பொதுவாக இல்லங்களிலும் ,ஆலயங்களிலும் கொண்டாடப்பட்ட
விநாயகர் சதுர்த்தி எப்பொழுது பொது விழாவாக உருவெடுத்தது என்பது சர்ச்சைக்கு உரிய விஷயம்.சரித்திர
பூர்வமாக சிவாஜி மன்னர் ஆண்ட சமயத்தில் (1630-1680)பொது வழிபாடு புனேவில்
நடை பெற்றதாக தெரிகிறது.விநாயகர் மராத்திய மக்களின் குல தெய்வம் ஆனதால் .பின்
PESWA க்களின் ஆட்சி காலத்திலும் (1818 வரை)தொடர்ந்தது .அவர்கள் வீழ்ச்சிக்குப்பின்
.ஆதரவு சரிவர இல்லாததன் காரணமாக நாளடைவில் குறைந்து திரும்பவும் குடும்ப நிகழ்ச்சியாகவே
மாறியது.
திருப்புமுனையாக .இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் (1893) பாலகங்காதார
திலகர் மக்களை ஒன்றுபடுத்த குடும்ப நிகழ்ச்சியை பொது நிகழ்ச்சியாக அசுர
வேகத்தில் மாற்றினார். கடவுள் யாவருக்கும் பொது.பிராமணர்.பிராமணர் அல்லாதவர்
யாவருக்கும் சொந்தமானவர்.மற்ற மதத்தினர் உட்பட ஒற்றுமையோடு ம்,உற்சாகத்தோடும் ஈடுபடவேண்டும்
என போதித்து வெற்றியும் கண்டார்.குறிப்பாக,விநாயகர் விஜர்ஜன் அன்று பலதரப்பட்ட மக்கள்
கூடி ஒன்று பட்டனர்.இதனால் மறைமுகமாக தேசிய உணர்வும் தூண்டி விடப்பட்டது.விழா நிகழ்சிகளில்
.அறிவு ஜீவிகள் கலந்து கொண்டு விவாதித்தனர்.கவிதை அரங்கம்.நாடகங்கள்.சங்கீதம்.கிராமிய
நிகழ்சிகள். இடம் பெற்றன.திலகரின் தேசிய உணர்வு இலட்சியங்களும் மக்கள் மனத்தில் இடம்
பெற்றன.பின்னர் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த போதும்,விழா தொடர்ந்து நடை பெற்று
இப்பொழுது பூதாகரமாக நிலை பெற்றுள்ளது.
ஆகமக விதிப்படி பல நூற்றாண்டுகளுக்கும் முன் கட்டப்பட்டும்,மந்திர உச்சாடானங்கள்
ஓதப்பெற்றும்.பு னிதத் தன்மையும்,சாந்தித்யமும் கொண்டுள்ள பல ஆலயங்கள் பூசையின்றி.இருண்டு
கிடக்கும் சூழ்நிலையில்,பொது இடங்களில் 10 தினங்களுக்கு மட்டும் நிலை கொண்டுள்ள இந்த
பொது வழி பாட்டு நிகழ்சிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வரவு செலவு ஆவதும்,பல அரசியல்
தலைவர்கள்,பிரமுகர்கள்,சினிமா புள்ளிகள் திடீர் பக்தர்களாக உருவெடுப்பதும்,மக்கள் கூட்டம்
லட்சக்கணக்கில் வருவதும் காலம் செய்த கோலம் தான்.
மும்பையில் சித்தி வினாயகராலயம்,டிட்வாலா ஆலயம் ,அஷ்ட விநாயகர் ஆலயங்கள்
போன்றவை முறையாக அமைக்கப்பட்டு ,குடி கொண்டுதினசரி பூஜை,கள் நடை பெற்று பக்தர்களை
ஈர்க்கின்றன.மண்டலகள் நடத்தும் 10 நாள் கொண்டாட்டம் எப்படி என்று நேரில் பார்த்தால்தான்
தெரியும். நிர்ணயித்தபடி கட்டாய வசூல்.பொது வீதிகளை அடைத்து பிரம்மாண்டமான பந்தல்கள்.அலங்காரங்கள்.24
மணி நேரமும் பயங்கர சங்கீதம்.(உச்ச நீதி மன்ற உத்தரவால் இப்போது இரவு 10 மணி வரை) காது
செவிடு ஆகும் அளவுக்கு சப்தமான பாட்டுக்கள்.ஆட்டங்கள்,சினிமா நிகழ்சிகள்,சினிமா நடிகர்களின்
வருகை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.நடு ரோடுகளில் குழி பறித்து பந்தல்கள் போடுவார்கள்.
முடிந்தபின் அப்படியே விட்டுவிடுவார்கள் ரோடுகள் மழைக்காலத்தில் பொது மக்களுக்கு
துன்பங்களை கொடுக்கும்.குப்பைகளை அகற்ற பல லட்சங்கள் செலவாகும்.சிலைகளை அழைத்துவரும்போதும்
கடலில் கலக்கும் போதும் மேளதாள ,Band ,தப்பு தாரைகளுடன் பலகிலோ மீட்டர்கள்
வரை உச்ச ஒலி பெருக்கி சாதனங்களுடன் காதை செவிடாக்கும் கோர இசை.ஆண்
பெண் களின் விரும்பத்தகாத நடனங்கள் தாண்டவமாடும்.இதய நோயாளிகள் எங்கும் ஒளிய முடியாது.
