தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
(இதுவும் சிந்தனைக்கு ஒரு சவால் )
நம் மக்களுக்கு மிருக காட்சிசாலை என்றோ அல்லது விலங்குகள் சரணாலயம் என்று சொன்னால் சற்றே சிரமப் படுவார்கள் புரிந்து கொள்வதற்கு ஆனால் அதையே எளிய தமிழில் ஸு (Zoo) சொல்லிவிட்டால் சட்டென்று புரிந்து கொண்டு விடுவார்கள் இது தான் தற்போது நடைமுறையில் தமிழாக இருககிறது
எனவே நானும் சற்று எளிதாக அனைவரும் புரிந்து கொள்வதற்கு வசதியாக மேற்சொன்ன நடைமுறையினையே ஓரளவு கையாள முயற்சி செய்கிறேன்.
திரு கலிவரதன்ஜி அவர்கள் ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றினை எடுத்து காட்டி உதடுகள் ஒட்டாமல் அதனை படிக்க முடிவதனை சுட்டிக்காட்டினார். அவரது முதல் சிந்தனைக்கு ஒரு சவால் பகுதியில் அது சிறப்பாகவே இருந்தது.
எனினும் நமது தமிழிலும் இது போன்றதொரு உதடுகள் ஒட்டாத ஒரு திருக்குறளினை மட்டும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். அதுதான் புகழ் என்னும் அதிகாரத்தில் வரும் கடைசி குறள்
“வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழாதவர்”.
என்னும் குறள்
வரலாற்றசிரியர்களின் ஆராய்ச்சிப்படி திருவள்ளுவர் வாழ்ந்த காலம் சுமார் கி. மூ. இரண்டாம் நுற்றாண்டு கடைசி முதல் ஒன்றாம் நுற்றாண்டு முதல் பாதி வரை.
ஆக உதடுகள் ஒட்டாத இலக்கியம் அன்றே வந்து விட்டன .
அது ஒரு புறம் இருக்கட்டும்
இன்று நான் சொல்லப்போவதும் வேறு ஒரு விதமான சிந்தனைக்கு ஒரு சவால்தான். ஒரு வார்த்தையினை இடம் வலதாகவும் வலது இடமாகவும் படித்தாலும் ஒரே மாதிரி வடிவம் மற்றும் பொருள் வரும் இதனை எளிதில் புரிந்து கொள்வதற்கு வசதியாக நடைமுறை தமிழில் பளின்றோம் ( Palindrome) என்று சொல்வார்கள் .
காக்கா தேருவருதே, மோருபோருமோ, விகடகவி,சிவகுரு முருகுவசி, மாடு ஓடுமா, கருவாடு வாருக,மாலா போலாமா, வினவி மாறுமா தேயுதே மேளதாளமே
அதுவே ஆங்கிலத்தில்
civic deed, Madam, Malayalam, Noon, Nun, racecar radar, redivider, rotator
கிரேக்க இத்தாலிய மற்றும் லத்தின் போன்ற பல மொழிகளில் இருந்து பல சொற்களை தனதாக்கி கொண்ட ஆங்கில மொழியில் அதிகமான பளின்றோம் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் நமது தமிழில் அகத்தியர் காலம் தொட்டே தமிழுக்கு என்று ஒரு நல்ல இலக்கணம் வகுக்கப்பட்டு அதனை நாம் அனைவரும் ஏற்று கொண்டுவிட்டதால் ஆங்கிலம் போல் நாம் நினைத்தபடி பளின்றோ மினை உருவாக்கி விட முடியாது. மேலும் தமிழில் (அ, ஆ போன்ற) உயிர் எழுத்துக்களும், (க் ங் போன்ற) மெய் எழுத்துக்களும் மற்றும் இரண்டும் சேர்ந்த (க கா போன்ற) உயிர் மெய் எழுத்துக்களும் இருப்பதால் பளின்றோம் உருவாவது சற்றே கடினம்.
