Sunday, January 15, 2012

கோவிந்தபுரம் கொண்டையா

என்ன இது .......................வித்தியாசமான   ஒரு பெயர்.
 
இது வரை கேள்விபடாத ஒரு பெயரும் கூட .
 
ஆம் வித்தியாசமான   பெயர்தான்......................  
 
அதுமட்டுமல்ல இந்த கட்டுரையில் வரும் ஒரு தகவலும் நாம் இது வரையில் அறியபடாத ஒரு பெரிய தகவல்தான்.  
 
இந்த தகவல் All India Radio வில் கடந்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஐந்து நிமிடங்கள் சொல்லப்படும் செய்தியிலிருந்து திரட்டியது.  இந்த தகவல்களை    சிவகாசியில் அச்சு தொழில் (குறிப்பாக காலெண்டர்)  என்னும் ஒரு தலைப்பில் சென்னை ரேடியோ ஒலி பரப்பியது. தொடர்ந்து இந்த செய்திகளை கேட்ட உடன் எனக்கு மனதில் தோன்றியது இதுதான்.
 
எப்படி நமது மகாலிங்க பெருமான் ஒரு சாதாரண மனிதனை நமது ஊரில் பிறக்க வைத்து பின்னர் அவரை எப்படியெல்லாம் ஒரு மாமனிதராக மாற்றி விட்டார் என்று.
 
இதனால் அல்லவா நம் ஊர் மகாலிங்கத்தை பார்த்தவுடன் மாணிக்கவாசகர்
 
கடவுளே அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்து  அதில்  நான் ஒரு புழுவாய் பிறந்தாலும் கூட உனது காலடியில்தான் பிறக்க வேண்டும் என்று பாடினார்.
நமது ஊர் அப்படி பட்ட ஊர் நமது மகாலிங்கமும் அப்பேர் பட்டவர். 
 
சரி கட்டுரைக்கு வருவோம்.  
 
சென்னை ஐ ஐ டி யில் அப்போது வேலை பார்த்த  டாக்டர் ராஜு என்னும் ஒரு பேராசிரியர் திருவண்ணாமலையில் ரமணரை தரிசனம் செய்து தனக்கு ஏற்பட்ட சில ஆன்மீக  ஐயப்பாடுகளை விளக்கம் பெற்று கொள்ளுவதற்கு பகவான் ரமணரிடம் பேசி கொண்டு இருந்தாராம்.
 
 பேச்சினுடே அவர்  சிலர் ராம ராம என்று எழுதி அதையே பூஜை செய்கிறார்கள். நான் சிறு வயது முதலே சிவனிடம் பற்று கொண்டு சிவனையே கடவுளாக வழிபடுபவன். எனவே நான் சிவனை படமாக வரைந்து அதையே நான் வழிபடலாமா என்று கேட்கிறார். அதற்கு ஸ்ரீ ரமணர் தாராளமாக செய்யலாம் என்று பதில் தருகிறார்.
 
உடனே அந்த ஐ ஐ டி பேராசிரியர் ஒரு காகிதத்தில் வரைந்து இது சரியாக உள்ளதா சுவாமி என கேட்க ஸ்ரீ ரமணர் அதனை பார்த்துவிட்டு இது சற்று சரியாக இல்லையே என்று சொல்லிவிட்டு நீ  நல்ல முறையில் தியானம் செய்துவிட்டு வரைய ஆரம்பி சரியாக வந்து விடும் என்று சொல்கிறார். 
 
பேராசிரியர் பல முறை அங்கேயே முயற்சித்து வரைந்து  காட்டியும்  ஸ்ரீ ரமணர் சரி என்று சொல்லவில்லை. இந்த சம்பாஷணைகளை பார்த்து கொண்டிருந்த மனிதர்களில் ஒருவர் ஸ்ரீ ரமணர் முன்பு வந்து............... சாமி......... நான் வரைந்து தரட்டுமா என கேட்க  அதற்கு ஸ்ரீ ரமணர் சரி அவர் ஒத்துகொண்டால் வரைந்து கொடு என்று பதில் சொல்ல உடனே பேராசிரியர் தன்னிடம் இருந்த
பேப்பரை அவரிடம் கொடுக்க அவர் சில நிமிடங்களில் சிவனை வரைந்து அதனை ஸ்ரீ ரமணரிடம் காட்டினார். படத்தினை பார்த்த உடன் மிகவும் பரவசம் அடைந்த ஸ்ரீ ரமணர் அப்பா இவர் சாட்சாத் மகாலிங்கம் அல்லவா பிரித்ட்ஷமாக உள்ளாரே அப்பா ஜோதிமஹாலிங்கா  என்று கூறி அந்த படத்தினை ஒரு கல்லின் மீது வைத்து மூன்று முறை வலம் வந்து அப்படியே அதன் முன்னர் நமஸ்கரித்து விட்டாராம் ஸ்ரீ ரமணர். சுற்றி இருந்த கூட்டத்தினர்  அனைவரும் வாயடைத்து நின்றனராம்.
 
