன்னை மாற்றிக்  கொள்வார்.  அவருக்கு 60 வயது இருக்கும் போதே, என் மாமியார் இறந்து  விட்டார்களாம்.  இன்னும் சில கவலைகளும் அவருக்கு உண்டு. ஆனால், ஒன்று கூட அவர் முகத்தில் தெரியாது. வெளியில் காட்டிக்கொண்டதும்  கிடையாது. சொல்லிப் புலம்புவதும் கிடையாது. ஒரு ஞாநி போல் வாழ்ந்தார். 
 
ஒரு நாள் கூட, ஒரு தடவை கூட  Bore  அடிக்கிறது என்று சொன்னதே கிடையாது.    அவர் hand-writing.....print செய்தது போல் இருக்கும்.  இவர் ஆபீஸ் மாற்றங்களால், கிட்டத் தட்ட எட்டு வருஷங்கள் குழந்தைகளின் படிப்பை முன்னிட்டு, தனியாக இருந்தார். வீட்டை நிர்வாகம் செய்தது எல்லாம் என் மாமனார் தான். எங்கள் மாலி அண்ணா தான். எங்கள் வீட்டில்,..என் மாமனரை கேட்காமல் எதுவுமே நடந்ததில்லை.  
 
எந்த சந்தர்ப்பத்திலையும், தன் குழந்தைகளை விட்டுக் கொடுக்காத அவர் பாங்கு,  94  வயது வரை, ச்ரத்தையுடன் அவர் செய்த பித்ரு காரியங்கள், அதுவும் அவரது எல்லா சகோதரர்களுடன் சேர்ந்து, ஓய்வில்லாத உழைப்பு...... எல்லாமே எனக்கு ஒரு பாடமாய் அமைந்தது. விருந்தினர்களை அவர் உபசரிக்கும் பண்பை சொல்லி மாளாது. எல்லோருக்கும் தனி மரியாதை. போகும் பொது வெற்றிலை சீவல், அதில் காசு....ஒன்றும் குறைக்க மாட்டார். 
TDR  ல் இருந்து வரும் பிற  ஸமூஹத்தவரும், எங்கள் வீட்டில் தங்குவார்கள்.  எல்லோருக்கும் ஒரே மாதிரியான உபசரிப்பு. வீட்டு டிரைவர்,  எங்கள் வீட்டிலேயே ஒரு ஆள் மாதிரி தான் இருந்தார்.  மொத்தத்தில் மனித நேயத்தை எங்களுக்கு 
சொல்லிக் கொடுத்த மகான் அவர்.  
 
அவரிடம் இருந்த இன்னொரு great quality.....constant guidance, when we are in need. மன்னிக்கும் மனப்பான்மை,...
யாரையும்....எப்பவும் தப்பா நினைச்சுக்கக்  கூடாது என்பார். 
ஏன் என்றால்,...நாம,... அவா நிலைமையில் இருந்திருந்தால்,....எப்படி நடந்திருப்போம் என்று தெரியாது,....மேல ஆக 
வேண்டியதைப் பாரு.... ஈஸ்வரோ ரக்ஷது என்று சொல்லி விடுவார்.   
 
இப்படி வாழ்க்கைக்கு தேவையான, மிக அற்புதமான விஷயங்களை சொல்லாமல் சொல்லிக்கொடுத்த என் மாமனார் எனக்கு,...எங்களுக்கு....தந்தையாய், தாயாய், தோழனாய், மந்திரியாய், நல் ஆசிரியனாய் வாழ்ந்து, இன்னமும் எங்களுடன் இருப்பதாக இன்றும் உணர்கிறேன்.  
 
பத்மா மணியன் அவர்களுக்கு நன்றி.            
                     
 I used to tell all my friends and relatives on every opportunity.
" I am blessed to be a part of this Great Sivan family,......to have such wonderful in- laws "
A statement of truth from the bottom of my heart.
Thank you very much  Appa for anything and everything.                                                                
மீரா சுப்ரமணியன்
லக்னோ
0 800 44 70 676

~~~~~~~~~~~~~~~~~~~~~~



No comments:

Post a Comment