நினைதுபர்க்கிறேன் அவளை,

பிறந்தேன் குப்பருத்தேன் தவழ்ந்தேன்
நடந்தேன் உயர்ந்தேன் வளர்ந்தேன்.
இத்தனையும் தேன் என தந்தவள் அவள்.
கருவாக்கி உருவாக்கி மெருகேற்றினாள்
அவள் தூக்கம் மறந்து என்
துக்கங்களை போக்கினாள் அவள்.
விதையென எனை விதைத்தாய்
உயிருடன் கலந்து சுமந் தாய்
உயிரினும் மேல் என வளர்த்தாய்
எனக்காகவே என்றும் நினைத் தாய்,
உணர்ந் தாய், செய் தாய்.
கைம்மாறு ஏதும் செய்யமுடியாவிடிலும்
கை மாறாமல் உன்னுடனே தான்
என் உயிரும் உணர்வும்,
அம்மா உன்னையன்றி
வேறு எதை நினைத்துபார்க்க சொல்கிறாய்....
நீ பிறந்ததால் நான் சிறந்தேன் பிறந்த நாள் நமஸ்காரங்கள்.....
அன்புடன் ஹரி.
No comments:
Post a Comment