Monday, November 25, 2013

You will achieve!!



ரொம்ப நாளைக்குப் பின்னர் ஸ்ரீதர் எழுதியிருக்கிறார். அது என்னவோ அவரது எழுத்துக்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தான் போகின்றன. நீர்வீழ்ச்சி போல சரளமாக சொற்கள் வந்து விழுகின்றன. எனக்கு நல்லாகவே தெரியும். அன்று டாக்டர். சாந்தாவுடன் கிட்டத்தட்ட 20 நிமிஷங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஸ்ரீதர் எதையுமே நோட் எடுத்துக் கொள்ள வில்லை. ஆனால் ஒரு விஷயம் கூட விடாமல் அப்படியே எங்கள் சம்பாஷணையை பதிவு செய்திருக்கிறார். 

ஒரு இயக்கம் வெற்றி பெற, அந்த இயக்கத்தைச்  சார்ந்த ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க வேண்டும். AMBITION is the keyword. நாம் வெற்றி பெற வேண்டும்  எனற பேராசை நமது உந்து சக்தியாக இருக் கவேண்டும், இந்த ambition -அவ்வப்போது  உள்ளிருக்கும் அந்த ஜூவாலையை வெளியே உமிழ வைக்க வேண்டும். பெரியதாக கனவு காண வேண்டும்.

இருபது வருஷங்களுக்கு முன்பெல்லாம் DREAMING BIG பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. சில network marketing கூட்டங்களுக்கு ( விடாப்பிடி நண்பர்களுக்காக ) சென்ற அனுபவம் உண்டு. பேச்சாளர் கேட்பார் ," நீங்கள் மாதம் எவ்வளவு ரூபாய் சம்பாதிக்க விரும்புகிறீர்கள் ? "

ஒருவர் சொல்வார்," 10000 ரூபாய் ."

இன்னொரு பெண்மணி சொல்வார் ," 20000ரூபாய் ."

"உங்கள் கனவு இவ்வளவுதானா?"

திடீரென ஒரு குரல் எழும்பும்,"  ஒரு லட்சம் ரூபாய்."

" கொஞ்சம் பரவாயில்லை."

மீண்டும் ஒரு குரல் கேட்கும் ," ஒரு கோடி ரூபாய்."

பேசுபவருக்கு இவர் குரல் மட்டுமே நன்றாகக் கேட்டது.

" வெரி  குட் , நில்லுங்க சார். உங்க பெயர், ஊரைச் சொல்லுங்க"

" திலீப் from நாகர்கோவில் "

" வாழ்த்துக்கள் திலீப், கண்டிப்பாக நீங்கள் சம்பாதிப்பீர்கள்.". 

இதை யெல்லாம் dreaming big என்று சொல்ல முடியாது. நண்பருக்காக உட்கார்ந்து விட்டு வர வேண்டியதுதான்.


நாம் பேசுவதுக்கு முன்னர் - பிறர் பேசுவதை கவனிக்கலாமே!
நாம் பதில் செயல் செய்யும் முன்னர் - சற்றே யோசிக்கலாமே !
நாம் செலவு செய்யும் முன்னர் - கொஞ்சம் சம்பாதிக்கலாமே !
நாம் கண்டனம் செய்யும் முன்னார்  - சற்றே காத்திருக்கலாமே !
நாம் கடவுளை வணங்கும் முன்னர் - சற்றே மன்னிக்கலாமே
நாம் விலகலாம் என்னும் முன்னர் - ஒரு முறை முயற்சிக்கலாமே!

Earnest Hemingway கூறிய ஆறு தாரக மந்திரங்கள். 

ரொம்பவும் கவனித்து,யோசித்து,காத்திருந்து,முயற்சித்ததின் விளைவு   விலகக்கூடாது என்ற எண்ணம்  உதித்தது. டிசம்பர் 27-ம் தேதி TOSA  sponsor செய்யும் cancer awareness programme நடைபெற இருக்கிறது. அடையார் கான்சர் இன்ஸ்டிட்யூட்டுடன்  சேர்ந்து நடத்தப்படும் நிகழ்ச்சி.

நிறைய பேர் ' தாம் எப்படிப்பட்டவர் ' என்பதை குறைவாக மதிப்பிடுகிறார்கள். ' தாம்  எப்படிப் பட்டவர் அல்ல' என்பதை அதிகமாக மதிப்பிடுகிறார்கள். இதை மாற்றிக்கொண்டால்தான் சாதனையாளர் ஆக முடியும். சொல்லப் போனால் பெரிய கனவுகள் காண முடியும்;

நாம் எப்படிப் பட்டவர்கள் என்பதை அதிகமாகவே மதிப்பிட்டுக் கொள்ளலாம். ஏனெனில் we know that  we all deserve it. 

சென்னையில் இருக்கும் தோசா நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஆளுக்கு 20 பேர்களை volunteer ஆக ரெடி செய்யுங்கள். 27-ம் தேதி cancer  awareness கூட்டத்துக்கு அழைத்து வாருங்கள். ஒரு மிகப் பெரிய சமூகக் கடமை காத்துக் கிடக்கிறது. TOSA  -வின் பெருமையை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்ற நம் எல்லாருடைய ஒத்துழைப்பும் தேவை. 

