Thursday, March 1, 2012

ஒரு உண்மை தகவல்

Dear All!
 
Just for one reason of my not having the facility of typing in Tamil font, I am sending this reply in English with a heavy heart - in the sense I am unable to compete with the language that has been emotionally embedded with the background of a great tragic life of our old renowned musicians produced by our soil TDR. When I read the article, it touched my heart and ignited my flame of sympathy which could even go to the extent of burning out the creator HIMSELF as to how much HE is playing with such art and artists to be completely submerged into the cycle of time. In other words the title which reflects the feeling is those great artists who have  dissolved into the flood of time and completely vanished from the minds of the present generation. What a Divine drama that we are facing in this world and probably the cycle of life tells the story and comes out with the gist of the Mahabharata where Krishna says what today is for you might be for another tomorrow!  What great people to hold their prestige.
 
There are plenty of people who have risen and vanished and as far as possible if we remember them during our days, that is the tribute that we pay for them.  TOSA has extended its arm towards multifarious purposes and we will continue to strive hard to bring out the treasures of TDR soil with our capability of having many connections which will be knitted like a web where we will not leave any connection nor any chance to explore and exploit the opportunities to bringing about the fame and name of our Thalainagaram
 
TDR times should  keep up its  writings on matters of treasure which  could lead people into mesmorising moments by bringing out hidden truths and especially  articles will serve as references to all of us. Really we all appreciate the joint  efforts on this count and  let us continue the   tremendous and plaudable job where the appreciation is shared by one and all equally!
 
Hope our Sridhar must be the bridging instrument for such articles as he has hidden treasures in his hardware of brain!
 
Sincerely,
R.Sridharan
No Man is rich enough in this world to buy back his past!
HELP EVER
HURT NEVER
------------------

ஒரு உண்மை தகவல்
அல்லது
மறுப்பு கடிதம் 
கடந்த வாரம் கால வெள்ளத்தில் கரைந்து போன கலைஞ்ர்கள் என்னும் தலைப்பில் திரு. ப. கோலப்பன் என்பவர் எழுதியதாக ஒரு கட்டுரை சொல்வனம் என்னும் மாதமிருமுறை  இணையதள இதழில் 31 / 12 / 2011 வந்திருப்பதாகவும் அதன் மறு பதிப்பு TDR Times - ல் வெளியிடப்பட்டு இருந்தது. http://solvanam.com/ 

இதே கட்டுரை சமீபத்தில் The Hindu தினசரியில்  வந்திருந்தது. பெரும்பாலானவர்கள் படித்திருப்பார்கள் என நம்பலாம். நானும் படித்தேன்.

நான் இந்த கடிதம் எழுதுவதற்கு காரணம் The Hindu - ல் வந்த தகவல்களை தாண்டி மேலும் ஒரு தகவல் மிக மிக தவறாக அதுவும் மிகவும் மிகைபடுத்தப்பட்டு அது சொல்வனம் இணைய தளத்தில் வெளியிடப்படிருப்பதை மறுப்பு தெரிவிக்கத்தான்.

சொல்வனம் இதழில் தரப்பட்ட தவறான தகவல் இதுதான்

இந்த ஊரில் ஒரு நாயுடு ரைஸ் மில் வைத்திருந்தார். அரையணாவுக்கு நெல் அரைத்துத் தருவார். கூலி அதிகமாக இருக்கிறது என்று எல்லோரும் வீருசாமி பிள்ளையிடம் கூறினார்கள். நாயுடு அவருக்கு நண்பர். காலணாவுக்கு அரைத்துத் தருமாறு நாயுடுவிடம் கேட்டுக் கொண்டார். நீரு ஒரு மில் வைச்சு காலணாவுக்கு அரைத்துக் கொடும் என்றார் நாயுடு ".

மேற்கண்ட இந்த தவறான தகவலை எழுதிய கட்டுரையாளருக்கு கீழ்கண்ட சில விவரங்களை தர விரும்புகிறேன்.

காலஞ்சென்ற இசை கலைஞ்சர் திரு. வீருசாமி பிள்ளையும் சரி திரு. ஜெயராம நாயுடுவும் சரி இருவருமே திருவிடைமருதூரில் சிறு வயது முதல் அடி மட்டத்திலிருந்து தங்களது வாழ்க்கையில் சிறுக சிறுக வளர்ந்து ஒரு வளமான நாணயமான  ஒரு வாழ்க்கையினை அமைத்து கொண்டவர்கள். அதுவும்  தங்களது உழைப்பையே மட்டுமே மூலதனமாக வைத்து.

