Saturday, December 24, 2011

நினைத்துப் பார்க்கிறேன்.....நினைத்துப் பார்க்கிறேன்.....

நினைத்துப் பார்க்கிறேன்.....நினைத்துப் பார்க்கிறேன்.....

இது தான் நமது ஊருக்கு,....மக்கள் அரங்கம் தந்த தலைப்பு....
  
டிசம்பர் பதினொன்று....டோசாவின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட  வேண்டிய நாள்....இல்லை பொறிக்கப் பட்ட நாள்  ஆம்.....
அன்று தான் ......நமது மகிழ்ச்சி எல்லையைத்  தொட்ட நாள்......
 
கோடம்பாக்கத்தையே சுற்றி சுற்றி வந்த காமெராக்களைத் தூக்கிக் கொண்டு கிராமத்துப் பக்கம் ஓடியவன் ....இந்த பாரதி ராஜா.... என்று ...என்றோ சொன்னார் அந்த டைரக்டர் ......
 
இன்றோ .........இந்த     டைரக்டர் விசு....காலம், காலமாக ஊடகங்கள் பெரு நகரங்களில் நடத்தி வரும் Talk Show க்களை கிராமத்திலும் நடத்த முடியும் என்று.....நடத்தி,  வெற்றிக்கொடி நாட்டிய நாள்.......அதை நினைத்துப் பார்க்கிறேன்.....
 
 
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை,....முயற்சிக்கு முற்றுப் புள்ளி கிடையாது என்ற  டோசாவின் வெற்றித் திருநாமத்தை......தாரக மந்திரத்தை 
நினைத்துப் பார்க்கிறேன்.....
 
தேர்வுக் குழு என்ற பெயரில் ஒரு புனிதப் படையையே உருவாக்கியிருக்கும் விசுவின் தீர்கப் பார்வையை    விசுவை நினைத்துப் பார்க்கிறேன்.....
அறிவு, ஆற்றல், திறமை, தீர்க்க தரிசனம், ஊக்குவித்தல், பொறுமை, எளிமை, அடக்கம், உழைப்பு போன்ற வார்த்தைகளுக்கு   சொந்தக் காரர்களான அந்த ஆறு தேர்வுக்  குழு உறுப்பினர்களை நினைத்துப் பார்க்கிறேன்.....
நமது பள்ளி நிர்வாகத்தையும், சந்நிதானத்தையும், கட்டளை தம்பிரான் சுவாமிகளையும், 
தலைமை ஆசிரியர் ஞான மூர்த்தியின் கடமை உணர்ச்சியையும், அவர்கள் செய்த உதவிகளையும்,...நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியுமா? ஆம்...நினைத்துப் பார்க்கிறேன்.....
 
நமது மாணவ மணிகளில், சிலர் மேடை ஏறி முழக்கம் இட்டதை, வண்ணக்குடி போன்ற சிறிய கிராமங்களில் வளர்ந்து வந்த வண்ண மலர்களை.... நினைத்து...., நினைத்துப் பார்க்கிறேன்.....
 
நமது டோசா உறுப்பினர்கள் நாலு பேர், வெளிச்சத்திற்கு முன்னால், வெற்றிக் கொடி
வீசியதை நினைத்துப் பார்க்கிறேன்.....
 
தேசிய நல்லாசிரியர் சிவசுப்ரமணியன், தவில் வித்வான் கணேசன் போன்ற 
சாதனையாளர்களை, மண்ணின் முத்துக்களை நினைத்துப் பார்க்கிறேன்..... 
 
அது மக்கள் அரங்கம் மேடையா? அல்லது நமது ஊரா? என்று மேடை அமைத்திட்ட அந்த கலைஞர்களை  நினைத்துப் பார்க்கிறேன்.....அது நமது ஊர் தான்,......ஊரே தான்
என்ற முடிவுக்கும் வருகிறேன்..... 
 
பல ஊர்களில் இருந்து வந்து, நமது ஊரையும், நம்மையும் பெருமைப் படுத்திய அந்த292 participants களையும், நன்றி உணர்ச்சியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.....
 
