Saturday, November 16, 2013

சான்றோரை சந்தித்தோம்



நமது தோசா அமைப்பு உருவான இரண்டாவது ஆண்டே நமது தலைவர் திரு.மூர்த்தி சார் அவர்கள் நமது தொடர்புக்கு வந்தவர். முதலாம் ஆண்டு நமது அமைப்பின் நிகழ்ச்சியில் ஒரு சாதாரண பார்வையாளராவே பங்கேற்ற அவர் தோசாவினால் கவரப்பட்டு உடனடியாக அதன் ஒரு உறுப்பினராகி அடுத்த ஆண்டே அதன் தலைமை பொறுப்பினை ஏற்று இன்று நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறார்.

தோசாவின் அமைப்பு முழுக்க முழுக்க ஒரு கூட்டு தலைமை மற்றும் செயலாக்கம் (collective efforts). அன்று முதல் இன்று வரையில் நமது அமைப்பின் செயல்பாடுகளை பார்த்தால் நமக்கே பல  பிரமிப்பான மலரும் நினைவுகள்  நம்    மனதில் நிழலாடி நம்மை மகிழ்ச்சி கடலில் சங்கமிக்க வைக்கும்.

ஆம் முதல் சில ஆண்டுகள் சிர்சிறிய பொருள்களை நமது பள்ளிக்கு வழங்கியது. பின்னர் . நம் பள்ளியின் முன்னாள் மாணவர்களால் endowment அமைத்தது. பள்ளியில் பல நிகழ்சிகளை நடத்தியது. குறிப்பாக வானிலையாளர் முனைவர் திரு ரமணன் மற்றும் மக்கள் அரங்கம் முலமாக நம் மருதூரை உலகறிய செய்தது.

நம்  மகாலிங்க பெருமானின் கிருபையாலும், குருமஹா  சன்னிதானத்தின்  ஆசியாலும்  குமாரி அர்ச்சனா அவர்களின் ஊக்கத்தின்  காரணமாக முதன்   முதலாக  நமது ஊர் கோயிலில் ஊரே வியக்கும் வண்ணம் மருத நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது. மிக குறுகிய காலத்தில் பரத கலைஞர்களிடையே போட்டி ஒரு கெளரவம் நம்   மருத நாட்டியாஞ்சலியில் மேடைஏறுவதில். 

திரைப்பட இயக்குனர் திரு விசு அவர்கள் தனது திருமண நாளினை திருவிடைமருதூரில்    கொண்டாட விரும்பினார். தோசாவும் தோள் கொடுத்தது. சிறப்பாக நடந்தது அந்த வைபவம் அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையில் நம் தலைவர் அவர்கள் இரண்டு கருத்துக்களை சொல்லி நம் தோசா அதனை நோக்கி பயணித்தால் சிறப்பு பெரும் என்றார்.

நாம்  நமது பள்ளிக்கு சில சேவைகளை செய்து வருகிறோம் இது தொடர்ந்து இன்னும் சிறப்பாக நடக்கும். நமது ஊர் கோயிலுக்கு மருத நாட்டியாஞ்சலி நடைபெற்று வருகிறது  இதிலும் இன்னும் பல சிறப்பான பல வேலைகளை செய்ய இருக்கிறோம்.அடுத்ததாக நமது ஊருக்கு என்று சில சேவைகளை செய்யவேண்டும்.

குறிப்பாகநமது ஊர் பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்

 உயர்  மருத்துவத்தில்  ஒரு சேவையினை செய்யலாம்.

பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய் தாக்கம் குறித்து ஒரு விழிப்புணர்வு இயக்கம் நடத்த வேண்டும். மார்பக புற்று நோய் மற்றும் கருப்பை புற்று நோய். இந்த இரண்டு நோய்களை மட்டும்   முன்பே அறிந்து கொண்டால் சிகிச்சை உண்டு மரணத்திலிருந்து காப்பாற்றலாம் முழுவதும் குணமாகி நீண்ட நாள் வாழலாம்,

எனவே பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய் குறித்து நாம் விழிப்புணர்வு இயக்கம் ஒன்று நடத்தலாம். எனக்கு சென்னை அடையாறு  கேன்சர் இன்ஸ்டியுட் - ல்  ஒரு நல்ல அறிமுகம் உள்ளது  அதன் மூலமாகவே இதனை  செய்ய  முடியும் என்று கூறினார்

சில காலமாகவே இது குறித்த  சிந்தனைக்கும் மற்றும்  தலைவரின் விடா முயற்சியினாலும் இன்று அடையாறு கேன்சர் இன்ஸ்டியுட்-ல் இது குறித்து ஒரு மருத்துவரிடம் கலந்துரையாடலுக்கு  தோசாவுக்கு   நேரம் ஒதுக்கி அந்த தகவலையும் தலைவருக்கு தெரிவித்து இருந்தார்கள்.

குறிப்பாக நமது மூர்த்தி சாரின்  மனைவியின்  சஹோதரர்  திரு. ரமணி அவர்கள் அடையாறு கேன்சர் இன்ஸ்டியுட்-ல் நீண்ட நெடுங்காலம் சேவை செய்தவர். 

தலைவர் மூர்த்தி  சார்,    திரு. ரமணி சார், திரு T. S.V மற்றும்  செயலாளர் பாலகௌரி  ஆகியோருடன்  காலை சுமார் பத்தரை மணியளவில் கேன்சர் இன்ஸ்டியுட்டின் மருத்துவர் அறையில் ஆஜர். அறையில்  இடமின்மை காரணமாக மருத்துவரே தனது நாற்காலியினை எடுத்து வந்து எங்களுடன் அமர முதலில் அனைவரும் அறிமுகம்

 இங்கு வந்ததன் நோக்கம் ஆகியவைகளை மூர்த்தி சார் அவர்கள் எடுத்துரைத்தார்

பின்னர் மருத்துவர்  எங்களிடம் பேச ஆரம்பித்தார்.

கேன்சர் அல்லது புற்று நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா

புற்று நோய் என்பது என்ன, எதனால் ஏற்படுகிறது, அதற்கான அறிகுறிகள் என்னென்ன, எப்படி கண்டு பிடிக்கலாம் எவ்வாறு  கட்டுபடுத்தலாம்  ஆரம்ப நிலை புற்றுநோயினை முற்றிலும் குணப்படுத்தி விடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? புற்று நோய் வராமல் தடுப்பது எப்படி நீங்கள் எவ்வாறு கேன்சர் இன்ஸ்டியுட்டிற்கு உதவி செய்ய இருக்கிறீர்கள்.  கேன்சர் இன்ஸ்டியுட் உங்களுக்கு என்னென்ன உதவியினை செய்து கொடுக்கும் 

முதலில் நீங்கள் என்னென்ன செய்யவேண்டும் .மக்களை எப்படி அணுக வேண்டும் எப்படி விளம்பரம் செய்ய வேண்டும்  மக்களுக்கு என்னென்ன ஏற்பாடுகளை செய்யவேண்டும்இப்படி மிக மிக குறுகிய நேரத்தில்  பற்ப்பல விஷயதானம்

பின்னர் திரு ரமணி சார் அவர்கள் தனது boss அதாவது கேன்சர் இன்ஸ்டியுட்டின் இயக்குனர் திருமதி டாக்டர் சாந்தா அவர்களை காண தான் மட்டும் சென்றார்.

கேன்சர் இன்ஸ்டியுட்டின் கடைசி மொட்டை மாடியில் ஒரு சாதாரண அறை அவரது அறைக்கு முன்னர் தென்னை ஓலையில் வேயப்பட்ட ஒரு குடிசை அனைவரும் அங்கு நின்று கொண்டிருந்தோம்.  