இருப்பினும் நமது தமிழ் இலக்கணத்தின் பிதாமஹர்தொல்காப்பியர் இதனையும் தனது தொல்காப்பியத்தில் இடம்பெற செய்துள்ளார். நான் சொல்வது பலருக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆம் இதனை இடம் பெற வைத்து அதற்கு ஒரு பெயரினையும் தந்துள்ளார். அவர் அதற்கு தந்த பெயர் மாலை மாற்றான். ( மேலும் அவர் அப்பெயர் தந்தற்கு ஒரு காரணத்தையும் சொல்லி இருக்கிறார். முனிகளும் ரிஷிகளும் ஜப மாலையினை திரும்ப திரும்ப உருட்டி கொண்டிருப் பார்களே அதனை சொல்லியே அவர் ஒரு செய்யுளாகவே வடிவமைத்து உள்ளார் .) அந்த செய்யுள் தான் என்ன " "இருவழி ஒக்குஞ்சொல் . முன்பின் இருவழியும் ஒத்த எழுத்துக்கோப்புடைய செய்யுள் , மாலைமாற்று , இருவழியும் ஒக்குஞ் சொல்லுடைய , மாலைமாற்றான" .
சரி
தமிழுக்கு நிகராக நமது தேசம் முழுவதும் வியாபித்து இருக்கும் சம்ஸ்கிருதத்தில் மேற்சொன்ன பளின்றோம் எப்படி கையாளப் பட்டிருக்கிறது என சற்றே பார்க்கலாம்.
நம் தமிழினை போலவே சம்ஸ்கிருததிலும் இது விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது இடம் வலதாகவும்,வலது இடதாக படித்தாலும் ஒரு மாதிரி வரும் சொல்லுக்கு யமகம் என்று பாணினி வியாகர்ணத்தில் பெயரிடப்பட்டு உள்ளது. பதஞ்சலி முனிவர் தனது பதஞ்சலி வியாகர்ணத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று பல சதுர மற்றும் எண்கோண கட்டங்களு கிடையே எழுத்துக்களை அமைத்து சொற்களை பல விதமாக படித்து காட்டி அமர்க்கள படுத்தி அதற்குசித்ரகவி, விலோமம், கதப்ரத்யாகதா என்று பெயர்களையும் கொடுத்திருக்கிறார்.
சரி எழுத்து சொல் வார்த்தை இவைகளில் மட்டும் பளின்றோம் இருப்பதை பார்த்தோம்
நமது தமிழினை கிபி ஆறாம் நூற்றாண்டில் தனது பக்தியின் மூலம் தேவார பாட்டால் ஒரு வழி செய்த இன்னும் மேலே சொல்ல வேண்டுமையின் ஸ்ரீ ஆதி சங்கரரே பக்திக்கு ஒரு திராவிட சிசு என வர்ணித்த தெய்வ குழந்தை திருஞ்ஞான சம்மந்தர் இந்த மாலை மாற்று இலக்கணத்தை பின்பற்றி ஒரு பத்து பாடல்களையே பாடி அதனை மாலை மாற்று திருபதிகம் என பெயரிட்டு உள்ளார்.
அதில் ஒரு பாட்டினை பொருளுடன் பார்க்கலாமா.
'யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா காணா காமா காழீயா மாமாயா நீ மாமாயா'
இதன் பொருள் -
'சிற்றுயிரான நாங்கள் கடவுள் என்றால், பொருத்தமா? நீ ஒருவனே கடவுள் என்றால். பொருந்தும். ஆம் ஆம்!'
மற்ற பாடல்கள்
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா ராயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா
சரி பிற்காலத்தில் அதாவது சுமார் பதினைந்தாம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் பிறந்து நமது திருவிடைமருதூர் உள்ளிட்ட பல ஊர்களுக்கு வந்து பல பாடல்கள் பாடிய கவி காளமேக புலவரின் பாடல் ஒன்றினை மட்டும் சுட்டி காட்டி இந்த தங்கமே தமிழுக்கில்லை தட்டுபாடை முடித்து கொள்கிறேன்.
தமிழின் "க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல, காளமேகம் காண்பவர் கண்கள் பனிக்க பாடல் ஒன்றை பாடி இருக்கிறார்.
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா.
பொருள்
(கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் வரை காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட கையாலாகிவிடக்கூடும்
இதுதான் தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு.
நன்றி
ஸ்ரீதர்
No comments:
Post a Comment