இதைப் படித்த உடனேயே நீங்கள் செயலில் இறங்குவீர்கள் என்பது நிச்சயம்.

நன்றியுடன் ,

Murthy  


Kavithai

என்னுள் உணர்வுகள் ஆயிரம் ஆயிரம் எனினும்
உன்னால் உள்ளேன் என்பது புரிந்தது கண்ணா
முன்னாள் ஏதோ யான் அறியேன் - அறியேன்
பின்னால் நடக்கும் நாடகம் எதேன்றும் - என்றும்
உன்னையே நம்பினேன் வாழ்கின்றேன் அய்யனே
என்னையே நம்பி வாழும் நாளும் வந்திடாதோ
பூவுலகம் உனக்கென்று படைத்தனயோ இறைவா
கூவும் குயிலும் இசை பாட உன் புகழை - மேலும்
பூத்து குலுங்கும் மலர் தோட்டம் அமைதனயோ
கொத்தாக மலர்களும் உனக்கென்று வைத்தனையோ
சொத்தாக உன்னை நான் பாவித்தேன் எனக்கென்ன
வைத்தனை நீ அறியேன் யான் எனினும் உன்னையே
நித்தமும் வாயார பாட வழி வகுப்பயோ இறைவா நீ!
கண்ணீர் மல்குதையா உன்னையே நினைக்கயிலே
தண்ணீரும் வேண்டேன் உன் தயைதான் இருக்கையிலே
உண்ணும் உணவும் வேண்டேன் என்றும் வேண்டி நின்றேன்
உன் திருவருளைத்தான் என்றுதான் தருவாயோ அதனை
பன்னீர் மணக்கும் சன்னிதியே உனதன்றோ பாவியேன்
என்னை  மறவாய் என் நாரணனே என்றுமே !
உலகம் படைத்தனை அதில்தான் 
பல உயிர்கள் கொடுத்தனை அதனையே 
சிலகாலம் வாழ்வதற்கே நீயே பணித்தனை 
நிலம்தான் அதில் வைத்தனை நீரும் 
கலந்தனை அதிலே நெருப்பும் இட்டனை 
நீல வானம் மேலே நிறுத்தினை 
சில்லென்ற காற்றினை வீசவிட்டாயே 
கொல்லென்று சிரித்தனயோ என்றுமே 
நில்லாத நாடகம்தனை நடத்தினயோ 
பொல்லாத மனித பொம்மைகள் செய்தனையோ 
கல்லாத மனம் ஒன்றை  கற்க விட்டனையோ 
சொல்லாத வார்த்தைகள் சொல்ல வைத்தனையோ 
எல்லாமே உனதென்றால் உனக்கென்ன பெருமை 
நில்லாமல் ஓடி வா பதில் கூற வா நீயே 
கல்லாக இல்லாமல் உயிர் பெற்று வா ஆண்டவனே !
உருகுகின்ற உள்ளமதில் உண்மையாய்குடிகொள்வாய்
மருகனென்ற பெயருக்கோ இலக்கணமாய் நீநின்றாய்
முருகா என அழைத்திட்டால் முன்னம் வந்துநிற்பாய்
அருகில் நீ இருக்க அடியேனுக்கு என்ன பயம்அய்யா !

திருத்தணி முருகா தித்திக்கும் முதல்வா நீயே
செருக்கழிக்கும் திருக்குமரனன்றோ நீ அபயம்
தருவாயே தருணத்தில் உன்னை நினைந்தால்
வருவாய் மயில் ஏறி மனத்தில் நீ நிறைவாயே

உருக்குலைந்து நான் போகும் முன்னே என்னுள்
அருமருந்தாய் வாராயோ துயரம்தனைதீராயோ
கருமுகில் கண்ணனின் மருகோனே கந்தாகடம்பா
திருவருள்தான் சுரப்பாயோ என் சுப்ரமண்யா
இனிய நண்பர்களே !
ஓசையிலிருந்து பிறந்ததுதான் இசை  எந்நாட்டவருக்கும் பொது உடமை இசை  பிரமத்திலிருந்து பிறந்தது நாத பிரம்மம்   சிவனுக்கு உகந்தது நந்தியின் தாளம் அந்த தாளத்தின் தாளமே இசைக்கு அடித்தளம்  உலகத்தில் எந்த மூலையிலும் இசை ஒலித்தாலும் அதன் அடித்தளம் அந்த நாதம் தான் அதிலே வேறுபாடே இல்லை  . இதற்க்கு அத்தாட்சியாக இத்துடன் அனுப்பியுள்ள ஒளி நாடாவின் ஒலியை எல்லோரும் பார்த்து அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் உண்மை - ஒலி ஒளி என்பது அந்த இறைவனுக்கு சொந்தமான பொருள் அதிலிருந்துதான் நாம் நம்முடைய சுயநலத்திற்காக எடுத்துக்கொண்டு அனுபவிக்கிறோம் என்பது துலங்கும் ! என்னைப்பொருத்தவரை எல்லோரும் இந்த உண்மையை அமோதிப்பீர்கள் என நம்புகிறேன் ! தங்கள் கருத்தை தயை கூர்ந்து எதுவாயினும் எழுதவும் !

இறையவனே இசைக்கு உரிமையாளன் !

