வெடிகுண்டு விவசாயம்
16.10.2011 - ஞாயிற்றுகிழமை எனது வீட்டில் எனது மனைவி குழந்தைகள் தீபாவளிக்கு உடைகள் வாங்க எனது சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் சென்று விட்டனர். நானும் எனது தாயாரும் மட்டும் வீட்டில். வழக்கம் போல் அந்த ஞாயிறும் பலகாரம் (ராம்ஜிக்கு பிடித்த) அடைதான். எனது தாயார் ஒவ்வொன்றாக போட நானும் தூர்தர்ஷனில் 8.15 மணி செய்திகளை பார்த்து மூழ்கிகொண்டே மற்றும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தேன்.
இடையில் வந்த செய்திதான் மிகமிக சுவையான, சற்றே நிமிர்ந்து உட்காரும் படியான நெற்றியில் அடிக்கும் ஒரு சிறப்பான செய்தி. என்ன அந்த செய்தி வந்ததென்னமோ ஒரு விவசாய செய்திதான் ஆனாலும் ம்மை போன்ற பலர் பல காலமாக தொலைகாட்சிகளில் பார்க்காத பார்க்க விரும்பாத ஒரு செய்திதான் அதுதான் விவசாய செய்தி.
ஆனாலும் விதிவிலக்காக நான் சிறு வயதிலிருந்தே விவசாயத்தில் சற்றே ஒரு விதமான ஈடுபாடு உள்ளவன். நமது ஊரில் படிக்கும் காலத்தில் வீட்டில் எனது தந்தையார் ஆடி மாதம் 1-ம் தேதி காலையில் முதல் வேலையாக
வீட்டின் கொல்ல்லையில் இரண்டு குழிகளில் அவரை விதை ஊனுவார் . ஆடி மாதம் முதல் நாளும் அல்லது ஆடி அமாவாசையன்ரோ விதை விதைப்பார் ஆடி பட்டம் தேடி விதை என்பார். சிலகாலம் கழித்து அதற்கு பந்தல் போடுவார். ஓரிரு மாதங்களில் அது காய்களை தரும். நான் பந்தலில் ஏறி பறித்து தர வேண்டும்.
இப்படித்தான் எனக்கு விவசாய விஷயங்கள் மீது ஒரு ஆர்வம் வந்தது. நான் இன்றும் எனது விட்டில் தோட்டம் போடுகிறேன் அவரை, வேண்டி, கத்திரி வாழை என்று .கிடைப்பவை அனைத்தும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு. சமீபத்தில் நமது ஊர் நண்பர் ஆகார சங்கருக்கு வெண்டைகாய் பறித்து கொள்ள சொன்ன விதம் ஒரு சுவாரஸ்யமான செய்தி. நமது நண்பர்கள் ராம்ஜியும் ரகுவும் இதனை மிகவும் ரசித்தனர்.
சரி நான் கேட்ட தூர்தர்ஷன் செய்திக்கு வரலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூரில் ஒரு விவசாயின் வயலில் அவர் விவசாயம் செய்த நெல் சுமார் ஆறரை அடி உயரம் வளர்ந்து நிற்கிறது.
சாதாரணமாக ஒரு வயலில் விளையும் நெல் மணிகளை விட சுமார் இரண்டரை மடங்கு நெல் மணிகளை விளைவித்த அந்த கதிர்கள் நிமிர முடியாமல் அனைத்தும் சாய்ந்த வண்ணம் உள்ளன
சுற்று வட்டார மக்கள் அனைவரும் இந்த அதிசய விளைச்சலை வந்து கூட்டம் கூட்டம் பார்த்த வண்ணம் உள்ளனர் என்பது தான் அந்த தூர்தர்ஷன் செய்தி. இது குறித்து வரும் செவ்வாயன்று வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் அந்த விவசாயி நேரடி பேட்டியில் வர உள்ளதாகவும் செய்தியில் சொன்னார்கள்.
நானும் அன்றைய செவ்வாய் கிழமை அலுவலகத்தில் இருந்து சற்று முன்னமே வந்து அவரின் பேட்டியினை கேட்டேன்.
நமது திருவிடைமருதுரிலேயே சிங்கிநீர் குளத்துக்கு பின்னால் உள்ள கோயில் சன்னாபுரத்தை சேர்ந்த மருதவாணன் என்னும் அந்த விவசாயி நமது ஊரிலேயே பிறந்து நமது பள்ளியிலேயே படித்து தனக்கிருந்த மிக சொற்பமான விவசாய நிலத்தில் மிக சிறப்பாக விவசாயம் செய்து சிறந்த முறையில் முன்னேறி வருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.
துர்தஷன் மூலமாக அவரை பேட்டி கண்டவர் திருமதி அருணா Dr.M.S.SWAMINATHAN RESEARCH FOUNDATION - ல் பணி புரியும் ஒரு விவசாய விக்ஞானி.
