Sunday, November 20, 2011

சாக்கியார் கூத்து-By Sridhar

சாக்கியார் கூத்து  மண்டபம்                                          (இது ஒரு செவி வழி செய்தி) 
நாம் பள்ளிகளில் உலக வரலாற்றினை படிக்கும் பொழுது ஜனநாயகம் முதன் முதலில் இங்கிலாந்தில் உருவானது. பின்னர் படிப்படியாக ஐரோப்பிய நாடுகளின்  காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த  ஆசியா ஆப்ரிக்க அதிலிருந்து விடுபட தொடங்கிய காலத்தில்  சுதந்திரம் அடைந்த  பகுதிகள் படிப்படியாக ஜனநாயக நாடுகளாக  உருவாயின  என்று  படித்திருப்போம்.
 
மக்களுக்காக மக்களால் மக்களே தேர்வு செய்யும் ஆட்சியே ஜனநாயகம் என ஒரு விளக்கம். மக்களுக்கான பேச்சுரிமை எழுத்துரிமை கருத்துரிமை  என பல்வேறு உரிமைகள் என இது வரும்.
 
இது தான் பரிணாம வளர்ச்சியினால் தற்காலத்தில் உள்ள மீடியா உரிமை மீடியா மீடியா என பல்வேறு உரிமைகள்.

ஆனால் இது போன்ற உரிமைகள் உலகில் எந்த நாட்டிலாவது முன்னர் இருந்ததா?
 
ஏதென்ஸ் நகரத்தில் கிரேக்க ரோமானிய முடியாட்சியில் சாக்கரடிஸ் பிளாட்டோ அரிஸ்டாட்டில் என்று புரட்சிகர பேச்சாளர்கள் இருந்திருந்தனர்  என்று ஐரோப்பிய வரலாற்று புத்தகங்கள்  சொல்லும்.
 
ஆனால் இது எந்த நாட்டில் முதன் முதல் இருந்தது என ஒரு நீண்ட பார்வை பார்த்தால் இது நமது நாட்டில் முன்னரே இருந்திருக்கிறது என்பதனை நாம் மிக எளிதில் அறிந்து கொள்ளலாம்.   

எனக்கு சிறு வயது முதல் புதிதாக   ஒரு ஊரின் பெயரினை கேட்டால் அதற்கு அந்த பெயர் எதனால் வந்தது அங்கு கோயில்களில் என்ன புதிய தகவல். அங்கு என்ன சிறப்பான செய்தி என்பதனை அறிந்து கொள்வதில் அலாதி பிரியம்.
 
இதுவே நமது ஊர் மற்றும் கோயில் என்றால் கேட்கவா வேண்டும். 
 
பலரிடம் துருவி துருவி கேட்டு கேட்டு  பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்

நமது ஊர் கோயிலின் சுவாமி கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடையில் நால்வர் மண்டபம் வரும் வழியில் எதிரில் இரண்டு மண்டபங்கள் இருக்கிறதல்லவா.
 
அது குறித்துதான் நான் இன்று எழுதப்போகும் தகவல்.

நமது காலத்தில் கோயில் திருக்கல்யாணம் நடக்கும் சமயத்தில் அதன் அருகில் ஒரு பந்தல் கட்டுவார்கள் அம்மன் தபஸ்  என்று ஒரு நாள் அங்கு நிறைமணி என சொல்லி காடு போன்று ஒரு அமைப்பினை உருவாக்கி  அனைத்து கறிகாய்களையும் தொங்க விடுவார்கள்.
 
பின்னர் திருகல்யாணம் ஆனவுடன் ஒரு சிறிய தேரில் சாமி மற்றும் அம்மனை வைத்து அந்த மண்டபத்தினை பத்து சுற்று சுற்றுவார்கள்  ஒவ்வொரு சுற்றிலும் விதவிதமான  நாதஸ்வர கச்சேரிகள் நடக்கும். இதுதான் அங்கு நாம் பார்த்தது.

