Saturday, October 12, 2013

உலகை வெல்லலாம்



நேற்று நடந்த, நான் கண்ணால் பார்த்த அந்த  நிகழ்ச்சி திருச்சி பஸ்  ஸ்டாண்டில் அரங்கேறியது..  24 மணி நேரமாகியும் என் கண்களின் முன்னால் நிழலாக நின்று கொண்டிருக்கிறது

விஷயம் இதுதான். ஒரு முதியவர் ஆட்டோவிலிருந்து இறங்கி ஆட்டோக்காரருக்கு 120 ரூபாய் கொடுத்திருக்கிறார். ஆட்டோக்காரர் அதை வாங்க மறுத்து," நீங்க 100 ரூபாய்தான் பேசினீங்க . 20 ரூபாயை நீங்களே வச்சுக்குங்க." என்று சொன்னார்  ,

 முதியவர், "நீங்க 120 ரூபாய்தான் கே ட்டீங்க .. நான்தான் 100 ரூபாய் என்று பேரம்பேசினேன்   வாஸ்தவம்தான்.  நீங்களே லக்கேஜை தூக்கி ஆட்டோவில் வச்சீங்க. இப்ப மீண்டும் கீழே இறக்கி பஸ்  கிட்டே கொண்டு வச்சீங்க. இதை எல்லாம் பார்க்கும்போது நியாயமான வாடகை 120 ரூபாய் என்று எனக்கு தோன்றுகிறது.", என்று சொல்ல, தர்க்கம் நீடிக்கிறது.

இறுதியாக ,  ஆட்டோக்காரர் 20 ரூபாயை வாங்கிக்கொண்டு , அருகே இருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் சேர்த்து விட்டார்!!

அந்த ஆட்டோக்காரர் நல்லவரா, அல்லது அந்த முதியவர் நல்லவரா - எனக்கு புரியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நன்றாகப் புரிந்தது. இந்த உலகில் நல்லவர்கள் எப்போதுமே இருப்பார்கள். ஆனால் நல்லவர் அல்லாதவர்கள் நல்லவர்களை விடஎண்ணிக்கையில் அதிகம்  இருப்பார்கள். அதனால்தானோ என்னவோ நல்லவர்களாக இல்லாதவர்கள் தான் நம் கண்ணுக்கு அதிகம் புலப்படுகிறார்கள்.

உலகில் இப்படியும் நல்லவர்கள் இருப்பார்களா என்று வியக்கவைக்கும் ஒரு சின்ன நிகழ்ச்சி யைப்பற்றி இப்போது நான் சொல்லியே ஆக வேண்டும். உங்களில் பலர் இதை முன்னரே படித்திருக்கலாம்.

ஒரு   மருத்துவ மனை  முதல் மாடி. பொது வார்டு. இரண்டு அடுத்தடுத்த படுக்கை களில் இரண்டு நோயாளிகள்.அதில் ஒரு படுக்கை ஜன்னலை ஒட்டி இருந்தது.அதில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் படுத்திருந்தார். அவருக்கு இதய நோய். அன்று காலைதான் அட்மிஷன். . 

அடுத்த படுக்கையில் ஒரு முதியவர் காலில்  எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டுகளுடன் ஒரே நிலையில்  படுத்திருந்தார்.அவரால் சரியாக அசையக் கூட முடிய வில்லை.

அன்று மதியம் எலும்பு முறிவு நோயாளி, இதய நோயாளியிடம் சொன்னார்," நான் ஒரு பாதிரியார். எப்ப்போதுமே மாதாகோவிலில் கீதங்கள் ஒலிக்கும்..இப்ப கால் ஒடிஞ்சு படுத்து கிடக்கிறேன். எனக்கு என்ன ஆகுமோ தெரிய வில்லை.எனக்காக  நீங்கள் ஒரு பாட்டு பாடுங்களேன்."

இதய நோயாளி இனிமையான குரலில் பாடினார்.

" ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போரடும் போர்க்களமே ;
  ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே.
  நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் , லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் "

பாடி முடித்தவுடன் பாதிரியார் ," நண்பரே, மிக்க நன்றி." என்றார்.

மலை நேரம். பாதிரியார் இதய நோயாளியிடம் கேட்டார் ," நண்பரே, கண்ணாடி ஜன்னல் வழியே நீங்கள் வெளியே நோக்கி அங்கு நடக்கும் இனிய நிகழ்வுகளைக்  கண்டு சாளரத்தின் வெளியே பார்த்த உ ங்களால் மகிழ்ச்சி அடைய முடியும். இப்போது வெளியே பார்த்து என்னதான் நடக்கிறது என்று சொல்லுங்களேன்."

அது.வெளியே பார்த்த இதய நோயாளி ," ஐயா, வெளியே பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களை காண முடிகிறது. ஆஹா!கடவுள் எத்தனை வண்ணங்களை  படைத்திருக்கிறான். கண்ணுக்கு இதமான காட்சி." என்று வர்ணித்தார்.

" அடாடா, நீங்கள் கூறும்போதே என் உடல் வலியெல்லாம் குறைந்தது போல உணர்கிறேன். அவ்வப்போது நீங்கள் காணும் காட்சிகளை எனக்கு சொல்லுங்கள். என் வலி குறையும்." என்றார் பாதிரியார்.

இரவு நேரத்தில் இதய நோயாளி கூறுவார்," ஐயா, தெருவிளக்குகள் ஒளி வீசும் தோரணமாக பிரகாசிக்கின்றன. வாகனங்களின் விளக்கொளிகள் கொஞ்ச கொஞ்ச இருளையும் விளக்கி ஒளி பரப்புகின்றன."

