Sunday, March 25, 2012

வேரைத் தேடிச் செல்லும் விழுதுகள்.


வேரைத் தேடிச் செல்லும் விழுதுகள்.....
 
ஒரு விதைக்குள் அகப்பட்ட ஆலமரம் கண் விழிக்கும்
அது வரை பொறு மனமே......எழுதினான் வைரமுத்து....
வைரம் பாய்ந்த வரிகள்....சத்தியமான வார்த்தைகள்....
உர உள்ளம் கொண்ட இடைமருது வாசிகளுக்கு ஏற்ற வரிகள். 
 
காலம் பல கடந்தாலும்,   காட்சிகள் பல மாறினாலும்
மாறும் உலகில் ......மாறுதல்  பல நிகழ்ந்தாலும்  
மாறாத மனிதர்களாய்....முன் மாதிரி மனிதர்களாய்    
வேரைத் தேடித் செல்லும் விழுதுகள்......
  
ஆயிரம் ஆண்டு ஆனாலும் ஆல மரம் தழைக்கும் 
ஆம்.....அதன விழுதுகள் ....மரங்களாகும் 
மரத்திலிருந்து விழும்.....விழுதுகள்
பழுது இல்லா விழுதுகள்...மீண்டும் மரமாகும்.... 
 
அந்த விழுதுகள், வேருக்கு வீரியம் சேர்க்கும்
தாங்கிப் பிடிக்கும், தாய் மரத்தை 
தாக்கம் போக்கும்,...தாய் மரத்தின்....
ஏக்கம் நீக்கும், ......நிழல் தந்து, எல்லோருக்கும் 
 
நம் காவிரிக்கரையிலும் உண்டு......ஆலமரம்
நம் பள்ளியிலும் உண்டு...... ஆலமரம்
நம் பள்ளியே ....ஒரு 94 ஆண்டு ஆலமரம் 
நாம் பல நேரம், பள்ளி கொண்டதும்,  அந்த ஆலமரம்
 
யார் அந்த விழுதுகள் ???    
 
மண்ணின் மீது மாசிலா பற்று கொண்ட கூட்டம்
மக்கள் அரங்கம் கண்ட கூட்டம்
மருதா நாட்யாஞ்சலி...ஆட்டம் போட்ட கூட்டம் 
மனதில், பள்ளியை வைத்து,...மகிழும் கூட்டம் 
 
எது இந்த சாதனைக் கூட்டம் ? 
அது இந்த ரோஜாக் கூட்டம் ?
சங்கமம் காணும் சாகசக் கூட்டம்
ஆம்....இந்த டோசாக் கூட்டம்,.....  
 
ஊரை நாடிச் செல்லும் உன்னதக் கூட்டம்
 
இடைமருதூரான்...............tdr.msubramanian@gmail.com


1 comment:

  1. Congrates for fine and thought evoking verses.I wonder whether this is a poem or pilosophical note or statement of reality or symbolic UPADESAM or significance of our school and its students.I feel it is consolidation of all.the qualities of our TDRITES is niecely presented in second stanza.Yes,our tdrites may change their dress,life style in order to move with the times.But never change BAKTHI towards our SWAMY and GURUS , passion towards school,culture,civilisation, humanism,respect to elders and others,gratitude,helping tendency extending their support to common cause and so on.The number of articles amounting to 41 within a period of 3 months and their contents are evident to establish the qualities of our TDRITES.Finally,TDRITES are both VEER and VIZHUDHUGAL.S.VENKATARAMAN EAIL s.venkat1943@gmail.com

    ReplyDelete