Thursday, March 1, 2012

Marudha Natiyanjali-By Sridhar

மருதா   நாட்டியாஞ்சலி                                           நமது மஹாலிங்க ஸ்வாமி  கோயிலில்  
கடந்த ஜனவரி மாதம் 8 -ம் தேதி திருவிடைமருதூரில் எடுக்கப்பட்ட முதல் மக்கள் அரங்கம் JAYA TV - ல் ஒளி பரப்பட்ட நாள்   அந்நாள் நமது ஊரை சேர்ந்த மற்றும் இதில் தங்களை ஈடுபடுத்தி கொண்ட நம் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான நாள்.

அன்று மாலை நான் நமது தோசாவின் தலைவர் திரு. மூர்த்தி அவர்களை செல் போனில் தொடர்பு கொள்ள முயன்றேன் . அவர் போனை எடுக்கவில்லை  ஆனால் ஒரு எஸ் ம் எஸ் மட்டும் பதிலாக வந்தது.  தான் ஒரு டான்ஸ் ப்ரோகிராமில் இருப்பதாக ஒரே ஒரு வரியில். ஆனால் இரவு சுமார் 9 .30 மணியளவில் திரு. மூர்த்தி சார் அவர்களிடமிருந்து எனக்கு செல்போன் எடுத்தவுடன் அவர் ஸ்ரீதர்.......... இப்போது நான் ஒரு அருமையான விஷயம் ஒன்று கூற போகிறேன். இன்று மாலை எனது அக்காவின் பேத்தியினது பாரத நாட்டிய நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். அவள் தனது எட்டு வயதிலிருந்து   பொது   மேடைகளில் நாட்டியம் ஆடுகிறாள். சுமார் பதினெட்டு வருடங்களாக நிகழ்சிகளில் பங்கேற்று வருகிறார்.

நிகழ்ச்சி முடிந்து அவளிடம்  சொல்லிக்கொண்டு நான் விடைபெறும் தருவாயில் அவள் என்னை அழைத்து மாமா நான் இன்று   TV - ல் உங்களை பார்த்தேன்........... விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சி மூலமாக..... உங்கள் ஊரும், கோயிலும்  அதனை பற்றிய  செய்திகளும்  மிக மிக அருமையாக இருந்தது............. அப்போதுதான் எனது தந்தை என்னிடம்  சொன்னார்..........  இதனை ஏற்பாடு  செய்தவர்களில் மூர்த்தி மாமாவும் ஒருவர் என்று............   என் மனதில் பட்டது   உடனடியாக உங்களை நான் இன்று பார்க்க வேண்டும் என்று........ நல்ல வேளையாக எனது நாட்டியத்தை பார்க்க நீங்களும் வந்து விட்டீர்கள்.

நான் கடந்த பதினெட்டு வருடங்களாக சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். மேலும் அதனை தொடர்ந்து நடைபெற்று வரும் திருவாரூர் மற்றும் கும்பகோணம் நாட்டியாஞ்சலியிலும் கலந்து கொள்கிறோம். நான் நாட்டியாஞ்சலி   செல்லும் போதெல்லாம் அந்த  திருவிடைமருதுருக்கும் செல்வோம் சிவராத்திரியில் நடு இரவு சாமி தரிசனம் செய்வோம். என்னுடன் கோயிலுக்கு எனது குழுவினரும் வருவார்கள் மற்ற குழுவினரும் வருவார்கள். உங்கள் ஊரில் அந்த மஹாலிங்க ஸ்வாமி சன்னதியில் ஒரு vaibration இருக்கிறது. அதனை   எங்கள் அனைவராலும்  உணர்ந்து  கொள்ள முடிந்தது .  இதனை நான் மட்டும் சொல்லவில்லை எங்கள் குழுவினரும்  மற்ற குழுவினரும் உணர்கிறார்கள் அதனை அனைவரிடமும் சொல்கிறார்கள்.

