Sunday, October 16, 2011

என் மாமனாரைப் பற்றி.....சில நினைவுகள்..... -By Meera Subramaniam

என் மாமனாரைப்  பற்றி.....சில நினைவுகள்..... 

போன வார TDR Times ல் பத்மா மணியன் அவர்கள்,....அவர்கள் மாமனாரை பற்றி நன்றியுடன் நினைத்து பார்த்தது,...உள்ளத்தை தொட்டது. நானும் ஏன்,..நம் மாமனாரை பற்றி எழுதலாமே என்று தோணியது. ராம்ஜியிடம் கேட்டேன்...
எழுதுங்கோ என்றார். சரி என்று ஆரம்பிக்கேறேன்.
 
என் பெயர் மீரா சுப்ரமணியன். என் அப்பாவிற்கு பூர்விகம்
வேப்பத்தூர். நான் பிறந்து வளர்ந்தது திருவண்ணாமலையில். ஆறாவது முதல் படித்தது hostel ல்.  Dr. Rathinavel Subramanian Mutthialpet Girl's High School il.  25 வருடம் கழித்து சென்னையில் 
இருக்கும் என் பள்ளிக்கு சென்று, அந்த மண்ணை மிதித்து, class room ஐ பார்த்ததும் ஏற்பட்ட உணர்வை எழுத வார்த்தைகள் இல்லை. வருடா வருடம், கோடை விடுமுறையில், சென்னை   வரும்போது TDR க்கு மறக்காமல் எங்களை அழைத்து செல்லும், என் கணவர்,... ஊரையும், பள்ளியையும், கோயிலையும், காவிரியையும் பார்த்ததும் அடையும் மகிழ்ச்சியும், நிறைவும், நன்றி உணர்வும்.....ஏன்...எப்படி  என்பதை,...ஒவ்வொரு Sunday TDR Times படிப்பதின் மூலமாகவும், சங்கமம் attend செய்வதாலும் தான் உணர ஆரம்பித்தேன்.  திருமணம் ஆனதும்,..அவருக்காக TDR சென்ற நான், வருஷங்கள் போகப்போக,...
ஏதோ ஒரு சக்தியால் ஈர்க்கப்பட்டு......அடிக்கடி  
செல்வதும்  ...அங்கேயே வீடு கட்டிக்கொண்டு settle ஆக முடிவு செய்ததும்....பகவானின் அருளால் தான். 
 
எங்கள் வீட்டு function எல்லாத்துலயும் ஒரே TDR புராணம் தான். நான், மாலி அண்ணாவின் மனைவி, சுந்தரி அக்காவின் ஆத்துக்கர்ரர்,...இவர்களைத் தவிர   தவிர எங்கள் வீட்டில் எல்லோருமே TDR,.... சாஸ்த்ரிகள் உட்பட. சும்மா....200  வீடுகளையும்
அலசுவார்கள். எல்லா வாத்தியார்களையும் பற்றி ஒரு பட்டி மன்றமே நடக்கும். அப்போது,  என்  மாமனாரின்     ஞாபக சக்தி என்னை வியக்க வைக்கும். மங்கையர் மலரில் என் மாமனாரைப்   பற்றி எழுத வேண்டும் என்று பல காலமாக நினைச்சுண்டிருந்தேன். இப்போது பத்மா மணியன் அவர்கள் என்னை TDR Times ல் எழுத வைத்து விட்டார்கள். 
 
கேதார  ராமஸ்வாமி சிவனின் (கர்ணம்), 
மூத்த மகன்,..என் மாமனார் மஹாதேவ ஐயர். தெற்கு வீதி Elementary School Headmaster. வீட்டிற்கு  
பெரியவர்,.... ஆதலால்,...எல்லோருமே அண்ணா என்று தான் கூப்பிடுவா.  
 
1979, February மாதம், இரண்டாம் நாள்,. இந்தக்குடும்பத்தில் நான் ஐக்கியமான நாள்.   எங்கள் பிறந்த வீட்டில்,...... பாட்டி....., பூஜை,..... புனஸ்காரம்......, என் தந்தை ...தேவி உபாசகர்,.  மடி,. ஆசாரம்....இவைகள் காரணமாக 
சமையல் என்ற வார்த்தைக்கு spelling தெரியாமலே புகுந்த வீட்டிற்கு வந்து விட்டேன்
(அதாவது சமையல் அறை,..பக்கமே போக முடியாது....மடி....மடி.....மடி....). 
புகுந்த வீட்டிலும்,... இவர் அம்மா சின்ன வயதிலேயே காலமாகி 
விட்டார்கள் (29/12/1972).  Office  வேறு போய்க்  கொண்டிருந்தேன். என் மாமனார்...முதல் நாளிலேயே புரிந்து கொண்டு விட்டார். ஒரு நாள் கூட என்னை குறை சொல்லாது, ஒரு அம்மாவைப் போல சமையல் எல்லாம், one by one, சொல்லிக்கொடுத்து,... ஸ்லோகம்  எல்லாம் சொல்லிக் கொடுத்து , பண்டிகை முறைகளை   எல்லாம் சொல்லிக் கொடுத்து  என்னை ஒரு குடும்பத் தலைவியாக மாற்றியது என் மாமனார் தான். உங்களுக்கு மட்டும் அல்ல. எனக்கும் தான் அவர் Headmaster. 
 
என் அப்பா,...மிகவும் கண்டிப்பு....கிட்ட போகவே பயம்....ஆனால் என் மாமனாருடன்....சரி சமமாக உட்கார்ந்து....எங்கள்
வீட்டில் எல்லோருமே பேசுவோம்.   வீட்டில் எல்லோரும்,...எல்லா பேரக் குழந்தைகளும் இருக்கும் போது, ஒரே கும்மாளம் தான். எல்லா குழந்தைகளுக்கும்,...தாத்தாவின் மேல்....ஒரு அலாதி பிரியம்....பக்தி....                
 
என் மன்னியும் (மாலி அண்ணாவின் மனைவி), நானும், சதாசிவம் மனைவி ராஜியும்,....அவருக்கு இன்னொரு மூன்று பெண்கள் மாதிரி. எங்கள் வீட்டில் எல்லா பண்டிகைகளும்,.....joint ஆகத்தான்.... குறைந்தது 20 பேர் இருப்போம்.  ௦  ஒரு   கூட்டுக்    குடும்பத்தின் தத்துவத்தை, மகத்துவத்தை எங்கள் எல்லோருக்கும் புரிய வைத்தவர் அவர் தான்.
 
இவர்,.... இன்றும் மாலி அண்ணாவை,..ஆளாக்கி விட்ட அண்ணன் என்று தான் கூப்பிடுவார். பெரிய அக்கா சுந்தரியை,..தியாக  தீபம் என்று தான் அழைப்பார்.  அந்த அளவுக்கு,.. குடும்ப பாசத்துடன் எங்கள் எல்லோரையும் வளர்த்தார்,...என் மாமனார்.   
 