ஸ்ரீதரன் ரிசர்வ் வங்கி



R.Sridharan
No Man is rich enough in this world to buy back his past!
HELP EVER
HURT NEVER



–Amazing precision drumming 
watch till the end!

 
 
                        http://vimeo.com/20408504





R.Sridharan
No Man is rich enough in this world to buy back his past!
HELP EVER
HURT NEVER

மனம் போன போக்கிலே


குழைந்தையும் தெய்வமும் ஒன்று என பல நூல்களில் படித்திருக்கிறோம் .அனுபவித்திருக்கிறோம்.குழந்தை கள்ளம் கபடம் அற்றது. போட்டி பொறாமையில் சிக்காதது.எப்பொழுதும் புன்னகை.யாரிடமும் பேதம் கிடையாது.தம் சக வயதினரிடம் நட்பு.பிறரை ஈர்க்கும் சக்தி.அவர்களின் விஷமங்களைக்கண்டு நாம் கோபப்படுவதில்லை.மாறாக ரசிக்கிறோம்.

பகைவர்களை இணைக்கும் சக்தி.உதாரணம், பெற்றோர் சம்மதமின்றி பையன் மணம்செய்து கொள்கிறான். பெற்றோர் கொதித்து எழுந்து ,சபித்து ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.சிறிது நாள் கழிந்து குழந்தை பிறக்கிறது.பெற்றோர் மனதில் பேரனுக்காக சபலம்.இறுக்கம் தளருகிறது.குழந்தையை கொஞ்ச வருவதுபோல் நாடகமாடி ,மனம் மாறி இணைகிறார்கள்.பல வருஷங்களுக்கு முன் வந்த தமிழ் படத்தில் மூன்று திருடர்கள் குழந்தையை கடத்துகிறார்கள்.பேரம் நடக்கிறது.இடையில் பாசமும் பிறக்கிறது.குழந்தைக்கு சுகமில்லை.மருந்து வாங்கும்போது போலீஸ் மோப்பம் பிடித்து ,முடிவில் பிடிபடுகிறார்கள்.திருந்தவும் சபதம் செய்கிறார்கள்.போலீஸ் ஜீப்பில் ஏறும்போது குழந்தை கதறுகிறது.திருடர்களும் தான்.படம் பார்த்தவர்களும் உணர்ச்சி வசப்பட்டார்கள்.படத்தில் நடித்த மனோகர் ,படக்காட்சி முடிந்த பின்னும் பல நிமிடங்கள் உணர்ச்சியில் தத்தளித்ததாக கூறினார்.
மகாபாரதத்தில் கண்ணன் நடத்திய நாடகங்களையும் சூழ்ச்சிகளையும் நாம் ஒப்புக்கொள்ளவில்லை தான் .ஆனால் குழந்தை  கண்ணனை யார் தான் ரசிக்கவில்லை?ஊத்துக்காடு வேங்கடகவி எப்படி அனுபவித்தார் என்று பார்ப்போம்
.



























பண்டைய காலத்தில்,ஏன் இப்பவும் இயற்கை படைப்புகளை தெய்வமாக வழிபடுவதை அறிவோம்.பூமி,நதிகள்,காற்று ,அக்னி,பறவைகள் பசு ,பாம்பு,குரங்குமுதலியவற்றை கூறலாம். ஏன் எலிக்கு கூட கோயில் உண்டு.பாகவதத்தில்,கண்ணன் கோவர்த்தன கிரி சம்பவத்தில்,மக்களை"இந்திரனுக்கு ஏன்  விழா எடுக்க வேண்டும்? மழைபெய்ய வைக்கவேண்டியது அவன் கடமை.மழைக்கு காரணம் மலைதான்.அதை கொண்டாடுங்கள் என்று உபதேசிக்கிறார்..பின் இந்திரன் கோபம் பின் விளைவுகள நாம் அறிந்ததே.

ஒரு டி .வி பே ட்டியில் ஆதிவாசிகள் வௌவாலுக்கு விழா எடுக்கிறார்கள் என அறிந்தேன்.காரணம்," அவைகள் தான் விதை களை பல இடங்களில் பரப்பி ,அதனால் காடுகள் பெருகி ,அதனால் மழை 


பெருகி வளம் பெறுகிறது.எனவே நன்றிக்கடனாக விழா எடுக்கிறோம்" இது மூட  நம்பிக்கையா? நம்மை விட அறிவாளிகள்.
மற்றொரு நிகழ்ச்சி.விவேகானந்தர் உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத மகாராஜா விற்கு உணர்த்த,அவருடைய உருவப்படத்தின் மேல் எச்சில் துப்ப சொல்லி, பணியாளரை அழைத்ததும் அவர் மறுத்ததும்,ராஜாவுக்கு உருவ வழிபாட்டின் தத்துவத்தை உணர்த்தியுதையும் நாம் அறிவோம்.

