Saturday, August 31, 2013

தன்னம்பிக்கை



நம்பிக்கையில் விட்டுப்போனது சில. பார்ப்போம்.குருட்டு நம்பிக்கை. இது பிறர் சொல் கேட்டு மயங்கி நம்புவது..."..அந்த ஜோஷ்யரைப் போய் பாருங்கள் அப்படியே புட்டு புட்டு வைக்கிறார். சொன்னது சொன்னபடியே நடக்கிறது." ஓடுகிறோம்.பித்தளையை தங்கமாக மாற்றி தருவதை நம்புகிறோம்.முடிவு தங்கம் பித்தளையாகி கைக்கு வருகிறது. 

மட்டொன்று அசட்டு நம்பிக்கை.இதனால் இழப்பு அதிகம் இல்லை என்றாலும் அடைந்த ஏமாற்றம் வாழ் நாள் முழுவதும் நம்மை வாட்டும்.

இதற்கெல்லாம் காரணம் சுயநலம்.பேராசை.அறிவு பூர்வமாக சிந்திக்காமல் ,உணர்வு பூர்வமாக சிந்தித்து ,முடிவினால் பலியாவதுதான்.

ஞானிகளும்,விஞ்ஞானிகளும் நமக்கு உரைப்பது இதுதான்.குறலும்"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"என்று அறிவுறுத்துகிறது.

எல்லா நம்பிக்கைகளிலும் தலை சிறந்தது  தனம்பிக்கை தான்.அறிவு பூர்வமாகவும் ,அனுபவபூர்வ மாகவும்,நாம் உணர்ந்ததுதான்.மனோ தத்துவ நிபுணர்கள் இதைத்தான் வலியுறுத்துகிறார்கள்..அதனால் வெகு உயர்ந்த நிலைக்கு வந்துள்ள மனிதர்கள் நம் கண் முன்னே காணலாம்.உதாரணமாக சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களின் உரிமை யாளர்கள் இந்த நிலைமைக்கு வந்தது  தன்னம்பிக்கையினால் தான்.

சில நாட்களுக்கு முன்னால் வந்த செய்தியில் ஆட்டோ ஓட்டுனரின் பெண் CA தேர்வில் முதல் நிலைக்கு வந்தது நாம் அறிந்ததே.

இப்பொழுது மற்றுமொரு மகிழ்ச்சி யூட்டும்  இதமான செய்தி.லக்நௌ வ்க்கு அருகே ஒற்றையடி பாதையில் அமைந்துள்ள கிராமத்தின் தினக்கூலி தொழிலாளியின் 13 வயது மகள் சுஷ்மா வர்மா படிப்பது  MSC ( MICROBIALOGY ) பள்ளி வகுப்பு முடித்தது 7ம் வயதில்.டாக்டருக்கு படிக்க ஆசை . ஆனால் வயது குறைவு..சேரமுடியாது..அதுவரை PHD செய்ய முடிவு. அவளுடைய பெயர் LIMCA BOOK OF RECORDS ல் இடம் பெற்றுள்ளது.அவள் குழந்தை தனமாகவே பேசுவதாக பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.

அவளுக்கு பேருதவி செய்தது அவள் அண்ணன் தான்..அவனும் பள்ளிப்படிப்பை 9 வயதிலும், BCA வை 14 வயதிலும்.முடித்தான். பணமின்மை காரணமாக தொடரமுடியாமல் ஆறு ஆண்டு கழிந்து .வேலை கிடைத்தபின் தற்போதைய 20 வது வயதில் MCA செய்கிறான்.
சுஷ்மாவுக்கு மொபைல்,லேப்டாப்,இண்டர்நேர்ட் போன்ற வசதிகள் ஏதும் கிடையாது .CYPER  CAFE மூலம் தான் எல்லாம்.

தந்தை சொல்ப நிலத்தையும் விற்று ,25000ரூபாய் கல்லூரிக்கு கட்டி உள்ளார்.அடுத்த கட்டணம் தொங்கலில் உள்ளது..முதல் அமைச்சருக்கு விண்ணப்பித்துள்ளார். நல்ல உள்ளங்களின்  உதவி கிடைக்க பிரார்த்திப்போம்.

சுஷ் மா பல ஆசைகளை மனதில் கொண்டாலும் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறுகிறார்.கடவுள் தனக்கு கல்வி அறிவை அளித்தததற்கு நன்றி யுடன் உள்ளார்.

reference  Deepak Gidwani @dgidwani 123.       published in  dna news paper Mumbai City Edition.

எழுவதன் நோக்கம் தன்னம்பிக்கையையும்,உழைப்பையும் வலியுறுத்தத்தான்.

மாறுபட்ட மற்றொரு செய்தி..   கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தில் உறி யடி விளையாட்டு நமக்கு தெரியும்.கொண்டாட்டத்திற்கும்,விளையாட்டிற்கும் மகிழ்ச்சிக்கும் வேண்டி நடை பெற்ற நிகழ்ச்சி , கிரிக்கட்டைப்போல் போட்டி பொறாமை முற்றி அரசியல் தலைவர்கள் ஈடுபாட்டுடன் இன்று பூதாகர வடிவெடுத்துள்ளது.கோவிந்தா என்று அழைக்கப்படும் வீ ரர்கள் பிரமிட் போல் வடிவமைத்து ஒருவர் தோளில் ஏறி கடைசியில் ஒற்றை சிறுவன் பானையை உடைத்து பரிசுப்பொருட்களை தன குழு சார்பில் எடுப்பான் . பணம் எல்லோருக்கும் பங்கு     போடப்படும். நம்புங்கள் இந்த ஆண்டு ஓரிடத்தில் மட்டும்  1.15 கோடி ரூபாய்.மற்றும் 1 கோடி,50லட்சம்,25லட்சம் என்று பலவாறு  பரிசுகள்  அளிக்கப்பட்டுள்ளது..மகாராஷ்டிரா பூராவும் எவ்வளவு என்று ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

