அன்பர்கள்RBI ஸ்ரீதர்,CUBBOARD ஸ்ரீதர் எழுதியுள்ள கடவுளைத் தேடும்
கவிதை, களின்
தாக்கத்தில் எழுந்த எண்ணங்கள்.
இறைவன் எங்கு உள்ளான்?அல்லது இல்லையா?God is no where என்ற நாஸ்திக
வாதியை ஒரு குழைந்தையின் god is ..now here என்ற மழலைச்சொல்லால்
w இடம் மாறி நாஸ்திகனை ஆஸ்திகனாக ஒரு நொடியில் மாற்றியது.
நாஸ்திகர்கள் முதலில் கடவுளை மறுப்பார்கள்.அல்லது அவ்வாறு நடிப்பார்கள்.பின்
கடவுள் இல்லை ஆனால் இயற்கையை நம்புகிறோம் என்பார்கள்.பின் பல கடவுள்களை நம்பமாட்டோம்.ஒருவரே
என்பார்கள்.பின் கடவுளை நம்புகிறோம் ஆனால் மூட நம்பிக்கைகளைத்தான் எதிர்க்கிறோம் என்பார்கள்.முடிவே
இல்லை.அவர்களிடம் வாதாடுவது வீண் வேலை . அவர்களை நம்பவைப்பது நம் வேலை
இல்லை.அவர்கள் நம்பாவிட்டால் யாருக்கும் நட்ட மில்லை.அவர்களை ஒதிக்கி விட்டு நம்
வேலையை பார்ப்போம்.
சரி. க டவுள் உள்ளார் என்பது நம் கட்சி.சரி எங்கு உள்ளார்? பல
கூற்றுக்களை பார்ப்போம்..தமிழில் உள்ள கடவுள் என்பது இயற்கையாக அமைந்த அற்புத
சொல்.கட +உள் எல்லாவற்றையும் கடந்தவன்.. உள் அடக்கியவன்..இதை விட
எளிதாக உரைக்க முடியாது. பல மகான்களும்,சித்தர்களும் , சாதாரண மனிதர்களும்
கண்டார்கள்உ .ண ந்தார்கள் .ஆழ்வார்கள், நாயன்மார்கள்,திருமூலர்,தியாகராஜா ,முத்துசுவாமி
தீக்சிதர் ,சியாமா சாஸ்த்ரிகள்,ராமலிங்க சுவாமிகள்,ரமண மகரிஷி,அருணகிர்நாதர்
போன்ற சிலரை உதாரணமாக சொல்லலாம்.அவர்கள் கண்டார்கள் என்பதை விட இறைவன்
அவர்களிடம் உறைந்தான் என்பதுதான் உண்மை.இல்லாவிட்டால் அவரகளால் தெய்வீக செயல்களை
செய்திருக்க முடியாது.சமீபத்தில் அமரரான என் இதய தெய்வம் குருஜி (டெல்லி
a .s இராகவன் . நான் பெயர் கூற மாட்டேன். அடையாளத்துக்காக இங்கு சொல்ல
வேண்டிய கட்டம் )அவர் பணியில் இருந்து கொண்டும்,சம்சார சாகரத்தில் உழன்றும்,உடல்
உபாதையை அனுபவித்தும் 503 திருப்புகழ் பாடல்களுக்கு தனி மனிதனாக நின்று இசை அமைத்திருக்கிறார்.செந்தில்
ஆண்டவன்முருகன் தான் அமைத்தான் என்றார்.இசை நயம்,பாவம் தெய்வீக நிலையில் உள்ளது.எனவே
அவர் கூற்றை,அல்லது அவர் அவதாரம் என்றே நம்புகிறேன்.நம்புகிறேன்.ஏனெனில் அதுசாதாரண
மனிதனால் முடியாது.
கடவுளை எப்படி கண்டார்கள் அனுபவித்தார்கள் என்று பாப்போம்.
மாணிக்கவாசகர் (சிவ புராணத்தில் )
ஆக்கம் அளவு இறுதி இல்லாய்,அனைத்துலகுமாக்குவாய் காப்பாய் அழிப்பாய்,அருள்
தருவாய்.அன்பு உலகம் கொண்டவர்க்கு அருகில் உள்ளான்.கொள்ளாதவருக்கு வெகு தொலைவில் உள்ளான்.அன்பில்
உருகியும்,பண்பில் சிறந்த அடியார்கள் உள்ளத்தில்நிளைத்து நிற்பவன்.பிறவியை வேரோடு களைபவன்.
திரு மூலர் ....மரத்தை மறைத்தது மா மத யானை .மரத்தில் மறைந்தது
மா மத யானை. 9நாயைக்கண்டால் (கல்லைக்கானவில்லை.கல்லைக்கண்டால் நாயைக் காண வில்லை )
அடியார்களதுதியிலும்,கீர்த்தனைகளிலும் (புராணங்கள் )
"பூஜை செய்வோரது ஆடம்பர தோற்றத்தைக்கண்டு,இடை விடாது
செய்யும் ஜபத்தில் உள்ள ஆசையினாலும் தெய்வம் எழுந்தருள வேண்டி செய்யும் தகடுகளால் ஆன
எந்திரங்களை க ண்டும்,பிரம்மாண்டமான யாக மண்டப காட்சி யாலும் வேதம்,ஆகமம் இவை
முழங்கும் இடத்தைக்கண்டும்,யாகத்துக்கு வேண்டி சேமித்துள்ள கட்டு கட்டான சமித்துக்களை
கண்டும் பிரமித்து அவற்றில் மயங்காமல் அடியார்கள் கண்களில் பெருகும் கண்ணீரை அபிஷேகமகா
கொள்பவனே " என்கிறார் (அருணகிரிநாதர்)
"எள் துணையும் பேத முறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி ஒத்து
உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம் தான் சுத்த சித்துருவாய்
எம்பெருமான் நடம் பிரியு இடமென நான் தெளிந்தேன் .அந்த வித்தகர் தம் அடிக்கு ஏவல் புரிந்திட
என் சிந்தை மிக விழைந்தது " இராமலிங்க அடிகள்.
பாரதியார் எவ்வாறு கண்டார் என்று பார்ப்போம்..காக்கைசிறகினிலே .....இசை
வடிவில் கேட்போமே.
பாரதியார் கண்ணனை, தாய் ,தந்தை,அரசன்,சீடன், குழந்தை,சேவகன்,வடிவிலும்,தான்
கண்ணம்மா வாகி மாறி கண்ணம்மா என் குழந்தை,கண்ணன் என் காதலன், போன்ற பல வடிவினில் கண்ணனைக்
கண்டார்.
சில பாடல்களை கேட்போமே.
( bharathiyar songs available in
htt://temple dinamalar.com /news
மனம் போன போக்கிலே எழுதியதை எ,ன் குறை மிகை களை பொறுத்து
அருள்க
மும்பை வெங்கடராமன்
No comments:
Post a Comment