Saturday, December 21, 2013

நேர்மறை உறுதிமொழிகள்- 2

நேர்மறை உறுதிமொழிகள்- 2 

 நம் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும் பலம் வாய்ந்த சில எளிய உண்மையான மனப்பதிவுகள் நாம் வளர்ந்த பண்பாட்டிலும் சூழ்நிலையிலும் மறைந்து கிடப்பது என்?

சின்ன வயதிலிருந்தே எனக்கு நிறையவே அன்பு கிடைத்தது. என்னை வளர்த்த  தாத்தா, பாட்,டி, பள்ளி விடுமறைகளில் மட்டுமே நான் பார்க்கும் அம்மா, அப்பா, காலையில் என் கூடவே பள்ளிக்கு வந்து, வீடு திரும்பியதும் என்னோடு விளையாடும் நண்பர்கள் - இப்படி எல்லாருமே என்மீது அபரிமிதமான அன்பு செலுத்தினார்கள். ஆனால் ஒரு நாள் பள்ளி முடிந்த பின் இரு நண்பர்களுடன் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வேளான் ஆராய்ச்சி மையத்துக்கு சென்று எப்போதையும் விட 2 மணி நேரம் தாமதமாக வீட்டுக்கு வந்ததும் அன்பு செலுத்துபவர்களே நன்றாக திட்டித் தீர்த்தார்கள். அப்போது ஏற்பட்டன - பயம், வெட்க உணர்ச்சி மற்றும் குற்ற உணர்ச்சி - அன்பில் திளைத்த எனக்கு இந்த உணர்ச்சிகள் என் ஏற்பட்டன?

ஆனால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. நான் செய்த தவறான செயலுக்காக எனக்கு தண்டனை கிடைக்க வில்லை. நான் செய்த தவறான செயலால் எனக்கு பயமோ, வெட்கமோ அல்லது குற்ற உணர்வோ  ஏற்பட வில்லை.அன்று நான் தவறு செய்ய வில்லை. என் வயதை ஒத்த சிறுவர்கள் செய்யத் துணியாத ஒரு செயலை செய்து விட்டேன். வீட்டில் சொலிவிட்டு, ஒரு மூத்தவரின் துணையோடு நான் அங்கே சென்றிருந்தால் அது சரியாக இருந்திருக்கும். அது தான் சிறுவர்களுக்கான பண்பாடு.அப்படி போவதுதான் நியதி. நான் அந்த நியதியை மீறி விட்டேன்.   எனக்கு துணிவும், மகிழ்ச்சியும் அளிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி அந்த பண்பாட்டின் பின்னணியில் ஒரு சோக சம்பவமாக மாறி விட்டது. 

அன்று மனதில் பதிந்த உண்மை - விதி  முறைகளை மீறியதால் நல்ல செயலுக்கும் பாராட்டு கிடைக்காததால், கோழையாகி விடுகிறோம்.

இதனால்தான் இப்போது  நேர்மறை உறுதிமொழிகளை வெளியே தேட வேண்டிய கட்டத்துக்கு தள்ளப் பட்டு விட்டோம்.

இப்படித்தான் நாம் நம் குழந்தைகளை  வளர்க்க வேண்டுமா?

ஒரு பெற்றோராக நாம் என்ன செய்ய வேண்டும்? 

நேர்மறை உறுதிமொழிகளை எப்படி கடைப்பிடிக்கலாம்?

கீழ்க்கண்ட  நேர்முறை உறுதி மொழிகளை பெற்றோர்களாக நாம் போராடும் தருணங்களில் மனதில் கொண்டு  ஜபிக்க வேண்டும்.

1 .நாங்கள்  ஒரு நல்ல, அன்புள்ள மற்றும் தன்னம்பிக்கையுள்ள ஒரு தாய்/தந்தை.

2. எங்கள்  குழந்தைகளை , அவர்களது தற்போதைய,   நிலையிலேயே எந்த வித நிபந்தனையு மின்றி  நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்,  அந்த அன்பை அவர்களும் எங்களுக்கு திருப்பித தருகிறார்கள்.

3.. என் குழந்தைகள் சொல்வதை கூர்ந்து கவனிப்பேன். அவர்கள் தேவைகளை அறிந்து செயல் படுவேன் 

4. நான் தன்னம்பிக்கையுடனும், அமைதியாகவும்   சூழ் நிலைகளை  சமாளிப்பேன். தேவைப்படும்போது அன்பான  வழி காட்டுதலையும் , கட்டுப்பாட்டையும்  கடை பிடிப்பேன்.

5.  என் குழந்தைகளுக்கு பொறுமை, பு ரிந்துகொள்ளுதல், பச்சாத்தாபம் மற்றும் உரியவர்களுக்கு மரியாதை 
 போன்ற குணங்களை கற்றுக்கொடுக்க நானே ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறேன்.

6. நான் எனக்கு மட்டுமே பத்திரமான, தர்க்கரீதியான   எல்லைகளை வகுத்துக் கொள்வேன்-என் குழந்தைகளுக்கு அல்ல.

7. குழந்தைகளுக்காக நேரம் செலவிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

8. என் குழந்தைகள் நேசிக்கப்  பட்ட வர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும்  விளங்க எந்த வகையான உதவி அளிக்க  வேண்டும் என்பதை நான் அறிவேன்.

9. என் குழந்தைகள் சின்னச்சின்ன  தவறு செய்ய நான் இடம் அளிக்கிறேன். அதன் மூலம் அவர்கள் வாழ்க்கை அனுபவம் அதிகரிக்கிறது. தேவைப் படும்போது அவர்களுக்கு உதவி செய்ய நான் முன் நிற்கிறேன்.

10. மற்றவர்கள் என்னை தன்னம்பிக்கை உள்ளவனாகவும், நேசிக்கும் குணமுள்ள வனாகவும், கவன முள்ளவனாகவும், அடையாளம் காட்டுகிறார்கள்.

பெற்றோர்களாக நாம் எல்லோரும் ஜெயிப்போமாக!!

Best  Wishes ,
மூர்த்தி 
 

1 comment:

  1. PRAMADHAM MURTHY ANNA. I POSSESS SOME OF THEM ALREADY I TRY TO AQUIRE THE REMAINIG. MALI. S/O DR. SUNDARAM

    ReplyDelete