மற்றொரு கேள்வி. கடவுளுக்கு ஏன் இத்தனை உருவங்கள்,இத்தனை நாமங்கள். " நான் ஒருவன் தான் ஆனால்,தந்தைக்கு மகன்,பிள்ளைக்கு தந்தை,....சகோதரன் மாமன் மச்சான் மாணவன்,ரயில் நிலையத்தில் பிரயாணி,மருத்துவ மனையில் நோயாளி,சிறையில் கைதி,வங்கியில் வாடிக்கையாளர்,கோவிலில் பக்தன்................... வாயடைத்தவர் நம் பாலகிருஷ்ண சாஸ்திரிகள்.
சமீப காலத்தில் கூடதரிசனம் கண்டவர்கள்  தியாகராஜ சுவாமிகள்,வள்ளலார்..பின்னவருக்கு நடராஜ பெருமான் தரிசனம் தந்தார்.ஆனால் வள்ளலார் அழுது அரற்றினார்,பெருமான் காரணம் கேட்டதற்கு இந்த தரிச னம்  உலகில் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லையே என விடையளித்தார்.அவர் பாடல்கள் முழுவதும் ஆன்மீகத்தையு,ம் ,நன்னேரிகளை உணர்த்தவும் உலக நன்மைக்காகவும்,பகரப்பட்டவை.இறைவனிடம் என்ன வேண்டுகிறார். ஒரு பாடலை பார்ப்போம்.


அண்மையில் கண்ணன் தரிசனம் கண்டவர் அவிந்தர்.பதிவு செய்திருப்பவர் பாரதியார்.அவரே கண்டவர்தானே .அவர் கவிதைகளே அதற்கு  சான்று.

மனம் அது போன போக்கில் போகும்.


 Mumbai Venkataraman

Saturday, November 16, 2013

சான்றோரை சந்தித்தோம்



நமது தோசா அமைப்பு உருவான இரண்டாவது ஆண்டே நமது தலைவர் திரு.மூர்த்தி சார் அவர்கள் நமது தொடர்புக்கு வந்தவர். முதலாம் ஆண்டு நமது அமைப்பின் நிகழ்ச்சியில் ஒரு சாதாரண பார்வையாளராவே பங்கேற்ற அவர் தோசாவினால் கவரப்பட்டு உடனடியாக அதன் ஒரு உறுப்பினராகி அடுத்த ஆண்டே அதன் தலைமை பொறுப்பினை ஏற்று இன்று நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறார்.

தோசாவின் அமைப்பு முழுக்க முழுக்க ஒரு கூட்டு தலைமை மற்றும் செயலாக்கம் (collective efforts). அன்று முதல் இன்று வரையில் நமது அமைப்பின் செயல்பாடுகளை பார்த்தால் நமக்கே பல  பிரமிப்பான மலரும் நினைவுகள்  நம்    மனதில் நிழலாடி நம்மை மகிழ்ச்சி கடலில் சங்கமிக்க வைக்கும்.

ஆம் முதல் சில ஆண்டுகள் சிர்சிறிய பொருள்களை நமது பள்ளிக்கு வழங்கியது. பின்னர் . நம் பள்ளியின் முன்னாள் மாணவர்களால் endowment அமைத்தது. பள்ளியில் பல நிகழ்சிகளை நடத்தியது. குறிப்பாக வானிலையாளர் முனைவர் திரு ரமணன் மற்றும் மக்கள் அரங்கம் முலமாக நம் மருதூரை உலகறிய செய்தது.

நம்  மகாலிங்க பெருமானின் கிருபையாலும், குருமஹா  சன்னிதானத்தின்  ஆசியாலும்  குமாரி அர்ச்சனா அவர்களின் ஊக்கத்தின்  காரணமாக முதன்   முதலாக  நமது ஊர் கோயிலில் ஊரே வியக்கும் வண்ணம் மருத நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது. மிக குறுகிய காலத்தில் பரத கலைஞர்களிடையே போட்டி ஒரு கெளரவம் நம்   மருத நாட்டியாஞ்சலியில் மேடைஏறுவதில். 

திரைப்பட இயக்குனர் திரு விசு அவர்கள் தனது திருமண நாளினை திருவிடைமருதூரில்    கொண்டாட விரும்பினார். தோசாவும் தோள் கொடுத்தது. சிறப்பாக நடந்தது அந்த வைபவம் அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையில் நம் தலைவர் அவர்கள் இரண்டு கருத்துக்களை சொல்லி நம் தோசா அதனை நோக்கி பயணித்தால் சிறப்பு பெரும் என்றார்.

நாம்  நமது பள்ளிக்கு சில சேவைகளை செய்து வருகிறோம் இது தொடர்ந்து இன்னும் சிறப்பாக நடக்கும். நமது ஊர் கோயிலுக்கு மருத நாட்டியாஞ்சலி நடைபெற்று வருகிறது  இதிலும் இன்னும் பல சிறப்பான பல வேலைகளை செய்ய இருக்கிறோம்.அடுத்ததாக நமது ஊருக்கு என்று சில சேவைகளை செய்யவேண்டும்.

குறிப்பாகநமது ஊர் பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்

 உயர்  மருத்துவத்தில்  ஒரு சேவையினை செய்யலாம்.

பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய் தாக்கம் குறித்து ஒரு விழிப்புணர்வு இயக்கம் நடத்த வேண்டும். மார்பக புற்று நோய் மற்றும் கருப்பை புற்று நோய். இந்த இரண்டு நோய்களை மட்டும்   முன்பே அறிந்து கொண்டால் சிகிச்சை உண்டு மரணத்திலிருந்து காப்பாற்றலாம் முழுவதும் குணமாகி நீண்ட நாள் வாழலாம்,

எனவே பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய் குறித்து நாம் விழிப்புணர்வு இயக்கம் ஒன்று நடத்தலாம். எனக்கு சென்னை அடையாறு  கேன்சர் இன்ஸ்டியுட் - ல்  ஒரு நல்ல அறிமுகம் உள்ளது  அதன் மூலமாகவே இதனை  செய்ய  முடியும் என்று கூறினார்

சில காலமாகவே இது குறித்த  சிந்தனைக்கும் மற்றும்  தலைவரின் விடா முயற்சியினாலும் இன்று அடையாறு கேன்சர் இன்ஸ்டியுட்-ல் இது குறித்து ஒரு மருத்துவரிடம் கலந்துரையாடலுக்கு  தோசாவுக்கு   நேரம் ஒதுக்கி அந்த தகவலையும் தலைவருக்கு தெரிவித்து இருந்தார்கள்.

குறிப்பாக நமது மூர்த்தி சாரின்  மனைவியின்  சஹோதரர்  திரு. ரமணி அவர்கள் அடையாறு கேன்சர் இன்ஸ்டியுட்-ல் நீண்ட நெடுங்காலம் சேவை செய்தவர். 

தலைவர் மூர்த்தி  சார்,    திரு. ரமணி சார், திரு T. S.V மற்றும்  செயலாளர் பாலகௌரி  ஆகியோருடன்  காலை சுமார் பத்தரை மணியளவில் கேன்சர் இன்ஸ்டியுட்டின் மருத்துவர் அறையில் ஆஜர். அறையில்  இடமின்மை காரணமாக மருத்துவரே தனது நாற்காலியினை எடுத்து வந்து எங்களுடன் அமர முதலில் அனைவரும் அறிமுகம்

 இங்கு வந்ததன் நோக்கம் ஆகியவைகளை மூர்த்தி சார் அவர்கள் எடுத்துரைத்தார்

பின்னர் மருத்துவர்  எங்களிடம் பேச ஆரம்பித்தார்.

கேன்சர் அல்லது புற்று நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா

புற்று நோய் என்பது என்ன, எதனால் ஏற்படுகிறது, அதற்கான அறிகுறிகள் என்னென்ன, எப்படி கண்டு பிடிக்கலாம் எவ்வாறு  கட்டுபடுத்தலாம்  ஆரம்ப நிலை புற்றுநோயினை முற்றிலும் குணப்படுத்தி விடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? புற்று நோய் வராமல் தடுப்பது எப்படி நீங்கள் எவ்வாறு கேன்சர் இன்ஸ்டியுட்டிற்கு உதவி செய்ய இருக்கிறீர்கள்.  கேன்சர் இன்ஸ்டியுட் உங்களுக்கு என்னென்ன உதவியினை செய்து கொடுக்கும் 

முதலில் நீங்கள் என்னென்ன செய்யவேண்டும் .மக்களை எப்படி அணுக வேண்டும் எப்படி விளம்பரம் செய்ய வேண்டும்  மக்களுக்கு என்னென்ன ஏற்பாடுகளை செய்யவேண்டும்இப்படி மிக மிக குறுகிய நேரத்தில்  பற்ப்பல விஷயதானம்

பின்னர் திரு ரமணி சார் அவர்கள் தனது boss அதாவது கேன்சர் இன்ஸ்டியுட்டின் இயக்குனர் திருமதி டாக்டர் சாந்தா அவர்களை காண தான் மட்டும் சென்றார்.

கேன்சர் இன்ஸ்டியுட்டின் கடைசி மொட்டை மாடியில் ஒரு சாதாரண அறை அவரது அறைக்கு முன்னர் தென்னை ஓலையில் வேயப்பட்ட ஒரு குடிசை அனைவரும் அங்கு நின்று கொண்டிருந்தோம்.  

டாக்டர் சாந்தா அவர்களது  வயது முதுமை காரணமாக  அவரை காண முக்கியமான  சில நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை தவிர யாரும் பார்ப்பதற்கு அனுமதியில்லை.


உள்ளே சென்ற  ரமணி சார் முதலில் மூர்த்தி சார் அவர்களை உள்ளே அழைத்தார். 

ஆர்வ கோளாறு காரணமாக நான் சற்றே எட்டி பார்க்க பாலகௌரியும்  அப்படியே தொடர உள்ளிருந்து சற்றே முதுமை தெரிந்தாலும்   ஒரு கம்பீர குரல்

“எல்லோரும் உள்ளே வாருங்கள்.”

அனைவரும் ஓடிச்சென்று அவர்முன் கைகூப்பி நின்றோம்............ ,

“முதலில் உட்காருங்கள் நான்தான் சாந்தா”  என்றார்.

