விவேக்
சந்தோஷமாக இல்லை.
அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் Project
Manager-ஆக பணி புரிகிறார். ஆனால் அவரால் விமானத்தில் பயணிக்க முடிய வில்லை.Admin
-கிளையில் பல முறை சொல்லியும் பயனில்லை. இப்போது சதாப்தி எக்ஸ்ப்ரஸில் பயணிக்கும் அவர்
மெல்ல தன பையிலிருந்து laptop -ஐ எடுத்து வேலை செய்ய ஆரம்பித்தார்.
அவர் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் ," நீங்கள்
software company -ல் பணி புரிபவரா?" என்று வினவினார்.
விவேக் அவரை ஒரு கணம் நோக்கி 'ம் ' என்று முணுமுணுத்தவாறு, ஒரு
விலையுயர்ந்த காரைப்போல தன மடிக்கணினியை அதிக கவனத்துடன் தடவிக்கொடுத்தவாறு தன வேலையில்
மூழ்கிப் போனார்.
" சார், இன்றைக்கு நாடு முழுவதும் கம்ப்யூடர் ஆக்கிரமித்துள்ளது.
இந்த முன்னேற்றம் ஏற்பட உங்கள் போன்ற இளைஞர்கள் தான் காரணம் ." என்றார்
எப்போதுமே பாராட்டுதல்களுக்கு மயங்கும் விவேக் அவரைப்பார்த்து,
" Thanks " என்றார் .
" நீங்கள் ஆபீஸில் அமர்ந்து கணினியில் என்னமோ எழதுகிறீர்கள். அவை
வெளியே வந்து மிகப்பெரும் செயலாற்றலைப் பெறுகிறது.. இது எனக்கு பெரும் வியப்பை அளிக்கிறது."
என்றார் பக்கத்து சீட்காரர்..
தன்னைவிட தரம் குறைந்தவரை பார்ப்பதுபோல விவேக் .அவரைப் பார்த்தார்.
எளிமையான கேள்விக்கு கோபம் பதிலாகாது. ஆனால் விவேக் சொன்னார்," நீங்கள் நினைப்பது
போல இது அத்தனை சுலபமானது அல்ல. மிகவும் கடினமான, எளிதில் புரிந்து கொள்ள முடியாத சில
முறைகளைக் கையாள நேரிடும்."
"அப்படித்தான் இருக்க வேண்டும். அதனால்தான் உங்களுக்கு இவ்வளவு
அதிகமான சம்பளம் தருகிறார்கள் ""
அவர் சொன்னதை விவேக் ரசிக்க வில்லை. அவரிடம் மிச்சம் மீதியிருந்த நட்பான
குரலுக்கு விடை கொடுத்து விட்டு இப்போது சற்றே சண்டைக்காரனின் குரலில்
பேசத் தொடங்கினார். " எங்கள் சம்பளத்தை தான் எல்லாருமே பார்க்கிறீர்கள்.எங்கள்
கடின உழைப்பை யாருமே கண்டு கொள்வதில்லை. உதாரணமாக நாம் பயணம் செய்யும் இந்த ரயிலை
எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் எல்லா முன்பதிவு வசதியும் கணிணி மயமாக்கப் பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ரயில்கள். எந்த ஊரிலிருந்து, எந்த ஊ ருக்கும், எந்த
ரயிலில் வேண்டுமானாலும், ஆயிரக்கணக்கான முன்பதிவு மையங்களில் ஏதேனும் ஒன்றில் பயணச்
சீட்டு முன்பதிவு செய்ய முடியும். ஒரே தரவு தளத்திலிருந்து ஆயிரக்கணக்கான பரிமாற்றங்கள்.
இதற்கென தரவு ஒருங்கிணப்பு, .தரவுப்பாதுகாப்பு. இது பொன்ற ஒரு அமைப்பை வடிவமைப்பது
மற்றும் குறியிடுதல் - இவையெல்லாம் எவ்வளவு சிக்கலானது என உங்களுக்கு
புரிகிறதா? பொரிந்து தள்ளினார் விவேக்.
கோளரங்கத்தை பார்க்கும் குழந்தையைப் போல பக்கத்து சீட்காரர் வியப்பால்
உறைந்து போனார். " தரவு தளம் வடிவமைப்பது, குறியிடுதல் பொன்ற வேலைகளை நீங்கள்
செய்கிறீர்களா?"