கோவிந்தா க்களில்    கிழவர் முதல் பள்ளி சிறுவன் வரை அடக்கம் .மாதக்கணக்கில் பயிற்சி.வேடிக்கை என்ன வென்றால் ஸ்பெயின்  நாட்டிலிருந்து பல வீரர்கள் இவர்களிடம் பயிற்சி எடுத்து கூட்டாக கலந்து கொண்டிருக்கிறார்கள். முன்பு, இவர்கள் கால் நடையாகவே தாரை ,தப்பட்டை முழக்கங்களுடன் நடந்து வந்து விளையாட்டை தொடங்கினார்கள்.இப்போது நிலைமையே வேறு. தலைவர்கள் A C  காரிலும், தொண்டர்கள் பெரிய பேருந்துகளிலும் வருவார்கள்.கூட மருத்துவ உதவியுடன் காரும் உண்டு. சீருடை, banner உண்டு. காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை ஒரே கூச்சல் தான்.விபத்துக்கள் உண்டு.இன்சூரன்ஸ் கம்பனிகள் உட்புக திட்டமிட்டு வருகின்றனஇந்த ஆண்டு மகாராஷ்டிரா அரசு பொது விடுமுறை அறிவித்தது.

சென்ற வாரம் நிகழ்சிகளில் இருவர் மரணம்.600 பேருக்கு மேல் காயம் .முதுகு எலும்பு உடைந்து ஊனமுற்றோர் பலர். யாரும் சிந்திப்பதாக தெரியவில்லை.இதற்கு உவமையாக நம் ஊர் மஞ்சி விரட்டைத்தான் கூறமுடியும்.   காலம் தான்  நிலைமையை மாற்றி நல வழிப்படுத்தவேண்டும்.

மும்பை வெங்கடராமன் .            


தோசா - தொடக்கமும், வளர்ச்சியும்




மும்பை ராஜராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திர்  பற்றி நான் சொல்லத் தேவையில்லை. குரு கல்யாண சுந்தரம் அவர்களை சந்திக்க ஜூலை 28-ம் தேதி மாதுங்காவில் இருக்கும் அவரது நாட்டியப்பள்ளிக்கு சென்றேன். அப்போது அங்கு  அவரது புதல்வர் ஹரிகிருஷ்ணா அவர்கள்  வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.  சொல்லப்போனால் ரொம்பவே busy -ஆக இருந்தார். ஆகஸ்டு 9- ம் தேதி நடக்க இருக்கும் ஒரு முக்கிய நடன நிகழ்ச்சிக்கு தனது  சிஷ்யைகளை தயார் செய்து கொண்டிருந்தார். இருப்பினும் என்னைப்  பார்த்ததுமே   " மூ ர்த்தி சார்தானே, வாஙக, உட்காருங்க " என்று நாற்காலியை தயார்  செய்தார்.

"அடுத்த மருதா நாட்டியஞ்சலிக்கு நானும் வருவதாக முடிவு செய்து விட்டேன்." என்று முடித்தார்.

 " இப்பதான் உங்களை முதல் முறையாக பார்க்கிறேன். எப்படி--?" நான் முடிப்பதற்குள் அவரே சொன்னார்," அப்பா நாட்டியாஞ்சலி போட்டோக்கள் கொண்டு வந்தாரு .தோசா என்ற alumni association பற்றியும் சொன்னாரு. ரொம்ப பெருமைப்பட்டாரு ." என்றார்                                                    
தோசாவுக்கு அங்கீகாரம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது !

 அடுத்த சம்பவம் - ஆகஸ்டு  17-ம் தேதி காலை நான் திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தேன் . மேல் மருவத்தூரைக் கடந்து சிலாவட்டம் என்ற ஊரில் இருந்த ONLY COFFEE -யில் காபி அருந்தப் போனோம். அங்கே நம்ம ஊர் சர்மாஜியைப் பார்த்தேன். அவர் அந்தக் கடை முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் வணக்கம் தெரிவித்த சர்மாஜி, கடை முதலாளியைப் பார்த்து ," இவரை தெரியுமா?" என வினவ, அவர் உடனேயே , " நன்றாகத் தெரியுமே, தோசா வின் தலைவர்தானே, திருவிடைமருதூர் கோயிலில் நாட்டியாஞ்சலி organise செய்பவர் தானே?" என்று சொன்னார். ஒரே ஒரு முறை அவரை TDR  ONLY COFFEE -யில் சந்தித்து நாட்டியாஞ்சலி அழைப்பிதழை தந்து அவரை வரும்படி அழைத்திருந்தேன்.  தோசா என்ற அமைப்பும், நாட்டியாஞ்சலி என்ற நிகழ்வும் அவர் மனத்தில்  பதிந்து விட்டதை உணர்ந்தேன். அவரது அங்கீகாரம் மூர்த்தி  ஏன்ற தனி மனிதனுக்கு கிடைத்ததில்லை. அது தோசா என்ற ஒரு அமைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான். எங்கோ ஒரு coffee ஷாப் முதலாளி யின் கவனம் தோசா பக்கம் திரும்பியிருக்கிறது. நான் சந்தோஷப்பட்டேன். சரியான பாதையில் நாம் செல்கிறோம் என்ற உணர்வே மகிழ்ச்சி அளித்தது.