எல்லோரையும் ஒரே தராசில் வைத்து,...ஒரே மதிப்பு,...மரியாதை...எல்லா பேரன்களிடமும் ஒரே அன்பு, ஒரே ஒரு செல்லப் பேத்தி, மோகனின் பெண் சங்கீதா....அவர்கள் எல்லோருக்கும், சிறு வயதிலேயே, சாப்பாட்டுடன்.......ஒரு  value  ஐ ஊட்டி விட்டவர்..... எந்தக் காரியம் செய்தாலும்.....ஒரு planning,...precision,...அதை முடித்தல்....அவருக்கு நிகர் அவரே தான்.  நவராத்திரி கொலுவின் போதும் சரி,...இவர் transfer  ன் போது,...சாமான்  shifting போதும் சரி,.....இந்தப் போது......போது.....போது விற்கு ஒரு முடிவே கிடையாது......கொஞ்சம் கூட Time waste  பண்ணவே மாட்டார். ஏதாவது செய்து கொண்டே இருப்பார்...
இல்லை,. படித்துக்கொண்டே இருப்பார். தினமும் இரண்டு வேளையும்,...விஷ்ணு Sahasranamam, இன்னும் பல ஸ்லோகங்கள்,...தவறாமல் படிப்பார். நியூஸ் பேப்பரில் இருக்கும் செய்திகளை மார்க் செய்து எனக்கு, இவருக்கு, குழந்தைகளுக்கு என்று வேறு படுத்தி கொடுப்பார். 
சங்கீதாவின் ஸ்போர்ட்ஸ் செய்திகள் / வெற்றிகள் பேப்பரில் வரும் பொது அவர் அடையும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. வீட்டில் யார் என்ன செய்தாலும் அதை குறை சொல்லாது appreciate செய்வார்....encourage பண்ணுவார். மொத்தத்தில்,...ஒரு நல்ல leader. மற்றவர்கள் விருப்பத்திக்கேற்ப  தன்னை மாற்றிக்  கொள்வார்.  அவருக்கு 60 வயது இருக்கும் போதே, என் மாமியார் இறந்து  விட்டார்களாம்.  இன்னும் சில கவலைகளும் அவருக்கு உண்டு. ஆனால், ஒன்று கூட அவர் முகத்தில் தெரியாது. வெளியில் காட்டிக்கொண்டதும்  கிடையாது. சொல்லிப் புலம்புவதும் கிடையாது. ஒரு ஞாநி போல் வாழ்ந்தார். 
 
ஒரு நாள் கூட, ஒரு தடவை கூட  Bore  அடிக்கிறது என்று சொன்னதே கிடையாது.    அவர் hand-writing.....print செய்தது போல் இருக்கும்.  இவர் ஆபீஸ் மாற்றங்களால், கிட்டத் தட்ட எட்டு வருஷங்கள் குழந்தைகளின் படிப்பை முன்னிட்டு, தனியாக இருந்தார். வீட்டை நிர்வாகம் செய்தது எல்லாம் என் மாமனார் தான். எங்கள் மாலி அண்ணா தான். எங்கள் வீட்டில்,..என் மாமனரை கேட்காமல் எதுவுமே நடந்ததில்லை.  
 
எந்த சந்தர்ப்பத்திலையும், தன் குழந்தைகளை விட்டுக் கொடுக்காத அவர் பாங்கு,  94  வயது வரை, ச்ரத்தையுடன் அவர் செய்த பித்ரு காரியங்கள், அதுவும் அவரது எல்லா சகோதரர்களுடன் சேர்ந்து, ஓய்வில்லாத உழைப்பு...... எல்லாமே எனக்கு ஒரு பாடமாய் அமைந்தது. விருந்தினர்களை அவர் உபசரிக்கும் பண்பை சொல்லி மாளாது. எல்லோருக்கும் தனி மரியாதை. போகும் பொது வெற்றிலை சீவல், அதில் காசு....ஒன்றும் குறைக்க மாட்டார். 
TDR  ல் இருந்து வரும் பிற  ஸமூஹத்தவரும், எங்கள் வீட்டில் தங்குவார்கள்.  எல்லோருக்கும் ஒரே மாதிரியான உபசரிப்பு. வீட்டு டிரைவர்,  எங்கள் வீட்டிலேயே ஒரு ஆள் மாதிரி தான் இருந்தார்.  மொத்தத்தில் மனித நேயத்தை எங்களுக்கு 
சொல்லிக் கொடுத்த மகான் அவர்.  
 
அவரிடம் இருந்த இன்னொரு great quality.....constant guidance, when we are in need. மன்னிக்கும் மனப்பான்மை,...
யாரையும்....எப்பவும் தப்பா நினைச்சுக்கக்  கூடாது என்பார். 
ஏன் என்றால்,...நாம,... அவா நிலைமையில் இருந்திருந்தால்,....எப்படி நடந்திருப்போம் என்று தெரியாது,....மேல ஆக 
வேண்டியதைப் பாரு.... ஈஸ்வரோ ரக்ஷது என்று சொல்லி விடுவார்.   
 
இப்படி வாழ்க்கைக்கு தேவையான, மிக அற்புதமான விஷயங்களை சொல்லாமல் சொல்லிக்கொடுத்த என் மாமனார் எனக்கு,...எங்களுக்கு....தந்தையாய், தாயாய், தோழனாய், மந்திரியாய், நல் ஆசிரியனாய் வாழ்ந்து, இன்னமும் எங்களுடன் இருப்பதாக இன்றும் உணர்கிறேன்.  
 
பத்மா மணியன் அவர்களுக்கு நன்றி.            
                     
