Tuesday, October 1, 2013

பாகவதம்

  


அண்மையில் சங்கமத்தில் ஓர் அன்பர் நான் எழுதிய பாகவதம் கட்டுரையில் சிலவற்றை சுட்டி காட்டி விளக்கம் கேட்டார்.அவர் பாகவதத்தை ஆழ்ந்து படித்து அனுபவித்ததைப்பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.விளக்கம் தர கடமைப்பட்டுள்ளேன்,

 முதலில் , பாகவதத்தில் இடம் பெற்றுள்ள 22 அவதாரங்களில் ,தத்தாத்ரேயர் இல்லை .தவறுக்கு வருந்துகிறேன்.

அடுத்து மோகினி அவதாரம்.  ஸ்கந்தம் 1..3..17 ல் த்ரயோதசம  மேவ ச  அபாயயத் சுராநன்யான்  மோஹின்யா மோஹயன் ஸ்த்ரீயா     என்ற ஸ்லோகத்தில் ...மோகினி என்ற பெண் உருவத்தால் அசுரர்களை மோஹம் அடைந்தவர்களாக செய்து தேவர்களை அம்ருதம் குடிக்கச்செய்தார் ........என்று வருகிறது.

    மற்றும் 26வது ஸ்லோகத்தில் "எவ்வாறு என்றும் வற்றாத குளத்திலிருந்து  ஆயிரம் வாய்க்கால் கிளைகள் ஏற்படுமோ அவ்வாறே சத்வ ஸ்வருபியான  மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் எண்ணற்றவை."  என்று கூறப்பட்டுள்ளது.27ல் "பிரஜாபதிகளோடு கூடிய ரிஷிகளும்,மனுக்களும்,தேவர்களும்,மனுக்களின் புதல்வர்களும்,மகா வீர்யம் வாய்ந்த யா வருமே அந்த பரமாத்மாவின் அம்சமே ஆவார்கள்."என்றும் வருகிறது.

 அஸ்வத்தாமாவைப்பற்றி ...1.7.15ல் அவன் உப பாண்டவர்களின் தலைகளை   வெட்டி,துரியோதனனிடம் எடுத்துச்சென்றா ன்.1.7.16ல் அர்ச்சுனன் தான் ச பதம் செய்தா ன்.

1.7.35ல் கிருஷ்ணர் "குற்றம் செய்யாதவர்களும் ,தூங்கிக்கொண்டிருந்தவர்களுமாகிய குழந்தைகளை இரவில் கொன்ற அச்வத்தம்மானை கொல்வாயாக "என்கிறார்.                                                                                                                             
" பிராமணன் கொல்ல தக்கவன் பின்னர்,பீமனும் அச்வத்தம்மாவை கொல்ல அர்ஜுனனிடம் சொன்னார் இதையெல்லாம் கேட்ட கிருஷ்ணன்,பிராமணன் கொல்லத்தக்கவன் அல்ல என்றும்,ஆனால் அஸ்திரத்தொடு கூடியவன் கொல்லத்தக்கவன் என்று இரண்டும் என்னாலேயே சொல்லப்பட்டது.அவ்வாறு சொல்லப்பட்ட என் வார்த்தையை காப்பாற்றுவாயாக "  என்றும்  முடிவில் "மனைவிக்கு முன் செய்த சபதத்தை கா பாற்ற வேண்டும்.அதோடு பீமனுக்கும் ,எனக்கும் எது திருப்தி அளிக்குமோ அதையும் செய்வாயாக "என்று பூடகமாக சொன்னார்அர்ஜுனன், வாசு தேவனின் ஹ்ருதய அபிப்பிராயத்தை புரிந்து கொண்ட வனாக அச்வத்தம்மாவின் மணியோடு கூடிய கேசத்தை கத்தியால் அறுத்து எறிந்தான். முண்டனம் செய்தலும்,பொருளை பிடுங்கிகொள்ளுதலும் ,இருக்கும் இடத்திலிருந்து கிளப்பிவிடுவதும் பிராமணர்களுக்கு கொலை ரூபமான தண்டனை ஆகும்.

பரீட்சித் .        அசத்தம்மா விடுத்த ..பிரம்மாஸ்த்ரத்தால் உத்திரையின் கர்ப்பம் கொல்லப்பட்டது தகிக்கப்படு கிறனவனாய் இருந்த சிசு தன்னை காப்பாற்ற வந்த மகாவிஷ்ணுவை பார்த்தது.பகவான் அஸ்தரத்தை முறியடித்து பத்துமாதம் ஆகிய அக்குழந்தை பார்க்கும்போதே மாறைந்தார் .1.12.11.பின் புன்யாஹம சமயத்தில் பிராமணர்கள் "இவ்வுலகில் மனிதர்களால் இவன் அந்த புருஷனா அல்லவா என்று பரீட்சித்துப் பார்க்கப்போகிறான் என்ற காரணத்தால்  பரிட்சித் என்றே உலகில் பிரசித்தி அடைவான் ." என்று கூறுகிறார்கள். கிருஷ்ணன் சூட்டியதாக தெரியவில்லை.மேலும் ஆராய்ந்து எழுதுகிறேன்.

மற்ற அன்பர்களும் திறந்த மனத்துடன் கருத்துக்களை எழுதி என்னை மூக்குவிக்க வேண்டுகிறேன்.



Mumbai வெங்கடராமன். மற்ற செய்திகள் 




No comments:

Post a Comment