Wednesday, December 21, 2011

திருவிடைமருதூர்-By G Sridhar

தனக்கு பிரும்மன் அளித்த (பிரும்மஹத்தி தோஷம் ) சாபத்தினை எங்கு கழித்து கொள்வது என பரமனையே வேண்டி தவமிருந்த ரோமசமுனிவருக்கு அசரீரியாக நீ எங்கு ஒரு குளத்தின் கரையில் நின்று கொண்டிருக்கும்போது ஒரு காகம் அந்த குளத்தில் முழுகி எழுந்து பறக்கும் அது எந்த மரத்தின் மீது அமர்கிறதோ அந்த மரத்தருகே நான் நான் சுயம்புவாக என்னையே  பூஜை செய்துகொண்டிருக்கிறேன்

 அதனை எடுத்து நீ பிரிதிஷ்டை செய்  உனக்கு சாப விமோசனம் கிடைத்து விடும் என ஆசி கூற  அவ்வண்ணமே ரோமச்ச ரிஷி அவர்கள் ஒரு குளத்தின் (காக்கா குளம் (அ) கனக தீர்த்தம் )  அருகே நின்றுகொண்டிருக்கையில்   ஒரு காகம் முழ்கி எழுந்தது அது எழுந்தவுடன் அதன் நிறம் தக தகவென தங்கமயமானது. மிகவும் ஆச்சர்யம் கொண்ட ரோமச்ச ரிஷி அதனையே பின் தொடர்ந்து ஓட அது ஒரு மருத மரத்தின் மேல் சென்று அமர்ந்தது.

அப்போது பரமன் அளித்த வரம் ரோமச்ச முனிவருக்கு நினைவு வர அந்த மருத மரத்தின் அடியில் சுத்தம் செய்து பார்த்த ரோமச்ச ரிஷிக்கு ஒரு மிக பெரிய லிங்கம் கிடைத்தது. அந்த லிங்கத்தினை அருகிலேயே எடுத்து சென்று பிரிதிஷ்டை செய்த ரோமச்ச ரிஷிக்கு உடனடியாக சாப விமோசனமும் கிடைத்தது.

இப்படி ரோமச்ச ரிஷிக்கு சுயம்புவாக கிடைத்ததுதான் இந்த மகாலிங்க பெருமான். ஆம் அவர் ஒரு மகாலிங்க பெருமான்தான் காரணம் பிற்காலத்தில் ராஜ ராஜ சோழன் தஞ்சையில் ஒரு பெரிய கோயில் கட்டும் வரை இவர்தான் மிக பெரியவர்.

புராண காலம்  
திருவிடைமருதுருக்கு இப்பெயர் வர பல காரணங்கள் சொல்லப்படுகிறது

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலத்தில் உள்ள உத்தரார்ஜுனம் தமிழகத்தின்  தென் கோடியில் உள்ள திருப்புடை மருதூர் ஸ்புடார்ஜுனம் ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்ளதால் இதற்கு இடை மருதூர் என ஒரு பெயர்.

சிதம்பரம் முதல்  ஸ்ரீரங்கம் வரை உள்ள நிலப்பகுதிக்கு   சோழ மண்டலம் என பெயர். இதில் நடுவில் இவ்வூர் இருப்பதால் இந்த ஊருக்கு இடைமருதூர் என ஒரு பெயரும் உண்டு.

பொதிகை மலைதனில் தவமிருந்த அகத்தியரை பாண்டிய மன்னனுக்கு தெரியாமல் சென்று தனது நாட்டிற்க்கு ஒரு நதி வேண்டும் என வேண்டிய சோழ மன்னனிடம் அகத்தியர் நான் உனது நாட்டிற்கு காவிரியை ஓட செய்கிறேன் என வரமளித்த மகிழ்ச்சியில் குதிரையில் வேகமாக வந்த சோழமன்னன் நந்தகன் என்னும் ஒரு அந்தணனின் மீது குதிரையினால் மோதி கொன்று ப்ரும்மகத்தி தோஷம் பற்றிக்கொள்ள மீண்டும் அகத்தியரிடமே சரணடைந்த சோழமன்னனை தன்னுடனேயே இடைமருதுருக்கு ஒரு தை மாதம் பூச தினத்தன்று காவிரியில் நீராடி ப்ரும்மகத்தி தோஷத்தினை போக்க செய்தார். ஆம் அது முதல் தான் நமது நாட்டில் தை பூசம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
 
பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் ஒரு போரில்  தவறுதலாக ஒரு அந்தணனின் மீது குதிரையினை ஏற்றி கொல்ல அவனுக்கு பிடித்த ப்ரும்மஹத்தி தோஷத்தினை மதுரை சொக்கநாதரே திருவிடைமருதூர் அழைத்து வந்து சோழ மன்னனுக்கு தெரியாமல் பாண்டிய மன்னனை மகாலிங்க பெருமானை தரிசனம்
செய்யவைத்து  தெற்கு வாயில் வழியாக திரும்பவும் மதுரை செல்லுமாறு பணிக்க அவ்வண்ணமே
பாண்டிய மன்னனுக்கும் தோஷம் விலகியது. இப்பவும் மதுரை சொக்கநாதர் திருவிடைமருதூர் பெரிய கோயிலின் முன் ஒரு சிறிய கோயிலில் கோயில் கொண்டுள்ளார். தெற்கு வாயில் வழியாக வந்த பாண்டிய மன்னனை பத்திரமாக அழைத்து சென்றதால் திருபுவனம் பெருமானுக்கு கம்பஹறேஸ்வரர்(காப்பாற்றியவர்)  என்னும் பெயர் வந்தது. இது குறித்து பல விவரங்கள் திருவிளையாடல் புராணத்தில் இருக்காது.

மார்கண்டேயரை திருக்கடையூர் செல்லுமாறு பணித்தவரும் திருவிடைமருதூர் மகாலிங்க பெருமானே என்று மார்கண்டேய புராணத்தில் வருகிறது. பதினெட்டு உப புராணங்களில் ஒன்றான துலா புராணத்தில் திருவிடைமருதூர் பற்றி சுகர் விரிவாக விளக்கி எழுதி இருக்கிறார்
 
சங்க காலம் ஐ சிறுங்காப்பியத்தில்  ஒன்றான சீவக சிந்தாமணி எழுதப்பட்டது இடைமருதுரில் தான் காப்பிய நாயகன் சீவகன்   என்னும் சோழ மன்னன் திருவிடை மருதூரில் தான் இசை பயின்று ஒரு பெரிய இசை ஞானி ஆனான் என்று உ வே சாமிநாத அய்யர் தனது சுய சரிதையில் எழுதி இருக்கிறார்.

கடை சங்க காலம், (கிபி முதலாம் ஆண்டு முதல் கிபி 1400 வரை ) 
நாயன்மார்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலம் திருவிடை மருதூர்.

கரிகால் சோழனுக்கு  பிறகு கிபி எட்டாம் நுற்றாண்டு வரையில்  சோழ நாடு ஒரு சிறிய நாடாகி விட்டது.
பல்லவருக்கும் பாண்டியருக்கும் கப்பம் கட்டும் ஒரு சிற்றரசனாகி இருந்த இந்த கால கட்டத்தில் இரு மன்னர்களுக்கும் பயந்து தாராசுரம் அருகே வாழ்ந்து வந்த சோழ மன்னனான விஜயாலயன் என்பவன்தான் திருப்புறம்புயம் என்னும் ஊரில் பாண்டியனையும் தக்கோலத்தில் பல்லவனையும் வென்று சோழ நாட்டை சுதந்திரமான ஒரு நாடாக்கினான். போருக்கு முன் அவன் திருவிடைமருதூர் பெருமானை வேண்டி கொண்டான் போரில் வென்றால்  இந்த மண் (செங்கல்)    கோயிலை முழுவதும் கருங்கல் கோயிலாக கட்டி கொடுப்பதாக அதன் படியே வென்ற பின்னர் இந்த கோயில் கற்கோயிலானது. இன்றும் விஜயாலய சோழன் கட்டிய கற்கோயில் கோயிலின் மாற்ற பகுதியிலிருந்து சற்று வித்தியாசமாக இருப்பதை காணலாம்