 I used to tell all my friends and relatives on every opportunity.
" I am blessed to be a part of this Great Sivan family,......to have such wonderful in- laws "
A statement of truth from the bottom of my heart.
Thank you very much  Appa for anything and everything.                                                                
மீரா சுப்ரமணியன்
லக்னோ
0 800 44 70 676

~~~~~~~~~~~~~~~~~~~~~~



Shri K.Mahadeva Iyer

Shri K.Mahadeva Iyer

n TDR, there was a Secondary School (I to VIII std) situated in Thirumanjana veedhi, opposite to Sankara mutt (Present).  It had no big name board, no advertisement, no modern appearance etc., But,….it was very famous and popular.  Every body knew about it and had some connection with it.  Either his or her father might have been the student of that school,….. or he or his children might be studying.  It was in the years 1930s and 40s.  The school was called as Secondary school, Naickers school, Kokat Rao school or Ekanatha iyer school. It had very good name, very good strength, very good management, efficient staff, good treatment, good teaching etc., Even in those days, parents selected only good school send their children to study.

The school was managed by Naick family and sri Swaminatha Naick was the correspondent. Sri G Ekanatha iyer was the Headmaster. The management had full confidence in him and gave full freedom to run the school efficiently.  The staff was the pick of the lot.  The senior most Asst, next to HM was Sri K Mahadeva Iyer, the eldest son of Sri Ketharam Iyer, the then village officer (Karnam) of Mahadana puram vattam.  He was a very efficient Karnam who had all particulars about lands, Houses, Pattas etc in his finger tips.  He was given great respect by all.  Only with his help, my father bought the Mahadana street house (No.140).  

Shri Mahadeva Iyer was a thin man with tuft.  His dress was simple with dhothi, Jibba and Angavasthram. He was a very nice gentleman. I did not hear him speak loud on any occasion.  He would speak only mildly, press his view effectively and finish the work successfully.  He was a man of few words.  He was a man of action.  Everybody gave him respect and would approach him for advice.  After Ekanatha Iyer, he became the H.M. of the school. His administration was very good. After some years, the T.A.H.S undertook the management of the secondary school. Sri Mahadeva Iyer continued as the H.M.  He had been the student of the illustrious Trio Messers N.P.Iyer, K.G. Iyengar, and S.S.Iyer.

In those days, parents preferred only the secondary school to the T.A.H.S and were very particular to make their children study up to 8th std, so as to get a solid foundation as the Secondary school had a band of hard working devoted teachers.  Under the leadership of Sri K.M Iyer, they worked more efficiently.  To say frankly, there was a healthy contest between the two schools.  Sri K.M.Iyer himself was a good teacher.  He would teach English, Maths, Social science, Science, all subjects effectively and impressively.  Effective management, good teaching of good discipline, his manner of moving with others all made him a perfect model Teacher. Our Writer Mali Sir, Raghavan Sir, to name a few was his students.

His family life was very smooth and decent.  He had 3 brothers and two sisters. Shri K. Narayana Iyer, school teacher is one of his brothers. One of his sisters was staying in 123 – Mahadana Street…..Maligaikadai Mani Iyer’s wife. His children were all gems. They studied very well and are in good status.  Mali is the close friend of Mutthumani and Ramamurthy,…same batch. All his children studied under me. Mr M Subramaniam called as Individual Subramaniam is a senior Bank officer and his love for TDR and T.A.H.S is so immense, so great that he took a major part in TOSA activities,….even now is thriving every nerve to make TOSA a very efficient and model association in the whole Tamil Nadu and theTEAM effort of TOSA speaks louder. With the willing support of each one…...it could be achieved. I have been seeing the efforts of a committed TEAM from close quarters and simply amazed. May GOD bless them in their efforts!

K.M Iyer was a close friend of Sri N Thiyagaraja iyer.  The sincere friendship resulted in Sow. Uma, his daughter’s marriage with T. Mohan (S/o Sri Thiagaraja Iyer). They are all well settled.  Due to my age and profession I could move with Sri K Mahadeva Iyer.  I had my own respect.  About his nature, attitude, approach and qualities, his Daughter-in-law has fondly and emotionally recollected in different context, last week in a touching manner. A great, unique and rare effort from a D-in-law.

Sri Mahadeva Iyer’s sight and gentle smile would speak thousands of words.  He was not 2 in one,….3 or 4 in one.  He was all in one.  Yes all good things combined in one!.....That was Sri Mahadeva Iyer.

Great people…..Great place…..Great School…..Great teachers…..

M.Venkatraman,
Retd teacher,
T.A.H.S.S – TDR
Camp : Pondicherry

அபிமன்யூ ஆன அபீர் முகம்மது -By Sridhar

அபிமன்யூ ஆன அபீர் முகம்மது 
ஆம் கபீர்தாசை  பற்றி கதையாகத்தான் கேட்டிருக்கிறோம்  ரஸகானையும்   ரசித்து படித்திருக்கிறோம்  
ஆனால் திருவிடைமருதூர் வாசிகளான நாம் அபிர் முகமதை நேரேயே பார்த்திருக்கிறோம்.

அபீர்முகமதின்  தந்தை ஒரு மிக மிக ஏழ்மையான இஸ்லாமியர்

தினமும் வெற்றிலை கொடிகாலில் இருந்து மஹாதானவீதியில் உள்ள பல வீடுகளுக்கு வெற்றிலை விநியோகம் செய்வது. அந்த  தொழிலில் தான் அவர்களது குடும்ப ஜீவனம்.

மஹா பெரியவரின் திருவிடைமருதூர் நீண்ட கால முகாமில் பூஜைக்கு அதிகாலையில்  தினமும் வெற்றிலை கொடுத்ததால் அவரிடம் ஒரு நீண்டகால பற்று. அதன் பலனாக அவருக்கு கடைதெருவில் உள்ள சங்கர மடத்தின் வாசலில் வெற்றிலை விற்பதற்கு இலவச அனுமதி

இப்படியாக தொடங்கியதுதான் அந்த குடும்பத்தின் பின்னணி.