தோசா இதுவரை நம்ம  ஊர் முன்னாள் மாணவர்களின் ஒரு சங்கமாக இருந்திருக்கிறது. ஆறு சங்கமங்கள் கொண்டாடிவிட்டோம். ஒரு  குழந்தை பிறந்து வளர்வது பொன்று தோசாவும் Physical growth என்ற அளவில் நிச்சயமாக வளர்ச்சி கண்டிருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. இப்போது தோசாவுக்கு ஒரு நல்ல முகவரி கிடைத்து விட்டது என்பதும் உண்மைதான்.

இத்தகைய தருணத்தைதான் நாம் எல்லோரும் எதிர்பார்த்துக் கொஂண்டிருந்தொம். கிடைத்தற்கரிய ஒரு அருமையான  ஆரம்பம்   தோசாவுக்கு கிடைத்து விட்டது என்று நாம் எல்லாரும் பெருமைப்படலாம். We can be proud of the great beginning TOSA  has had so  far. ஆனால் ஒரு நல்ல ஆரம்பத்துடன் நல்ல விஷயங்கள் முற்றுப்பெறுவதில்லை. ஆரோக்கியமான வளர்ச்சி என்பது மிக மிக முக்கியம். விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சில பேர் TOSA -வுக்கு  நல்ல தொடக்கத்தை அளிதது விட்டார்கள். விஜி, ராம்ஜி, , ராஜி,  ரகுபதி, இன்டிவிஜூவல், பாலகௌரி, ராதா, cupboard ஸ்ரீதர், RBI ஸ்ரீதர், மருதவாணன் சார், மோகன், அப்பு அண்ணா, கொரட்டூர் மாலி, மீண்டும் முத்து குமார், Jayes   போன்றவர்கள் அளித்து வரும் பங்கு ரொம்ப முக்கியமானது. கொஞ்சம் லேட்டாக வந்த ராமு, TSV முதலியோரின் support  தெம்பு அளித்தது. 

திருக்கயிலாய பரம்பரை,  திருவாவடுதுறை ஆதீனம் 23 -வது மற்றும் தற்போதைய 24-வது குரு மகா சன்னிதானங்களின் பரிபூரண அருளாசிகள் தோசா வுக்கு கிடைத்தமை நாமெல்லாம் செய்த பெரும் பாக்கியமே! நமது பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்களின் ஒத்துழைப்பு பெருமளவில் தோசாவுக்கு கிடைத்திருக்கிறது. 


தோசாவின் உறுபினர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த அமைப்பு எப்படியெல்லாம் செயல் பட முடியும் என்பதில் பல எண்ண அலைகள் தோன்றலாம். இதை TDR  TIMES  மூலம் அனைவரும் பகிர்ந்து கொள்ளலாம். தோசா உறுப்பினர்கள் எல்லாருமே பல்வேறு அலுவல்களில் இருப்பவர்கள்தான். பணி ஒய்வு பெற்றவர்கள் கூட busy -ஆகத்தான் இருக்கிறார்கள். ஆனால் அனைவரும் தோசாவின் வளர்ச்சியில் பெருமளவில் நாட்டம் கொண்டவர்கள்தான். நம் பயணமே ஒரு புனிதப் பயணம்தான். இந்தப் பயணத்தில் எல்லாருமே முழு மூச்சுடன் பங்கு பெற அழைப்பு விடுகிறேன். புதிய உறுப்பினர் சேர்க்கையிலும், வாராவாரம் TDR TIMES மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்வதின் மூலமும் நாம் அதி வேக முன்னேற்றம் காண முடியும். 

சென்ற Annual General Meeting -ல் Dr . Vijaykumar அவர்கள் ஒரு அருமையான  idea சொன்னார். தோசா அமைப்பு நமது பள்ளிக்கும்,  ஊருக்கும் மற்றும் கோவிலுக்கும் ஆக்க பூர்வமான பணிகள் செய்ய தோற்றுவிக்கப்பட்டது. இந்த மூன்று பணிகளுக்கும் தனித்தனியான நிர்வாக கமிட்டிகள் ஏற்படுத்தலாமே என்ற யோசனைதான் அது. சில நடைமுறை சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது. இப்படி தனி கமிட்டிகள் ஏற்பட்டால், அதில் பங்கு  பெறாதவர்கள் ஏனோ தானோ என்று இருந்து விடக் கூடாது என்பதால்தான் நடைமுறை சிக்கல் என்று சொன்னோம்.

இதையே வேறு மாதிரி யோசிக்கலாம். தோசாவில் தலைவர், செயலாளர் என்பதெல்லாம் பதவிகள் கிடையாது. இவையெல்லாம் பொறுப்புகள்தான்.  என்னால் தோசாவுக்காக கொஞ்சம் நேரம் அளிக்க முடியும் என்பவர்களிடம் சில பொறுப்புகள் அளிக்க முடியும். இந்த பதவி வகிப்பவர்கள் எல்லாம் தோசாவில் முதல்வரோ, இரண்டாமவரோ கிடையாது. இவர்கள் சம பங்கு வகிக்கும் உறுப்பினர்களிடையே முதல்வரும், இரண்டாமவரும் ஆகும். They  are only first  and  second among  equals. தோசாவின் உறுப்பினர்கள் பட்டியலை பார்க்கும் போது ரொம்பவும் பெருமையாக இருக்கிறது. 

நமது விஜிக்கு அவர் நிறுவனம் நார்வேக்கும், இந்தியாவுக்கும் season டிக்கெட் கொடுத்துள்ளது. இவரை  NDTV செய்தி channel -ல் Burkha  Dutt பேட்டி காண்கிறார். இது சாதாரண விஷயமே அல்ல. ஒரு சில achievers -க்கு மட்டுமே நடக்கக் கூடியது. 