பாதிரியார் ரசிப்பார். அவரது வேதனை குறையும். 

காலையில் , " ஐயா, ஜன்னலுக்கு அப்பால்  ஒரு பள்ளிக்கூடம். நூற்றுக்கணக்கான குழந்தைகள் சீருடை அணிந்து அணிவகுத்து  நிற்கும் அழகே தனிதான்."என்பார். 

 சற்று நேரம் கழித்து அவர், " ஐயா, இப்போது குழந்தைகள் வகுப்பறை நோக்கி ஒடுகின்றனர். எத்துனை கண் கொள்ளாக் காட்சி!" என்பார்.

செவிலியர்களிடம் பாதிரியார் ," சிஸ்டர், அந்த ஜன்னலோர படுக்கையை எனக்கு தர முடியுமா?" என்று கேட்பது வழக்கமாகி விட்டது. 

ஒரு நாள் அதிகாலையில் இதய நோயாளி கண் விழிக்க வில்லை. உறக்கத்திலேயே இறந்து போயிருந்தார்.

பாதிரியார் அந்த படுக்கைக்கு மாற்றப் ப்பட்டார். அவரது கால் கட்டுகள் எடுக்கப்பட்டன.

முதல் வேலையாக ஜன்னலுக்கு அருகே தட்டுத்தடுமாறி வந்து நின்றார். வெளியே பார்த்தார்.அங்கே அவர் பார்த்த காட்சி அவரை திடுக்கிட வைத்தது. அவர் பார்த்ததெல்லாம் , வெளியே இருந்த குப்பை கூளமான , அசுத்தமான ஒரு தரை மட்டம்தான். தலை சுற்றியது அவருக்கு.

" சிஸ்டர், யாராவது வாருங்களேன் ." அவரது அலறல் எங்கும் எதிரொலித்தது. 

ஒரு நர்ஸ் ஓடி அங்கு வந்தார். 

இங்கே இருந்த பேஷண்ட் ஜன்னலுக்கு வெளியே பார்த்து என்னிடம் அங்கு உள்ள  அருமையான விஷயங்களை பரிமாறிக்கொள்வார். ஆனால் நான் பார்ப்பதோ ஒரு குப்பை மேடு ."

" என்ன Father சொல்றீங்க ? ஜன்னலுக்கு வெளியே அவர் பார்த்த காட்சிகளை உங்களுடன் பேசுவரா?" சிஸ்டரின் குரலில் ஒரு வியப்பு தென்பட்டது.

" ஆம். அவர் சொல்லிய விஷயங்களால் என் உடல் வலிகள் எல்லாம் நீங்கி விடும். தினமும் பல முறை வெளியே நோக்கி என்னிடம் பேசுவார்."

" Father, ஆச்சார்யமாக இருக்கு. அந்த பேஷண்ட் பார்வையற்றவர்."

" என்ன, என் வலிகள் நீங்க ஒரு பார்வையற்றவர் கற்பனையாக என்னிடம் பேசிய விஷயங்களா அவை? Jesus, உன்னைப்போலவே மனிதர்களிடம் அன்பு காட்டிய அந்த மாமனிதர் உன்னோடு கலந்து விட்டாரே ." என அழுதார். ஆம், அதிக அன்பும் அழ வைக்கும் வகையைச் சேர்ந்ததுதான்..

அன்பு, அடக்கம் ,ஆதரவு ,இரக்கம் , உதவி, மனித  நேயம், பக்தி, - இவைகள்தான் தோசாவின் மூலதனம். தோசா உறுப்பினர்களின் குணாதிசயங்கள்.

அந்த ஆட்டோக்காரரைப்போல, ஆட்டோவில் பயணித்த அந்த முதியவரைப்போல, அந்த இதய நோயாளியைப்  போல  மிகச சிலரைத்தான் வெளியுலகில் பார்க்க முடியும். ஆனால் தோசாவைப் பொறு த்த வரை ஒவ்வொருவரும் அந்த மூன்று பேர்களைப் போலத்தான். 

எல்லோருக்கும் மனோ திடம் இருப்பதில்லை. வெளியே வந்து நின்று ," எனக்கு மனோதிடம் உண்டு. நான் நல்லது என்று நினைப்பதை செய்து முடிப்பேன். அதனால்தான் நான் தோசா இயக்கத்தில் இருக்கிறேன்." என்று அறை கூவும் தைரியம் நமக்கு உண்டு. 

" உலகமே, என்னுடைய தலைஎழுத்தை நானே முடிவு செய்ய நான் தயார் ஆகிவிட்டேன். என்னுடைய பயத்தையும், சந்தேகப்போக்கையும் களைந்தெறிய  நான் முடிவு எடுத்து விட்டேன். என் முயற்சிகளை நான் எப்போதுமே கைவிட மாட்டேன்." இதுதானே தோசா குடும்பத்தின் தாரக மந்திரம்.

நாம் பெரிய அளவில் கனவு காண்பவர்கள். உலகையே மாற்றும்  திறமை படைத்வர்கள் . நாம்  களத்தில் இறங்கி விட்டோம் . இனி தடையேதும் இல்லை நமக்கு.

தோசா குடும்பத்தினர்களே. உங்களை ப பார்த்து நான் பெருமைப்படுகிறேன். நம்மைப் பார்த்து இந்த உலகமே பெருமைப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை!!

இதைத்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்ல விரும்புகிறேன் .

murthy


No comments:

Post a Comment