மீண்டும் முத்துகுமார் கல்யாணி ராகத்தை எழுத்து வடிவில் வடித்துள்ளார்.ஒளி ..........ஒலி
வடிவத்தில் அனுபவித்ததை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள அல்ப ஆசை.நமது ஆசைகளை இறைவேற்றிக்கொள்ள TDR
TIMES ஐத்தவிர வேறு வழி எது?
அன்பர் மீண்டும் முத்துகுமார் ஒப்புக்கொள்ளுவார் என நம்பிக்கையுடன்
அளிக்கிறேன்.
முதலில் சாருலதா மணியின் விளக்கத்தை கொஞ்சம் கேட்போம்.
சினிமா பாடல்கள் நம்மை கவர்வதற்கு முக்கிய காரணம் அதன் பொருளும் பாடல்
அமைந்த சூழ்நிலைக் காட்சிகளும் தான் .அது போல் தியாகராஜரின் ஒரு கீர்த்தனையை அனுபவிப்போம்.
தெலுங்கு தியாகையருக்கு நம் தமிழ் தியாகையர் குறைந்தவரா என்ன?
மகான் பாபநாசம் சிவனின் தேவி கிருதி ஒன்றை பார்ப்போம்.நிரவலில் "நீயே
மீனாக்ஷி காமாட்சி நீலாயதாட்சி"யில் கல்யாணி எப்படி சஞ்சாரிக்கிறாள் என்று பாருங்கள்.
என் இதய தெய்வம் குருஜியின் அருள் இசையில் அமைந்த ஒரு திருப்புகழ்
C:\Users\Admin\Pictures\Music\Guruji TPKZ
TEACHING\Vol III 321-475
இசை ஞானி இளைய ராஜா கொல்லூர் மூகாம்பிகையை எப்படி இசையில் வர்ணிக்கிறார்.
பார்ப்போம்.
கனவுத்தொழிற்சாலையில் புகுவோமா?
அதே மெட்டில் அம்மாவை போற்றும் பாடல் லட்சக்கணக்கான ரசிகர்களை
மயக்கியது ஆச்சர்யமில்லை.
Old is Gold
என்றும் நினைவில் நிற்கும் அற்புத கல்யாணி யின் பரிபூர்ண நிலை.
சங்கமம் TOSA வுக்கு புதிதல்ல. இந்த சங்கமத்தில் கல்யாணியை எப்படி ஆனந்திக்கிறார்கள் !
திசை திரூம்பிய சினிமா பாடல்களை திரும்பவும் கர்நாடக இசைக்கு
இழுத்து வந்த படம் சங்கராபரணம்..இதில் ஒரு கல்யாணி.
பாரதி படத்தில் ஒரு வித்தியாசமான கல்யாணி.
மற்ற பாடல்கள் U tube ல் பரவிக்கிடக்கின்றன.அன்பர்கள் துருவலாம்.
இப்போது கல்யாணி வகை ராகங்களை சுருக்கமாக பார்ப்போம்.
பூர்வி கல்யாணி
யமுனா கல்யாணி
மோகன கல்யாணி
ஹமீர் கல்யாணி
அன்பர்கள் தம் இசை உணர்வை சம்பாதிக்க U Tube எளிமையான ,சுலபமான,
சிறந்த வழி. மனம் கவர்ந்த பாடல்களை CELL ல் சேமியுங்கள்.நடைப்பயிற்சியின் போது .,
பிரயாணத்தின் போது ,தூக்கம் வரும் வரை, ஏன் தூக்கத்திலும்,கனவிலும் கூட கேளுங்கள்..இசை
வசப்படும்.இதயத்தில் குடிகொள்ளும்.வாழ்த்துக்களுடன்
மும்பை வெங்கடராமன்.
No comments:
Post a Comment