இண்டிவிஜூவல் சுப்ரமணியன் இன்னும் ஒரு வருடம் பதவியில் நீடித்திருந்தால் ஒரு சர்க்கார் வங்கியின் தலைவராகவே ஆகியிருப்பார். அத்தனை பெரிய பதவி வகித்தவர். 

RBI ஸ்ரீதர் Reserve Bank of India -வின Governor -க்கு முதன்மை செயலராக பதவி வகித்தவர்.

தற்போதைய General Secretary பாலகௌரி ஒரு  MNC  நிறுவனத்தில் பெரிய  பதவி வகிப்பவர்.
.
Jayes டிவிஎஸ் குரூப்பில் சீனியர் பதவி யில் இருப்பவர்.

cupboard ஸ்ரீதர் சேஷசாய் குரூப்பில் சீனியர் பதவியில் இருப்பவர்.

இன்னும் பலர் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்த வரை சொல்லி யிருக்கிறேன். எதற்காக சொல்ல வந்தேன் எனில், பெரிய பதவி வகிப்பவர்கள் பலர் தோசாவுக்காக நேரம் ஒதுக்கினார்கள்; ஒதுக்கிகொண்டும் இருக்கிறார்கள். 

சங்கமத்தில் மட்டும் சந்தித்தோம் என்று இல்லாமல், வருடம் முழுவதும் தொடர்பில் எல்லாருமே இருந்தால்தான் தோசாவால் அடுத்த level -க்கு போக முடியும்.

 TDR TIMES ஒரு பயனுள்ள கருவி. இதன் மூலம் வாராவாரம் அளவளாவ  முடியும். ஆனால் நம் விரும்புவது அதிக பட்ச மெம்பர்கள் பங்கு பெற வேண்டும் என்பதே. தோசா ஒரு democratic unit  எல்லோருக்கும் தத்தம் எண்ணங்களை கூறும் உரிமை உண்டு. எண்ணங்களையும், செயல்பாடுகள் பற்றிய  உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்து, அளவளாவ  TDR TIMES இருக்கிறது. எல்லார் குரலையும் கேட்போம் என்று எதிர்பார்க்கலாமா?
                                                                                                                      " I would now go back to the beginning…….we have to do something to the Society. Yes….old activities and things of past have to be .revived ------"இரண்டு வார ங்களுக்கு முன்னர் TDR TIMES -ல் இன்டிவிஜுவல்அவர்கள் எழுதிய எழுச்சி தரும் கட்டுரையின் ஒரு வாக்கியமே நான் குறிப்பிட் டுள்ளேன்.  இந்த கட்டுரையில்தோசாவின்  அடுத்த  level பற்றித் த்தான் அவர்  பேசுகிறார்.

நமது மண்ணில் நாம் கழித்த இளமைப்பருவத்தை சற்றே rewi nd  செய்து பார்க்கலாம்.

தைப்பூசம் என்றாலே நம்ம ஊர் திருவிழாக்கோலம் பூண்டுவிடும். ஒவ்வொரு வீட்டிலும் பத்து விருந்தினர்களாவது வந்துடுவார்கள். வீர சோழனும் , காவேரியும் அமர்க்களப்படும். வெள்ளி ரதத்தின் போது ராஜரத்தி னம் பிள்ளையும், வீருசாமி பிள்ளையும் , கக்காயி  நடராஜ பிள்ளையும்  தங்கள்  நாதஸ்வர இசையில் ஆயிரக் கணக்கான மக்களை மயங்கச் செய்வார்கள். வாண வேடிக்கைகள் ஊரையே வண்ணமய மான ஒளிக்கல வைகளில் ஒளிரச் செய்யும். 

மதுரை மணி அய்யர், செம்மங்குடி, GNB  என சங்கீத கலைஞர்கள் அவ்வப்போது மகாதான தெரு சத்திரத்தில் பாடு வார்கள். இசையறிவு மிக்க நம்ம ஊர் மக்கள் பரம  ரசிகர்கள். 

பஜனை மடத்தில் அனந்த ராம தீக்ஷதர்,  எம்பார், பால கிருஷ்ண சாஸ்த்ரிகள் என பிரசித்தி பெற்ற விற்பன்னர்கள் ராமயணம், பாரதம், பாகவதம் என்று கதா காலஷேபம் செய்வார்கள். திருவிசைநல்லூர் ராமசாமி ஐயர் மற்றும் சந்தானம் -சந்துரு அவர்களின் விகடக்கச்சேரிகள்  ஆயிரக் கணக்கான மக்களை சிரிப்பொலியில் ஆழ்த்திவிடுவதை பார்த்திருக்கிறோம்.

 மார்கழி மாதம் வந்தாலே கொண்டாட்டம்தான். பெரிய கோவிலில் தொடங்கி , பெருமாள் கோவில் சென்று பின்னர் மகாதன தெரு வழியாக வீரசோழன் பிள்ளையார் கோயிலை அடையும் தினசரி பஜனை. மணி சாஸ்திரிகள் , ராதா ஆகியோர் நாமாவளி சொல்ல ஒரு பெரிய கூட்டமே அதை எதிரொலிக்க  - களை கட்டும் மார்கழி காலை நேரங்களை மறக்கமுடியாது. விஸ்வநாத சுவாமி கோயிலில் " ஜெய் ஜெய் சீதாராம்" நாமாவளி மணி சாஸ்த்ரிகளின் கணீர் குரலில் விண்ணைப் பிளக்கும்.  பிள்ளையார்  கோவிலில் சுடச்சுட பொங்கல் பிரசாதம்- பன்னீர் இலைகளை ஆற்றிலே மிதக்க விட்டு கை கழுவி வீடு திரும்புவோம். இந்தப் பிள்ளையார் கோவிலுக்கு இத்தனை nostalgia ! இந்தக் கோவிலைப் பற்றித்தான் இன்டிவிஜுவல் எழுதியிருந்தார்.

