Saturday, January 22, 2011

Thiruvidaimarudur povoma..

See full size image

An eMagazine for TDRites
--------------------------------------------

TDR Times ல் தொடர்ந்து திருவிடைமருதூர் பற்றிய செய்திகளை படித்து படித்து இந்த முறை தை பூசத்திற்கு சென்று வரவேண்டும் என்று ஆவல் மிக மிக  அலை மோதியது.
19 ம் தேதி இரவு 9 மணிக்கு ஒரு கார் ஏற்பாடு செய்தோம் (ப்ரெசிடென்ட் ரங்கநாதன் மகன் ஐய்யப்பன் -நன்றி )நானும் ஸ்ரீதரும் .
ஸ்ரீதர் வீட்டில் அருமையான உணவை முடித்துக்கொண்டோம் .கடலூர் - குடந்தை சாலை மோசமாக இருந்தது . வடலூர் சாலை இதை விட மோசம் என்பதால் மாயவரம் வழியே தேர்வு செய்தோம்.
சுமார் 3 மணிக்கு நமது தலைநகரத்தை அடைந்தோம்.நேரே தேரடி போய் சேர்ந்தோம்.

அந்த நேரத்தில் ஒருவரும் இல்லை.தேர் கம்பீரமாக நின்றது. பூக்கள் களைத்துபோய் காணப்பட்டன.78 ஆண்டுகளுக்கு பிறகு ஓடிய தேர் அல்லவா? அருகிலேயே 1933 ல் ஓடிய தேரின் படம் டிஜிட்டல் பேனராக காட்சி அளித்தது.காஞ்சி பெரியவருடன் சரபோஜி மன்னர் நிற்பதும் அருகில் தேர் நிற்பதும் மிக மிக அருமை. ஜெனரேடர் ஓடிக்கொண்டிருந்தது. ஒரே ஒரு ஆள் காவலுக்கு இருந்தார் . அவர் தேருக்கு காவலா ( யாரவது தள்ளிக்கொண்டு போய் விடுவார்கள் என்ற பயமோ ?)
என்று தெரியவில்லை.
அந்த நேரத்திலும் கோயில் திறந்து இருந்ததால் உள்ளே சென்று படித்துறை விநாயகர் வரை தரிசித்து விட்டு வந்தோம்.
காலை NGB  மகாலில் குளித்து விட்டு நமது பள்ளி தோழி கிரிஜா வீட்டில் வழங்கிய காலை சிற்றுண்டியை முடித்து விட்டு மீண்டும் கோயில் போனோம்.
ஸ்ரீதர் மிக அழகாக ஒவ்வொரு இடமாக விளக்கிக்கொண்டு வந்தான். வரகுணபாண்டியன் கட்டிய கோபுரம் பிரகாரம் கோ சாலை என்று விளக்கியவிதம் மிக நேர்த்தி. இதனை ஸ்ரீதரை விட்டே தனியாக எழுத கூறி உள்ளேன். மகாலிங்க சுவாமி உற்சவ மூர்த்திக்கு அலங்காரம் நடைபெற்றது. தீர்த்த வாரிக்குள் பள்ளியை பார்க்க ஆசைப்பட்டோம்.

ஒவ்வொரு வகுப்பாக அமர்ந்தோம் பழைய நினைவுகளை அசைபோட்டோம். பள்ளியின் காவலர் வந்து எங்களை உபசரித்து மிகவும் மகிழ்ந்தார். 
இதயம் இனித்தது கண்கள் பனித்தன .இன்னம் தேர்வுக்கு 75 நாட்களே உள்ளன என்று எழுதி இருந்தது போர்டில்.அடுத்த வருடமாவது நமது பள்ளி மாணவர்களுக்கு 5 வருடத்து கேள்வி தொகுப்பை நாம் வழங்க வேண்டும். முடிந்தால் மாதிரி தேர்வுகள் நடத்த வேண்டும்.  TOSA வால் மட்டுமே முடியும் .மாணவர்களுக்கு Motivation வகுப்புகளை ஏற்பாடு செய்து தரவேண்டும் . (Postal Raji ட்ரைனிங் ஏற்பாடு செய்து விட்டாள். RBI ஸ்ரீதர் motivate செய்ய காத்திருக்கின்றார். )
ரயிலடி போனோம்.