ஒரு கால கட்டத்தில் அந்த இஸ்லாமிய அன்பர் தனது மகன் அபீர் முகம்மதுவை அழைத்து 
ஏய் இந்த தட்டில் உள்ள வெற்றிலைகளை எடுத்துகொண்டு அக்ரஹாரத்திற்கு செல்
நான் சொல்லும் வீடுகளுக்கெல்லாம்  சென்று வாசலில் நின்று கொண்டு அவர்களை கூப்பிடு அவர்கள் வருவார்கள் வெற்றிலையை கொடுத்துவிட்டு வா. 
எக்காரணம் கொண்டும் நீ   அவர்களது வீட்டிற்க்குள் செல்லாதே.........

இப்படி தொடங்கியதுதான் அபீர் முகம்மதின் திருவிடைமருதூர் மஹாதானவீதியில்  பழக்கம். 
ஒரு முறை தலைமை ஆசிரியர் திரு. கோபால்சாமி அய்யங்கார் வீட்டிற்க்கு வெற்றிலை கொடுக்க அபீர்முகமது செல்ல

அவர் படிக்கிற வயசுல பள்ளிகூடம் போஹாம என்னடா இது

நாளேலேந்து பள்ளிகூடம் வா என சொல்ல 
இந்த வேலை செய்யல்லேன்னா வீட்டுல சோறு கிடைக்காது சாமின்னு அபிர்முஹம்மது சொல்ல 
எங்காத்துல  சாப்பூடுப்டு பள்ளிகூடம் வா

புஸ்தகமெல்லாம் நான் வாங்கிதரேன்னு   கோபால்சாமி அய்யங்கார் பதில் சொல்ல

இப்படியாக ஆரம்பித்ததுதான் அபீர்முஹம்மத்தின் பள்ளிகூட பருவம்

பள்ளிகூடத்தில் எனது சித்தப்பா வாஞ்சிசார் வாஜபேயர் வீட்டு  வைத்து என்னும் வைத்தியநாதன். T.R.நாகராஜன் (வாய்கால்  கரை)  நாகு, G.P.சாமிநாதன் மேலும் சிலர் அபீர்முகமதுக்கு  நண்பர்களானார்கள்.

ஒருமுறை  வாஞ்சிசார்  மேலேகூறிய அவர்களது சிநேகிதர்களோடு 
 
அபீர்முகமதையும்  தனது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்களாம்.

இது கண்ட எனது தாத்தா அவர்கள் 
எனது சித்தப்பாவை பார்த்து
வாஞ்சி யாருடாது  சிகை(குடுமி)    வெச்சுக்காம (மற்றபடி மேற்கண்ட அனைவரும் குடுமிதான்)  உன்னோட கூட வந்துருக்கறது என்று அதட்டலாக கேட்க 
அந்த கணமே சற்று தடுமாறிய வாஞ்சி சார் 
இல்லப்பா இவன் பேரு அபிமன்யு

இவாள்லாம் மடவிளாத்துல ஜாகை இருக்கா இவன் என் கூட படிக்கிறான் சும்மா இன்னிக்கி அழைச்சிண்டு வந்தேன் என்று கூறி   ஒருவாறு சமாளிக்க

அவ்வளவுதான் அன்று முதல் அபீர்முகமதின் பெயர் அபிமன்யுவானது.

மிக மிக குறுகிய கால கட்டத்தில் அபிமன்யு மஹாதான வீதியில் அனைத்து மாணவர்களுக்கும் நண்பனானார்.

அனைத்து வீடுகளிலும்  என்ன அபிமன்யு எப்படி இருக்க என விசாரிக்கும் அளவுக்கு தனது பழக்கவழக்கத்தின் முலம் பிரபலமானார்.

இதன் காரணமாக மகாலிங்கசாமி கோயிலுக்கும் போவார், மாரியம்மன் கோயிலுக்கும் போவார்.  

பின்னாளில் பெரும்பாலோருக்கு அபிமன்யுதான் அபிர்முகமது என தெரிந்த பின்னரும் அவரை யாரும் நிராகரிக்க முடியாத அளவுக்கு பழக்க பட்டு விட்டதால் தெருவில் யாரும் அவரை நிராகரிக்காமல் அனைவரும் ஒருவாறு ஏற்று கொண்டு  விட்டார்கள்.

அபிமன்யுவும் தன்னை படிக்க வைத்த கோபால்சாமி அய்யங்காருக்கு புஸ்தகத்திற்காக அதிக செலவு ஏதும் வைக்கவில்லை 

ஆறாம் வகுப்பு முதல் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வருடம் படித்து கொண்டுதான் வந்தார். ஒருவாறு ஒன்பதாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு செல்ல முடியாமல் படித்து கொ..............ண்.........டே...........................
இருக்கும் போது 
திரு. சிவசாம்ப அய்யர் அவர்கள்   அபிமன்யுவை கூப்பிட்டு ஏய்  நீ படிச்சது போறும் ஏதாவது வியாபாரம் பண்ணி ஜீவனம் பண்ணலாம் 
நாளேலேந்து நீ ஒண்ணும் பள்ளிகூடம்  வரவேண்டாம்.
நீ போய் பேபியை(பேபிசார்)   பாரு என்று கூற

வருத்தத்துடன் பேபி சாரினை பார்க்க அபிமன்யு செல்ல
பேபிசார்  அபிமன்யுவிடம் இங்க பார் கடைதெருவுல ஒரு கடை வாடகைக்கு வர்றது
நான் பேசி அதை வாங்கி தறேன் ஒனக்கு கொஞ்சம் பணமும் தறேன் நீ கறிகாய் கடை வியாபாரத்த பண்ணி முன்னுக்கு வர வழிய பாரு படிச்சதெல்லாம் போறும் என்று அவரை தேற்றி அனுப்பினார்.

 ஒருவாறு இதனை ஏற்று கொண்ட அபிமன்யுவுக்கு   பேபி சார், கண்ணன் சார் மற்றும் விஸ்வனாதசார் ஆகியோர் உதவி செய்து ஒருவாறு கறிகாய் கடை வியாபாரம் தொடங்கியது.

பெரும்பாலான ஆசிரியர்களும் மற்றும் அனேக மஹாதான தெரு வாசிகளும் அபிமன்யுவிடம் கறிகாய்களை வாங்கலானார்கள்.
பல ஆசிரியர்கள் வீட்டிற்கு மரியாதை நிமித்தமாக அவரே சென்று கறிகாய்களை கொடுத்து பணத்தை பெற்று வருவார். 
மஹாதான வீதியில் பெரும்பாலான வீடுகளில் திருமணம் நடந்தால் அபிமன்யுதான் கும்பகோணம் சென்று பாலக்கரை மார்க்கெட்டில் கறிகாய் இலை போன்றவைகளை வாங்கி  கொடுப்பார்.
 
பல வீடுகளுக்கு அவர் கூறியது தான் விலை, சில வீடுகளில் அவர்கள் கொடுப்பதுதான் பணம்.
அபிமன்யுவுக்கு இருவரும் ஒன்றுதான்.  யாரிடமும் வம்போ சண்டையோ கிடையாது. 
இப்படியே தான் அபிமன்யு அபிமன்யுவாகவே எறத்தாழ ஒரு  நாற்பது ஆண்டு காலம் கறிகாய் கடை நடத்தி வந்த   அபிமன்யுவுக்கு மிக மிக காலந்தாழ்ந்த திருமணம்.
 
ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
ஒரு நாள் தனது குழந்தையை கடைக்கு அழைத்து வந்த அபிமன்யுவை பார்த்த வாஞ்சிசார் 
குழந்தைக்கு என்னடா பேர் வச்சுருக்க அபிமன்யு   என  கேட்க 
கோமளாடா என பதில் சொல்ல 
என்ன கோமளா........வா.................. 
ஒன் விட்டுல ஒம்பொண்டாட்டி  ஒண்ணும் சொல்லலையாடா  
என்னடா  சொல்றத்துக்கு?

வாஞ்சி........................  
என்ன மொதமொதல்ல சாப்பாடு போட்டு படிக்க வச்ச
கோபால்சாமி அய்யங்கார் வீட்டு மாமிக்கு கோமளவல்லின்னு 
பேருடா.
அதுக்காத்தான் எனக்கு மொத மொதல்ல  புள்ள பொறந்தா
கோபால்-ன்னோ அல்லது பொண்ணு பொறந்தா கோமளான்னோ வைக்கலாம்னு நினைச்சேன்

பொண்ணு பொறந்துட்டா............   கோமளான்னு வச்சுட்டேன்............. அவ்வளவுதான்
இதுல என்னடா  தப்பு.

எழுபது எண்பதுகளில் நான் படித்துகொண்டு இருக்கும் கால கட்டத்தில் மஹாதான தெரு வாசிகள் அல்லது உறவினர்கள் யாரேனும் வெளியூர் சென்று விட்டு பஸ்ஸில் திருவிடைமருதூர் திரும்பி வந்தால் அபிமன்யு கடையினை தேடி செல்வார்கள்

அபிமன்யு அவர்களுக்கு ஒரு மாட்டு வண்டியினை ஏற்பாடு செய்து லக்கேஜூகளை தூக்கி வைத்துவிட்டு வழியனுப்புவார்.

சிலர் லக்கேஜுகளை அவர் கடையிலேயே வைத்து விட்டு செல்வார்கள் பின்ன்னர் சைக்கிளில் வந்து எடுத்து செல்வார்கள்.

அல்லது சிலர் அபிமன்யுவையே  வீட்டுக்கு வந்து கொடுத்துவிட சொல்வார்கள்

அதனையும் அவர் சர்வ சாதாரணமாக சைக்கிளில் வந்து கொடுத்துவிட்டு போவார்.

நான் நன்கு அறிந்த.............. மேலும் நம் ஊரில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதரை பற்றி............... நமது மூர்த்தி அண்ணா  அவர்களது சென்ற வார கட்டுரை முலம் என்னை நிறைய எழுத வைத்து விட்டார்.

என்ன செய்வது நான் அறிந்த இரண்டே இரண்டு சம்பவங்களை மட்டும் கூறி இதனை நிறைவு செய்கிறேன்.

காலஞ்சென்ற வெங்கட்ராம பாகவதர் வீட்டில் இருக்கும் ராதாகிருஷ்ணன் படத்திற்கு ஒவ்வொரு வருடமும் தைபூச தினத்தன்று ராதாகல்யாணம் நடக்கும். 

அவரது சிஷ்ய கோடிகள் அனைவரும் அன்று வருவார்கள் பூசத்திலும் கலந்து கொள்வார்கள் ராதா கல்யாணத்திலும் கலந்து கொள்வார்கள்.

அபிமன்யுதான் கறிகாய் பால் தயிர் முதலியவைகளை  ஏற்பாடு  செய்து தருபவர். 

ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அவர்களும் பாகவதரின் சிஷ்யர் என்ற முறையில்
தைபூச தீர்த்தவாரிக்கும் ராதா கல்யாணத்திற்க்குமாக  திருவிடை மருதூர் விஜயம் செய்தார்.

அவர் அப்போது பாகவதர் வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்து இருந்தார்.
அவருக்கு முன்பாக  ஒரு பெரும் கூட்டம்.

அப்போது ஏ அபிமன்யு அம்மா உன்ன காப்பி சாப்பிட உள்ள வர சொல்றா என்று உரத்த குரலில் ஒரு சத்தம்.
அந்த சத்தமான குரலின் சொந்தக்காரர்  பாகவதர் வீட்டு சூரி. 
ஊர்காரர்கள் அனைவரும் அமைதி.  

இதை கேட்ட கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள் "யாருப்பா அபிமன்யு" உள்ள போ கூப்புடறா  பாரு என்றார். 
ஸ்வாமிகள் சொல்வதை கேட்ட வெங்கட்ராம பாகவதர் கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகளின் காதருகில் மெதுவாக

இந்த அபிமன்யு சிறு வயது முதல் இந்த தெருவிலேயே  பழகி, எங்களது  வீடுகளிலேயே  சாப்பிட்டு வாழ்ந்து வருபவன்

இவனது உண்மையான பெயர் அபிர்முகம்மது. 

அனைத்து விசேஷங்களுக்கும் இவன் சரீர ஒத்தாசை செய்வான் என்று கூறினார்.
அன்று இரவு பாகவதர் வீட்டில்  கிருஷ்ண பிரேமி   சுவாமிகளின் உபன்யாசம் 

பக்த விஜயம் என்ற தலைப்பில் அவர் பேசுகிறார்

ஸ்வாமிகள் பஹவானிடம் பக்தி என்றால் என்னவென்று தென்னாட்டு ஆண்டாள்  முதல் வடநாட்டு மீரா வரை அனைவரையும் குறிப்பிட்டு விட்டு 
கடைசியில் கபிர்தாசரும் ரஸகாணும் நமது நாடு முழுவதும்  பிறந்திருக்கிறார்கள் 
ஏன் இந்த ஊரில் கூட  
இந்த அபிமன்யு போல் என்று கூறி உபன்யாசத்தை முடித்தார்.

 நான் சில மாதங்களுக்கு முன்னர் புத்தகங்களின் மொழி மாற்றம் சம்மந்தமாக திருமதி சாரு நிவேதிதா தமிழில் எழுதிய ஷெனாய் இசை கலைஞ்ர் உஸ்தாத் பிஸ்மில்லாகான்   அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை படித்தேன்.

பிஸ்மில்லாகான் அவர்கள் தனது மாமா மூலமாக காசியில் வந்து தங்கி தனது ஆறாவது வயதில்
இருந்து  ஷெனாய் வாசிக்க கற்றுகொண்டாராம்.

முழுவதும் கற்று  கொண்டவுடன் அவரது மாமா பிஸ்மில்லாகானிடம் இரண்டு உறுதிமொழிகளை கேட்டு பெற்று கொண்டாராம்.
அது என்ன உறுதிமொழி தெரியுமா. 
என்னதான்  நாம் முஸ்லிம்  குடும்பமாக  இருந்தாலும் சங்கீத பரம்பரையில் வந்த நமக்கு சரஸ்வதிதான் முழு முதல் கடவுள்.
நமது குலம் பல தலைமுறைகளாக காசியில் கோயிலில்  விஸ்வநாதர் முன்னர் தினமும் மாலையில் ஷெனாய் இசை வாசித்து வருகிறது.   
 ஆகவே நாம் நமது வாழ்நாள் முழுவதும் காசியில்தான் வசித்து பின்னர் உயிரை விடவேண்டும்.

எக்காரணம் கொண்டும் வேறு ஊரில் நிரந்தரமாக குடியேறலாகாது. 
இதை நீ உனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தாகவேண்டும்.

 பிஸ்மில்லாகானுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா 2001 - ம் வருடம் அளிக்கப்பட்டது. 
பிஸ்மில்லாகான் மிகுந்த உடல் நலிவுற்ற செய்தி கேட்டு அந்நாளைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள்  சிறப்பு ஏற்பாடு செய்து அவரை டெல்லிக்கு வரவழைத்து  AIIMS - ல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து ஒரு லட்ச ருபாய் பணமும் கொடுத்து

அவரை நேரில் சந்தித்து பிஸ்மில்லா அவர்களே

நீங்கள் நமது தேசிய சொத்து

வயதான இந்த காலத்தில் நீங்கள் டெல்லியிலேயே தங்கி சிகிச்சை பெறவேண்டும்.

நான் உங்களுக்கு அரசு சார்பில் ஒரு வீடு ஏற்பாடு செய்து தருகிறேன்.

 நீங்கள் அதற்கு சம்மதித்து உங்களது ஒப்புதலை தரவேண்டும் என வினவினார். 
மறுத்து விட்டார் பிஸ்மில்லா 
நான் காசிக்கு தான் செல்வேன் என்னை கவனித்து கொள்ள அங்கு விஸ்வநாதர் இருக்கிறார். 
எனவே எனது இறுதி நாட்களை நான் காசியிலே தங்கி கழித்து கொள்கிறேன் என சொல்லி   

காசியில்தான் தனது வாழ்நாளின் இறுதி வரையில் இருந்து காலமானார்.

மேற்கண்ட இந்த சம்பவத்தை நான் நினைவு கூற காரணம்

நமது மூர்த்தி அண்ணா  அபிமன்யு சொன்னதாக சொன்னாரே

நான் திருவிடைமருதுரிலேயே சுகமாக இருக்கிறேன் என்று

அதனால் தான் சொல்கிறேன்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே
அதன்முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே 
அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே
இதை வந்தனை கூறி மனதில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ
இதை வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ?

உயர்ந்த மனிதர்-By Murthy

உயர்ந்த மனிதர்

இரு முறை TOSAவுக்காக திருவிடைமருதூர் சென்ற போது நண்பர் ஒருவரை சந்திக்க முயன்றேன். முடியவில்லை. ஆகஸ்டு இறுதியில் நம்ம ஊரைக் கடந்து செல்ல நேரிட்டது. மஹாலிங்க சுவாமியை தரிசனம் செய்துவிட்டு எப்படியும் என் நண்பரைப்பார்த்து விட முடிவு செய்தேன்.

அவர் எப்போதும் உட்கார்ந்து இருக்கும் கடைக்கு சென்றேன். கடை பூட்டியிருந்தது. அவரது பெயரைச்சொல்லி அக்கம்பக்கம் விசாரித்தேன்.

கீழ மாரியம்ம்மன் பக்கத்து சந்தில் ஒரு கொட்டகையில் அவர் மதிய உணவுக்குப்பின் ஓய்வு எடுத்துக்கொள்வார். அங்கு போனால் பார்க்கலாம். என்று ஒரு அன்பர் கூறினார்.

நான் ஒரு காரில் பயணித்துக்கொண்டிருந்தேன். என்னுடன் மனைவி, தாயார், தம்பி, அவன் மனைவி, இரண்டு தங்கைகள் என ஏழெட்டு பேர் இருந்தனர். பகல் மணி இரண்டைத்தொட்டது.

அங்கே சென்று பார்க்கலாமா? என்று வினவினேன்.

வேண்டாம்னு சொன்னால் விட்டுடப்போறயா? தங்கை ஒருத்தி முணுமுணுத்தாள். பாவம், அவளுக்கு பசி. உடனே சாப்பிட்டாகனும்.?

முக்கியமான விஷயம்னா பார்த்துதானே ஆகனும். என்றாள் மனைவி.

அரை மணி நேரம் பார்க்கலாம். அவரைப்பார்க்க முடியாட்டி நாம புறப்படலாம்  என்று சொல்லி காரை கீழ மாரியம்ம்மன் பக்கத்து சந்துக்கு விடச்சொன்னேன்.

ஏப்படியோ விசாரித்து அந்த கொட்டகையையும் கண்டு பிடித்தேன்.ஆனால் அங்கு யாருமே தென்படவில்லை. ஏதிர்ப்புறம் தென்னந்தோப்பு. அங்கே காரை நிறுத்தினார் என் ஒன்று விட்ட தம்பி..கொட்டகைக்கு பக்கத்தில் இரண்டு குடிசைக்ள் தென்பட்டன.ஒரு குடிசையின் வெளியே பெண்மணியொருத்தி தன் எட்டு வயது மகனுடன் அமர்ந்திருந்தாள். அவளிடம் என் மனைவி விசாரித்தாள்.

அங்கேதானே மதியம் தூங்குவார்.” என்று கூறியபடி தன் மகனிடம், டேய். ஜான், தாத்தா தூங்கறாரா பார்த்துட்டு வாஎன்றாள்.
அதே கொட்டகையை ஒரு நோட்டம் விட்டு திரும்பிய பையன்அம்மா, அங்கே யாருமே இல்லை என்று கூறியபடி ஓடிப்போனான்.
அப்போது சைக்கிளில் வந்த ஒரு வாலிபரிடம் எங்களைப்பற்றி அந்தப்பெண் கூறினாள்.
கடைத்தெருவில் சாப்பிடப்போயிருப்பார்; அஞ்சே நிமிஷம், நான் போய்ப் பார்த்திட்டு வந்திடறேன். நீங்க எல்லாம் நெழல்ல போய் உக்காருங்க என்று கூறிய படி சைக்கிளை வேகமாக மிதித்தபடி மறைந்தார்.

கூட வந்தவர்க்கெல்லாம் பசியெடுக்குமே என்று அஞ்சினேன். யாரைப்பார்க்க இந்தப்பாடு படுகிறான் இவன் என்று எல்லாருமே நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

சைக்கிள் ஆசாமி மீண்டும் வந்தார். ஹோட்டல்லே சாப்படுகிறார். பிளஷர்லே பத்துபேர் உங்களைப்பார்க்க வந்திருக்காங்கன்னு சொல்லிட்டேன். இப்ப வந்திடுவார் என்றார்.