தோசாவுக்கு அடுத்த  ப்ராஜெக்ட் கிடைத்து விட்டது.

தோசாவை  வழி நடத்திச்செல்ல எல்லா உறுப்பினர்களும் உற்சாகத்துடன்  பங்கு பெற வேண்டும் என்பதே என் அவா. காலம்  பதில் சொல்லட்டும்.

இனியும் இப்படி  ஊர் கூடி தேர் இழுத்தால் தோசாவின் பயணம் சரித்திரப் பக்கங்களில் இடம் பெற தடையென்ன இருக்கிறது?



Murthy



பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்




தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க்

காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை

கி.வா.ஜ-விடம், "தமிழ் என்றால் என்ன?" என்று கேட்டார்.

மேலும் "சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி

என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது

சொல்லுங்கள்!" என்கிறார். கி,வா.ஜ. அடக்கமாக,"பெரியவா

சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!" என்றார்

"எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து 'ழ' என்பது
இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை
அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு,
குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி 'ழ' வருகிற எல்லாமே
நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான 'ழ'வைத் தம்மிடத்தில்
உடையது 'தமிழ்' (தமி+ழ்) என்று சொல்லலாமா" என்கிறார்.உடனே
கி.வா.ஜ., "இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி
எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!"என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்
"யாமா மாநீ யாமா மா" என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும்
கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும்
கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக
எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள்
பிரமித்துப் போனார்கள்.

அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,
முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை
என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து
எழுதுகிறார், தெரியுமா?" என்று கேட்டு,

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது....

என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன்
பொருளையும் தனக்கே உரிய முறையில்,
"முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு
காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது
காலாகப் பயன்படுத்துகிறோமே.....அந்த நிலை
வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்...நரை வருவதற்கு
முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்....
யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்.....
ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப்
போகும் முன்...காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள
ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!"

என்று மிக அழகாக விளக்குகிறார். மேலும் "என்ன அழகு
பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக்
கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும்
கோத்துத் துதித்திருக்கிறாரே!" என்று சொல்லிச் சொல்லி
மகிழ்ந்தார். எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து
தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்.
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif


Sridharan Raman Iyengar

அடேங்கப்பா இப்புடியும் இருந்தாங்களாப்பா ?


ஒரு மிக மிக ஏழ்மை  குடும்பத்தை சேர்ந்த லால்பகதூர்  ஸ்ரீவத்ஸவா என்னும் மாணவன் அவன்  படித்த   மிக்க சாதுவாகவும்  நன்றாக படித்து  முதல் மாணவனாகவும்  ,  மிகவும் அறிவுள்ளவனாகவும் இருந்தான்.

அந்த மாணவனுக்கு மேல்படிப்பு படிக்க மிகவும் தடையாக இருந்தது அவனது ஏழ்மை. இதனை அறிந்து கொண்ட  அவனது  ஆசிரியர்  ஹரிக்ருஷ்ண சாஸ்திரி 

எப்படியாவது தனது மாணவனை மேல்படிப்புக்கு பனாரஸ் ஹிந்து பலகலை கழகத்திற்கு அனுப்பி படிக்க வைத்து விட வேண்டும்  என்று தீர்மானித்தார் 

அப்படியே செய்யவும் செய்தார்.

லால்பகதூர் ஸ்ரீவத்ஸவா அதிக  மதிப்பெண் வாங்கி பல்கலை கழக  தேர்வில்  முதல் மாணவனாக வெற்றி பெற்றார்.

அந்நாட்களில் பனாரஸ் ஹிந்து பலகலை கழகத்தில் முதல் மாணாக்கனாக தேர்வு செய்யப்பட்டு   பட்டம்  பெறுபவர்களுக்கு  சாஸ்த்ரி என்னும் பட்டம்  வழங்கப்படும்.

ஆனாலும்   லால்பகதூர்  ஸ்ரீவத்ஸவாவுக்கு  தனது குடும்ப  பெயருக்கு பதில் சாஸ்திரி என்னும் பெயர் வருவதற்கு காரணம்.  ஒன்று தான் வாங்கிய பட்டம்,  மற்றொன்று தன்னை இப்படி படிக்க வைத்த தனது ஆசிரியர் ஹரிக்ருஷ்ண சாஸ்திரியின் நினைவாக.. ஆக  இரு  காரணங்கள். மேலும்  தனது ஆசிரியரின்  நினைவாக  தனது  மூத்த மகனுக்கு ஹரிக்ரிஷ்ணன் என்றே பெயர் வைத்தார்.   

இந்த சாதாரண   லால்பகதூர்  ஸ்ரீவத்ஸவாதான்  பின்னாளில்  குள்ளமான ஆனாலும் மிகவும் பிரபலமான, அமைதியான அனாலும் மிக உறுதியான, எளிமையான  ஆனாலும் , மிகவும்  துய்மையான  லால்பகதூர் சாஸ்திரியானார்.


அவரது வாழ்வில் ஒரு நிகழ்ச்சி பாருங்கள்.............. கீழே???????????????

அந்நாளில் காங்கிரஸ் கட்சியில்  லால்பகதூர் சாஸ்திரியும் ஒரு பொது செயலாளராக  நியமனம் செய்யப்பட்டார்.காங்கிரசில் முழுநேர ஊழியராகிவிட்ட மற்ற காங்கிரஸ் தலைவர்களை போல   லால்பகதூர்  சாஸ்திரி ஒரு வக்கிலோ, டாக்டரோ, சற்று வசதியானவரோ   அல்லது பணக்காரரோ அல்ல.

