Sunday, December 8, 2013

நேர்மறை உறுதிமொழிகள் (Positive Affirmations)


  

நேர்மறை உறுதிமொழிகள் (Positive  Affirmations) என்பது புதிய கண்டு பிடிப்ப்பு அல்ல. நேர்மறை உறுதி மொழிகள்  என்பவை ஒரு குறிப்பட்ட நிலையில் நாம் இருக்கும்போது நம்மைப்பற்றி நாமே நம்மைச் சார்ந்த சில நேர்மறையான கருத்துக்களை நினைவில் நிறுத்தும் குணம்தான். இத்தகைய தருணங்களில் நம்மைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை களைந்து எறிய வேண்டும்.

எந்த கடின நிலையில் இருக்கும்போதும், நேர்மறை உறுதிமொழிகள் மூலம் இந்த கடின நிலையை எளிதில் கடந்து விட முடியும் என்பது திண்ணம். 

உதாரணத்துக்கு,  நாம் ஒரு தவறு செய்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.கீழ்க் கண்ட நேர்மறை உறுதிமொழிகள் மூலம் அந்த தவறின் உத்வேகத்தையும் ,நமது மனதில் ஏற்படும் மன அழுத்தத்தையும் குறைக்க முடியும்.

1. நான் ஒரு முழுமையான மனிதப் பிறவிதான். அதற்காக தவறே செய்யாதவன் கிடையாது. தவறு நடந்து விட்டது. அதனால் பரவாயில்லை.

2. தவறு என்பது வாழ்க்கையின் ஒரு அம்சம்தான். அதனால் நான் தோற்று விடுவேன் என்பது அல்ல. இது எனக்கு ஏற்பட்ட ஒரு புதிய அனுபவம்.

3.ஒரு சில சிறிய தவறுகளால் ஒரு மனிதனாக நான் யார் என்று பிறர் என்னை எடை போடுவதில்லை. ஆகவே  பெரிய மாற்றங்கள் ஏற்படாது.

4. என்னுடைய தவறுக்கு நானே முழுக் காரணம். என் தவறால் யாருக்காவது பாதிப்பு ஏற்படின், அவரிடம் மன்னிப்பு கேட்பதில் எனக்கு தயக்கமில்லை

5. என்னை முழுமையாக நேசித்து, நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ள நல்ல மனிதர்களை நான் அறிவேன், அவர்களின் மன்னிப்பை நான் பெறுவதுடன், அவர்களின் வழி காட்டலையும் நான் நாடுவேன்.

6. என் தவறால் ஏற்படும் என்னுடைய வெட்கப்படுவதிலிருந்தும், சுய வலியிருந்தும்  விடுதலை பெறும் உரிமை எனக்கு உண்டு.


ஒவ்வொரு இக்கட்டான நிலையில் நாம் நம்மை காணும்போதெல்லாம் நேர்மறை உறுதி மொழிகள் மூலமாக, கடின நிலையிலிருந்து நாம் எப்படி விடுபடலாம் என்பதை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கலாம்.

மூர்த்தி 


No comments:

Post a Comment