அவரைப்பற்றி சிந்தனையில் ஆழ்ந்தேன்.

அறுபதுகளில் கடைசியாகப்பார்த்தேன். தினம் அரை கவுளி வெற்றிலை வீட்டில் கொண்டு கொடுப்பார். கடை வீதியில் அவரது கடை இருந்தது. அவர் வராத நாட்களில் என் பாட்டி அவரது கடைக்குசென்று வெற்றிலை வாங்கிவரச்சொல்வார். அவர் கடை வாசலில் போய் நிற்பேன். என்னைப்பார்த்ததுமே அவரது முகத்திலே ஒரு சிரிப்பு. எனக்கு மிகவும் பிடித்த சிரிப்பு அது. இப்போதும் அதே சிரிப்பு சிரிப்பரா? 

பின்னோக்கி வாரப்பட்ட அவ்ரது மழைமுகில்கள் போன்ற கருப்பு முடி அந்தக்கால ஸ்த்ரீ பார்ட் நடிகர் போல அவரது தோள்களைத்தொட்டிடும். இப்போதும் முடி நரைத்திருந்தாலும் நீளமாக அவரது தோள்களைத்தொட்டு விளையாடிடுமோ?

என்னைவிட பத்து வயது பெரியவர். அவரைப்பார்த்ததும் அவர் கால்களில் விழுந்து கும்பிடலாமா? அவரை அய்யா என்று அழைப்பதா? சார் என்று அழைப்பதா?

என்னைப்பார்த்ததும் அவரால் அடையாளம் கண்டு கொள்ளமுடியுமா?

எனது எண்ணச்ச்ங்கிலியை அறுத்தது, அருகே வந்து கிறீக்ச்சிடடு நின்ற கார்.

முன் இருக்கையிலிருந்து கதவைத்திறந்து வெளியே வந்தார் அவர்.

இவரைப்பார்க்கவேண்டும் என்றுதான் நான் துடித்துக்கொனண்டிருந்தேன். முதுமை அவரை பாதித்திருந்தது. ஆனால் அவரது முகம்! ஐம்பது வருடங்களுக்குப்பின்னரும் என்னால் அடையாளம் காணமுடிந்தது. வெள்ளை வேஷ்டியும், முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார். நேவி கட். நரைத்த முடி.

டேய், மூர்த்தியா?’ என்று என்னை அடையாளம் கண்டுகொண்டு மகிழந்திடுவார் என்று எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. சற்றே ஏமாற்றம் எனக்கு.

அருகே வந்து நின்றவர், நீங்கதானா என்னைபபார்க்கனும்னு சொன்னது?.

ஏன்னை இவரால் அடையளம் கண்டுகொள்ள முடியவில்லை என்று எனக்கு புரிந்தது. என் மனசிலே ஒரு சின்ன வலி.

 என்னை ஞாபகம் இல்லையா? உங்க கடை வசலில் நின்று கொண்டு ஒரு அணாவுக்கோ இரண்டு அணாவுக்கோ வெற்றிலை வாங்கிக்கொண்டு, கடையை விட்டு நகராமல்  நின்று கொண்டிருப்பேன். நீ போலயா? லேட்டாச்சே. என்று சொல்லி என்னை விரட்டுவீர்களே. எல்லாமே மறந்து போச்சா? வாய் விட்டு என்று அழ வேண்டும் போல இருந்தது. சிறு வயதில் நமக்கெல்லாம் நிறைய ஹீரோக்கள் இருந்தனர். ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், கார் ஓட்டுபவர்கள், க்ரீஸ் கலையாத சட்டையுடன், மஞ்சள் துணியால் சுற்றப்பட்ட டைனமொவுடன் சைக்கிளில் வரும் சீனியர் மாணவர்கள், கோடை விடுமுறைக்கு பம்பாய், தில்லி, கல்கத்தா என்று சென்று வரும் நண்பர்கள் - இப்படியாக நமக்கு ஏராளமான ஹீரோக்கள்! இந்த லிஸ்டில் எதிலுமே வராத இந்த நபர் எனக்கு ஏப்படி ஹீரோ ஆனார்? மகாதானத்தெருவில் அநேகமாக எல்லா வீட்ட்டிலும் அவர் சகஜமாகப்பழகுவார். அவருடைய சம வயதுக்காரர், மற்றும் அவரைவிட வயதில் இளையவர் எல்லாரிடமும்ந்ன்றாகப்பழகுபவர். கிரிக்கெட் ப்ராக்டீஸ் போது சிலநாள் வருவார். முதல் பந்தில் க்ளீன் பௌல்டு ஆகிவிட்டு,என்ன? நான் அவுட்டா?என்று நடு பிட்ச்சில் நின்று கொண்டு கேட்பார். கங்கு, அதிலே என்னடா சந்தேகம் என்று சொல்ல,  இதுக்குதான் நான் பேட்டிங்க்கே வேண்டாம்னு சொன்னா எவனாவது கேக்கிறீங்க்களா? என்று சிரித்துக்கொன்டே கேட்பார். இப்படியெல்லாம் அவரைப்பார்த்து அவர் எனக்கு ஒரு ஹீரோவாக ஆனார்.


என்னை அவரிடம் அறிமுகம் செய்துகொண்டென். சில விநாடிகள் கண்களை மூடிக்கொண்டவர் மீண்டும் என்னைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

இப்ப தெரிஞ்சுடுத்து. நல்லா ஞாபகம் வந்துடுத்து. மாலி சாரோட தம்பிதானே நீங்க?
இல்லை, நான் சிவசாம்ப அய்யர் பேரன். மாலி சார் அவரோட பிள்ளை.
அப்படியா? என்று கூறியவர், மீண்டும் கண்களை மூடிக்கொண்டார்.
நீங்க ராஜகோபாலன்தானே? என்றார்.
இல்லை, நான் அவர் தம்பி, என் பேரு மூர்த்தி.
ஆமாம், நீங்கதானே ஸ்கூல்லே ரோம்ப நல்லா படிப்பேளே. மாலி தங்கை கூட உங்ககூட படிக்ச்சா இல்லையா? ஒங்க ஆகம் கூட நன்னா ஞாபகம் வந்துடுத்தே வியாட்நாம் வீடு சிவாஜி போல பேசினார்.
என் அம்மாவை அறிமுகப்படுத்தினேன். நெகிழ்ந்து போனார்.
இந்த ஊர்லே இருந்த ஒரு மஹாபுருஷர் ஒங்கப்பா. அவரோட குடும்பத்து மக்களை நான் சந்திப்பேன்னு சொப்பனத்திலே கூட நெனக்கல்லே. ஓங்க ஆசிர்வாதம் நேக்கு எப்பயும் வேணும் என்று கூறியவாறு அம்மாவின் காலில் விழுந்து நமஸ்கரித்தார். நான் இவரை கடைசியாப்பார்த்த போது சின்னப்பையன். என்னை எத்தனை வருஷத்துக்கு ஞாபகம் வ்ச்சிண்டு, என்னைப்பார்க்க இவ்வளவு நேரம் இங்கெயே எனக்காக காத்திண்டு இருக்கிறதைப் பாத்து----  அவரது இரு கண்களிலிருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்தது. கூட இருந்த எல்லோருமே அமைதியாகினர். சில நிமிடங்கள் இறுக்கம்.

எப்படி இருக்கீங்க ஏன்று கேட்டேன்.

ஏனக்கென்ன குறைச்சல்? மாலிங்க ஐயர் தோட்த்தில இருக்க எடம். பக்கத்திலே மேட்டூர் சாமியார்., போதேந்திர ஸ்வாமிகள், போதாக்குறைக்கு இப்ப விட்டல் கோவிலும் பக்கத்திலேயெ.  
ஜோதிர்மய மகாலிங்கம் ஆரம்பத்திலேர்ந்தே ஏன்னை நல்ல படியா கவனிச்சிக்கிறார். இந்த புண்ணிய ஸ்தலத்திலே வாழ்நாள்பூரா கழிச்சாச்சு. மஹாலிங்கம் யாராருக்கோ கேட்ட வரத்தை அள்ளளித் தருகிரார். அவர் அதிகமாகவே எங்கிட்ட கருணை காட்டறார். இல்லைன்னா இப்ப ஒங்களைப் பார்க்கிற இத்தனை பெரிய பாக்யம்.எனக்கு கிடைச்சிருக்குமா? 

இதை பாசம் என்று கூறலாமா? எழுபது வயது மனிதர் கண்ணீர் விட்டு அழுவதை எப்படி விவரிப்பது?

அவரிடம் விடை பெறும்போது எங்கள் எல்லோருடைய கண்களும் நனைந்திருந்தன.

மிகவும் சிந்தித்தேன். இது என்ன ஒரு வினோதமான பிணைப்பு? அவரும் நானும் ஒரே ஊரில் பிறந்தோம் என்ற ஒரே பிணைப்புதான். அப்படியானால் எல்லா ஊரிலும் இப்படி நிகழ்வுகள் உண்டா? பதில் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகவே புரிந்தது. நம்ம ஊர் மண்ணின் பெருமை அலாதியானது. இந்த மண்ணில்   பிறந்து வளர்ந்த ஒவ்வொருவரும் சுவாசிக்கும் காற்றில் கலந்துவிட்ட அன்பு, பாசம், மதிப்பு, மரியாதை போன்ற குணங்களையும் தொடர்ந்து சுவாசித்து பழகி விட்டோம். இந்த பாசம் சாதி, மதத்துக்கெல்லாம் அப்பாற்பட்டது என்பதை எங்கள் சந்திப்பு உணர்த்தியது.

அவர் பெயரைச் சொல்ல மறந்துவிட்டேனே. அவர் பெயர் அபி முஹம்மது. நாங்கள் அவரை அபிமன்யு என்றே அழைப்போம். மஹாலிங்க ஸ்வாமியை வணங்கிடும் முஹம்மதியர். மதக்கலவரம் என்ற இருட்டறையில் மெழுகுவர்த்தி ஏற்றும் மாமனிதர்.     ந்மது பிறந்த மண்ணை நாட்டுக்கே வழிகாட்டியாக்கும் உத்தமர்.. அபிமன்யு நாம் திருவிடைமருதூரில் பிறந்து வளர்ந்ததை ஒரு பெருமைக்குரிய விஷயமாக நினைக்கச் செய்யும் நூற்றுக்கணக்கான மாமனிதர்களில் ஒருவர்.

இவரை சிரம் தாழ்த்தி வணங்குவதில் நான் மட்டிலா மகிழ்ச்சியடைகிறேன்.


மூர்த்தி
              

Shri T V Rajagopalan,. M.A.B.T-By Venkataraman