" இந்த வேலைகளை நான் செய்து கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நான்
திட்ட மேலாளர். (Project Manager)"
" ஓ, அப்படியானால் இப்போதெல்லாம் உங்கள் தினசரி வாழ்க்கை சற்றே
எளிதாக இருக்கிறது, இல்லையா?"
இந்த கேள்வி ஒட்டகத்தின் முதுகில் கடைசி வைக்கோல் கட்டைப்போட்டது
போன்ற நிலையை விவேக்கிடம் ஏற்படுத்தியது.
" வாங்க சார், வாங்க. ஒரு கம்பெனியின் ஏணியில் மேலே போகப்போக
அவருடைய பொறுப்புகளும் அதிகமாகும் என்பது உங்களுக்கு தெரியாததா ?பொறுப்புகள் அதிகமானால்
வேலைப்பளுவும் அதிகரிக்கத் தான் செய்யும். குறியிடுதல், வடிவமைத்தல் போனற
வேலைகளை இப்போது நான் செய்வதில்லை .ஆனால் இந்த வேலைகளை செய்ய வைக்கும்
பொறுப்பு எனக்கு உண்டு. இந்தப் பொறுப்பு இன்னும் அதிக மன அழுத்தத்தை கொடுக்க வல்லது.
மிகச்சிறந்த தரத்துடன், சரியான நேரத்தில் வேலைகளை முடிப்பது எனக்கு முக்கியம்.
ஒரு பக்கம் தன் தேவைகளை அடிக்கடி மாற்றி க்கொள்ளும் வாடிக்கையாளர்,
மறு பக்கம் மாற்றுத்தேவையை விரும்பும் உபயோகிப்பாளர், அடுத்த பக்கம் அந்த வேலையை நேற்றே
முடித்திருக்க வேண்டும் என எதிர்பார்க்ககும் மேலதிகாரி - நண்பரே,
துப்பாக்கிகள் தீயைக் கக்கும் கோட்டில் நிற்பது எப்படி என்பது உங்களுக்கு
எப்படி தெரியப் போகிறது ?"
பக்கத்து சீட் அன்பர் இதக்கேட்டவுடன் சற்றே தனது இருக்கையில் சாய்ந்தவாறு
கண்களை மூடிக்கொண்டு எதையோ யோசித்தவாறு சில நொடிகள் தியான நிலையில் இருந்தார்.
" Point 4875 என்ற மலை உச்சியைப் பிடிக்க நங்கள் 30 பேர்
கட்ட ளையிடப் பட்ட போது இருள்தான் எங்களுக்கு துணையாக
இருந்தது. எதிரி உயரமான இடத்திலிருந்து துப்பாக்கியால் சுட்டபோது அடுத்த
குண்டு எங்கு விழுமோ, யாரை விழுங்குமோ என்று எங்களால் கணிக்க முடியாத நிலை.
இருந்தும் முன்னேறிக்கொண்டே இருந்தோம். இறுதியில் நாங்கள் அந்த மலை உச்சியைக்
கைப்பற்றி, அங்கே நமது மூவர்ணக் கொடியை ஏற்றிய போது, எங்களில் ஐந்து பேர்
மட்டுமே உயிரோடு இருந்தோம்."
பிரமிப்புடன் கேட்ட விவேக் ," நீ-ங் --க ,"
அவர் முடிப்பதற்குள் பக்கத்து சீட்காரர் தொடர்ந்தார்," என் பெயர்
சுபேதார் சுஷாந்த்.13 J & K Rifles -ஐ சேர்ந்த நான் தற்போது கார்கிலில் Peak
4875-ல் பணியாற்றுகிறேன் என்னுடைய போர்க்கள பணி முடிந்து விட்டதாகவும், இனி நான் எளிதான
பணியில் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.சொல்லுங்க சர், எளிதான வாழ்க்கை
வாழும் பொருட்டு, ஒருவன் தன் கடமையை துறக்க முடியுமா?"
' அந்த மலை உச்சியைக் கைப்பற்றிய அதிகாலையில் என் சக ஊழியர் பணியில்
காயமுற்று, எதிரியின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகும் நிலையில் படுத்துக்
கிடக்கிறார். நாங்கள் ஒரு பாதுகாப்புக் குழிக்குள் ஒளிந்திருக்கிறோம். அந்த ராணுவ வீரரை பாதுகாப்பு வலைக்குள்
கொண்டு வருவது என் கடமையல்லவா? ஆனால் எனது கேப்டன் எனக்கு அனுமதி அளிக்கவில்லை. அவரே
அந்த பணியில் ஈடுபட்டார்.