மிக மிக எளிமையான நாற்காலிகள் அறை முழுவதும் ஒரே விருதுகளும், சான்றிதழ்களும், புகைப்படங்களும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை   முதல் J R D Tata வரை

அவர் ஒரு சிறிய பெரம்பு  நாற்காலியில் அமர்ந்திருந்தார்  

எங்களை பார்த்து

“கான்சர் ஒரு உயிரை கொல்ற வியாதின்னு நெனைச்சுண்டு மொதல்ல நீங்க யாரும் பயப்பட வேண்டாம் நீங்க எல்லாரும் அந்த பயத்த மொதல்ல விடுங்கோ ஜனங்களுக்கு ஏதாவது சேவை செய்யனூன்னு நீங்கள்ல்லாம் இங்க வந்திருக்கேள்  பாருங்கோ அதான் நேக்கு ரொம்ப முக்கியம். 
அறுபது வருஷத்துக்கு  முன்னாடி இத ஆரம்பிச்ச அப்ப இருந்த நிலை  இன்னிக்கு இல்ல நெறைய மருந்து இருக்கு உங்கள மாறி மனுஷாலெல்லாம் என்னோட சென்தேள்னா இன்னும் நெறையா பண்ணலாம் கான்சருக்கு எப்படி ஏழை பணக்காரன்னு வித்யாசம் கெடையாதொ அப்படியே தான்  
இங்க வைத்தியத்திலேயும் எந்த வித்யாசமும் கெடையாது. எல்லாருக்கும் வைத்தியம் உண்டு 

ஏழைகளுக்கு இலவசமாகவே சில வைத்தியமும் உண்டு நீங்கலெல்லாம் ஒங்க ஊரு பெண்களுக்கு   இந்த சேவைய கொண்டு போறதுல எனக்கு ரொம்ப   சந்தோஷம் என்னால எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு நானும் ஒத்தாச பண்றேன்  நல்லது எனக்கு இன்னும் பல வேலை இருக்கு ஒங்கள இன்னிக்கு பாத்ததுல ரொம்ப சந்தோசம் எல்லோரும் போய் இதை பத்தி பிரச்சாரம் பண்ணுங்கோ ஜனங்களுக்கு ஒதவி பண்ணுங்கோ கடவுள் நம்ம கூடவே எப்போதும் இருப்பார்”

அனைவரும் விடைபெற்றோம்

எனக்கு அப்போது ஒரு மாபெரும் மனநிறைவு என்னென்று சொல்வது அன்னை சாரதா தேவியினை தரிசித்து விட்டு வருவது போல் இருந்தது.

இன்று நாம் அனைவரும் ஒரு சான்றோரை சந்தித்தோமா  அல்லது அன்னை சாரதையினை  சந்தித்தோமா என்று அதே சிந்தனையுடன் இதனை இன்று   எழுதினேன்

விடைபெறும் முன்  பாலகௌரி ……..அம்மா உங்களுடன் ஒரே ஒரு போட்டோ என்று கேட்க

சரி ஏன் எல்லோரும் நில்லுங்கோளேன்


ஸ்ரீதர்




துப்பாக்கிகள் தீயைக் கக்கும் கோட்டில் ----



விவேக் சந்தோஷமாக இல்லை. 

அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் Project  Manager-ஆக பணி புரிகிறார். ஆனால் அவரால் விமானத்தில் பயணிக்க முடிய வில்லை.Admin -கிளையில் பல முறை சொல்லியும் பயனில்லை. இப்போது சதாப்தி எக்ஸ்ப்ரஸில் பயணிக்கும் அவர் மெல்ல தன பையிலிருந்து laptop -ஐ எடுத்து வேலை செய்ய ஆரம்பித்தார். 

அவர் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் ," நீங்கள் software company -ல் பணி புரிபவரா?" என்று வினவினார்.

விவேக் அவரை ஒரு கணம் நோக்கி  'ம் ' என்று முணுமுணுத்தவாறு, ஒரு விலையுயர்ந்த காரைப்போல தன மடிக்கணினியை அதிக கவனத்துடன் தடவிக்கொடுத்தவாறு தன வேலையில் மூழ்கிப் போனார்.

" சார், இன்றைக்கு நாடு முழுவதும் கம்ப்யூடர் ஆக்கிரமித்துள்ளது. இந்த  முன்னேற்றம் ஏற்பட உங்கள் போன்ற இளைஞர்கள் தான் காரணம் ." என்றார்

எப்போதுமே பாராட்டுதல்களுக்கு மயங்கும் விவேக் அவரைப்பார்த்து, " Thanks " என்றார் .

" நீங்கள் ஆபீஸில் அமர்ந்து கணினியில் என்னமோ எழதுகிறீர்கள். அவை வெளியே வந்து மிகப்பெரும் செயலாற்றலைப் பெறுகிறது.. இது எனக்கு பெரும் வியப்பை அளிக்கிறது." என்றார் பக்கத்து சீட்காரர்..

தன்னைவிட தரம் குறைந்தவரை பார்ப்பதுபோல விவேக் .அவரைப் பார்த்தார். எளிமையான கேள்விக்கு கோபம் பதிலாகாது. ஆனால் விவேக் சொன்னார்," நீங்கள் நினைப்பது போல இது அத்தனை சுலபமானது அல்ல. மிகவும் கடினமான, எளிதில் புரிந்து கொள்ள முடியாத சில முறைகளைக் கையாள நேரிடும்."