திரு. மருதவாணன் பேட்டியில் சொல்கிறார். நாங்கள் எல்லாம் கரிகாலன்
காலத்திலிருந்து விவசாயம் செய்பவர்கள். எனவே தற்காலத்தில் செய்யும் வெடிகுண்டு விவசாயத்தினை நாங்கள் செய்வதில்லை என்று.
சற்றே நெளிந்து போன அருணா அவர்கள் என்ன இப்படி சொல்லி விட்டிர்கள்
பொத்தம் பொதுவாக என்று திருப்பி கேட்க.
ஆமாம் நீங்கள் பசுமை புரட்சி என்று செய்ய சொல்வது வெடி குண்டு விவசாயம்தான்.
உலக போரின் போது ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் வெடி மருந்துக்கு தேவையான அம்மோனியத்தையும் பாஸ்பர்ஸையும் உற்பத்தி செய்ய பன்னாட்டு கம்பெனிகள் புற்றிசல் போல் முளைத்தன.
திடிரென்று உலக போர் முடிவுக்கு வரவே அவர்கள் உற்பத்தி செய்த மருந்து பொருள்களை பயன்படுத்துவாரில்லை.
தங்களது உற்பத்திக்கு சந்தையினை ஏற்படுத்தி தருமாறு நெருக்கின
பன்னாட்டு கம்பெனிகள் தங்களது ஆட்சியாளர்களை. அவ்வளவுதான்
அம்மொனியத்தை அம்மோனியம் சல்பேட்டகவும். பொட்டஷியம் பாஸ்பேட்டகவும் முன்றாம் உலக நாடுகளில் பசுமை புரட்சிக்கு உகந்த உரமென்று படிபறிவில்லா விவசாயிகளிடம் விற்று விட்டனர் நல்ல
விலைக்கு. இதற்கு முன்னர் விவசாயத்தில் வரவு 100 செலவு 60 என்று இருந்த நிலைமை மாறி வரவு 100 செலவு 90 என்று ஆனது தான் மிச்சம் என்று கூறிய அந்த விவசாயி இதனால் தான் நான் கரிகாலன் காலத்து விவசாயம் செய்வதாக கூறினார்.
அம்மா நமது நாட்டில் பல காலமாக ஜம்மு முதல் கன்யாகுமரி வரை நெல் விவசாயம் நடந்து வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதிக்கு
ஏற்ப நெல் விதை இருக்கிறது. உதாரணத்திற்கு நமது நாகப்பட்டினம் பகுதியில் நடப்படும் சம்பா ரக நெல் விதைக்கு குதிர வால் சம்பா என்று பெயர். அது பத்து நாட்கள் தண்ணிரில் இருந்தாலும் அழுகாது. மேலும் நாகை பகுதி ஒரு நதியின் கழி முக பகுதி மழை வெள்ள காலங்களில் பல நாட்கள் பயிர்கள் தண்ணிரில் நிற்கும் அதனை தாங்கும் வகையில் தான் அங்கு குதிரைவால் நெல் விதை விவசாயம் செய்யபடுகிறது. இது போல் உப்பு தண்ணீரிலும் கடுப்பு தண்ணீரிலும் ஏன் சதுப்பு நிலங்களிலும் பயிரிடப்படும் நெல் விதைகள் நமது நாடு முழுவதும் இன்னும் இருககிறது. அதனை விடுத்து நாடு முழுவதும் ஒரே விதை ஒரே கம்பெனி உரம் ஒரே வகையான விவசாயம் என்றால் எப்படி விவசாயம் சிறக்கும்.
எனது வயலில் நான் நட்டிருக்கும் நெல் விதையின் பெயர் கட்டை சம்பா இது தான் காலம் காலமாக பயிரிடப்படும் நமது நெல் வகை. மற்ற வயல்களில் ஒரு கதிருக்கு 200 முதல் 250 மணிகள் என்றால் எனது வயலில் உள்ள கதிரில் 450 முதல் 480 மணிகள் உள்ளன. மற்ற வயல்களில் ஏக்கருக்கு 40 மூட்டைகள் என்றால் எனக்கு 80 மூட்டைகள் விளைகின்றன என்றார்.
நெல்லும் அதிகமாக விளைகிறது மாடுகளுக்கும் வருடம் முழுவதும் வைக்கோல் கிடைக்கிறது. நான் அதிகமாக இயற்கை முறைகளையே பின்பற்றுவதாக பேட்டியில் கூறினார். வந்தவர்கள் வாயடைத்து நின்றனர்.
வாழ்க அவரது விவசாயம் வளர்க அவர்களது நோக்கம்
ஸ்ரீதர்
9941892821
No comments:
Post a Comment