இப்படை தோற்கின் எப்படி வெல்லும் என்ற சொற்றொடருக்கு சொந்தக் காரர்களான, நான்கு நாட்கள் ஊனின்றி, உறக்கமின்றி, ஊரிலியே தங்கி, 
களப்  பணியாற்றிய மூர்த்தி, மாலி, சஹாபாத் ராமகிருஷ்ணன்,
ராம்ஜி, கலிவரதன், Murthy's wife, Sahabaad's wife, போன்றவர்ககளை நினைத்துப் பார்க்கிறேன்.....

 
போஸ்டல் ராஜி,  பாலகௌரி, விஜய், Astro ராஜி போன்றவர்கள் சென்னையில் இருந்து சென்று நிகழ்ச்சியில் பங்கேற்ற பாங்கினை நினைத்துப் பார்க்கிறேன்.....

 
அப்பு அண்ணா, பாலமுருகன், ஷன்முகபாஸ்கர்,  சிராஜுதீன், ராஜேந்திரன், ரகுபதி, கோபு என்று மற்றும் பல, நமது உள்ளூர் தங்கங்களை, விழாவை வெற்றிகரமாக நடத்த உதவிய அவர்களை நினைத்துப் பார்க்கிறேன்.....

 
நமது அழைப்பையும், கட்டளையையும் ஏற்று, டிசம்பர் பதினொன்று அன்று சங்கர வித்யாலயாவில் TDR dress code இல் வந்து சங்கமமான நமது நண்பர்களை,.....நினைத்துப் பார்க்கிறேன்.....

 நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை செவ்வனே, சிரமேற்கொண்டு செய்த கண்ணன் சார் பையன் அப்புவின் (சங்கர வித்யாலயா)  கடமை உணர்ச்சியை நினைத்துப் பார்க்கிறேன்.....
 
கிராமங்கள் தான் இந்த நாட்டின் முதுகெலும்புகள் என்று கன்னிமாரா போன்ற ஐந்து நக்ஷத்ர ஓட்டல்களில் கருத்தரங்கு போடும் இந்த நாட்களில்,..நகரத்தில் இருந்து நகர்ந்து போய், வாழ்ந்து, வளர்ந்த நமது மண்ணிலேயே குடி புகும், நமது மண்ணின் மைந்தர்களை,
நினைத்துப் பார்க்கிறேன்.....
 
மாறும் உலகில், மாறாத மனிதர்களாய் உள்ள நமது மருதூர் வாசிகளை, படித்த பள்ளியையும், ஆசிரியர்களையும், கோயிலையும், காவிரியையும் கருத்தில் கொண்டு 
ஆண்டு தோறும் சங்கமம் காணும், நம் மாணிக்கங்களை நினைத்துப் பார்க்கிறேன்.....
 
விருந்தோம்பும் பண்புக்கு இலக்கணம் வகுத்து, அன்றும்....இன்றும்....என்றும் நமது பெருமையை உலகுக்கு பறை சாற்றும், நமது 
மண்ணின் மா மைந்தர்களை நினைத்துப் பார்க்கிறேன்.....
 
டோசா என்ற பெயர்......., நாம் செய்த செயல்கள்,.....140 நாடுகளுக்கு, ஜெயா TV மூலம், விசுவின் வாய் மொழியால் போகப் போகும்,.... வெகு தொலைவில் இல்லாத அந்த 
நாளை நினைத்துப் பார்க்கிறேன்.....
 
முதலாவதாக,...இரண்டாவதாக,....மூன்றாவதாக, முடிவுலுமாக, முற்றிலுமாக 
டோசா என்ற சங்கத்தின் ஸ்தாபகர்களான அந்த ஆறு முகங்களை....ஆம்
Dr. விஜய், ராம்ஜி, போஸ்டல் ராஜி, ஸ்ரீதர், பாலகௌரி and ரகுபதி என்ற அஸ்திவாரங்களை, நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.....
 
சொல்லில் வருவது பாதி.......நெஞ்சில் தேங்கிக் கிடப்பது மீதி........
 
நினைத்துப் பார்க்கிறேன்...........நினைத்துப் பார்க்கிறேன்..........                      
 
டோசாவின் முன்னணித் தளபதிகள்,.....ஓய்வின்றி ஊருக்காக உழைக்க, உறு துணையாக இருக்கும் 
எங்கள்    ஊர் மருமகள்களையும்,  மாப்பிள்ளைகளையும்,  பெருமையுடன் நினைத்துப் பார்க்கிறேன்....


 இடைமருதூரான்...............
 

No comments:

Post a Comment