அதனால் காங்கிரஸ் கட்சி அவருக்கு மாத  சம்பளமாக  ரூபாய் நாற்பது  என்று  நிர்ணயம்  செய்து  அதை  அவருக்கு கொடுத்து வந்தது.

ஒரு நாள்   லால்பகதூர் சாஸ்திரியின் நண்பர் ஒருவர்  அவரை  தேடி  அவரது  வீட்டுக்கு வந்தார் 

ஐயா எனக்கு மிகவும் அவசரமாக ஒரு  வைத்திய  செலவிற்காக  ஒரு  50 ரூபாய்  கடன்  வேண்டும் என்றார்.

அதற்கு  லால்பகதூர் சாஸ்திரி எனக்கு கிடைப்பதோ மாதம் நாற்பது ரூபாய் சம்பளம். இதில் வீட்டை நிர்வாகம் செய்வதே சிரமம். இந்த நிலையில்  நான்  உனக்கு  எப்படி 50 ரூபாய்  கடன்  கொடுக்க முடியும் என்றார்.

கடன் கேட்டவர் ரொம்பவும் வேண்டப்பட்டவர். அதிலும் அவசரம் என்று சொல்கிறார்.
இதனை ஒரு கணம் யோசித்த   லால்பகதூர் சாஸ்திரியின் மாணவி "இருங்கையா" என்று கூறி உள்ளே  போய்   50 ரூபாய்  கொண்டு வந்து  கடன்  கேட்டவரிடம் நீட்டினார். அவரும்  மகிழ்ச்சியோடு  பணத்தை  வாங்கிகொண்டு போய்விட்டார்.

அவர் போனதும்      லால்பகதூர் சாஸ்திரி தன்  மனைவியிடம் உனக்கு எப்படி இந்த  50 ரூபாய் கிடைத்தது ??????   என்று கேட்டார்.

நீங்கள் மாதா மாதம் கொடுக்கிற சம்பளப்பணத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்தி மாதம் பத்து ரூபாய் வீதம் மீதம் பிடித்து வைத்திருந்தேன்  என்றார் அவரது மனைவி.

 மிகவும் சிக்கனமாக குடும்பம் நடத்தும் தனது மனைவியின் குடும்ப நிர்வாகத்தையும், தனது நண்பருக்கு இக்கட்டான  நேரத்தில்  பணம் கொடுத்து  உதவிய  பண்பினையும்  பாராட்டிய அதே நேரத்தில், மறுநாள் காலை காங்கிரஸ் அலுவலகம்   சென்று  பொருளாளரிடம்  என் மனைவி மாதம் 30 ரூபாய்க்குள்ளேயே குடும்பத்தை சீராகவும் சிக்கனமாகவும் நடத்துகிறார்.

ஆகவே அடுத்த மாதம் முதல் எனக்கு 30 ரூபாய் சம்பளமே  போதும்  என்று எழுதி கொடுத்தார். 

இதனை  நான் படித்து தெரிந்து கொண்டபின்னர்  நமது ஊரில் வாழ்ந்த இருவரது பெயர் நினைவுக்கு வந்தது. அந்த இருவரும் மேற்சொன்ன  சாஸ்திரி  போலவே  தனது வாழ்நாளில்  இருந்தனர். அந்த இருவரையும் நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம். 

ஒருவர் 

காலஞ்சென்ற ராமசாமி அவர்கள் நமது ஊருக்கு அருகில் உள்ள நல்லூரில் ஆசிரியராக பணியாற்றி  பணி  ஓய்வுக்கு பின்னர்  நம்மூரில் வாழ்ந்தார். இவர் நம் ட்ரில் மாஸ்டர்  கணேசய்யரின்  பெண்  சாந்தாவின்  மாமனாரும் ஆவார்.

அவர் இருக்கும் பொது அவரது மனைவி காலமானார். காலமான மூன்றாவது நாள் நம்மூர்  பஞ்சாயத்து அலுவலகம் சென்றார்  இறப்பு சான்றிதழை வாங்கினார். பின்னர் நேராக தாலுகா அலுவலகம் சென்றார் ரேஷன் அட்டையில்  உள்ள  தனது மனைவியின் பெயரினை உடனடியாக எடுக்க செய்தார். சார்நிலை கருவூலம் (Sub Treasury Office) சென்றார்  தனது பென்ஷன்  புத்தகத்தில் உள்ள தனது மனைவியின் பெயரினை எடுத்தார்.

மற்றொருவர்

திருவிடைமருதூர் சங்கர மடத்தில்  இருக்கும் சாம வேத பாடசாலையில்  கணம் சொல்லி கொடுக்கும் ஆசிரியராக இருந்த  திரு. சந்திரசேகர கனபாடிகள்.

ஒரு கால கட்டத்தில் பாடசாலையில் வேதம் மட்டும் படித்து விட்டு  கணம்  படிக்க மாணவர்கள் இல்லை. தனக்கு ஒரு மாணவரும் இல்லாத நிலையில் நேராக காஞ்சி மேடம் சென்றார். மஹா பெரியவரை தரிசித்தார். பின்னர் நேராக மடம்  மேனேஜரை பார்த்தார்.

எனது பாடசாலையில் என்னிடம் பயில தற்போது ஒரு மாணவரும் இல்லை  எனவே இந்த மாதம் முதல் எனக்கு  சம்பளம்  ஏதும் அனுப்ப  வேண்டாம்  என்று சொல்லி விட்டு  ஊருக்கு வந்து விட்டார்.