மாமா எனக்கு அந்த திருவிடைமருதூர் மஹாலிங்க சுவாமியின் சன்னதியில் சிதம்பரம் நாட்டியாஞ்சலி   போல் சிவராத்திரியன்று ஒருநாட்டியாஞ்சலி செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை......... மக்கள் அரங்கம் நிகழ்ச்சியினை பார்த்த பின்னர் எனக்கு உங்கள் ஊரில் தற்போது சாத்தியம் என்று படுகிறது........... உங்களால் ஏற்பாடு செய்து தரமுடியுமா............ நாங்களும் உங்களுக்கு இது குறித்து விவரமாக சொல்லி உதவுகிறோம்....... நீங்களும் சற்று யோசித்து எனக்கு பதில் சொல்லுங்கள் என்று சொல்கிறார்.

நாம் செய்ய முடியமா ஸ்ரீதர்..... நீ என்ன சொல்கிறாய் என்று கேட்டார் திரு மூர்த்தி சார் அவர்கள்

சார் நீங்கள் தோசாவுக்கு தலைவர், ராம்ஜி செயலாளர் நீங்கள் இருவரும் பேசுங்கள்  அனைவரது  அபிப்ராயத்தையும்   கேளுங்கள்...........  செய்யலாம் என்றால் செய்யலாம்................... இதுதான் நாடியாஞ்சலியின் விதை............ மறுநாளே TDR Times - ல் அனைவருக்கும் இது குறித்து  ஒரு மெயில் அனுப்பப்பட்டது........... எவரிடமிருந்து எந்த விதமான ஆட்சேபமும் வரவில்லை.  அதுவே ஆதரவான ஒரு    சமிக்யையாக எடுத்து கொள்ளப்பட்டு அர்ச்சனாவிடம் தெரிவிக்கப்பட்டு அடுத்த ஞாயிற்று கிழைமை ஒரு அட்ஹாக் கமிட்டி மாதிரி ஒரு சிறிய கூட்டம் சென்னையில் ஒரு ஐந்து பேர் மட்டும் கலந்து கொண்டு நடைபெற்றது.

குமாரி அர்ச்சனாவுடன் வந்த சுரேஷ் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாட்டில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் ஏற்பாடுகள்  குறித்து பல விவரங்களை அனைவருக்கும் சொன்னார்கள்.  முதலில்  கோயிலில் அனுமதி வாங்க வேண்டும், நாட்டிய குழுவிற்கு  தெரியபடுத்த வேண்டும் என்பன முதல் நிகழ்ச்சி அமைப்பு வரை அனைத்து விவரங்களையும் சொல்லி கொடுத்தார்கள்.

அந்த குழு மூர்த்திசார் தலைமையில் அன்று முதல் செயல்பட ஆரம்பித்தது. எனது உள்மனதிலிருந்து சொல்ல வேண்டுமானால் அவர் மட்டும் முழு மூச்சுடன் செயல்பட்டார். அனைத்து ஏற்பாடுகளையும் அவரே முன்னின்று செய்ய தொடங்கினார். அனைத்து ஸ்பான்சர்களையும் அவரே  பிடித்து மேடை முதல் நிகழ்ச்சி வரை அனைத்து வேலைகளையும் இரண்டு முறை திருவிடைமருதூர் சென்று முடித்து விட்டார்.

குமாரி அர்ச்சனா அவர்கள் தனது குழுவின் மூலமாக ஒரு நாள் இரவு முழுவதற்கும் தேவையான சுமார் பதினாறு குழுக்களுக்கும் ஏற்பாடு செய்துவிட்டார். அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன்  மனமுவந்து வர சம்மதம் சொல்லி விட்டனர். நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாய் கலைமாமணி முத்தரசி   அவர்கள் நிகழ்ச்சிக்காக நமது ஊருக்கே வந்து நட்டுவாங்கம் செய்தார்.

நமது தோசா நிகழ்சிகளுக்கு எப்போதும் உதவி செய்யும் நமது ஊர்  நண்பர்கள் அனைவரும் தாமே ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியாக நினைத்து மறுநாள் விடிகாலை ஐந்தரை மணிவரை இருந்து அனைத்து உதவிகளையும் செய்தனர்.