Shri T.V.Rajagopalan, popularly known as TVR was an old student of T.A.H.S, studied under Sir S S Iyer, K G Iyengar, M.A.R, V.V.L and others.  He is one year older to me. Myself, T.V.T, R.Sm, N. Purushothaman of Satthanur S.Rajagopalan (ex AG’s office), Rajagopal Naidu (Thirubhuvanam) were all the students of the Govt. College, Kumbakonam. In the intermediate course, I selected M.P.C (Maths, Physics, Chemistry) while T.V.R joined I.M.L (Indian History, Modern History and Logic). R.Sm joined in M.I.M (Maths, Indian History and Modern History).  Just a month after joining the college, T.V.R was walking on the bamboo bridge over the River Cauvery to come to the college.  The Cauvery was in full floods and there was heavy wind blowing…..Suddenly, he fell into the river.  The whole college was witnessing the scene.  Some people jumped into the river to save him. An unalarmed TVR, swam majestically and reached the college shore.  He was applauded by the college as a great swimmer and was selected to the Canoe Club without swimming test. We were staying in the college hostel for two years.  It was a very happy period.  Myself and T.V.R were the winners in the Tennikoit Tournament and won the silver cups.
After passing Intermediate, he left the college and joined the Teachers’ Training School, Thanjavur and studied 2 years course (Secondary Grade Training).  After completing the course, he joined the T.A.H.S as a secondary grade teacher.  I joined the B. Sc course in Govt College, Kumbakonam.  That was the beginning of the B.Sc course in the college. 
 Our marriages took place on the same day in June 1946 (09/06/1946…am I correct ?)
I was 19 then and studying B.Sc, 2nd year.
Mahaswamigal was camping in Pachaiyappa Mudali street, Tiruvidaimarudur.  One fine morning he was coming through Mahadana street with some followers. Suddenly he stopped before a house.  It was decorated with Thoranams (Mavilai) and Plantain trees.  A big kalyana kolam (padi kolam) was drawn before the house.  Chanting of Veda Manthrams was heard from inside.  Mahaperiaval, “ Whose house it is? Is it not the house of Muthur Kanakku pillai”……some function is going on….So, saying he entered the house. All were surprised.  All rushed and fell on his feet.  T.V.R and his wife were sitting on wooden planks.  It was their Seemandham function at that moment. They fell on Mahaperiyava’s feet and HE blessed them Profusely.  What a fortunate couple they were !!  Really, God SANKARA came to their house and blessed them!  As T.V.R. used to say, they were blessed not with one or two children but with eight children (5 Sons and 3 daughters). They were real gems.  All of them were intelligent, obedient to elders, dutiful to their parents.  They are all well off.

T.V.R’s children were educated from VI std in L.F.H.S Kumbakonam. T.V.R qualified himself by passing B.A.B.T, and M.A….all privately. He was a good, pains taking teacher. He along with Dr.Sundaram renovated the Bhajanai Mutt, worked for the Asthika Sabha, arranged Night vigilance (Rondhu) in the streets throughout the Night.  Pious, religious minded, regular reader of Valmiki Ramayana, Non-interfering nature etc,.  He was an inspiration to all of us.

One thing I should mention.  He was a constant (Betal with Tobacco) Chewer.  Daily we (Myself, Baby sir, R.Kannan, N.Viswanathan, S.Ganesa Iyer and some others used to sit in his house on the sit out (Thinnai) from 7 P.M. to 8 P.M and chew betal and talk about various matters and empty the Betal box.

Now he is (age 86 or more?), living in Chennai with his sons and daughters.  He is happy, contented and peaceful. 

May his tribe increase!
M. Venkatraman
Retd Teacher,
T.A.H.S.S
Tiruvidaimarudur
Camp : Pondicherry

Saturday, September 24, 2011

Writer Jayarama Iyer-By M Venkataraman

*******************************************************************************
Let me introduce myself Padma Manian eldest daughter in  law of Writer Sri N.Jayarama iyer (w/o Muthumani).I read Sri.Venkataraman sir's memories of my father in law. I like to share some of my pleasant times with him. I was doing my 3rd year B.A(Hons) when I got married.My father in law encouraged me to finish my gradution after my marriage.               
        
 At first I came to his house on 12th april 1971 as daughter in law.But our relationship was more than a father and daughter.We use to discuss a lot about politics, stories writers and the thing is that I will sit next to him on the unjjal and his policy is that respect should be in the heart only and not in physical ways.  Imagine a daughter in law sitting next to a father in law some 40 yrs ago and it was a talk of Mahadana st women folk at that time.He encouraged me to do a lot of social services and when I became the president of our Ladies club at Madurai he was very  happy and gave a lot of suggestions.

         At this juncture I like to mention that he treated all his daughters in law equal and as  his daughters only.I always remember him as a noble, kind hearted soul always ready to help to the people who came in contact him

         Our relationship is a special bond and still I remember him calling me Padmasani.

        I MISS YOU, APPA, A LOT.

Padma Manian

 


An Emagazine by TDRities
--------------------------------------------

Venkatrama Sir’s karuvuulam….
Writer Jayarama Iyer

Shri N. Jayarama Iyer, popularly known as Writer Jayarama Iyer,  was one of the pillars, one of the architects of  T. A. High school, Tiruvidaimarudur during the years 1930-1980.  Even as a young boy of 20, after passing S.S.L.C. in the T.A.High School, he joined the institution as the Head clerk of the High School. Before him, the school office work was carried out by Shri V. Vaithyanatha Swamy Iyer (of Kondasamudram), Senior Secondary Grade teacher and Shri A. Srinivasa Iyengar, Secondary Grade teacher and book keeping teacher.

