இந்த TDR Times - ல் நான் இப்படி எழுதுவதற்கு காரணம் இருவர். ஆம் என்னுள் இருந்த என்னை எனக்கே காட்டியவர்கள் அந்த இருவர். மேலும் ஒவ்வொரு வாரமும் என்னை மேலும் மேலும் எழுத என் நெஞ்சில் நம்பிக்கை ஊட்டியவர்களும் அந்த இருவருமே. அதனால்தான் என்னவோ இந்த TDR Times - ல் எனது பகிர்வுகள் ஒரு வைகறைக்கான வாய்ப்பே இல்லாமல் சீன பெருஞ்சுவற்போல் நீண்டுகொண்டே போகிறது.
யார் அந்த இருவர் வேறு யாரும் அல்ல அந்த இருவர் நம் அனைவருக்கும் மிக மிக அறிமுகமானார்கள்தான் அந்த இருவர்.
பீடிகை அதிகமாக இருப்பதாக எண்ண வேண்டாம். அந்த இருவர் யார் என்ற விடையோடு நான் இதை தொடங்கி விடுகிறேன்.
ஒருவர் எனது ஆரம்ப பள்ளி நாட்களிலிருந்தே என்னுடன் கூட படித்த ராம்ஜி நீண்ட நாளைய சம வயது நண்பர்.
மற்றொருவர் என்னை விட சுமார் பதிமூன்று வயது மூத்தவர். தோசாவின் முதல் தலைவர், நமது ஊரில் அவரது சம கால நண்பர்கள் அவரை சுப்புணி என்று அழைப்பார்கள். நாம் அனைவருமே அவரை இண்டுஜுவல் என்று அழைக்கிறோம்.
இண்டுஜுவல் வீட்டு கிரஹபிரவேசம், அந்த வீட்டில் திருவிடைமருதுரின் அன்னாளைய இந்நாளைய பிரமுகர்கள், நண்பர்கள் பெரியவர்கள் அனைவரும் வந்த வண்ணமும் சென்ற வண்ணமும் இருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் நான் அங்கு இருக்கும் போது தெருவின் எதிரே நமது ஆசிரியர் திரு. G.R.மகாலிங்கம் சார் அவர்கள் அவருக்கே உரித்தான நடையில் கிரஹபிரவேசத்திற்கு
வந்துகொண்டிருக்கிறார்.
இதனை கண்ட இண்டுஜூவலின் அண்ணா திரு. மாலி சார் அவர்கள் GRM சார் அவர்களை மாலி வா........ வா........ வா........ சௌரியமா......... எப்படி இருக்கே.
பதிலுக்கு GRM சார் நீ எப்படிடா இருக்கு மாலி என்று இரு மகாலிங்கமும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் விசாரித்துகொண்டே ஒருவர் தோளை மற்றொருவர் பிடித்துகொண்டு வருகிறார்கள்
GRM சார் கிட்டே வர வர எனது கால்களுக்கு அந்த பதினைந்து வயதில் இல்லாத ஒரு வித நடுக்கும் இந்த நாற்பத்தைந்து வயதில் திடீரென லேசாக தென்பட்டது. எனதருகே சச்சு, காபா கொட்டப்பாக்கு சங்கர் நாகு மற்றும் பலர் அங்கிருந்தார்கள். அதற்குள் எனதருகே வந்த திரு GRM சார் எனது முதுகை தட்டி ஏய் என்றார்.
சாடாறேன்று எழுந்த எனக்கு ஒரு நொடிப்பொழுதில் ஒன்றுமே புரியவில்லை எதிரே பார்த்த உடன் உள்மனதில் ஏற்பட்ட ஒரு விதமான குத்தல் காரணமாக சார் என்று............. ஷாஷ்டாங்கமாக அவரது காலில் விழுந்து..........
என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க சார்............
அப்பறம் நான் எழுந்துண்டு பேசறேன் சார் என்றேன்.
ஏய்......... என்னடா இது............ எழுந்துருடா............. மன்னிச்சுட்டேன்டா............ என்ன சொல்ல போற..........
நீ மட்டும் தான் வந்தியா பூசத்துக்கு குடும்பத்தோட வல்லையா..............
இல்ல சார் நான் மட்டும் தான் வந்தேன்...........
எதுக்கு நமஸ்காரம் பண்ணே.........
மன்னிப்பு கேட்டே............
நேக்கு ஒண்ணுமே புரியல்லே.................
சார் 1978 - ல நான் ஒங்க கிட்ட ஒன்பதாம் கிளாஸ் c செக்க்ஷன்ல படிச்சேன். நீங்கதான் கிளாஸ் டீச்சர் எனக்கு. அப்பெல்லாம் நீங்க ஒரு ஜோல்னா பைய தோளுல மாட்டிண்டு வருவிங்க ஞாபாகம் இருக்கா. நான் தெனமும் அப்பெல்லாம் ஒரு பிடி வேப்பலை குப்பையை எடுத்து ஒங்க ஜோன்லா
பைல போட்டுடுவேன் சார். இது யாருக்கும் தெரியாது........ஒங்களுக்கு தெரியவே தெரியாது சார். நீங்களும் அதை அப்போ வெளிபடுத்தினது இல்ல.
எனக்கு ஒரு மூணு வருஷம் முன்னாடி தோசா விழாவுல உங்கள
கண்ட உடனேயே பாத்து சொல்லி மன்னிப்பு கேக்கனமுன்னு தோணித்து
இப்பதான் ஒங்கள நான் பாத்த ஒடனே சட்டுன்னு எனக்கு வேற வழி தெரியல்ல அதான் காலுல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டேன்.
படவா நீதானா அது.......... நான் அப்ப அந்த ஆனக்குட்டி சேகர அதுக்காக சந்தேகப்பட்டு விசாரிச்சேன்.
பரவா இல்ல......... எப்படி இருக்க நீ......... சௌரியமா............ எத்தன கொழந்தேள்............
இதுதான் முப்பது வருடங்களுக்கு பின் ஒரு பாவ மன்னிப்பு
ஸ்ரீதர்
No comments:
Post a Comment