Sunday, March 25, 2012

சிந்தைக்கு ஒரு சவால் - பகுதி 1 சிந்தைக்கு ஒரு சவால் - பகுதி 1


ஹரி ஓம் !

நமஸ்காரங்கள் !

“சிந்தனைக்கு ஒரு சவால் – பகுதி 1

எல்லோருக்கும் ஊந்துகோலாக இருக்கவேண்டுமென்ற நோக்கில் இந்த “சிந்தனைக்கு ஒரு சவால்” பகுதி தொடங்குகின்றது.  நீளமான முகவுரைக்கு மன்னிக்கவும்.

இந்த பிரபஞ்சத்தை படைத்த ஒரே இறைவன் உலகில் எல்லாவற்றையும் இரண்டிரண்டாக படைத்துள்ளான். அவனே சிவனும் பார்வதியுமாக இரண்டாக காட்சி தருகிறான். உதாகரணமாக :
தாய், தந்தை; அண்ணன், தம்பி; வெண்மை, கருமை; வெளிச்சம், இருட்டு; சப்தம், மௌனம்; வார்த்தை, அர்த்தம்.

எந்த மொழியாயினும் வார்த்தை, அர்த்தம் இரண்டும் தனியாக உருவகம் இருந்தாலும் அவை சேர்ந்தால் தான் முழுமை பெறும், இல்லாவிடில் அவை ஒரு பைத்தியக்காரனின்(நான் இல்லை) பிதற்றலாகத்தான் இருக்கும். அதனால்தான், இந்திய இலக்கிய வரலாற்றில் மேன்மையாக  போற்றப்படும் கவி காளிதாஸன் ரகுவம்ச மஹாகாவியத்தின் ஆரம்பத்தில் மங்களாசரணமாக கூறுகிறான் :

“வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த்த ப்ரதிபத்தயே |
ஜகதப்பிதரௌ வந்தே பார்வதீபரமேஸ்வரௌ ||”

“சொல்லும் அர்த்தமும் போல் இடைவிடாது எப்போதும் சேர்ந்திருக்கும் இந்த பிரபஞ்சத்தின் தாய்தந்தையரான பார்வதீபரமேஸ்வரனைப் போற்றி வேண்டுகிறேன்” |

இந்திய இலக்கிய வரலாற்றின் இரு கண்களாக சம்ஸ்க்ருதமும் தமிழும் தொன்றுதொட்டு பாரம்பரியமுள்ள மொழிகளாக பல ஆயிரம் வருஷங்களாக இருந்துவருகின்றன.  உடைகூட இல்லாமல் மனிதன் ஐரோப்பாவில் காடுகளில் ஒரு விலங்கைப்போல் சுற்றிவந்த சமயத்தில் இந்திய கலாச்சாரம் உயர்ந்தநிலையில் இருந்ததை அன்னியநாட்டு சரித்திர ஆராய்ச்சியாளர்களும் மற்றும் பல மேதைகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.  பல லக்ஷக்கணக்கான நூல்கள் இன்னும் வெளிக்கொணரப்படவில்லை. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமினாத அய்யர் இல்லாவிடில் ஐம்பெரும்காப்பியங்களும் மற்ற தமிழ் இலக்கிய நூல்களும் நமக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.  அவ்வாறே பல சம்ஸ்க்ருத நூல்களும் இன்றும் இருட்டறையில் இருக்கின்றன.  வெளிவந்த சில நூல்களும் படிப்பவர் இன்றி நூலகங்களில் தூங்கிக்கொண்டிறுக்கின்றன. நமது சொத்து எவ்வளவு இருக்கிறது என்று நமக்கே தெரியவில்லை.  சொத்துக்கணக்கெடுப்பில் ஒரு சவால் –

“வாயை மூடிக்கொண்டு பேச பாட முடியுமா?”
முடியும் என்கிறார் ஒரு சம்ஸ்கிருத கவிஞர்.  இவர் சம்ஸ்கிருதத்தில் பஞ்சமஹாகாவியங்கள் என்று பிரஸித்திபெற்ற ஒரு காவியத்தின் கர்த்தா.  இவறுடைய காவியத்தில் ஒரு பாடல் வரிகள் “
 
“ந நோநநுந்நோ நுந்நோநோ நாநா நாநாநநா நநு |
நுந்நோநுந்நோ நநுந்நேநோ நாநேநா நுந்நநுந்நநு(த்) |”
 
வாயைத்திறக்காமல் மேல்பற்வரிசையும் கீழ்பற்வரிசையும் சேர்த்துவைத்துக்கொண்டு சொல்லக்கூடிய பாடல் இது.

இன்னுமொரு சிறப்பு அம்சம் : ஒரே ஒரு உயிர்மெய் எழுத்தால் (’நகாரமாத்திரம்’) பாடப்பெற்ற வரிகள்.
இந்தப்பாடலின் அர்த்தம் தெரியுமா?

இதைப்போன்ற பாடல்கள் தெரிந்தால் தயவு செய்து நமது வலைத்தலத்துக்கு அனுப்புங்கள் என்று வேண்டுகிறேன்.

இன்னும் வரும்,
கலிவரதன்

No comments:

Post a Comment