"அப்படித்தான் இருக்க வேண்டும். அதனால்தான் உங்களுக்கு இவ்வளவு அதிகமான சம்பளம்  தருகிறார்கள் ""

அவர் சொன்னதை விவேக் ரசிக்க வில்லை. அவரிடம் மிச்சம் மீதியிருந்த நட்பான குரலுக்கு விடை கொடுத்து விட்டு  இப்போது சற்றே  சண்டைக்காரனின் குரலில் பேசத் தொடங்கினார். "  எங்கள் சம்பளத்தை தான் எல்லாருமே பார்க்கிறீர்கள்.எங்கள் கடின உழைப்பை யாருமே கண்டு கொள்வதில்லை. உதாரணமாக  நாம் பயணம் செய்யும் இந்த ரயிலை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் எல்லா முன்பதிவு வசதியும் கணிணி மயமாக்கப் பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ரயில்கள்.  எந்த ஊரிலிருந்து, எந்த  ஊ ருக்கும், எந்த ரயிலில் வேண்டுமானாலும், ஆயிரக்கணக்கான முன்பதிவு மையங்களில் ஏதேனும் ஒன்றில் பயணச் சீட்டு முன்பதிவு செய்ய முடியும். ஒரே தரவு தளத்திலிருந்து ஆயிரக்கணக்கான பரிமாற்றங்கள். இதற்கென தரவு ஒருங்கிணப்பு, .தரவுப்பாதுகாப்பு. இது பொன்ற ஒரு அமைப்பை வடிவமைப்பது மற்றும் குறியிடுதல் - இவையெல்லாம்  எவ்வளவு சிக்கலானது  என உங்களுக்கு புரிகிறதா? பொரிந்து தள்ளினார் விவேக்.

கோளரங்கத்தை பார்க்கும் குழந்தையைப் போல பக்கத்து சீட்காரர் வியப்பால் உறைந்து போனார். " தரவு தளம் வடிவமைப்பது, குறியிடுதல் பொன்ற வேலைகளை நீங்கள் செய்கிறீர்களா?"

" இந்த வேலைகளை நான் செய்து கொண்டிருந்தேன். ஆனால் இப்போது நான் திட்ட மேலாளர். (Project Manager)"

" ஓ, அப்படியானால் இப்போதெல்லாம் உங்கள் தினசரி வாழ்க்கை சற்றே எளிதாக இருக்கிறது, இல்லையா?"

இந்த கேள்வி  ஒட்டகத்தின் முதுகில் கடைசி வைக்கோல் கட்டைப்போட்டது போன்ற   நிலையை  விவேக்கிடம் ஏற்படுத்தியது.

" வாங்க சார், வாங்க. ஒரு கம்பெனியின் ஏணியில் மேலே போகப்போக அவருடைய பொறுப்புகளும் அதிகமாகும் என்பது உங்களுக்கு தெரியாததா ?பொறுப்புகள் அதிகமானால் வேலைப்பளுவும் அதிகரிக்கத் தான் செய்யும்.  குறியிடுதல், வடிவமைத்தல்  போனற வேலைகளை  இப்போது நான் செய்வதில்லை .ஆனால் இந்த வேலைகளை செய்ய  வைக்கும் பொறுப்பு எனக்கு உண்டு. இந்தப் பொறுப்பு இன்னும் அதிக மன அழுத்தத்தை கொடுக்க வல்லது. மிகச்சிறந்த  தரத்துடன், சரியான நேரத்தில் வேலைகளை முடிப்பது எனக்கு  முக்கியம். ஒரு பக்கம் தன்  தேவைகளை அடிக்கடி மாற்றி க்கொள்ளும்  வாடிக்கையாளர், மறு பக்கம் மாற்றுத்தேவையை விரும்பும் உபயோகிப்பாளர், அடுத்த பக்கம் அந்த வேலையை நேற்றே முடித்திருக்க வேண்டும் என எதிர்பார்க்ககும் மேலதிகாரி  -  நண்பரே, துப்பாக்கிகள் தீயைக்  கக்கும்  கோட்டில் நிற்பது எப்படி என்பது உங்களுக்கு எப்படி தெரியப் போகிறது ?" 

பக்கத்து சீட் அன்பர் இதக்கேட்டவுடன் சற்றே தனது இருக்கையில் சாய்ந்தவாறு கண்களை மூடிக்கொண்டு எதையோ யோசித்தவாறு சில நொடிகள் தியான நிலையில் இருந்தார்.

" Point  4875 என்ற மலை உச்சியைப் பிடிக்க நங்கள் 30 பேர் கட்ட ளையிடப்   பட்ட போது இருள்தான் எங்களுக்கு  துணையாக இருந்தது. எதிரி  உயரமான இடத்திலிருந்து துப்பாக்கியால் சுட்டபோது அடுத்த குண்டு எங்கு விழுமோ, யாரை விழுங்குமோ  என்று எங்களால் கணிக்க முடியாத நிலை. இருந்தும்  முன்னேறிக்கொண்டே இருந்தோம். இறுதியில் நாங்கள் அந்த மலை உச்சியைக்  கைப்பற்றி, அங்கே நமது மூவர்ணக்  கொடியை ஏற்றிய போது, எங்களில் ஐந்து பேர் மட்டுமே உயிரோடு இருந்தோம்."