மிகவும் மாறி விட்டது. ஒரே ஒரு லைன் தான். சற்று கஷ்டமாக இருந்தது.
திருவிடைமருதூரில் ஒவ்வொரு வீட்டிலும் விருந்தினர்கள் கூடி இருந்தார்கள்.

திரு ஸ்டேட் பேங்க் வேணு ஏற்பாடு செய்திருந்த தண்ணிர் பந்தல் 

திரு தியாகராஜ ஐயர் குடும்பம் ஏற்பாடு செய்திருந்த அன்னதானத்தில் கலந்து கொண்டோம். பெரிய அளவில் அப்பு அண்ணா செய்திருந்தார்கள். அருமையான புளி சாதம்.தயிர் சாதம் , மிக்சர், தண்ணிர் பாட்டில், இவற்றினை ஒரு பையில் போட்டு அளித்தார்கள். கட்டுகடங்காத கூட்டம். உணவு பைகளை வாங்கியவர்கள் அதிசயத்து போனார்கள்.போஸ்டல் ராஜி , ராதா அக்கா சுற்றி சுற்றி உறுபினர்களை சேர்த்தார்கள்.
"ராதா அக்கா இன்னம் Mrs and Mr Mahalingaswamy தான் பாக்கி போல  இருக்கு ?" என்றேன்
"ஏன்டா மூகாம்பிகாவை விட்டுட்ட ?"என்றார் .
" நோ... நோ.... My native place is Kollur "  என்று மூகாம்பிகை கூறி விட்டாளாமே !!" என்றேன் 
எந்த வருடமும் இல்லாமல் இந்தவருடம் கூட்டம் மிக மிக அதிகம் என்று ஊரே கூறியது.
"சுமார் ஒரு லட்சம் பேர் இருப்பாங்க சார் "எ ன்றார் எங்களின் சென்னை டிரைவர்.
கருடன் சுற்றிவந்தது. சுமார் 3.50 மணிக்கு தீர்த்த வாரி நடந்தது.
இரவில் வெள்ளி ரதம் மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.கண் கொள்ளா காட்சி.
30 ஜோடி நாதசுரம் ஐந்து மல்லாரிகள்  வாசிக்க சுமார் ஒரு மணிக்கு வெள்ளி ரதம் கிளம்பியது.
இறைவா பிறவா வரம் வேண்டும் என்பார்கள். 
நாங்கள் கேட்கிறோம் எங்களை மீண்டும் இடைமருதூரில் பிறக்க வை.
எங்களின் கார் டிரைவருக்கு மிக மிக மகிழ்ச்சி.
"சார் எங்க வீட்ல முழுகாம இருக்காங்க ஒன்னு ரெண்டு நாள்ல குழந்த பிறந்திடும் அப்படின்னாங்க ஆனா உங்க புண்யத்துல எனக்கும் சாமிய பாக்கற பாக்கியம் கிடைச்சது . ரொம்ப தேங்க்ஸ் சார் " என்றார்.
இரவு ஒரு மணிக்கு கிளம்பி காலை ஆறு மணிக்கு மீண்டும் சென்னை வந்து சேர அயர்ந்து படுத்தேன்.
காலை மொபைல் அடிக்க எடுத்தேன்.
"சார் நான் டிரைவர் பேசறேன் .."
"என்னப்பா எதாவது வண்டில விட்டுடோமா?"
"இல்ல சார் என் மனைவிக்கு குழந்தை பிறந்திடுச்சு .."
"அப்படியா ரொம்ப சந்தோஷம் என்ன குழந்தை ?"
"ஜோதி மகாலிங்கம் !!"

பக்தியுடன்
ராம்ஜி 

மேலும் புகைப்படங்களுக்கு
1/

2/

No comments:

Post a Comment