Sunday, March 25, 2012

அவனைத்தேடி ஒரு பயணம்,.......


காலையில் புறப்பட்டேன்,.....
எத்தனையோ திட்டங்கள் மனதில்
எத்தனையோ பொறுப்புகள்,.என் மேல் சுமைகளாக,
நாட்கள் கடந்து கொண்டுதான் இருக்கின்றன,
ஒவ்வொரு நாளும் புது புது திட்டங்கள்.....
செயல்கள் பொறுப்புகள்.....

இயந்திரத்தனமானவன் மனிதனே......
என்று எனக்குள் ஒரு குரல்,........
மனம் எனும் நதி எங்கும் நிற்காது
என்பதை உணரு,
எதுவும் நிலை இல்லை என்பது புரியும்,
நதியின் கரையில் ஓராயிரம்
உறவுகள்.......உணர்வுகள்
வந்தும் சென்றுமாகத்தான் இருக்கும்.

உறவுகளையோ உணர்வுகளையோ துறப்பதினால்
பிறப்பின் பயனை அடைந்துவிட முடியுமோ?
நான் ஒரு கனவு கண்டேன்,
ஒரு சிறிய கல் என் மேல் திடீரென விழுந்தது,

அப்பொழுதுதான் எனக்குள் எத்தனை பதட்டம், வலி.
கனவு கலைந்ததும் தான் புரிந்தது நிஜம் எதுவென்று.
நிழலை நிஜமாக்கி மழலை மொழி பேசும்
வாழ்க்கை என்றும் நிலையற்ற மனம் வீசும்.
உணர்ந்தேன்,.....
இந்த பிறப்போ,. இன்னும் எத்தனை பிறப்பாகினும்வாழ்க்கை என்பது......உன்னுள் உறைபவனை உணரும் பயணம்.
அன்புடன்
ஹரி 

No comments:

Post a Comment