காலமாற்றம் கருதிஇப்போது பல மண்டல்கள் தங்களையும் மாற்றிக்கொள்ள
முயற்சிக்கின்றன. மாசு கட்டுப்பாடு,சமுக சேவையை மனதில் கொண்டு பல நடவடிக்கைகள்
எடுத்துள்ளன.plaster of Paris ல் குடிகொண்ட பல சிலைகள் களிமண் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.பிரசாதங்கள்
துணி,காகிதப்பைகளில் வழங்கப்படுகின்றன.குப்பைகள் அடிக்கடி அகற்றப்படுகின்றன.ரத்த தான
முகாம்,மருத்துவ உதவிக்கு நிதி aambulance ,பள்ளி சிறார்களுக்கு புத்தகம்,சீருடை.பண
உதவி,ஓவியம்,இசை போட்டிகள் மரம் நடுதல் போன்றவை வளர்ந்து வருகின்றன.
மண்டல்கள் விநாயகருக்கு அலங்காரம் மட்டு மின்றி ப ல
thematic scenes .புராதன கட்டிடங்களின் replica முத லியவைகளைஅமைப்பதும்
உண்டு உதாரணமாக தாஜ்மஹால்,உதயபூர் அரண்மனை,ராமேஸ்வரம்,தஞ்சை.மதுரை ,ஹம்பி,கோயில்கள்,டெல்லி
செங்கோட்டை.போன்றவை.
இந்த ஆண்டு,சோம்நாத் ஆலயம்,மைசூர் அரண்மனை,சினிமாவின் 100 ஆண்டு
சாதனைகள் ,Film City இடம் பெற்றுள்ளன.மேலும் ஒரு மண்டல் 3லட்சம் செயற்கை
வைரங்கள் கொண்டு விநாயகரை உருவாக்கி உள்ளது.மற்றொரு மண்டல் COMETIC பொருட்களான பவுடர்
டப்பாக்கள்,லிப்ஸ்டிக்,HAIRBANDS ,Bangles ,nailpolish முதலியவற்றால்
சிலையை உருவாக்கி உள்ளது. முடிவில் கடலில் விட மாட்டார்களாம்.பிரித்து
ஆஷ்ரம குழந்தைகளுக்கு அளிப்பார்களாம்.
விநாயகர் பல வேடங்களிலும்,வண்ணங்களிலும் காட்சி அளிப்பார்.சுற்றிலும்
லட்சக்கணக்கான மின் விளக்குகள். மக்கள் விநாயகரை வணங்குவதை விட இந்த காட்சிகளை
ரசிக்கத்தான் கூடுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
நிகழ்சிகளுக்கு செல்வோம், மும்பையில் மிகப்பெரிய மண்டல்களைப்பார்ப்போம்.முதலாதவதாக
G .S .B மண்டல் மாதுங்கா பகுதியில்.மங்களூர் பக்தர்களால் நிறுவப்பட்டது.(223 கோடி இன்சூரன்ஸ்.)உள்ளதிலேயே
தெய்வீகத்தன்மையும்,புனிதமும்,பக்தியும்,கட்டுப்பாட்டுக்களுடனும்,ஆடல் பாடல் கூத்துக்கள்
இன்றி பூஜை,ஹோமங்கள் மட்டும் கொண்டு செயலாற்றி வருகின்றது.பந்தலில் நுழைந்ததுமே ஒரு
பெரிய ஆலயத்தில் பிரவேசிப்பது போன்ற உணர்வு.வேண்டுதல்கள்,துலாபாரம் .எப்பொழுதும் வேத
மந்திரங்கள் ஒலி அனுபவிக்கலாம்.இந்த ஆண்டு12 அடி விநாயகர் சிலை க்கு மட்டும்
21.6 கோடி சிலவுதங்க நகைகள் 80 கிலோ.ஒரு நபர் மட்டும் 2 கிலோ அளித்துள்ளார்.வெள்ளி
நகைகள்.மற்ற பூஜை பொருட்கள் கணக்கே கிடையாது.பூஜைக்கு பல மாதங்கள் முன்பே பதிவு.துலாபார
சமர்ப்பணம்.பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில்.தொண்டர்கள் ஆயிரக்கணக்கில்.பழியாக
கிடக்கிறார்கள்.Security and Police Force in Hundreds உடமைகளைக்காக்க பல காப்பிடங்கள்.எல்லாம்
பிரமிப்புத்தான்..விழா ஐந்து நாள் மட்டும்,
மற்றவை தொடரும். மற்ற செய்திகள்.
in Chennai PG Medical seat (MD Radiology)touched Rs 4.00
Crores in auction
கல்வி ஏலத்தில் போகும் அளவுக்கு வளர்ந்துள்ளது.சாமான்ய குடிமகனுக்கு
அன்று போல் இன்றும் பகற்கனவுதான்.
ஒரு குடும்ப நீதிமன்றம் ஒரு டாக்டருக்கு .மனைவியிடமிருந்து விவாகரத்து
வழங்கியுள்ளது.(மனைவியும் டாக்டர் தான் ) வழக்கு மனைவி சோறு போடுவதில்லை,மதிப்பதில்லை,சொன்னதை
கேட்பதில்லை.
மும்பை வெங்கடராமன்