Sunday, January 22, 2012

New RS-By Raghuraman, Delhi

திரு நியூ RS அவர்களின் போட்டோவை பார்த்துவிட்டு, அவர் சம்பத்தப்பட்ட பழைய விஷயத்தை நினைத்து மனது சந்தோசம் அடைந்தது. காரணமே இல்லாமல் கண்ணில் நீர் வந்து விட்டது. 1976 - 77 நான் பத்தாவது எ செக்டயொனில் படித்தேன். ஒரு நாள் இங்கிலீஷ் பாடத்தில் கிராமர் சம்மந்தமாக என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு பதில் தெரியாமல் நான் மௌனமாக நின்றேன். பொளேர் என்று ஒரு அறை கன்னத்தில் விட்டார். வலி தாங்காமல் அந்த வகுப்பு முடியும் வரை அழுது கொண்டிருந்தேன். 

பின்னர் ஒரு பன்னிரண்டு மணி அளவில் லைப்ரரியில் இருந்து பக்கிரி என்ற கடைநிலை வுழியரை விட்டு என்னை அழைத்துவர சொன்னார். போனேன். 'என்னடா படுவா ? ரொம்ப வலிக்கிறதா ? என்று கேட்டு விட்டு, உனக்கு சைக்கிள் விட தெரியுமா என்று கேட்டார். தெரியும் என்று சொன்னேன். எங்க வீடு தெரியுமா என்றார். தெரியும் என்றேன். 'மாமி எனக்கு மதிய  சாப்பாடு  எடுத்து வைத்திருப்பாள். போய் ஜக்ரிதயாக கொண்டு வா என்றார்.  அவர் மிதிவண்டியையே எடுத்து போக சொன்னார். சைக்கிள் பழசு. சீட் கவர் கிடையாது. உட்கார்தால் உட்காரும் இடம் வலிக்கும். குரங்கு பெடல் பண்ணியே திருமங்கலக்குடி போய் சேர்தேன். மாமி ஒரு டம்பளர் மோர் கொடுத்து வீட்டு அடுக்கு கேரியர், வழி இல்லை சுருட்டி, தனி ஒரு எவர்சில்வர் டப்பாவில் கருவடம் எல்லாம் கொடுத்து அனுப்பினர். வர வழியில், காவேரி பாலம் வந்தவுடன், வண்டியை நிறுத்திவிட்டு ஒரு கருவடத்தை தின்றேன். சுவையாக இருந்ததால் நிறைய தின்றுவிட்டு, கடைசியில் அவருக்கு கொஞ்சமாக வைத்துவிட்டேன். அவரிடம் மதிய உணவு பையை கொடுத்தேன். ஆர்ட் ரமணி சாரிடம் சொல்லி எனக்கு ஒரு கடலை மிட்டாய் கொடுக்க சொன்னார். கண்ணன் சார் பையனும் எனது நண்பனுமான பாஸ்கர் தான் ரமணி சாருக்கு அசிஸ்டன்ட். வகுப்புக்கு திரும்ப வந்து என்னுடைய மதிய உணவை முடித்துவிட்டு, சிங்கநீர் குளத்துக்கு அலம்ப போய்விட்டேன். 

திரும்ப வகுப்புக்கு வந்ததும், பாஸ்கர் என்னை நியூ RS  அழைப்பதாக சொன்னார். போனேன். என்னடா,, வர வழியில் எங்காவது விழுந்தாய ? என்று கேட்டார். இல்லை என்றேன். மதிப்பிற்குரிய வெங்கட்ராமன் சார், பெரிய ஆர்ட் மாஸ்டர், விஸ்வநாதன் சார் எல்லோரும் இருந்தார்கள். பேசாமல், சரி போ என்று சொன்னார். எனக்கு, மனதில் பயம் வந்து விட்டது. மாலையில், அவர் சைக்கிள் எடுக்கும் பொது, பயந்து கொண்டே, சார், நான் கொஞ்சம் கருவடம் தின்று விட்டேன், மன்னித்து கொள்ளுங்கள் என்றேன். அவரும், சிரித்து கொண்டே, எனக்கும் தெரியும் என்று சொல்லிவிட்டு தோளை தட்டி அனுப்பிவிட்டார். கிளைமாக்ஸ்.  இந்த நிகழ்ச்சி நடந்து ரொம்ப நாள் கழித்து ஒரு நாள் எதேட்சையாக லஞ்ச் நேரத்தில் லைப்ரரி ரூமுக்கு போனேன். அப்போது என்னை அருகில் அழைத்து கொஞ்சம் கருவடாம் கொடுத்துவிட்டு அருகில் இருந்த கண்ணன் சாரிடம், இந்த பையனுக்கு வடகம் ரொம்ப பிடிக்கும் என்று ஆங்கிலத்தில் சொன்னார்.  

சின்ன வயதில், அவர் செய்த காரியம் பெரியதாக படவில்லை. ஆனால், இன்று நினைக்கும் போது, அவர் என்னுடைய பலவீனத்தை (கருவட காதலை) மறக்காமல் ஞாபகத்தில் வைத்திருந்து எனக்கு ரெண்டாவது முறையாக அவரே அழைத்து கொடுத்தது என்னுடைய பாக்கியம். உண்மையில், நாமெல்லாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் இவர் போன்ற மேன்மக்களை நமது ஆசிரியர்களாக பெறுவதற்கு.  

நன்றியுடன், ரகுராமன். டெல்லி

No comments:

Post a Comment