நிகழ்ச்சி சுமார் மாலை ஐந்து மணியளவில் நாதஸ்வர இசையுடன் தொடங்கி வேதகோஷம் மற்றும் சிறு உரையுடன் தொடங்கியது. ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நாட்டிய கலைஞ்ர்களும் மேடையில் நாட்டியமாடினர். கூட்டத்தினர்   சிறு துளி கூட அசையாமல் இருந்தனர். ஏற்பாடு செய்யப்பட  நிகழ்சிகளுக்கும்  அப்பாற்பட்டு நமது ஊரில் நாட்டியாஞ்சலி செய்தி கேட்டு குடந்தையில் பங்கேற்ற மலேஷிய நாட்டு   நாட்டிய குழு நமது ஊருக்கு வர விரும்பி தொடர்பு கொண்டது. மகிழ்ச்சியுடன் அவர்கள் அழைக்க பட்டார்கள். கடைசி நிகழ்ச்சியாக அவர்களது நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்று நமது மருத நாட்டியாஞ்சலி முடிவுக்கு வந்தது.

செல்வி அர்ச்சனா அவர்கள் சொன்னார்களே நமது ஊரின் மஹாலிங்க ஸ்வாமி சன்னதியில் ஒரு விதமான  vibration இருக்கிறதென்று  அது குறித்து ஒரே ஒரு கருத்து மட்டுமே சொல்ல முடியும் 

பொதுவாக நமது ஊரில் ஒரு under current  இருக்கிறது. அதனை நம்மில்  பலருக்கு பல நேரங்களில் கண்ணால் பார்க்க முடியாமல் இருக்கும். ஆனால் நாம் சில நல்ல வேலைகளை அல்லது சேவைகளை செய்ய முற்பட்டால் அது நம்முடன் சேர்ந்து நமக்கு ஒத்துழைக்க ஆரம்பித்து விடும்.    நாம் சற்று மெதுவாக செய்தால் அதுவும் மெதுவாக செய்யும்.   வேகமாக செய்தால்  அதுவும் தனது வேகத்தினை காட்டும்.    நாம் எவ்வளவு பளுவான வேலைகளை செய்தாலும்    அதுவும் நமக்கு ஈடு கொடுத்து  மிக பளுவாக உதவிகளை செய்யும்.    நாம் எதுவுமே செய்யாமல் இருந்ததால் அதுவும் எதுவும் செய்யாது. அந்த under current க்கு பெயர்தான் ஸ்ரீ ஜோதிர் மகாலிங்கம் 
 இப்பொழுது நம் அனைவருக்கும்  ஓரளவு  புரிந்திருக்கும் நம்மை இயக்கும் அந்த வஸ்து மேலே குறிப்பிட்ட அந்த under current - ன்மூல்யங்கல்தானே ஒழிய வேறேதும்  இல்லை என்று
.
 Good Thinking, planning, precision, courage, conviction , coordination, accomadating,  inclusivness,  flexibility, exectution, happiness and finaly total satifaction
யாரது பெயரினையும் சொல்லாமல் இந்த கட்டுரையினை நான் எழுதி முடிக்க இருந்தேன் இருப்பினும் என்னால் அது முடியவில்லை. எனக்கு வேறு வழியும் தெரியவில்லை நான் சொல்ல விரைவது   கீழ்கண்ட ஒரே ஒரு  சிறிய வார்த்தைதான்
 
இந்த மருத நாட்டியாஞ்சலியினை நமது மூர்த்தி சார் அவர்கள்  மிக மிக நேர்த்தியுடன் செய்து ஒரு பெரும் கீர்த்தி பெற்று விட்டார் என்பதுதான்.
 
ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் நிறுத்தினால் போதும்...........   நம்மால் எதுவும் முடியும்... முடியாதது என்று ஒன்றும் இருக்காது....  நமது முன்னோர்களின் ரத்த அணுக்களிலிருந்து வந்தவர்கள்தான் நமது வீராதி வீரர்களும் சூராதி சூரர்களும்
நமது மூர்த்தி சாரும் இன்று அவர்களில் ஒருவராகிறார்.

இந்த முதலாம் மருதா நாட்டியாஞ்சலி மூலம்
                    திக்கெட்டும் பரவட்டும் நம் திருவிடைமருதுரின் புகழ்  
 
நன்றி
ஸ்ரீதர்


தோசாவின் மருத நாட்டியாஞ்சலி ௨௦௧௨
ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோயில்
திருவிடைமருதூர்
20 - 02 - 2012

Photos can be seen in the link
 
 
102_3567.JPG

Sri Murthy with Mr Shanmuga Baskar

No comments:

Post a Comment