Tuesday, October 1, 2013

Kavithai

எத்துனைதான் அறிவுபெற்று பிறந்தாலும் ஆண்டவா
அத்துனையும் உனக்கு ஈடாகுமோ அறியேன் யான்
வித்திட்ட மன்னவன் நீ அன்றோ மூவுலகிற்கு ஏனோ
புத்தி கெட்டு வாடும் மனிதர் குலம் அறியாயோ நீ
நித்தியமாய் நீ நிலைக்க உலகினில் நிரந்தரம் யார்
சத்தியமாய் சொல்லாயோ எது உண்மையென்று !

பூவும் சூடி  வாசமும் பூசியே வாழ்ந்தாலும் இறைவா
தாவும் மனமதை யார் பிடிப்பார் தரணியிலே
சூதும் வாதும் சூழ்ந்ததோ என் சுற்றமதில் ஏனோ உன்
பாதமதை பற்றிடவே பற்று வரவில்லையே அய்யனே
ஓதும் வேதமது சாட்சியாய் நின்றதோ உன் பக்கம்
ஏதானாலும்  அது உனக்கே சொந்தமன்றோ இறைவா
மனத்திரையில் ஓடிவிடும் கற்பனையே உன்னையே 
சினத்தினிலே மறந்துவிட்டேன் நீ ஒரு கலை என்று 
சின்னத்திரைதான் மனத்திரை அதை மறந்து நான் 
வண்ணத்திரையில் முழுகிவிட்டேன் அதுவே நிலை என்று
ஆண்டவன்தான் வாழ்கின்றான் உன் உள்ளே 
மாண்டுவிட்டால் நீ வாழ்வது உலகினில் எங்கே 
விண்டுவிட்டால் மரணத்தின்  ரகசியத்தை  நாமெல்லாம் 
உண்டுதான் களிப்புடனே வாழ்வோமா மனிதர்களே
கருவினில் இருந்தேன் கருணையில் உருண்டேன்
கருவே ஒரு கருவியென உணர்ந்தேன் அதனில்
உருவே கொண்டேன் உதைத்தேன் கருவினில்
திருவே நீதான் என் அன்னை என மறந்தேன்
உறவே கொண்டேன் உலகினில் வந்தேன் நான்
யாரென மறந்தேன் அறிந்தேன் உண்மையை அம்மா
பிரிந்தேன் உன்னையே விழுந்தேன் புறத்தினில்
திரிந்தேன் உழன்றேன் தேடினேன் சுகமே அய்யகோ
துறந்தேன் ஆசையினை ஆண்டவா உனையேகண்டதும்
பறந்தேன் வாழ்வினில்
  
எத்துனைதான் அறிவுபெற்று பிறந்தாலும் ஆண்டவா
அத்துனையும் உனக்கு ஈடாகுமோ அறியேன் யான்
வித்திட்ட மன்னவன் நீ அன்றோ மூவுலகிற்கு ஏனோ
புத்தி கெட்டு வாடும் மனிதர் குலம் அறியாயோ நீ
நித்தியமாய் நீ நிலைக்க உலகினில் நிரந்தரம் யார்
சத்தியமாய் சொல்லாயோ எது உண்மையென்று !

பூவும் சூடி  வாசமும் பூசியே வாழ்ந்தாலும் இறைவா
தாவும் மனமதை யார் பிடிப்பார் தரணியிலே
சூதும் வாதும் சூழ்ந்ததோ என் சுற்றமதில் ஏனோ உன்
பாதமதை பற்றிடவே பற்று வரவில்லையே அய்யனே
ஓதும் வேதமது சாட்சியாய் நின்றதோ உன் பக்கம்
ஏதானாலும்  அது உனக்கே சொந்தமன்றோ இறைவா

மனத்திரையில் ஓடிவிடும் கற்பனையே உன்னையே
சினத்தினிலே மறந்துவிட்டேன் நீ ஒரு கலை என்று
சின்னத்திரைதான் மனத்திரை அதை மறந்து நான்
வண்ணத்திரையில் முழுகிவிட்டேன் அதுவே நிலைஎன்று

ஆண்டவன்தான் வாழ்கின்றான் உன் உள்ளே
மாண்டுவிட்டால் நீ வாழ்வது உலகினில் எங்கே
விண்டுவிட்டால் மரணத்தின்  ரகசியத்தை நாமெல்லாம்
உண்டுதான் களிப்புடனே வாழ்வோமா மனிதர்களே

மனமிழந்து மானமிழந்து இனமிழந்து ஈகைதனைஇழந்து
குணமிழந்து ஆணவம் அது மிகுந்து மதி இழந்து கதிஇழந்து
தனமிழந்து தரணியில் தனி இருந்து தலை குனிந்துஅய்யனே
உனைஇழந்த நிலைதனை அறியாமல் இருந்தேனேஇறைவா !

நாரணன் நமக்கு பரிபூரணன் பக்த பரிபாலனன் வேதவித்தகன் 
வாரணன் வந்து நமக்குள் உறைவனன்  மனமோகனன்
பார்புகழும் மாதவன் மதுசூதனன் பாரத மானம்காத்தவன்
கார்மேக வண்ணன் கண்ணன் நம்மிடையே என்றும்இருப்பான்!

இதிலும் நீயே அதிலும் நீயே எதிலும் நீயே எங்கும்நீயே
ஆதியில் நீயே அந்தமும் நீயே கேள்வியும் நீயேபதிலும் நீயே
நீதியில் நீயே நதியிலும் நீயே கண்ணிலும் நீயேஎன்னிலும் நீயே
ஓதும் வேதமும் நீயே எல்லாம் நீயே காப்பாய்உலகையே !

RBI Sridhar

No comments:

Post a Comment