Sunday, June 5, 2011

Mothers Day-By Muthukumar

See full size image

An eMagazine for TDRites
--------------------------------------------
--------- Forwarded message ----------
From: Muthu kumar <muthukumar9958@gmail.com>
Date: 2011/5/6

ம்மா .....

அன்னையருக்கு  விழா  எடுக்க  வருடத்தில்  ஒரு  நாள்  போதுமா..ATM --Any  Time  Mother ..
யாரிடம்  பட்ட  கடனையும்  அடைத்து விடலாம்...அம்மாவுக்கு..?  அன்பு  தந்து, அரவணைத்து,
சோரூற்றி,  தலை  துவட்டி, ஆடை  மாற்றி,  ஆய்  அலம்பி, பொட்டு வைத்து, திருஷ்ட்டி
கழித்து, தூக்கி  விளையாடி,  உச்சி முகர்ந்து, நிலா  காட்டி,  நடக்க  வைத்து, கண் கலங்கி,
கட்டிப் பிடித்து, மருந்து  கொடுத்து, தலை தடவி,  கண் துஞ்சாமல்  மடியில்  வைத்து, உறவு
சொல்லி,  பாட்டுப் பாடி, பெரியவனாக்கி,  தலை நிமிர்ந்து, வேகம்  கண்டு  ஓரம் நின்று
ஏதும்  அறியாதவளாய் ..இறைவா  என்  குழந்தையைக்  காப்பாற்று  என்று மௌனமாய்
இறைஞ்சும் ...மிக  உயர்ந்த  ஜீவன்  அம்மா ....அம்மாவை  வணங்குவோம்.

ஆதி சங்கரரின்  மாத்ருகா  பஞ்சகம்.......இந்நாளில்  படியுங்கள்.

கருத்தரித்த  நாள்  முதலாய்  உள்ளிருந்து கணந்தோறும்  காத்தருள்  சுரந்து  சுரந்து ...
உருவெடுக்கும்  என்னுயிரால் ருசியிழந்து  உணவு குன்றி மசக்கை எழ  மெலிந்து  மெலிந்து...
வருத்துகிற  கவலை எழும் வேளைதனில்  வளர்கின்ற பிள்ளைச் சுமை சுமந்து சுமந்து...
பெருத்தவலி சூழ்ந்துற்ற  காலைதனில் பிரசவத்தின் சூல்வலிக்கு இறங்கி  இறங்கி...

திருத்தமொடு பூமிதனில் தவழவிட்டு  சிம்மாசன  மடியேற்றி மகிழ்ந்து மகிழ்ந்து...
பொறுத்து எனை, மலமூத்திரம் கழிந்த காலை, புன்னகையே பூத்து முகம் மலர்ந்து மலர்ந்து...
கருத்தொரு  நலன்கோடி தந்தனை அம்மா!  கடன் சுமை என்னிடத்தே மிகுந்து மிகுந்து...
உறுத்துகின்ற  பான்மை தீரப் பதிலெதுவோ..ஒன்றினுக்கு ஒன்றேனும் உவந்து உவந்து...

பொருத்தமொரு தீர்த்திட  முடிந்திடுமோ  பொற்பாத மலரடிகள்  நினைந்து நினைந்து...
உருக்கமோடு  திருவடிகள் தொழுவதல்லால் ஒன்றறியேன்  அன்னையே ..!
பணிந்து  பணிந்து   வணங்குகிறேன்.
*****     *****     *****     *****     *****
முத்துக்குமார் 

No comments:

Post a Comment