டாக்டர் சாந்தா அவர்களது  வயது முதுமை காரணமாக  அவரை காண முக்கியமான  சில நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை தவிர யாரும் பார்ப்பதற்கு அனுமதியில்லை.


உள்ளே சென்ற  ரமணி சார் முதலில் மூர்த்தி சார் அவர்களை உள்ளே அழைத்தார். 

ஆர்வ கோளாறு காரணமாக நான் சற்றே எட்டி பார்க்க பாலகௌரியும்  அப்படியே தொடர உள்ளிருந்து சற்றே முதுமை தெரிந்தாலும்   ஒரு கம்பீர குரல்

“எல்லோரும் உள்ளே வாருங்கள்.”

அனைவரும் ஓடிச்சென்று அவர்முன் கைகூப்பி நின்றோம்............ ,

“முதலில் உட்காருங்கள் நான்தான் சாந்தா”  என்றார்.

மிக மிக எளிமையான நாற்காலிகள் அறை முழுவதும் ஒரே விருதுகளும், சான்றிதழ்களும், புகைப்படங்களும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை   முதல் J R D Tata வரை

அவர் ஒரு சிறிய பெரம்பு  நாற்காலியில் அமர்ந்திருந்தார்  

எங்களை பார்த்து

“கான்சர் ஒரு உயிரை கொல்ற வியாதின்னு நெனைச்சுண்டு மொதல்ல நீங்க யாரும் பயப்பட வேண்டாம் நீங்க எல்லாரும் அந்த பயத்த மொதல்ல விடுங்கோ ஜனங்களுக்கு ஏதாவது சேவை செய்யனூன்னு நீங்கள்ல்லாம் இங்க வந்திருக்கேள்  பாருங்கோ அதான் நேக்கு ரொம்ப முக்கியம். 
அறுபது வருஷத்துக்கு  முன்னாடி இத ஆரம்பிச்ச அப்ப இருந்த நிலை  இன்னிக்கு இல்ல நெறைய மருந்து இருக்கு உங்கள மாறி மனுஷாலெல்லாம் என்னோட சென்தேள்னா இன்னும் நெறையா பண்ணலாம் கான்சருக்கு எப்படி ஏழை பணக்காரன்னு வித்யாசம் கெடையாதொ அப்படியே தான்  
இங்க வைத்தியத்திலேயும் எந்த வித்யாசமும் கெடையாது. எல்லாருக்கும் வைத்தியம் உண்டு 

ஏழைகளுக்கு இலவசமாகவே சில வைத்தியமும் உண்டு நீங்கலெல்லாம் ஒங்க ஊரு பெண்களுக்கு   இந்த சேவைய கொண்டு போறதுல எனக்கு ரொம்ப   சந்தோஷம் என்னால எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நானும் ஒத்தாச பண்றேன்  நல்லது எனக்கு இன்னும் பல வேலை இருக்கு ஒங்கள இன்னிக்கு பாத்ததுல ரொம்ப சந்தோசம் எல்லோரும் போய் இதை பத்தி பிரச்சாரம் பண்ணுங்கோ ஜனங்களுக்கு ஒதவி பண்ணுங்கோ கடவுள் நம்ம கூடவே எப்போதும் இருப்பார்”

அனைவரும் விடைபெற்றோம்

எனக்கு அப்போது ஒரு மாபெரும் மனநிறைவு என்னென்று சொல்வது அன்னை சாரதா தேவியினை தரிசித்து விட்டு வருவது போல் இருந்தது.

இன்று நாம் அனைவரும் ஒரு சான்றோரை சந்தித்தோமா  அல்லது அன்னை சாரதையினை  சந்தித்தோமா என்று அதே சிந்தனையுடன் இதனை இன்று   எழுதினேன்

விடைபெறும் முன்  பாலகௌரி ……..அம்மா உங்களுடன் ஒரே ஒரு போட்டோ என்று கேட்க

சரி ஏன் எல்லோரும் நில்லுங்கோளேன்


ஸ்ரீதர்




No comments:

Post a Comment