Being very smart and intelligent, N J Iyer learnt the work from them very quickly and became an expert in the work.  As he was the student of Shri. N P Iyer, K. G. Iyengar and Sivasamba Iyer, it was very easy for him to work under them. He had also good relationship with the then Managers of the Tiruvavadhuthurai Mutt who were the  correspondents of the High School at that period namely Shri V. Krishnaswamy Iyengar, N. Krishna Iyer, Aiyasamy Iyer and others.  He discharged his duties very sincerely, efficiently and earned very good name among teachers, parents and the public.  No one can deny the fact that he was the one responsible for the growth of school.  Along with teachers like Shri V. Vaithianatha Swamy Iyer and others, he went to near by villages and requested the parents to send their wards to the T. A. High School and thus improved the strength of the school.  New buildings were constructed, new teachers were appointed, permanent approval was got from the Govt, results (percentage of pass) increased and thus  T. A. High School got very good name in the Tanjoore District.


In those days, aided schools (as T A H S ) were given annual grant only after repeated inspection and rigid formalities.  Sri N J Iyer with some other Head clerks of the aided schools in the zone, formed an Association and fought for the easy disbursement of the Grant. In those days, teachers were paid very poorly and salaries were disbursed once in 4 or 6 months.  Teachers had to live under the mercy of money lenders, grocery shop owners and cloth shop owners etc. M/S Pandaram Ayyah, Krishnamurthy Pillai, Maligaikadai Mani Iyer were gracious enough to give their products for loan.  For example, B.T Teachers were paid only Rs.30 to Rs. 40 per month,…that too, once in 4 months.  Under this situation, teachers came in very decent dress (Panchakatcham, angavasthiram, Shirt, long coat, Turban, cleanly shaved face etc.,). They were given much respect and they were revered by one and all in the public.  Only due to the administration of the Aided schools, situation improved and we should thank the administrative staff of those days under the stewardship Writer Jayarama Iyer.

Sri N J Iyer’s father had been working in the Lord Mahalinga swamy temple as Sheroff.  His job was to keep all the jewels of the temple in his safe custody, giving them on festival days and receiving them back.   That was a very risky job and he handled very well.  Sri N J iyer had 4 sons and a daughter. J Muthusubramaniam (Mutthumani), Ramakrishnan (Singidi), Venkatesan and Sundaresan were all very good intelligent and dutiful sons.  All were my students and I am proud to say that they were my students.  They were well in studies and in extra curricular activities too. 

Shri V. Natarajan (Baby sir) produced and directed many Sheakspear plays.  Muthu Subramaniam and J. Ramakrishnan took main part in those plays. I still remember, Muthumani acting as Hamlet with all emotions in his face uttering “ To Live or Not to Live….” They also acted in my dramas Gnansambandhar and Thirunavukarasar.  Sri N J Iyer was blessed with a good son in law (Mirasdar belonging to Sirkazhi) and Grand Sons.  All are well placed and are receiving God’s blessings in plenty.

Time changed,…..environment changed,……situation changed.  N J Iyer retired after 35 years of sincere and dedicated service.  Sri N J Iyer was a very religious man, a true Sakthi Upasakar,…..performed Kumbabhishekam to East Mariamman Koil, Tiruvidaimarudur

May God bless his Tribe!

M. Venkatraman
Retd Teacher,
T.A.H.S.S
Tiruvidaimarudur
Camp : Pondicherry

Thursday, June 16, 2011

Kaveri Vantha Kathai - By Sridhar


See full size image

An eMagazine for TDRites
--------------------------------------------
---------- Forwarded message ----------
From: swami nathan <gsn1000@gmail.com>


காவிரி வந்த கவிதை
இறையனாருக்கும் உமையவளுக்கும் திருமணமாம் கயிலையிலே
இதனைகான குவிந்தனர்  முனிகள் கூட்டம் கயிலையிலே
புவிப்பாரம்  தாங்காமல் தாழ்ந்ததாம் வடக்கு உயர்ந்தாம் தெற்கு
இது கண்டு வியப்புற்று  உமையவள்தாம் ஈசனிடம் முறையிடவே 

வந்த முனிதனில்  குள்ளமான  கும்பமுனியினையழைத்த 
ஈசன்  கும்ப முனியே அனைவரும் வந்ததனால்  தாழ்ந்ததாம் 
வடக்கு உயர்ந்ததாம்  தெற்கு,  மேருவிற்கு போட்டியாக வளர்கிறதாம் 
விந்தியமும் எனநீ  தென்திசை நோக்கி செல்லென  ஈசனவன் ஆணையிட
 
வருந்திய அகத்தியனை வாவென்றனவழைத்து தமிழ்
செவ்விலக்கலக்கணதன்னை காதில் ஓதி  அதனுடன் கையிலொரு 
கமண்டலமும் தந்து  தென்திசை சென்று தீயனை அழித்து 
எம்மணத்தினை நீ இடைமருதிலே  காணென்ருரைத்தான்

சிவ தொண்டு, தமிழ் தொண்டு, உடற்தொண்டு என சாத்திரம்பல
படைத்து அழியா புகழ் பெறுவாய்  என ஆசி பல நன்கூறி அனுப்ப
 தென்னோக்கி புறப்பட்ட அகத்தியமுனி விந்தியத்தை என்னைவிட
குறைவாக எழ என வேண்ட வழிவிட்டதாம் விந்தியமும்

விதர்ப்ப மன்னன் வேண்டி வந்த சிசுவரமளித்த பின்னர்  
அந்லோபமுத்திரையுடன் மணமுடித்த கும்பமுனி
 விந்தியம் தாண்டி பஞ்ச கௌட பஞ்ச திராவிட என
பிராந்தியங்களை பத்தாய் பிரிக்க பத்து மொழி உருவானதாம் தென்னகத்தே

தான் கொணர்ந்த தமிழ் மொழிக்கி தென் பொதிகை மலைதனிலே
தனியிலக்கணம் உருவாக்க தவமிருந்த முனியினிடம்
தஞ்சமானன்   சோழ மன்னன் மருதராஜன்

உனக்கென்ன வரம் வேண்டும் என கேட்ட முனியினிடம் 
வந்த மன்னன் முனியினிடம் எனது நாடு வளமாக நீர் வேண்டும் எனகூற  
ஈதென்ன மாமன்னா இதில் கூட பொது நலமா என கேட்க
எனது நாட்டு மக்கட்கு ஈதென்ரி    வேறேது என மன்னன் கைகூப்பி நின்றபோது

வந்தது காக்கை உருண்டது கமண்டலம் திரண்டது காவேரி
 தனது நாடு வரவெண்ணி சோழ மன்னன் கைகூப்ப
தைபூச தினத்தென்று  காவிரியில் நீராட இடைமருது
வருவேன்னென மகிழ்ந்துரைத்த கும்பமுனி
 
சொன்னபடி தைப்பூச திங்கள்தனில் மன்னனுடன் இடவையிலே
காவிரியில் நீராடி மருதனையே வணங்கினானே வந்தமுனி
இடவையிலே இறையன்மண கோலம்தன்னை 
கண்டபின்னர் மகிழ்ந்தானே
 
ஸ்ரீதர்