 ஸ்ரீதர்


Retirement - Speech by P.P. Ramachandran - Veteran of Reserve Bank of India

 Retirement - Speech by P.P. Ramachandran - Veteran of Reserve Bank of India

A MUST READ FOR ALL OF US!!!!!!!!!!!

A must read for all those  who are about to retire or  have  already done so  or contemplating it .



Speech by P.P. Ramachandran
Post graduate in Economics from the Bombay University. After serving in the Reserve Bank for forty long years, retired at the age of 60 - a speech given at a Senior Citizen's Association in Bombay, India. 

LIVING HAPPILY AFTER RETIREMENT

Thank you Senior Citizen's Association for having invited me and giving me an opportunity to be with all of you this evening. Now, I will share with you some of my personal beliefs on the subject allotted to me, “Living Happily After Retirement”. Retirement is a problem peculiar to our generation. In the times of our fathers and grandfathers, retirement was not much of a problem.

There are three reasons for this.

First, Life Expectancy.

Fifty years ago, the life expectancy at the age of retirement was fixed at 55 or at most 60. A study of Government records revealed that very few people enjoyed pension for more than five years at that time. Most people died before sixty and consequently spending five years after retirement did not pose any major problem.
Today Life Expectancy after retirement at 58 or 60 - is 75 years which means half of your working life is still left after retirement. To give you an example two Senior Officers of Reserve Bank of India (RBI) died at 93 years—35 years after retirement.


The second reason is the change in the family structure.

Half a century ago, most people were in a joint extended family. The day you laid down office, you still had a large family around you. Surely, in a large family there was always something you could do that was meaningful and made you feel you were contributing to the family. Today the family has become nuclear—husband, wife, children. By the time one retires, the children have gone away. In good old times, daughters used to get married and promptly go away. Nowadays sons get married and very often shift out to stay with their wife from the first night itself! What is left is the old couple— You for Me and Me for you. This is not particularly easy to accept and adjust to after retirement.
                                                                                         
The third reason is the problem of “Roots.”

In the old days, people used to have a “native place” and an “ancestral home”. They looked forward to going there and settling down after retirement. Today, there is nothing left in terms of native place. People often are confused as to where to settle.

These three problems make retirement planning a crucial item. If you have planned for retirement you can anticipate and tackle these problems. People are not accustomed to the idea of staying by themselves. If one asks an audience of prospective retirees and their wives,  “How many of you expect to stay after retirement with your children, hardly one hand goes up. If some husband raises his hand, his wife immediately slaps it down saying, “I’ll be damned if I am going to stay with my daughter-in-law!” So it is a tough problem to think about old people staying—just the two of them. This makes planning all the more significant.

The most difficult problem that we face after retirement is the psychological one.

When an executive retires, he is at the peak of his career—his status, prestige and financial status. The moment he lays down his job, all these desert him. He discovers that “Everything becomes Less and Less”. The first thing he notices is the way his status and prestige are affected. Even at home, the retired person is no longer the important person. If he demands of his wife an early breakfast, she will promptly admonish him, “You are retired now. So take it easy. Let those employed go first!” He is no longer “Numero Uno”. A friend of mine who was a Senior Executive in RBI was getting 500 greeting cards and diaries/calenders for the New Year. After one year of retirement it dwindled to fifty and this year he got ten. Greeting cards, calenders and diaries are surely an indicator of the respect you received when you are employed.

The most immediate problem on retirement is time-management.

We all have twenty four hours at our disposal, whether we like it or not. When you are a senior executive you work for ten, twelve or even fifteen hours and you feel “Suppose I had two hours more how nice it would be! I could do more to finish my work and life would be easier the next work day.”

After retirement, we have twenty four hours and nothing to do! Result – misery and this is one thing one likes to spread! No man wants to be miserable alone. He will make as many people miserable as he can. A man who has nothing to do will harass people around him. Turning on head the Benthamite principle of maximization of welfare—maximisation of 'ill-fare'!

There are two solutions to this problem.

One is to continue to do the same work one was doing at the time of retirement.

The first option is very convenient but where is such an opportunity for the majority? There is the temptation to wangle out an extension but this does lead to compromising principles which many succumb to regrettably. I have seen Senior Officers accepting jobs as liaison officers and standing outside the office cubicle of their subordinates and seek favours from them. But how long-lasting is this solution? Extension merely postpones the problem. It crops up again quite swiftly.

The second option is to do something different, i.e. option to get another job.

An executive can get another job provided he is willing to sacrifice self-respect. Generally jobs are given by the previous employer’s suppliers or may be found in other organizations. In commercial organizations, officers are employed to get orders and collect bills speedily from their previous employers. So you will agree that this is no solution.

All of you are aware that the book Bard of Avon - William Shakespeare wrote of the “Seven Stages of Man”. Modern psychologists have abridged it to four and these are thus.

Before finding a girl — Spiderman
After engagement ------ Superman
10 years after marriage - Watchman
20 years after marriage - Doberman
                                                                                       
After this lighter side I revert to post-retired life. The retired official is likely to fall into four dysfunctional time options.

The first is “Withdrawal”

Many retired people, the day they retire from their job, withdraw from Life and within a few months they just pass away. When you ask a doctor he will tell you I can give a medical term but this is a case of “simple lack of will to live”.

The second time management option is “ritual”

A person can create a ritual for himself. He gets up at a specific time, does different activities at a specific time and this invariably results in misery for others if that specific time frame is not adhered to. While he has in essence nothing to do, he is trying to make his activities meaningful. This leads to a meaningless ritual.

The third option is Pastime

Many people get together and embark on a combined ritual which is called pastime. This too does not add to the meaningfulness of life.

