Sunday, October 16, 2011

Anbudan Aparna

நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் அனைவருடனும் உரையாடும் வாய்ப்பு இன்று வந்தது.உள்ளமெல்லாம்  ரணமானது ...கண்ணெல்லாம் குளமாச்சு 

அன்புடன் அபர்ணாவின் வணக்கம் 


என் அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்வு , பகிர்ந்து கொள்ளகிறேன் உம்முடன் 

அலுவலக நேரத்திலே 
அத்துனை பேர் மத்தியிலே
அமிலத்தில் தோய்த்தெடுத்த
அம்பெடுத்து வீசயிலே
அனலில் இட்ட புழுவாய்
அபலை நான் துடிக்கையிலே ....

நடந்தது இது தான்.....

சரியான விதத்தினிலே
சரியான ஒரு வேலையை
சரியாக சொல்லாமல்
சதிகாரி -என் அதிகாரி சென்றுவிட
சரி சரி என தலை ஆட்டிய நான் - அதை
சராசரியாய் செய்திடவே
சரமாரியாய் வசை மொழியை
மாறி மாறி அவள் பொழிய -என் மனம்
வேரின்றி வீழ்ந்த மரமானது -அதில்

கன்னங்கள் உப்பளமாச்சு
நெஞ்செல்லாம் சுமையாச்சு..
மூடும் கண்ணீரும்
முட்டி முட்டி தெரிசாச்சு -அதில்
மனது மட்டும் தரிசாச்சு

தன்னந்தனியாக மனம்
பாவமே தவிக்கயிலே
தாலாட்ட தாயுமில்லே
தொட்டனைத்து ஆற்றுவிக்க
கட்டியவனும் உடனில்ல
என்ன சொல்ல என்ன சொல்ல
எந்த சொல்லால் எழுதினானோ
என் தலைஎழுத்த
எத வச்சு நான் அழிக்க
அதை ஜெயிக்க ...

புண்பட்ட மனம் கெட்டு போச்சு
பாவி சனம் எனை விட்டு விட்டு போச்சு -என்
காவிய நாயகன் ஆவியாய் போன பின்பும்
பாவி மக வாழ்வினில்
கூடி அழ நாதியில்ல ....
பழக்கமில்லா தோசமம்மா புளுக முடியலே
பஞ்சாயத்த கூட்டி வச்சு அழுக முடியலே
கலங்கி நின்னா கஞ்சி தண்ணி
காச்சி ஊத்த நாதியில்ல

நிழலும் கூட சுட்ட போது
நின்னு பாக்க முடியுமா
வழியே தொலஞ்சு நின்னபோது
திரும்பி போக முடியுமா
காதினிக்க பேச்சு கேட்டுக்
காலம் ரொம்ப ஆச்சுது
கனவிலும் சிரிப்பு சத்தம்
காதில் கேக்காம போச்சுது
நெஞ்சம் மட்டும் மகிழ்ச்சியை
தொலைச்சு போட்டு தவிச்சிது
என்ன செய்ய ?????

உதட்டுக்கு மட்டும் இன்றி
மனதுக்கும் சாயமிட்ட மனிதர்கள் மத்தியிலே
ஆடையில்லா ஊரில்
உடை அணிந்த பைத்தியமாய் நான்..........
 






அன்புடன் அபர்ணா

No comments:

Post a Comment