சற்று நேரம் கழித்து ஸ்ரீரமணர் அந்த மனிதரை கிட்டே அழைத்து அப்பா நீ யாரப்பா உனக்கு ஸ்ரீ ஜோதி மகாலிங்கத்தின் அருள் கிடைத்து விட்டதே என்று வினவ. வந்த அந்த மனிதர் எனது பெயர் கொண்டையா நான் திருவிடைமருதுரை சேர்ந்தவன் எனது குடும்பத்தொழில் கோயில்களில் ஸ்தல புராணங்களை வண்ண படமாக வரைவது. அதன் நிமித்தமாக நான் இந்த ஊருக்கு ஒரு மாரியம்மன் கோயிலில் வேலைக்கு வந்து இருக்கிறேன் அப்படியே தங்களையும் தரிசனம் செய்ய இங்கு வந்தேன்  ஐயா என்று பதில் கூறினாராம்.
 
மிக மிக மகிழ்ச்சியுடன் ஸ்ரீரமணர் கொண்டையாவுக்கு ஆசி வழங்கி நீ இனி நன்றாக பிரகாசிக்க போகிறாய் உன்னால் இனி எதிர் காலத்தில் மக்கள் அனைவரும் வீடுகளில் வித விதமான தெய்வங்களை காகிதத்தில் வைத்து வணங்க போகிறார்கள் என சொல்லி அனுப்பினாராம்.
 
கொண்டையா ஒரு முறை கோயில்பட்டியில் ஒரு கோயிலில் பணி செய்து கொண்டிருக்கையில் ஒரு பெரிய தொழில் அதிபர் கொண்டையாவினை அணுகி ஐயா நீங்கள் என்னுடன் வர முடியுமா நான் ஒரு அச்சு தொழில் ஆரம்பிக்க போகிறேன் நீங்கள் படம் வரைந்து தாருங்கள் நான் அச்சிட்டு காலேண்டராக விற்பனை செய்கிறேன் என்று. கேட்க சம்மதம் சொல்லிய கொண்டையா அவருடன் சிவகாசிக்கு சென்று படங்களை வரைந்து தர அது தினசரி காலேண்டராக வெளிவந்து மிக மிக வேகமாக பிரபலம் அடைந்ததாம். அச்சு தொழிலும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்ததாம்.
 
கொண்டையா தனது ஊரான திருவிடைமருதூர் வந்து தனது சீடர்கள்   அனைவரையும் தன்னுடன் வருமாறு சொல்லி சிவகாசி வரும் வழியில் திருவானைகோயிலில் அப்போது முகாமிட்டுருந்த காஞ்சி பெரியவரிடம் தனக்கு ஏற்பட்ட இந்த மாற்றத்தை விவரித்து இது சிறப்பாக விளங்க ஆசி கோரினாராம்
 
பதிலுக்கு காஞ்சி பெரியவர் முதலில் சில்பி என்று ஒருவர் படங்களை வரைந்து
கொண்டிருக்கிறார் நீ அவரிடம் போய் சில நாட்கள் தங்கு அவர் உனக்கு சில சாத்திரங்களை சொல்லி தருவார். பின்னர் மேலும் பல தெய்வங்களை நீ வரையலாம் என்று ஆசி கூறினாராம்
 
கொண்டையா உடனே நேராக சில்பியினை அணுகி காஞ்சி பெரியவர் கூறியத்தை சொன்னாராம். மிக்க மகிழ்சியுடன் கொண்டையாவிற்கு பல்வேறு நுணுக்கங்களை சொல்லி கொடுத்து ஆசி கூறி அனுப்பினாராம் அவர் கீழ்கண்ட  சில நுட்பங்களை சொல்லி கொடுத்ததாக திரு கொண்டையாவின் மகன் வானொலியில் சொன்னார்.
 
சரஸ்வதி வெள்ளை புடைவையுடன் தண்ணீரில் மிதக்கும் தாமரை மீதுதான் மடியில் வீணை வைத்து கொண்டு இருக்க வேண்டும். ராமர் நீல நிறத்தில் தான் வரையப்படவேண்டும்
கிருஷ்ணர் இளம் கறு நிறத்தில்தான் வரையப்பட வேண்டும். இவ்வாறு பலப்பல விஷயங்கள். 
 
மேற்படி இந்த கொண்டையா தனது கடைசி காலத்தில் தனது மூதாதையர்கள்  வாழ்ந்த திருவிடைமருதூர் திருப்பணிபேட்டைக்கு வந்துதான் காலமானார். அவரது குடும்பத்தினர் தற்போது நமது ஊருக்கு அருகில் உள்ள திருலோகியில் வாழ்ந்து வருவதாக் வானொலியில் செய்தி. 
 
இதுதான் நான் வானொலியில் சிவகாசி செய்தி மூலமாக பெற்ற திருவிடைமருதூர் செய்தி.
 
திக்கெட்டும் பரவட்டும் திருவிடைமருதூர் புகழ்.
 
ஸ்ரீதர்  
09941892821

No comments:

Post a Comment