The last option turns out to be even mischievous

It is playing games — not physical ones like badminton, tennis but psychological ones where you try to manipulate people, get into their problems, complicate them and generally enlarge the tension around you. Many a respectable person indulges in this and creates problems where none existed.

The alternative to these are Functional options

The first is become a Consultant.
Lurking inside every executive is a Consultant. But for this, considerable expertise is require. Not everyone can be successful as a consultant.

The second option is to start your own Business or Industry.
But this calls for entrepreneurial qualities which an executive may lack. Many are also faced with the finances to start and sustain a business and stay profitable.
                                   
The third option is to involve oneself in professional activities.
For this, one must build up one’s position even before retirement. Many cliques operate to prevent outsiders from encroachment.
                                                                                          
The fourth is to get into spiritual activities.
While nobody is required between you and God, nowadays, we find more and more godmen, swamijis, pseudo Gurus some even US returned. There is a temptation to follow some Swamiji or even become one yourself. This is a very slippery slope. Beware –there are more hoaxes in the religious field than anywhere else!

The last and most meaningful option is to cultivate a Hobby.
Use your creative abilities and do something that you enjoy doing. You should start this even while in service.

We live in three Boxes.

First is the Box of Learning, which starts from birth and goes on till 20 plus.

Second  is the Box of Work which commences at 20 plus and goes on up to 58 or 60—the age of retirement.

Third is the Box of Leisure.
When we are in the Box of Work what is significant is Status, Prestige, Power—all these we aspire for and it is what we get from working life. The more we get, the happier we are. The day we retire, we move into Box 3—the one of Leisure. If we have to enjoy this we have to change our psychological position and appreciate creativity, autonomy and integrity. When you were a small child of two or three, did status, prestige or money mean anything? What you wanted was autonomy, creativity. A child is always creative. It enjoys creativity. One example. When visitors come you ask your child, “Pushpa -Sing 'Twinkle Twinkle Little Star'”. She will not sing. You shout at her. You tell your visitors proudly she is three only and knows twelve nursery songs. The moment the guests are gone and your maid comes for cleaning, your daughter will sing to her all the twelve songs. The child has its own values!

By the time we enter the Box of Work, values change. We are not taught to respect our autonomy but fall in line—conformity is the rule. If the son plays the violin, his mother will come and tell him, “Playing the Violin now? Study now. Your exam is coming and you must do well. Getting into university and getting a good education is so very important. Life is competitive, dear son.”

When we enter the Box of Leisure, values change. Your psychological position has to change too. New values of creativity, integrity and autonomy emerge. Hobbies are an excellent way of getting Leisure Value. Everybody must identify his hobby that he can enjoy. Dont bother about Power, Prestige and Status.

An individual can live in one box only or interchange or combine the boxes. You can have learning, work and leisure together. One can even take up a hobby that is financially productive. As time passes one learns.

The real problem of retirement is that people refuse to face the problem. The mantra is “Let us cross the bridge when we come to it.” This is not correct and is not encouraged. Since we live in three Boxes we must prepare ourselves for crossing from one to the other. Structuring our time is the prime requirement. In the beginning, you are contributing to Value. Think of Transfer Value. After retirement you can think of Leisure Value. Develop good hobbies which incorporates your creativity, autonomy and integrity. I have taken to writing. (Rajaji, Kalam and H R F Keating.)
                                     
You will lead a happy life.
Retirement is not adding “Years to your Life but adding Life to your Years”. Retirement is not a calamity but an opportunity.

I would like to advocate some basic qualities one must cultivate.

There are two ways to look at every situation in life. Is the cup half empty or is the cup half full. One man was not worried about him becoming bald. He declared “I have less hair to comb!” Another man in an identical situation moaned, “I have more face to wash!”
                                                                              
Always remember that you are loved, even when it does not seem like it.
  
Believe in yourself and your values.
Don’t sell out when things go wrong.
Don’t let anything get you down. Always bounce back.
Set goals for your future and never settle for anything less.
Realise that there are others in this world with bigger problems than you.
Appreciate the good things of life - Sunrise, Sunset, Flowers, Birds, Good Healthy Food, Exercise, Travel etc.
Be thankful for the good times you have with your loved ones.
Spend more time with your family and friends. Make new friends with younger people.
Appreciate the simple things of Life and don’t get caught up in the material things of life.
Be an optimist and see the Cup as being Half Full.
Before long, your attitude will rub of on others.
You can make the world a better place to live by simply making yourself a happier person.

Let me conclude with an allegorical story.

First God created the Cow and said, “You must go with farmer daily to the field all day long and suffer under the Sun, have calves, give milk and help the farmer. I give you a span of sixty years.” The Cow said, “That’s surely tough. Give me only twenty years. I give back forty years.”

On Day Two God created the Dog and told him, “Sit all day by the door of your house and bark at strangers. I give you a span of twenty years.” The Dog said, “Too long time for barking. I give up ten years.”

On the third day God created the Monkey and said to him, “Entertain people. Make them laugh. I give you Twenty years.” The Monkey said to God, “How boring, Monkey tricks for twenty years. Give me only Ten years”. Lord agreed.

On the fourth day God created Man. He told him, “Eat, sleep, play, enjoy and do nothing. I will give you twenty years.”
Man said, “Only twenty years. No way. I will take my Twenty and give me the Forty the cow gave back, the Ten that the Monkey returned, and the Ten the Dog surrendered. That makes eighty. OK?” OK said God.

That is why for the first twenty years we sleep, play, enjoy and do nothing.
For the next forty years we slave in the sun and at work to support our family.
For the next ten years we do monkey tricks to entertain our grandchildren.
And for the last ten years we sit in front of the house and bark at everybody.

Thank you all, may you all live to a 100. God Bless .