நாளை தொடரும் 
 
ஆதிசங்கரரின் அத்வைத சத்யம்
 
கிபி  800 ௦ முதல் 1400  வரை  ( வீதிகள் அமைந்த விதம் தேர் கட்டப்பட்டு யானை மூலம் இழுக்கப்பட்ட  காலம்  பற்பல தான அறகட்டளைக  லஷ்க்ஷ  தீப அறகட்டளை அமைந்த விதம் திருவிடைமருதூர் வீதியுலா  )  
 
கிபி 1500  முதல் 1750 வரை ,கிருஷ்ணதேவராயர்  மற்றும் நாயகர்கள் காலம் ( பெரிய நந்தி கட்டப்பட்டது  மகாதன வீதி நிர்மாணம் புஷ்ய மண்டபம் நிர்மாணம்  காலம் திருவிடைமருதூர் திரிபந்தாதி   பாஸ்கர ராயர் லலிதா சஹஸ்ரநாமம் பாஷ்யம் ஸ்ரீ சக்ர பிரிதிஷ்டை முகாம்பாளுக்கு சன்னதி பேய்   பில்லிசுன்யம் மற்றும் பிசாசுகளை விரட்டுதல், திருமணம் மற்றும் குழ்ந்தை வரம் வேண்டுதல்   )   
 
கிபி 1750 முதல் 1900 வரை மராட்டியர்கள் காலம்  பத்ரகிரியார் அருணகிரிநாதர் காவிரியில் பாலம் கட்டியது மர ரதம் வெள்ளி ரதம் ஆன விதம்


G Sridhar
S/o Ganesan Sir
9941892821

2 comments:

  1. WELL DONE. LIKEWISE PL WRITE WITH HISTORICAL FACTS 1.ANAKKUDIMANTAPAM(ENDOF MAHADANASTREET)2.PALACE (northstreet)AND ITS SURROUNDINGS AND PRESENT STATUS 3.CHITRAI PRAKARAM 4.MOOKAMBIKA TOWER IN NORTH INDIAN STYLE5.SANKARAMUTT.6.MAHANS A.BASKARARAYER.B.VENKATARAMANA BAGAVATHER 7 PERSANALITES A.SAKKARAM RAO B.P.S.VEERUSAMIPILLAI C.T.R.MAHALINGAM(FLUTE)D.T.R. NAVANEETAM(FLUTE) E.THIRUPPUGAZH MANI F.KUPPAIYA NATTUVANAR 8.THE UNIQUE MALLARI PLAYING(LEARNING FROM TDR) 9.KALAIMAGAL MAGAZINE 10.VIKATAN DEVAN ETC. I HAVE ALSO COME ACROSS 4 THIRUPPUGAZ ON TDR AND 2,KRITIS BY MUTHUSAMY DIKSIDAR LINK WWW.KAUMARAM.COM/THIRU/INDEX-N4.HTML.GOPALASUNDARAM SONGS0858 59 60 61 PL TRY TO ACCOMMADATE IN TDR BLOG.REST IN NEXT. HAPPY NEW YEAR.

    ReplyDelete
  2. தை பூசம் வடலூர்(2012)
    பிப் 6 கொடியேற்றம்
    பிப் 7 ஜோதி தரிசனம்
    பிப் 9 சித்திவளாகம் திறப்பு!!

    கூட்டம் அதிகமாக இருக்கும். சுத்தம் காக்க நம்மால் முடிந்த பணி செய்வோம்!!பிளாஸ்டிக் குப்பைகளை அதிகம் சேராமல் பார்த்து கொள்ளவேண்டும் !!

    http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

    ReplyDelete