பிரமிப்புடன் கேட்ட விவேக் ," நீ-ங் --க ,"

அவர் முடிப்பதற்குள் பக்கத்து சீட்காரர் தொடர்ந்தார்," என் பெயர் சுபேதார் சுஷாந்த்.13 J & K Rifles -ஐ சேர்ந்த நான் தற்போது கார்கிலில் Peak 4875-ல் பணியாற்றுகிறேன் என்னுடைய போர்க்கள பணி முடிந்து விட்டதாகவும், இனி நான் எளிதான பணியில் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.சொல்லுங்க சர், எளிதான வாழ்க்கை  வாழும் பொருட்டு, ஒருவன் தன் கடமையை துறக்க முடியுமா?"

 ' அந்த மலை உச்சியைக் கைப்பற்றிய அதிகாலையில் என் சக ஊழியர் பணியில் காயமுற்று, எதிரியின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகும் நிலையில்  படுத்துக் கிடக்கிறார். நாங்கள் ஒரு பாதுகாப்புக் குழிக்குள் ஒளிந்திருக்கிறோம். அந்த ராணுவ வீரரை பாதுகாப்பு  வலைக்குள் கொண்டு வருவது என் கடமையல்லவா? ஆனால் எனது கேப்டன் எனக்கு அனுமதி அளிக்கவில்லை. அவரே அந்த பணியில் ஈடுபட்டார். 

" அவர் சொன்னார் ' ஓரு ராணுவப் பயிற்சி பெரறும் நல்ல மனிதனாக நான் எடுத்துக் கொண்ட சபதம் முதல முதலாக நம் நாட்டின் பாதுகாப்பும், நலங்களும், அடுத்த படியாக என் கீழ் பணி புரியும் வீரர்களின்  பாதுகாப்பும், நலங்களும் - இவைதான் என் குறிக்கோள். எப்போதும், எந்த நிலையிலும், ஒவ்வொரு முறையும்  என் தனிப்பட்ட பாதுகாப்புக்கு நான் கடைசி முக்கியத்துவம் தான் தருவேன்.,, 

" அவர் காயமுற்ற வீரரை பதுங்கு குழிக்குள் கொண்டுவரும்போதே எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் அவர் உடலில் பாய்ந்தன. அடுத்த ஒவ்வொரு காலையிலும்  நாங்கள் பாதுகாப்பில் நிற்கும்போது, எனக்காக   குறி பார்க்கப் பட்ட  குண்டுகளை அவரது    உடல் ஏற்றுக்கொண்டது. எனக்குத் தெரியும் ஐயா,நிஜமான  துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில் நிற்பது என்பது எத்தகைய அனுபவம் என்பது  எனக்கு நன்றாகவே தெரியும்.'

விவேக் நம்ப முடியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் .பதிலுக்கு என்ன சொல்வது என்று  அவருக்கு தெரிய வில்லை.

திடீரென, அவர் தனது மடிக்கணினியை செயலிழக்கச்  செய்தார்.

துணிச்சலும், இதுவரை தான் புராண நாயகர்களிடையே மட்டும் காணப்படும் என்று நினைத்த  கடமை யுணர்ச்சியும்    வாழ்வின் தினசரி அங்கமாகிவிட்ட ஒருவர்  அருகில்   இருக்கும் போது, கணினியில் வார்த்தைகள் ஆவணத்தை ( Word Document ) சரி பார்ப்பது கூட சின்னத்தனம்மாக, ஏன், அவரை அவமதிக்கும் செயலாகக்கூட இருக்கலாம்,

சதாப்தி எக்ஸ்பிரஸ் வேகத்தைக் குறைக்க ,சுபேதார் சுஷாந்த் தன் சூட்கேசை எடுத்துக்கொண்டார். விவேக்கிடம்," தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி" என்ற படி  கை குலுக்கினார். மலைகள் ஏறிய கைகள், துப்பாக்கியை இயக்கிய கைகள்,தாய்த்திரு நாட்டின் மூவர்ணக்  கொடியை மலை உச்சியில் ஏற்றிய கைகள்-
விவேக் தன கையை நீட்டியபோது  கைகள் சற்றே நடுங்குவதை உணர்ந்தார். திடீரென இனம் தெரியாதஒரு விசையால் உந்தப்பட்டு, எழுந்து, அசையா நிலை யில் நின்று, தன வலது கையை உயரத்திய படி, அந்த நொடியில் தோன்றிய சிந்தனைக்கு கட்டுப்பட்டு, ஒரு சல்யூட் அடித்தார் விவேக்.

ஆசிரியர் குறிப்பு:    
 இந்த நிகழ்வு மலை உச்சி 4875 -ஐ பிடிக்க நடந்த கார்கில் போரின் ஒரு உண்மை நிகழ்ச்சி. வெற்றி உறுதியான நிலையில் , கேப்டன் விக்ரம் பாத்ரா  தன் கட்டளைக்குட்பட்ட  ஒரு வீரனைக் காப்பாற்ற தனது இன்னுயிரையே தியாகம் செய்தார்.இதற்காகவும், இதைப் போன்ற பல்வேறு தீரச் செயல்களுக்கும் கேப்டன்  பாத்ராவுக்கு நாட்டின் மிக உயர்ந்த ராணுவ கௌரவமான  பரம் வீர் சக்ரா பட்டம் வழங்கப் பட்டது. 

Murthy