ரொம்ப நாளைக்குப் பின்னர் ஸ்ரீதர் எழுதியிருக்கிறார். அது என்னவோ அவரது
எழுத்துக்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தான் போகின்றன. நீர்வீழ்ச்சி போல சரளமாக சொற்கள்
வந்து விழுகின்றன. எனக்கு நல்லாகவே தெரியும். அன்று டாக்டர். சாந்தாவுடன் கிட்டத்தட்ட
20 நிமிஷங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஸ்ரீதர் எதையுமே நோட் எடுத்துக் கொள்ள வில்லை.
ஆனால் ஒரு விஷயம் கூட விடாமல் அப்படியே எங்கள் சம்பாஷணையை பதிவு செய்திருக்கிறார்.
ஒரு இயக்கம் வெற்றி பெற, அந்த இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும்
உள்ளே ஒரு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க வேண்டும். AMBITION is the
keyword. நாம் வெற்றி பெற வேண்டும் எனற பேராசை நமது உந்து சக்தியாக இருக் கவேண்டும்,
இந்த ambition -அவ்வப்போது உள்ளிருக்கும் அந்த ஜூவாலையை வெளியே
உமிழ வைக்க வேண்டும். பெரியதாக கனவு காண வேண்டும்.
இருபது வருஷங்களுக்கு முன்பெல்லாம் DREAMING BIG பற்றியெல்லாம் எனக்குத்
தெரியாது. சில network marketing கூட்டங்களுக்கு ( விடாப்பிடி நண்பர்களுக்காக ) சென்ற
அனுபவம் உண்டு. பேச்சாளர் கேட்பார் ," நீங்கள் மாதம் எவ்வளவு ரூபாய் சம்பாதிக்க
விரும்புகிறீர்கள் ? "
ஒருவர் சொல்வார்," 10000 ரூபாய் ."
இன்னொரு பெண்மணி சொல்வார் ," 20000ரூபாய் ."
"உங்கள் கனவு இவ்வளவுதானா?"
திடீரென ஒரு குரல் எழும்பும்," ஒரு லட்சம் ரூபாய்."
" கொஞ்சம் பரவாயில்லை."
மீண்டும் ஒரு குரல் கேட்கும் ," ஒரு கோடி ரூபாய்."
பேசுபவருக்கு இவர் குரல் மட்டுமே நன்றாகக் கேட்டது.
" வெரி குட் , நில்லுங்க சார். உங்க பெயர், ஊரைச் சொல்லுங்க"
" திலீப் from நாகர்கோவில் "
" வாழ்த்துக்கள் திலீப், கண்டிப்பாக நீங்கள் சம்பாதிப்பீர்கள்.".
இதை யெல்லாம் dreaming big என்று சொல்ல முடியாது. நண்பருக்காக
உட்கார்ந்து விட்டு வர வேண்டியதுதான்.
நாம் பேசுவதுக்கு முன்னர் - பிறர் பேசுவதை கவனிக்கலாமே!
நாம் பதில் செயல் செய்யும் முன்னர் - சற்றே யோசிக்கலாமே !
நாம் செலவு செய்யும் முன்னர் - கொஞ்சம் சம்பாதிக்கலாமே !
நாம் கண்டனம் செய்யும் முன்னார் - சற்றே காத்திருக்கலாமே !
நாம் கடவுளை வணங்கும் முன்னர் - சற்றே மன்னிக்கலாமே
நாம் விலகலாம் என்னும் முன்னர் - ஒரு முறை முயற்சிக்கலாமே!
Earnest Hemingway கூறிய ஆறு தாரக மந்திரங்கள்.
ரொம்பவும் கவனித்து,யோசித்து,காத்திருந்து,முயற்சித்ததின் விளைவு
விலகக்கூடாது என்ற எண்ணம் உதித்தது. டிசம்பர் 27-ம் தேதி
TOSA sponsor செய்யும் cancer awareness programme நடைபெற இருக்கிறது. அடையார்
கான்சர் இன்ஸ்டிட்யூட்டுடன் சேர்ந்து நடத்தப்படும் நிகழ்ச்சி.
நிறைய பேர் ' தாம் எப்படிப்பட்டவர் ' என்பதை குறைவாக மதிப்பிடுகிறார்கள்.
' தாம் எப்படிப் பட்டவர் அல்ல' என்பதை அதிகமாக மதிப்பிடுகிறார்கள். இதை
மாற்றிக்கொண்டால்தான் சாதனையாளர் ஆக முடியும். சொல்லப் போனால் பெரிய கனவுகள் காண முடியும்;
நாம் எப்படிப் பட்டவர்கள் என்பதை அதிகமாகவே மதிப்பிட்டுக் கொள்ளலாம்.
ஏனெனில் we know that we all deserve it.
சென்னையில் இருக்கும் தோசா நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஆளுக்கு
20 பேர்களை volunteer ஆக ரெடி செய்யுங்கள். 27-ம் தேதி cancer
awareness கூட்டத்துக்கு அழைத்து வாருங்கள். ஒரு மிகப் பெரிய சமூகக் கடமை காத்துக்
கிடக்கிறது. TOSA -வின் பெருமையை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்ற நம் எல்லாருடைய
ஒத்துழைப்பும் தேவை.
இதைப் படித்த உடனேயே நீங்கள் செயலில் இறங்குவீர்கள் என்பது நிச்சயம்.
நன்றியுடன் ,
Murthy
No comments:
Post a Comment