ஆனால் அந்த இரண்டு மண்டபங்களும் முற்றிலும் வேறு நோக்கத்திற்கான மண்டபங்களாம். 
அந்த மண்டபங்களுக்கு சாக்கியார் கூத்து மண்டபம் என பெயராம். 
அது என்ன சாக்கியார் கூத்து. 
இந்த சாக்கியார் கூத்து மன்னர்கள் காலத்தில் மிக மிக பிரபலம்.
சாக்கியார்கள் என்பவர்கள் மிக மிக மெத்த படித்த அறிஞ்சர்கள். பல பாஷைகளில்  (மொழி)  புலமை மிக்கவர்கள். பாடல்கள் இயற்றி அதனை நாடகங்களாக  நடத்தி அதனை பாடும் கலையில்  மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள்.

ஆனால்  சாக்கியார்கள்  முற்றிலும் அந்த நாட்களில் நடக்கும் நாட்டு நடப்பினையே   நாடகமாக புனைவார்கள். பாட்டு பாடி நடிப்பார்கள்.
 
அந்த நாடகங்கள் பாராட்டுவதாகவும் இருக்கும் கிண்டலாகவும் இருக்கும். அந்த அந்த பகுதியில் நடக்கும் நல்லது கெட்டதுகளும் அந்த கூத்தில்  இடம் பெறும்.  
மன்னன் ஏதாவது முடிவு எடுத்து அறிவித்தாலும் அதுவும் இடம்பெறும்.  
நல்லதாக இருந்தால் கூத்து பாராட்டுவதாக இருக்கும் அனால் அதே முடிவு ஏதேனும்
தாறுமாறாக இருப்பின் அது கூத்தில்    கிண்டலாக காட்டப்படும்.    

மெத்த படித்தவர்கள் இருக்கும் ஊர்களில் மட்டுமே இந்த சாக்கியார் கூத்து நடக்கும்,

சாக்கியார்கள் நமது நாட்டில் எந்த பகுதிகளுக்கு சென்றாலும் அவர்களை எந்த நாட்டு மன்னர்களும் அவர்கள் சாக்கியார் கூத்து நடத்த அனுமதித்து விடுவார்களாம். எந்த விதமான தடைகளும் கிடையாது  இப்போதுள்ள கார்டுன்கள்  சட்டம் போன்று.
 
அதுமட்டுமல்ல மாமன்னர்களும்,  சிறிய குறு நில  மன்னர்களும் இந்த சாக்கியார் கூத்தினை மாறு வேடங்களில் வந்து பார்த்து ரசிப்பார்களாம்.

ஒற்றர்கள் மூலமாகவும் சாக்கியார் கூத்து பார்க்கப்பட்டு நாட்டில் ஏதேனும் தவறுகள் நடந்தால் சரி செய்து கொள்ளப்படும்.

மன்னனே தனது சில தவறான முடிவுகளை இம்மாதிரியான சாக்கியார்  கூத்தின் மூலம்
திருத்தி கொண்ட சம்பவங்களும் இருந்ததாம்.  
சுருக்கமாக சொல்வதென்றால் இது ஒரு விதமான பொலிடிகல் சட்டையர்.
 
இது தான் சாக்கியார் கூத்து என்பது.

அந்த காலங்களில் திருவிடை மருதூரில் நடக்கும் சாக்கியார் கூத்து மிக மிக பிரபலம். 
எந்த அளவுக்கு பிரபலம் என்று கேட்டால் இடைமருதூர் சாக்கியார் கூத்து என்று திருவற்றியூர் வடிவுடை அம்மன் கோயிலில் சோழ மன்னனால் சிற்பமாக   செதுக்கி சாசனம் செய்யும் அளவுக்கு பிரிசித்தி. இதனை செய்தது விஜயாலய சோழ மன்னனே.

இது மட்டுமா

குலோகதுங்க சோழ மன்னர்  சென்னை அருகே மணிமங்கலம் என்னும் ஊரில் தர்மேஸ்வரர் என்னும் கோயிலை ஸ்தாபிதம் செய்து அங்கும் இடைமருதூர் சாக்கியார் கூத்தினை சிறப்பான சிற்பமாக செதுக்கி வைத்து இருக்கிறார்.

இதுதான் சாக்கியார் கூத்து மண்டபத்தின் கதை
File:Mahalingeswarar Temple, Thiruvidaimarudur.jpg

அன்புடன்
ஸ்ரீதர்
9941892821

No comments:

Post a Comment