திரு வீருசாமி பிள்ளை அவர்கள் பிரபல  இசை கலைஞ்சர் என்னும் முறையில் இருந்து விட்டதால் அவரது வாழ்க்கை சம்பவங்கள் சாதாரணமாக வெளிவந்துவிட்டன. சொல்வனம் இதழிலும் அப்படியே வந்திருக்க வாய்ப்பு.

ஆனால் திரு. ஜெயராம நாயுடு அவர்களை பற்றி இந்த கட்டுரையாளருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்று தான் நான் நினைக்கிறேன். அப்படி தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் எழுதி இருக்கவே மாட்டார்.

எனவே எனக்கு தெரிந்த ஜெயராம நாயுடு அவர்களை பற்றி நான் தெரியபடுத்துவதுதான் சரியாக இருக்கும் என்று நான் சில தகவல்களை சொல்ல விரும்புகிறேன்.

காரணம் நான் திருவிடைமருதூரில் பிறந்து வளர்ந்து 1984  வரை அவ்வூரிலேயே இருந்திருக்கிறேன். மேற்படி இருவரையும் நான் பார்த்திருக்கிறேன்.

திரு. வீருசாமிபிள்ளை வடக்கு வீதியில் தனது வீட்டு திண்ணையில் காலையில் நாதஸ்வரத்தில் சாதகம் செய்வதையும் பார்த்திருக்கிறேன். திரு. ஜெயராம நாயுடு மில்லில் கல்லாவில் அமர்ந்து இருப்பதையும்  சரி மிஷினில் மாவு அரைத்து கொடுப்பதையும் சரி இரண்டையுமே பார்த்திருக்கிறேன்.

திரு ஜெயராம நாயுடு  அவர்கள் தனது சிறு வயதில் முதன் முதலில் ஒரு டைலர் கடையில் சட்டைக்கு காஜா தைத்து கொடுக்கும் ஒரு சிறிய பையனாக தனது வாழ்க்கையினை தொடங்கியவர். .

தனது அயராத உழைப்பின் மீது இருந்த நம்பிக்கை ஒன்றை மட்டுமே மூலதனமாக வைத்து வாழ்க்கையில் உயர்ந்தவர். 

மேற்படி இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். சாதாரண நண்பர்களாக அல்ல மிக மிக நெருங்கிய நண்பர்களாக அதுவும் தங்களது வாழ்நாள் முழுவதும்

திரு வீருசாமி பிள்ளை அவர்கள் வசதி ஏற்பட்ட பின் தனது  வசதி வாய்ப்பினை மேலும் பெருக்கி கொள்வதற்காக ஒரு மில்லை ஏற்படுத்தினாரே தவிர . தொழில் போட்டி காரணமாகவோ, பொறாமையினாலோ, சண்டையினாலோ  அல்லது வீம்புக்காகவோ அவர் மில்லை ஏற்படுத்தவே இல்லை என்று இதன் மூலம் உங்களுக்கு தெரிய படுத்த விரும்புகிறேன்.

மேற்கண்ட அந்த இருவருமே திருவிடைமருதுரின் மாமனிதர்கள் அதில் ஒருவரை பற்றிய தகவல்களை கொடுப்பதற்காக  மற்றொருவரை பற்றி தவறான தகவல் கொடுத்தால் எப்படி சரியாக இருக்கும். 
ஒரு உண்மையினை பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதன் பொருட்டுதான் இந்த கடிதம்

வணக்கம்.

இப்படிக்கு
G.SRIDHAR
S/o. Late Ganesan ( Vanchi sirs  Brother)
previously resided at No. 69 Mahadaana Street,
Tiruvidaimarudur - 612104.
Cell: 9941892821 / 044 - 22281814

-----------

இதே போன்று ஒரு மறுப்பு செய்தி எங்களுக்கு திரு கோபாலகிருஷ்ணன் ( s/o Sri Jayarama Naidu) அவர்களிடமிருந்து வரபெற்றோம்.  திரு ஸ்ரீதர் எழுதிய மறுப்பு செய்தி சொல்வனம் இணையதள பத்திரிக்கைக்கு அனுப்பப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்
-TDR Times

No comments:

Post a Comment