An eMagazine for TDRities
கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் திருவாவடுதுறை
ஆதீனத்துக்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை உடனாய மகாலிங்கசுவாமி கோவில்
உள்ளது. இங்கு எட்டு கோடி ரூபாய் செலவில் திருத்தேர் திருப்பணி நடந்து
வருகிறது. ஐந்து தேர்களில் ஒன்றான மகா ரதம் நவம்பர் 25ம் தேதி
வெள்ளோட்டத்துக்கு தயாராகி வருகிறது. தேரின் உள்சக்கரம் மற்றும் உள்
இரும்பு பார் திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து வந்தது. தேருக்கு
மொத்தம் ஆறு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்படுகிறது. இதில், இரண்டு
சக்கரங்கள் உள்ளே பொருத்தப்படுகிறது. பல டன் எடை கொண்ட உள் சக்கரம்
இரண்டும், இரும்பு பார் ஆகியவை திருச்சில் இருந்து நேற்று காலை லாரி
மூலம் வந்தது.
திருச்சி பெல் நிறுவனம் திருவாரூர் தேருக்கு முதன் முதலில் இரும்பு
சக்கரம் தயாரித்து வழங்கியது. அதன்பின் 500வது தேராக திருவிடைமருதூர்
மகாலிங்கபெருமான் கோவில் தேருக்கு இரும்பு சக்கரங்கள் செய்துள்ளது.
நவம்பர் 22ம் தேதி தேரின் வெளிப்புற சக்கரங்கள் நான்கும் பொருத்தப்பட
உள்ளது. 25ம் தேதி நடக்கும் வெள்ளோட்டத்துக்கு தேர் விறுவிறுப்பான
பணிகளுடன் தயாராகி வருகிறது.
Courtesy : http://www.dinamalar.com/ maavattam : thanjavur
Individual Subramanian

No comments:
Post a Comment