Sunday, March 25, 2012

Thanks to Visu sir & Team & TOSA


படப்பிடிப்பு நிகழ்ச்சி முடிந்து திரும்பியதும்
நெகிழ்ச்சியுடன் எழுதியது (23 /12 /2011 )

அன்புடன் ஜெயலன் 

மனம் முழுவதும் மக்கள் அரங்கம் 
தித்திப்புடன் திரும்பினேன் 
தோசா விற்கு நன்றிகள் பலப்பல 

நம் மனதில் நம் ஊரைப் பற்றி  
ஊறி வரும் தகவல் வெள்ளத்திற்கு 
மக்கள் அரங்க மேடை 
கொள்ளளவில் 
ஆறு போல் ஆகவில்லைஎனினும்

உணர்ச்சி வெள்ளத்திற்கு 
வடிகாலாய் ஆனதினால் 
விசுவிற்கு நம்மின்
விசுவாச நன்றிகள் பலப்பல 

தைப்பூச தேரோட்டிகாட்டி 
ஊரையே     கூட்டியதும்  
தோசா - விசுக்கூட்டில்
உலகையே கட்டப்போவதும்              

தன்னைத்தான் அருச்சித்து 
பூஜிக்கும் தகைமை சொன்ன  
மாலிகுத்(மகாலிங்கசுவாமி) தெரியும் தன்    
திருவிளையாடலில் ஒன்றிதுவென்று 

அலகிலா விளையாட்டுடையான் 
அன்னவர்க்கே சரண் நாங்களே 

- ஜெயலன்

நிகழ்ச்சி ஒளிபரப்பு முழுதும்    முடிந்ததும் 
நெகிழ்ச்சியுடன்   எழுதியது (26 /02 /2012 )

கை தேர்ந்த  பாணன்
ஒரே பாடலில்
ஏழு  ஸ்வரங்களை
முன் பின் கோர்த்து 
இசைப்பது போல்

நீர் சுமந்த கரு மேகங்கள் ஊடுருவி
'விசு'ம்பின் வெண் சூரியன்
ஏழு வண்ண வில் ஒன்றைப்
படைப்பது போல்

ஒரு கோவில் ஒரு பள்ளி ஒரு ஊர்  என
இருந்த இருப்பை,  இனிக்கும் நினைப்பை 
விசுவாசத்தில் தோசா தொட்டுக்காட்டி
மூன்று நாட்கள்  முனைவர்கள்  வடிகட்டி
நான்காம் நாள்  தானே வழிகாட்டி
மதுவும் மதியும் மற்றோரும்  கூடி
ஐந்தாம்நாள்   படம்கூட்டி
விசு -  வாசம் கூட்டியவொரு  
அறு சுவை       நிகழ்வை
 எழு ஞாயிறு  கதி மாறுமுன்  தொடங்கி  (பொங்கலுக்கு முன்)
ஏழு ஞாயிறு   சுதி மாறாமல்
வண்ணம்  வாடாமல்
வழங்கிய  திருமருதூர்  மக்கள் அரங்கம்

கனியாய், கரும்பாய்  இனித்தது  
பனி மலர்ப் பாவையாய், பதவியின் சுகமாய் இருந்தது
இவற்றினும் இனியன் இடைமருதீசனாய் ஒளிர்ந்தது

கருவிகளுக்கு நன்றிகள்
 காரணன் தனக்கும்தான்.  

 - ஜெயலன்
-- 

No comments:

Post a Comment