" அவர் சொன்னார் ' ஓரு ராணுவப் பயிற்சி பெரறும் நல்ல மனிதனாக நான்
எடுத்துக் கொண்ட சபதம் முதல முதலாக நம் நாட்டின் பாதுகாப்பும், நலங்களும், அடுத்த படியாக
என் கீழ் பணி புரியும் வீரர்களின் பாதுகாப்பும், நலங்களும் - இவைதான் என்
குறிக்கோள். எப்போதும், எந்த நிலையிலும், ஒவ்வொரு முறையும் என் தனிப்பட்ட
பாதுகாப்புக்கு நான் கடைசி முக்கியத்துவம் தான் தருவேன்.,,
" அவர் காயமுற்ற வீரரை பதுங்கு குழிக்குள் கொண்டுவரும்போதே எதிரிகளின்
துப்பாக்கி குண்டுகள் அவர் உடலில் பாய்ந்தன. அடுத்த ஒவ்வொரு காலையிலும்
நாங்கள் பாதுகாப்பில் நிற்கும்போது, எனக்காக குறி பார்க்கப் பட்ட
குண்டுகளை அவரது உடல் ஏற்றுக்கொண்டது. எனக்குத் தெரியும் ஐயா,நிஜமான
துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில் நிற்பது என்பது எத்தகைய அனுபவம் என்பது எனக்கு
நன்றாகவே தெரியும்.'
விவேக் நம்ப முடியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் .பதிலுக்கு
என்ன சொல்வது என்று அவருக்கு தெரிய வில்லை.
திடீரென, அவர் தனது மடிக்கணினியை செயலிழக்கச் செய்தார்.
துணிச்சலும், இதுவரை தான் புராண நாயகர்களிடையே மட்டும் காணப்படும் என்று
நினைத்த கடமை யுணர்ச்சியும் வாழ்வின் தினசரி அங்கமாகிவிட்ட
ஒருவர் அருகில் இருக்கும் போது, கணினியில் வார்த்தைகள் ஆவணத்தை
( Word Document ) சரி பார்ப்பது கூட சின்னத்தனம்மாக, ஏன், அவரை அவமதிக்கும் செயலாகக்கூட
இருக்கலாம்,
சதாப்தி எக்ஸ்பிரஸ் வேகத்தைக் குறைக்க ,சுபேதார் சுஷாந்த் தன் சூட்கேசை
எடுத்துக்கொண்டார். விவேக்கிடம்," தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி"
என்ற படி கை குலுக்கினார். மலைகள் ஏறிய கைகள், துப்பாக்கியை இயக்கிய கைகள்,தாய்த்திரு
நாட்டின் மூவர்ணக் கொடியை மலை உச்சியில் ஏற்றிய கைகள்-
விவேக் தன கையை நீட்டியபோது கைகள் சற்றே நடுங்குவதை உணர்ந்தார்.
திடீரென இனம் தெரியாதஒரு விசையால் உந்தப்பட்டு, எழுந்து, அசையா நிலை யில் நின்று,
தன வலது கையை உயரத்திய படி, அந்த நொடியில் தோன்றிய சிந்தனைக்கு கட்டுப்பட்டு, ஒரு சல்யூட்
அடித்தார் விவேக்.
ஆசிரியர் குறிப்பு:
இந்த நிகழ்வு மலை உச்சி 4875 -ஐ பிடிக்க நடந்த கார்கில்
போரின் ஒரு உண்மை நிகழ்ச்சி. வெற்றி உறுதியான நிலையில் , கேப்டன் விக்ரம் பாத்ரா தன்
கட்டளைக்குட்பட்ட ஒரு வீரனைக் காப்பாற்ற தனது இன்னுயிரையே தியாகம் செய்தார்.இதற்காகவும்,
இதைப் போன்ற பல்வேறு தீரச் செயல்களுக்கும் கேப்டன் பாத்ராவுக்கு நாட்டின் மிக
உயர்ந்த ராணுவ கௌரவமான பரம் வீர் சக்ரா பட்டம் வழங்கப் பட்டது.
Murthy
No comments:
Post a Comment